இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு பாடத்திட்டம் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்துகிறது.
அதன்படி, 2025-26 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. நீட் தேர்வில் கேட்கப்படும் 180 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறுகிறது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் https://www.nmc.org.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கேள்விகள் இடம்பெற உள்ளன.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment