பள்ளி அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுகிறதா? - Agri Info

Adding Green to your Life

December 3, 2024

பள்ளி அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுகிறதா?

 புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


 தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 9-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. 

ஆனால், பல மாவட்டங்கள் மழை பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை. தொடர் மழை விடுமுறையால் பாடத்திட்டத்தை முடிப்பதற்கும் போதிய கால அவகாசம் இல்லை. 

னவே, தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

 அதையேற்று புயலால் பாதிப்புக்குள்ளான விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வை ஒத்தி வைப்பதற்கு பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது. 


இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் நிலைகுறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளோடு அமைச்சர் அன்பில் மகேஸ் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். பாதிப்புள்ள பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் அறிவுறுத்தினார். இதில் துறை செயலர் சோ.மதுமதி, இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்க கல்வித் துறை இயக்குநர் பூ.அ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

No comments:

Post a Comment