தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி 20.01.2025 முதல் 25.01.2025 வரை புதுச்சேரியில் நடைபெற்றது. கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக தர்மபுரி மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி அவ்வைநகர் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு மா கார்த்திகேயன் M.Sc.,M.Ed., M.Phil.,,(விலங்கியல்) அவர்கள் ஆசிரியர் பிரிவில் அவருடைய படைப்பினை சமர்ப்பித்து தென்னிந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து தமிழகத்திற்கும், ஆசிரியர் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாணவர்களுடைய அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதிலும், தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்தப்படுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள ஆசிரியருக்கு வாழ்த்துகள் அவரின் அறிவியல் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். புதுச்சேரி கல்வி அமைச்சர் அவர்களால் வெற்றி கோப்பை பெரும் மகிழ்ச்சியான தருணம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment