லாக்டு-இன்-சிண்ட்ரோம் (Locked-in-Syndrome) எனப்படும் ஒரு அரிய வகை நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு அமெரிக்க நபர் அதிலிருந்து அவர் மீண்டு வந்த தன்னுடைய அனுபவத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு உள்ளார். அசையாமல் வாய் பேச முடியாமல் 10 மாதங்கள் இவ்வாறு அவர் இருந்துள்ளார். மே 2017-ல் ஜேக் ஹேண்டில் என்று சொல்லப்படும் அவருக்கு ஒரு சில விசித்திரமான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளது. அதில் உரத்த குரல் மற்றும் சமநிலையின்மை போன்றவை அடங்கும். ஆரம்பத்தில் இவருக்கு தவறாக நோய் கண்டறிதல் செய்யப்பட்டாலும் பிறகு இவருக்கு லாக்டு-இன்-சிண்ட்ரோம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
லாக்டு-இன்-சிண்ட்ரோம் என்பது என்ன?
லாக்டு-இன்-சிண்ட்ரோம் என்பது கண்களில் உள்ள தசைகளைத் தவிர பிற தசைகள் அனைத்தையும் பாதித்து உடலை முழுவதுமாக முடக்கிப் போடும் ஒரு கோளாறு. இதில் நோயாளிகள்தங்களுடைய கண்களை திறக்கலாம் மற்றும் அதனை சுழற்றலாம், தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். எனினும் அவர்களால் பேசவோ அல்லது நகரவோ முடியாது. மூளைத் தண்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த நிலை ஏற்படுகிறது. ஹேண்டலைப் பொறுத்தவரை அவர் அளவுக்கு அதிகமாக போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்ததால் அவருடைய மூளையின் செயல்பாடு பெருமளவு குறைந்தது. இப்போது ஹேண்டலின் அனுபவத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
லாக்டு-இன்-சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இந்த நிலையில் அவர் இருந்த பொழுது அவரைச் சுற்றி இருந்த நபர்கள் என்னென்ன பேசினார்கள் என்பது ஹேண்டிலுக்கு நினைவிருப்பதாக அவர் கூறுகிறார். இது அவரை இன்னும் அசௌகரியமானதாக மாற்றி உள்ளது. தான் ஏதோ ஒரு தனித்த அறையில் கைதி போல இருந்ததை உணர்ந்ததாக அவர் கூறினார். அவருடைய தேவைகளை பிறருக்கு சொல்ல முடியாமல் வலியையும், அசௌகரித்தையும் அனுபவித்துள்ளார்.
இவர் மூளை சாவு அடைந்து விட்டார் என்று மருத்துவர்கள் நினைத்துக் கொண்டு இவருக்கு வழங்கி வந்த உயிரை காப்பாற்றும் கருவிகளை எடுத்து விடலாம் என்று முடிவு செய்தனர். எனினும் அவருடைய மூளை இயல்பாகவே செயல்பட்டு வந்தது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. “கவனிப்பதை தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. எனக்கு முன்னால் இருக்கும் நேரடி பகுதியை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது, என்னை மருத்துவ ஊழியர்கள் எப்படி படுக்க வைப்பார்களோ அந்த அடிப்படையிலேயே எனக்கு முன்னால் இருந்தவற்றை காண முடிந்தது.
என்னுடைய வாய் வறண்டு போனாலோ, எனக்கு பசித்தாலோ அல்லது எனக்கு அரித்தாலோ அதனை என்னால் பிறரிடம் கூற முடியவில்லை. ஒரு சில மாதங்கள் சிகிச்சை பெற்ற பிறகு ஹேண்டில் அவருடைய தசைகள் மீது கட்டுப்பாட்டை பெற்றார். மேலும் மெல்ல மெல்ல அவரால் பேசவும், நடக்கவும் முடிந்தது. அனைத்தையும் அவர் ஆரம்பத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. தன்னுடைய கைகளையும், கால்களையும் எப்படி அசைக்க வேண்டும், எப்படி பேச வேண்டும் ஆகியவற்றை கற்றுக் கொண்டார்.
மேலும் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் இறுதியில் அவர் ஓரளவு குணமடைந்து தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும் நிலைக்கு வந்தார். இவருடைய கதை ஊக்கமளிக்கும் விதமாக மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதியாக மாறினார். மேலும் இவர் Ahoi என்ற நிறுவனத்தில் கோ-ஃபவுண்டராக இணைந்தார்.
அதில் அவர் மாற்றுத்திறனாளிகள் அனுபவித்து வரும் சவால்களை எதிர்கொள்ள உதவி அவர்களுக்கு சேவைகளை வழங்கி வந்தார். மேலும் இவருடைய கதை மிகவும் தனித்துவமானது என்றும், குணமடைதலுக்கான சாத்தியங்களைவெளிப்படுத்துவதாகவும், இதேபோன்ற நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உதவியும், ஆதரவும் தேவைப்படுவதையும் அவர் வலியுறுத்தினார். குணமடையும் செயல்முறையில் இருக்கும் நபர்கள் ஒருபோதும் மனம் தளரக்கூடாது, தொடர்ந்து போராட வேண்டும் என்று ஹேண்டில் மக்களுக்கு கூறியுள்ளார். என்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு மக்களை ஊக்குவிப்பதற்கு நான் விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment