2025-2026ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ/மாணவியர்களின் விவரம் - பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் – TNSED App- பதிவேற்றம் மேற்கொள்ள உத்தரவு - Agri Info

Adding Green to your Life

January 13, 2025

2025-2026ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ/மாணவியர்களின் விவரம் - பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் – TNSED App- பதிவேற்றம் மேற்கொள்ள உத்தரவு

 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6 ந.க.எண்.70367/இ/இ1/2024 நாள். 12.2024 


பொருள்: 

பள்ளிக் கல்வி -2025-2026ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ/மாணவியர்களின் விவரம் - பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் – TNSED App- பதிவேற்றம் மேற்கொள்ள செய்தல் தொடர்பாக. 

பார்வை 

சென்னை -6, மாநித் திட்ட இயக்குநரின் கடித ந.க.எண்.4701/C1/SWD/EMIS/2024 நாள். 23.12.2024. 

2025-2026 ஆம் கல்வியாண்டில் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்திற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் EMIS web portal -ல் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை விவரங்களில் வேறுபாடுகள் ஏற்றம் இறக்கமாக உள்ளதால் ஒரு வார காலத்திற்குள் குறைபாடுகளை சீர் செய்து EMIS web port-ல் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை Freeze செய்து முடிவான விவரங்களை சமூக நல ஆணையரகத்திற்கு வழங்க வேண்டியுள்ளதால் 2025-2026 ஆம் கல்வியாண்டில் சத்துணவு உண்ணும் மாணாக்கர்களின் விவரங்களை TNSED App-ல் உரிய பதிவேற்றம் உடனடியாக மேற்கொள்ளமாறும சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட அலுவலர்களும் கேட்டுக் முதன்மைக் கொள்ளப்படுகிறார்கள். 

கல்வி மேலும், TNSED App-ல் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து உறுதிபடுத்திடவும், இப்பணியினை உடனடியாக முடிப்பதற்கு சார்ந்த, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment