2025 - Agri Info

Adding Green to your Life

February 4, 2025

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்விக் கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி - தமிழக அரசு உத்தரவு

February 04, 2025 0
எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்விக் கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி - தமிழக அரசு உத்தரவு

1349466

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு கல்விக் கடன்கள் வழங்கப்பட்டது.

அந்தக் கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையை மாணவர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும், வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதையும் தள்ளுபடி செய்து (Write off proposal) அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

2024-2025 ஆம் கல்வி ஆண்டு கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

February 04, 2025 0
2024-2025 ஆம் கல்வி ஆண்டு கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
IMG_20250204_110135

2024-25 - ஆம் ஆண்டில் , பார்வையில் காணும் செயல்முறைகளின் படி நவம்பர் . டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சிறார் திரைப்படங்கள் 6 முதல் 9 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திரையிடப்பட்டுள்ன. 

அதனை தொடர்ந்து சிறார் திரைப்படம் திரையிடல் சார்ந்த பள்ளி , வட்டாரம் , மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . அதன் பொருட்டு , அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் பங்கு பெறும் வகையில் எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் . பள்ளி அளவிலான போட்டிகளை அட்டவணை -1 ல் குறிப்பிட்டுள்ளவாறு திட்டமிட்டு நடத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்திடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும்.

 வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் போது , இதில் சிறந்து விளங்கும் அனுபவம் வாய்ந்த நடுவர்களை தேர்ந்தெடுத்து உரிய முறையில் போட்டிகளை நடத்துதல் வேண்டும் . மேலும் , பள்ளி , வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு திட்டமிட்டு நடத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

ஒவ்வொரு நிலையிலான போட்டிகளை நடத்தும் போதும் , போட்டிகள் குறித்த விவரத்தினை போட்டி நடக்கும் தேதிக்கு முந்தைய தினத்தன்று மட்டுமே மாணவர்களுக்கு தெரிவித்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்னதாக தெரிவித்தல் கூடாது

movie screening Competition reg - Download here

 🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அரசு பணிகளில் இந்த ஆண்டு எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்? - டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்

February 04, 2025 0
அரசு பணிகளில் இந்த ஆண்டு எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்? - டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்

 1349502

தமிழ்​நாடு அரசு பணியாளர் தேர்​வாணையம் (டிஎன்​பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலி​யிடங்கள் நிரப்​பப்​படும் என்பது ஏப்ரல் மாதம் தெரிய​வரும் என்று தேர்​வாணை​யத்​தின் தலைவர் எஸ்.கே.பிர​பாகர் தெரி​வித்​தார்.

அரசு பணிகளில் சேர விரும்​புவோரின் வசதிக்காக டிஎன்​பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்ட​வணையை ஆண்டு​தோறும் வெளி​யிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்ட​வணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளி​யிட்​டது. அதில் குரூப்-1 தேர்வு, ஒருங்​கிணைந்த குரூப்-2, 2ஏ தேர்வு, குரூப்-4 தேர்வு,தொழில்​நுட்ப பணிகள் தேர்வு (நேர்​முகத் தேர்வு மற்றும் நேர்​முகத் தேர்வு இல்லாதது) என மொத்தம் 7 தேர்​வு​களுக்கான அறிவிப்புகள் இடம்​பெற்றுள்ளன.

வழக்​கமாக வருடாந்திர தேர்வு அட்ட​வணை​யில், என்னென்ன தேர்​வு​கள், எத்தனை காலி​யிடங்கள் என்பன உள்ளிட்ட விவரங்​களும் விரிவாக குறிப்​பிடப்​பட்​டிருக்​கும். ஆனால், 2025-ம் ஆண்டு தேர்வு அட்ட​வணை​யில் அதுபோன்று காலி​யிடங்கள் பற்றிய விவரம் இடம்​பெற​வில்லை.

மேலும், முன்பு தனித்தனி தேர்வாக நடத்​தப்​பட்டு​வந்த பல தேர்​வுகள் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப தேர்​வுகள் (நேர்​காணல் உள்ளவை), ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பத்​தேர்​வுகள் (நேர்​காணல் இல்லாதவை) என இரு பெரிய தேர்​வு​களாக சுருக்​கப்​பட்​டுள்ளன. தேர்வு அட்ட​வணை​யில் அந்த ஒருங்​கிணைந்த தேர்​வு​களில் என்னென்ன பதவி​களுக்கான தேர்​வுகள் இருக்​கும் என்பதும் அவற்றில் குறிப்​பிடப்​பட​வில்லை. இதனால், எத்தனை காலி​யிடங்கள் அறிவிக்​கப்​படும். எந்தெந்த பதவி​களுக்கு தேர்​வுகள் நடத்​தப்​படும் என்பது தேர்​வர்​களுக்கு தெரிய​வில்லை.

இதுகுறித்து டிஎன்​பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிர​பாகரிடம் கேட்​ட​போது, “தற்​போதைய நிலை​யில் நடப்பு நிதி ஆண்டுக்கு (2024-2025) ஒதுக்​கப்​பட்ட அனைத்து காலி​யிடங்​களுக்​குமான போட்​டித்​தேர்​வு​களும் நடத்தி முடிக்​கப்​பட்டு​விட்டன. எனவே, அடுத்த நிதி ஆண்டுக்கான காலி​யிடங்​களின் விவரம் மார்ச் மாதத்​துக்கு பிறகே அதாவது ஏப்ரலில்​தான் தெரிய​வரும். தேர்​வு​களுக்கான அறிவிப்புகள் வெளி​யிடும்​போது அதில் காலி​யிடங்கள் எண்ணிக்கை​யும் எந்தெந்த பதவிகள் என்பதும் இடம்​பெறும்.

தேர்​வாணை​யத்​தால் நடத்​தப்​படும் தேர்​வு​களின் முடிவுகளை குறித்த காலத்​தில் வெளி​யிடு​வதற்கு முன்னுரிமை அளிக்​கிறோம். கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்​தப்​பட்ட ஒருங்கிணைந்த தொழில்​நுட்​பணி​களுக்கான தேர்​வு​களின் (நேர்​காணல் இல்லாதது) ​முடிவு​கள் பிப்​ரவரி ​மாதம் வெளி​யிடப்​படும் என அறி​வித்​திருந்​தோம். அதன்​படி, அத்​தேர்​வு​களின் ​முடிவு​கள் அடுத்த வாரம் வெளி​யிடப்​படும்​” என்​றார்​.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

February 04, 2025 0
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

IMG-20250204-WA0024

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் . காலநிலை கல்வி அறிவுக்கென ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.

சூழல் மன்றங்கள்

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்.

* காலநிலை கல்வி அறிவுக்கு என்று ஒரு கொள்ளை வகுத்து தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிடும்.

 * காலநிலை குறித்து மாணவர்கள் மூலமே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் . 

* அரசு துறை அலுவலர்களுக்கு காலநிலை மாற்ற தடுப்பு குறித்து திறன் பயிற்சி அளிக்கப்படும்.

 * காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய வேலாண்மை , நீர் வளம் ஆகிய துறைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.

 * வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில பேரிடர் நிதி பயன்படுத்தப்படும் .

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TERM - 2 CCE Register Updated Now in EMIS Website

February 04, 2025 0
TERM - 2 CCE Register Updated Now in EMIS Website

IMG_20250204_143034

EMIS NEW UPDATE 

TERM - 2   ( 2024 - 2025 ) 

1- 5 வகுப்புகளுக்கான CCE REGISTER ஐ தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

February 3, 2025

Income Tax - நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி கணக்கை Kalanjiyam Appல் பதிவிறக்கம் செய்வது எப்படி? - Step By Step Procedure

February 03, 2025 0
Income Tax - நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி கணக்கை Kalanjiyam Appல் பதிவிறக்கம் செய்வது எப்படி? - Step By Step Procedure

2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

களஞ்சியம் செயலியில் -Reports -Pay Drawn-2024-25 செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம்.

ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Username 

⬇️

Password 

⬇️

Signin 

⬇️

Employee Self Service 

⬇️

Reports

⬇️

Pay Slip

⬇️

Select Year

⬇️

Select month 

⬇️

Go

⬇️

Emp-Regular-Salary

⬇️

Download

Click Here to Download - Income Tax - Kalanjiyam App - Direct Link

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Income Tax Exemption – Pensioners - அடுத்த ஆண்டு 2025-2026 முதல் வரி விலக்கு பெறும் ஆண்டு வருமான வரம்புகள்

February 03, 2025 0
Income Tax Exemption – Pensioners - அடுத்த ஆண்டு 2025-2026 முதல் வரி விலக்கு பெறும் ஆண்டு வருமான வரம்புகள்

 Tax%20Exemption

வரி விலக்கு - ஓய்வூதியம் பெறுபவர்கள் - அடுத்த ஆண்டு 2025-2026 முதல் வரி விலக்கு பெறும் ஆண்டு வருமான வரம்புகள்

Tax Exemption – Pensioners – Annual Income Limits for Tax Exemption from next year onwards

    வருமான வரியாக ஒரு ரூபாய் கூட செலுத்த தேவையில்லை என்னும் வருமான வரம்புகள் கொண்ட ஓய்வூதியம் பெறுவோர் விவரம்

1.  ஓய்வூதியம் 1,06,250க்கு மேல் இல்லாதவர்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகை இல்லாதவர்கள் 

2. ஓய்வூதியம் 99,000 க்கு மிகாமல் மற்றும் 10 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 

3. ஓய்வூதியம் 92,000க்கு மிகாமல் மற்றும் நிலையான வைப்புத்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக 

4. ஓய்வூதியம் 85,000 க்கு மிகாமல் மற்றும் 30 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 

5. ஓய்வூதியம் 78,000 க்கு மிகாமல் மற்றும் 40 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 

6. ஓய்வூதியம் 71,000 க்கு மிகாமல் மற்றும் 50 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 

7. ஓய்வூதியம் 63,700க்கு மிகாமல் மற்றும் 60 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 

8. ஓய்வூதியம் 56,700க்கு மிகாமல் மற்றும் 70 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 

9. ஓய்வூதியம் 49,600க்கு மிகாமல் மற்றும் 80 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 

10. ஓய்வூதியம் 42,500 க்கு மிகாமல் மற்றும் 90 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 

11. ஓய்வூதியம் 36,500க்கு மிகாமல் மற்றும் ஒரு கோடிக்குக் கீழே நிலையான வைப்புத்தொகை

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

February Month - Teachers Diary

February 03, 2025 0
February Month - Teachers Diary

IMG_20241228_132636

2025 பிப்ரவரி மாதம் "ஆசிரியர் டைரி"

01.02.2025 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

BEO அலுவலகம்

04.02.2025 - செவ்வாய்க்கிழமை

3ஆம் வகுப்பு SLAS தேர்வு

05.02.2025 - புதன்கிழமை

5ஆம் வகுப்பு SLAS தேர்வு

06.02.2025 - வியாழக்கிழமை

8ஆம் வகுப்பு SLAS தேர்வு

08.02.2025 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

DEO அலுவலகம்

11.02.2025 - செவ்வாய்க்கிழமை

தைப்பூசம்

அரசு விடுமுறை

14.02.2025 - வெள்ளிக்கிழமை

ஷாபே பராஅத்

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL

15.02.2025 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

CEO அலுவலகம்

26.02.2025 - புதன்கிழமை

மகா சிவராத்திரி

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL

28.02.2025 - வியாழக்கிழமை

ரம்ஜான் நோன்பு தொடக்கம்

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL

`பிப்ரவரி மாதம் அனைத்து சனிக்கிழமையும் வாரவிடுமுறை

`பிப்ரவரி மாத சம்பளப் பட்டியலில் வருமான வரி இறுதி பிடித்தம் செய்தல்`

`இரண்டாம் கட்ட தொழில் வரி செலுத்தல்`

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

ஆசிரியர்கள் & விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2024-2025 அறிவிப்பு.

February 03, 2025 0
ஆசிரியர்கள் & விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2024-2025 அறிவிப்பு.

 IMG_20250203_143259

மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிருவாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை . தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேனிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் காப்பாளர் / காப்பாளினிகளுக்கும் 2024-2025 - ஆம் கல்வியாண்டில் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலமாக ( EMIS ) 31.12.2024 அன்றைய நிலையில் உள்ள காலிப்பணியிடங்கள் அடிப்படையில் பொதுமாறுதல் கலந்தாய்வு 04.02.2025 மற்றும் 05.02.2025 ஆகிய நாட்களில் மதுரை முதன்மை கல்வி அலுவலக அரங்கில் பின்வரும் விவரப்படி நடைபெற உள்ளது.

counselling Intimation -reg👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

இந்திய மத்திய வங்கி 1000 Credit Officer / Assistant Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

February 03, 2025 0
இந்திய மத்திய வங்கி 1000 Credit Officer / Assistant Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 2024ல் இந்திய மத்திய வங்கி வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Credit Officer/Assistant Manager.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 1000. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்திய மத்திய வங்கி வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.02.2025 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Credit Officer/Assistant Manager

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 1000

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் Any Degree தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 48,480/- முதல் ரூ. 85,920/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 20 முதல் 30 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Online Exam, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (20.02.2025) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
Rs.750
Rs.150 for SC/ST/PWD

விண்ணப்பிக்க கடைசி தேதி:

20.02.2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே விண்ணப்பிக்கவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group