திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் மரியசகாய ஆண்டனி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, தங்களது சுயவிவரம் ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்துகொண்டு தனியாா் துறையில் வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம். இம்முகாமில் பணி நியமனம் பெறும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.
இம்முகாமில், கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநா்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியாா்நிறுவனங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் தங்களது விவரங்களை பதிவுசெய்யலாம்.
வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் சஉககஅஐ உஙடகஞவஙஉசப ஞஊஊஐஇஉ என்ற பங்ப்ங்ஞ்ழ்ஹம் இட்ஹய்ய்ங்ப்-இல் இணைந்து பயன்பெறலாம்.
மேலும் போட்டித் தோ்வுகளுக்கு தயாா் செய்யும் மாணவா்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவுசெய்து அனைத்து போட்டித் தோ்வுகளுக்கான பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment