எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு எழுதவுள்ள பட்டதாரிகளுக்கான ஹால்டிக்கெட்டை என்டிஏ வெளியிட்டுள்ளது. நம்நாட்டில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பாண்டு சிமேட் தேர்வு ஜன. 25-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான ஹால்டிக்கெட்டை https://exams.nta.ac.in/CMAT எனும் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment