நடைபயிற்சி செய்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்; எலும்புகள் வலுவடையும்; உடல் எடை குறையும்; என பல விதமான் நன்மைகளை அடுக்கி கொண்டே செல்லலாம். தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது சிறந்தது என நிபுணர்களின் கூற்றுப்படி கூறுகின்றனர். ஏனெனில் இது உடல் இயக்கம் மற்றும் உடலின் சமநிலையை மேம்படுத்தவும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

ஆனால் இந்த எளிய உடற்பயிற்சியின் பலன்களை நீங்கள் கூடுதலாக பெற நினைத்தால் உங்கள் எடை இழப்புக்கான முயற்சிகளை இன்னும் துரிதப்படுத்த நினைத்தால் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பதற்கு பதில் படிக்கட்டுகளில் ஏறுவது பயனுள்ளதாக இருக்கும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ எங்கு வேண்டுமானாலும் இதை எளிதாக மேற்கொள்ளலாம்.
வாக்கிங் ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றாலும், கலோரிகளைக் குறைக்க அல்லது குறைந்த நேரத்தில் விரும்பிய முடிவுகளைப் பெற நிறைய நேரம் எடுக்கும். இதனிடையே சமீபத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 4,50,000 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வானது நடைபயிற்சிக்கு மாற்றாக படிக்கட்டுகளில் ஏறுவதை விரைவான உடல் எடை குறைப்பிற்கு பரிந்துரைத்துள்ளது. படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சியானது குறைந்த நேரத்தில் பயனுள்ள நன்மைகளை வழங்க கூடியதாக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது.
Atherosclerosis என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நாளொன்றுக்கு 5 flights அளவிலான படிக்கட்டுகளில் ஏறுவது அல்லது தோராயமாக 50 படிகள் ஏறுவது இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை 20% குறைப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்கட்டுகளில் அடிக்கடி ஏறுவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியை குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறுத்தியவர்களுக்கு இதய நோய் பாதிப்புக்கான ஆபத்து 32 சதவீதம் அதிகரித்ததாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வாக்கிங்குடன் ஒப்பிடும்போது, படிக்கட்டுகளில் ஏறுவது ஒரு மேல்நோக்கிய வாக்கிங் என்பதற்கு சமம். ஏனெனில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக உடலை நகர்த்தி கொண்டு நடக்க வேண்டும் என்பதோடு இது அதிக கலோரிகளை எரிக்கும் எனவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment