நீங்க மொத்தமா சர்க்கரையை தவிர்த்துட்டீங்களா..? அப்படி மட்டும் பண்ணாதீங்க..! - Agri Info

Adding Green to your Life

December 13, 2024

நீங்க மொத்தமா சர்க்கரையை தவிர்த்துட்டீங்களா..? அப்படி மட்டும் பண்ணாதீங்க..!

 

சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களை குடிப்பதால் நம் ஆரோக்கியத்தில் ஏற்படும் தீங்குகளை நாம் நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் பொதுவாக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.

சர்க்கரையை முற்றிலுமாகத் தவிர்ப்பதை விட, அவ்வப்போது கேக் போன்ற இனிப்புகள் சாப்பிடுவது உங்கள் இதயத்திற்கு நல்லது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ஆனால் எக்காரணம் கொண்டும் சர்க்கரை பானங்கள் பக்கம் போய்விடாதீர்கள்.

ஸ்வீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகத்தின் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பல்வேறு வகையான சர்க்கரை நுகர்வு இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதிக சர்க்கரை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்றாலும், ​​​​எப்போதாவது சாப்பிடுவது உண்மையில் சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு நல்லதே என இந்த ஆய்வு கூறுகிறது. அதேசமயம் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்களை குடிப்பது பக்கவாதம், இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

மறுபுறம், சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பவர்களுடன் ஒப்பிடும்போது, ​​​​இனிப்பு தின்பண்டங்கள் அல்லது தேன் கலந்த உணவுகள் போன்ற எப்போதாவது சர்க்கரை தின்பண்டங்களை அனுபவிக்கும் நபர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து குறைவாக இருக்கிறது.

News18

நீங்கள் எவ்வளவு சர்க்கரை உட்கொள்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, அது எங்கிருந்து வருகிறது, அது உங்கள் வாழ்க்கை முறைக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதுதான் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

அதேசமயம் சர்க்கரை குளிர்பானங்கள் பெரும்பாலும் பசியைப் பூர்த்தி செய்யத் தவறிவிடுகின்றன. இதன் காரணமாக அதிகப்படியான நுகர்வுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு நேர்மாறாக, காஃபி குடிக்கும் போது இனிப்பு தின்பண்டங்கள் சாப்பிடும் கலாச்சாரம் பல நாடுகளில் உள்ளது. இதை அளவாக சாப்பிடுவதால் பெரிதாக எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஏன் மிகவும் சிறிய சர்க்கரை சிறந்ததாக இருக்காது..?

இதற்கிடையில் மிகக் குறைந்த சர்க்கரை உட்கொள்ளல் சிறந்ததல்ல என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எப்போதாவது இனிப்பு பதார்த்தங்களை உட்கொள்பவர்களை விட சர்க்கரை தின்பண்டங்களை முற்றிலுமாகத் தவிர்ப்பவர்கள் இதய நோய்களுக்கான அதிக ஆபத்துகளைக் கொண்டவர்களாக தெரிய வந்துள்ளது.
“எங்கள் ஆய்வில் இதற்கான காரணத்தையும் விளைவையும் நிரூபிக்க முடியவில்லை என்றாலும், நல்ல இதய ஆரோக்கியத்திற்கு சர்க்கரையை முற்றிலுமாக அகற்றுவது அவசியமில்லை என்று கண்டுபிடிப்புகள் தெரிவிப்பதாக” ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சி கூறுவது என்ன?

இந்தக் கண்டுபிடிப்புகள் ஒரு நுணுக்கமான தகவலை வழங்கினாலும், உணவுப் பழக்கங்கள் கலாச்சார மற்றும் அந்தந்த பகுதிகளுக்கானவை என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.

“இந்த முடிவுகள் ஸ்வீடிஷ் மக்கள் மற்றும் அவர்களின் மரபுகளை அடிப்படையாகக் கொண்டவை. இது மற்ற நாட்டில் வாழும் மக்களுக்கு நேரடியாகப் பொருந்தாது,” என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆகவே திருவிழா காலங்களில், விசேஷ நாட்களில் இனிப்பு தின்பண்டங்கள் அல்லது கேக் சாப்பிடுவது பெரிதாக எந்தப் பிரச்சனையும் ஏற்படுத்தாது. ஆனால் சோடாக்களை ஒருபோதும் குடிக்காதீர்கள்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment