புதிய யோசனை கொண்ட சிறுதொழில்களுக்கு நிதியுதவி..!! விண்ணப்பிக்கம் கடைசி தேதியை வெளியிட்ட தமிழக அரசு..! - Agri Info

Adding Green to your Life

December 31, 2024

புதிய யோசனை கொண்ட சிறுதொழில்களுக்கு நிதியுதவி..!! விண்ணப்பிக்கம் கடைசி தேதியை வெளியிட்ட தமிழக அரசு..!

 

புதிய யோசனை கொண்ட சிறுதொழில்களுக்கு நிதியுதவி..!! விண்ணப்பிக்கம் கடைசி தேதியை வெளியிட்ட தமிழக அரசு..!

வேலையில்லா பட்டதாரிகளின் நலன் கருதி பல வேலைவாய்ப்பு திட்டங்களை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. மேலும் சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் கடன் உதவியும் அளித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புத்தொழில் இயக்கம் (TANSEED) 7-வது பதிப்பிற்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது.
இந்த டான்சீட் திட்டம் என்பது 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்ட நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதி உதவியாக வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஒரு வருட கால தொழில் வளர் பயிற்சி, வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய அளவிலான புத்தொழில் நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற விரும்பும் புத்தொழில் நிறுவனங்கள் www.startuptn.in இணையதளத்தின் வழியாக  ஜனவரி 15, 2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டினை தலைமையகமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் DPIIT தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment