வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் நன்மைகளை பெற, பி.எப்., கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம், பிப்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 2024 மத்திய பட்ஜெட்டில், வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இ.எல்.ஐ., திட்டம் அறிவிக்கப் பட்டது. இத்திட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் நிறுவனம், பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் நன்மைகளை பெற, யு.ஏ.என் எனப்படும் பிரத்யேக கணக்கு எண்ணுடன், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கை இணைப்பது கட்டாயம். இதற்கான அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது பிப்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment