வரும் கல்வியாண்டில் புதுச்சேரியில் சிபிஎஸ்இ அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வயது என்ன என்ற குழப்பத்தில் பெற்றோர் - ஆசிரியர் உள்ளனர். இவ்விஷயத்தில் கல்வித்துறை விரைந்து தெளிவுப்படுத்த வேண்டும் என்று தெவிக்கின்றனர். புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புதிய கல்விக்கொள்கையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், சில தனியார் பள்ளிகளில் தமிழ்நாடு பாடத்திட்டத்திட்டம் தொடர்கிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட தனியார் பள்ளிகளில் புதிய கல்விக்கொள்கை விதிப்படி 6 வயதில் இருந்து 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடக்கும் என தெரிவிக்கின்றனர்.
இதையொட்டி, 2025-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் 3 வயது நிறைவடைந்த குழந்தைகளை பிரிகேஜி வகுப்பிலும், 4 வயது நிறைவடைந்த குழந்தைகளை எல்கேஜி வகுப்பிலும், 5 வயது நிறைவடைந்தவர்களை யுகேஜி வகுப்பிலும், 6 வயது நிறைவடைந்த குழந்தைகளை 1-ம் வகுப்பிலும் சேர்க்க தனியார் பள்ளிகள் விண்ணப்பம் விநியோகிக்க தொடங்கியுள்ளன.
ஆனால், அரசு முன்மழலையர் பள்ளியில் கடந்தாண்டு எல்கேஜி வகுப்புக்கு 30.6.2024-க்குள் 3 வயது நிறைவடைந்த குழந்தைகளையும், அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்புக்கு 5 வயது நிறைவடைந்த குழந்தைகளையும் சேர்த்தனர். நடப்பு கல்வியாண்டு முடிய இன்னும் இரண்டரை மாதங்களே உள்ளன. 2025-26-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஏப்.1-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இந்நிலையில் வரும் கல்வி ஆண்டு அரசு முன்மழலையர் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் குழந்தைகள் சேர்க்க தகுதியான வயது 3 அல்லது 4 என்றும், இதேபோல், அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பில் குழந்தைகளைச் சேர்க்க தகுதியான வயது 5 அல்லது 6 என்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இதனால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
தற்போது புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வரும் பல அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் முன்மழலையர் பள்ளிகளுக்கு பெற்றோர் சென்று ஆசிரியர்களிடம். ‘எல்கேஜி மற்றும் 1-ம் வகுப்புக்கு எந்த வயதில் இருந்து பிள்ளைகளை சேர்ப்பீர்கள்?’ என்று கேட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆசிரியர்களும் கல்வித்துறையை நாடியுள்ளனர்.
இதுபற்றி பெற்றோர் தரப்பில் விசாரித்தபோது, "தற்போது யுகேஜி முடிக்கும் குழந்தைகள், அடுத்ததாக 1-ம் வகுப்பு செல்ல வேண்டும். 1-ம் வகுப்புக்கு 6 வயதில் தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என அரசு முடிவு எடுத்தால், தற்போது யுகேஜி படிக்கும் குழந்தைகள் மேலும் ஓராண்டு யுகேஜி படிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் 1-ம் வகுப்பிலும் சேர வாய்ப்பில்லாமல் போய்விடும். " என்றனர். இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "கல்வியமைச்சருடன் கலந்து ஆலோசித்து, இதில் விரைவில் முடிவு அறிவிக்கப்படும்" என்கின்றனர்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment