TNPSC - குரூப் 4 காலிப்பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு - Agri Info

Adding Green to your Life

January 9, 2025

TNPSC - குரூப் 4 காலிப்பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு

 .com/

*குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


*இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.


*டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஏற்கெனவே 3 முறை காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 41 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.


*தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பட்டு வருகின்றன.


*இதில், டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு 6,244 காலிப்பணியிடங்களுக்கு வெளியானது. அதில் செப்டம்பர் மாதம் 480, அக்டோபர் மாதம் 2,208 மற்றும் 559 என இரண்டு முறை அதிகரிக்கப்பட்டு, ஏற்கனவே 9,491 காலிப்பணியிடங்களுக்கு முடிவுகள் அக்டோபர் 28 ஆம் தேதி வெளியானது.


*இந்நிலையில், தற்போது மேலும் கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனால், மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக அதிகரித்துள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment