மணற்கேணி செயலி - பாடநூலில் இடம்பெற்று உள்ள பாடங்களின் காணொலி காட்சிகளை திறன் பலகைகளில் (Smart Board) பயன்படுத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
மணற்கேணி செயலியை பயன்படுத்தி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை புதிய அறிவியல் நுட்பங்களின் மூலம் பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையுள்ள பாடங்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழிவழி காணொலி காட்சிகள் சிறந்த தொழில்நுட்ப தரத்தில் மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. என்ற அரசு தொடக்கப் பள்ளிகளில் 20,000க்கும் மேற்பட்ட திறன் பலகைகள் (Smart Board) நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திறன் பலகைகளில் சார்ந்த பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் ஒவ்வொருவராக https://manarkeni.tnschools.gov.in இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள Regster என்ற பகுதியில் தங்களின் பெயர் அல்லது கைபேசி எண்ணை பதிவு செய்து அதன் பின்னர் Logh செய்து உள்நுழைந்து சன்றைய வகுப்பறை குழலுக்கு ஏற்ற பாடங்களை தெரிவு செய்து கற்றல் கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்வதற்கு ஏற்ற அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மணற்கேணி செயலியை தங்களின் வகுப்பறைக் கற்பித்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனரா என்பதை அனைத்து ஆய்வு அலுவலர்களும் தங்களின் பள்ளிப் பார்வை மற்றும் ஆய்வுகளின் போது கண்காணித்து அனைவரையும் இந்த செயல்பாட்டில் ஈடுபடுத்த உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் உள்நுழைவு வாயிலாக மணற்கேணி செயலியை திறன் பலகைகள் (Smart Board) மூலம் பயன்படுத்தி வருவதை கைபேசியில் படம்பிடித்து அதனை தங்களது EMIS id மற்றும் பள்ளியின் U-Dise எண்ணுடன் இணைப்பில் கொடுக்கப்பட்டு உள்ள Google Forms - Link ல் 05.02.2025ஆம் தேதிக்குள் பதிவிட சார்ந்த வட்டாரக் கல்வி அலுடியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Smart Board + Manarkeni App - Within 5.2.2025 - Proceedings - Download here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment