மத்திய பட்ஜெட் 2025 - 2026 @ முக்கிய அம்சங்கள் : - Agri Info

Adding Green to your Life

February 1, 2025

மத்திய பட்ஜெட் 2025 - 2026 @ முக்கிய அம்சங்கள் :

 .com/

2025 - 2026 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.


மத்திய பட்ஜெட் 2025 - 2026 @ முக்கிய அம்சங்கள் :

உடனுக்குடன் ...

வருமான வரி மசோதா


புதிய வருமான வரி திட்டத்தில் ரூ .12 லட்சம் வரை வருமான வரி கிடையாது

வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் வகையில் புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு


ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் 5 சிறிய அணு உலைகள் 2033-ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

மறைமுக வரிகளில் சீர்திருத்தங்கள்


மூத்த குடிமக்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை வரி பிடித்தம் கிடையாது.


கப்பல் கட்டுமானத்துக்கான சலுகைகள் மேலும் 10 ஆண்டுகளுக்குத் தொடரும்.

செல்ஃபோன், மின்சார வாகனங்கள் விலை குறைகிறது

செல்போன் பேட்டரிகளுக்கான உற்பத்திக்கு வரி சலுகை


லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.


லித்தியம் பேட்டரிகளின் வரி விலக்கு உள்ளிட்ட அறிவிப்புகளால் மின்சார வாகனங்கள் மற்றும் செல்ஃபோன் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னலாடைகளுக்கு இறக்குமதி சலுகைகளை அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.


மருத்துவப் படிப்பு - கூடுதல் இடங்கள்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.


அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்.


நாடு முழுவதும் மேல்நிலைப் பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம் பிராட்பேண்ட் வசதி.


சிறு முதல் பெரிய தொழில் வரை உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும்.


மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.


உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளை ஏற்றுமதி ய்ய நடவடிக்கை


எஸ்சி/எஸ்டி பெண்களை தொழில் முனைவோர்களாக்க முதன்முறையாக புதிய திட்டம்

விவசாயத் துறைக்கான அறிவிப்பு

11:25 am, 01 பிப்ரவரி 2025

விவசாயிகளுக்கும் சிறு நிறுவனங்களுக்கும் கடன்

கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் பெற நடவடிக்கை


கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வசதி


கூட்டுறவுத் துறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும்.


புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள்


சிறு குறு நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாக கொள்ளும் அளவுக்கு வசதிகள் உருவாக்கப்படும்.


சிறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும்.


கிராமப்புறங்களில் கூடுதலாக 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும்.


தபால் நிலையங்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படும்.


11:18 am, 01 பிப்ரவரி 2025

விவசாயத் துறைக்கான அறிவிப்புகளைக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, மேசையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தார்.

11:17 am, 01 பிப்ரவரி 2025

விவசாயத் துறைக்கான அறிவிப்பு

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது.


பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.


வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும்.


பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்க திட்டம்.


உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க திட்டம் அறிமுகம்.


சிறப்பான சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க திட்டம்.


பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.


பிகார் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் அறிவிப்பு


11:13 am, 01 பிப்ரவரி 2025

ஆறு முக்கியம்சங்கள்

வரி, மின்சாரம், சுரங்கம், நிதி, சீர்திருத்தம் உள்ளிட்ட ஆறு முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம்


பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.


வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும்.


தெலுங்கு கவிதையை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றினார்.


உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது 

11:05 am, 01 பிப்ரவரி 2025

பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.


மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அமளிக்கிடையே பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன்


11:01 am, 01 பிப்ரவரி 2025

என்னென்ன சிறப்பு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.


சீதாராமன் 2019 ஆம் ஆண்டு, தனது முதல் பட்ஜெட்டில், பட்ஜெட் ஆவணங்களை எடுத்துச் செல்ல பல ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருந்த தோல் பிரீஃப்கேஸை மாற்றினார்


சிவப்புத் துணியால் தயாரிக்கப்பட்ட மிக அழகிய கைப்பையில் பாரம்பரிய கணக்குப் புத்தகங்களை எடுத்துச் செல்லத் தொடங்கினார். அந்த நடைமுறையையே இதுநாள் வரை பின்பற்றி வருகிறார்.


கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் பட்ஜெட் காகிதமற்ற, டிஜிட்டல் வடிவ பட்ஜெட் ஆகவே இருக்கிறது.


10:51 am, 01 பிப்ரவரி 2025

முந்தைய ஆண்டுகளில் பொது பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் புகைப்படங்களின் தொகுப்பு

10:42 am, 01 பிப்ரவரி 2025

மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

வரும் 2025 - 2026 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


மக்களவையில் இன்னும் சற்றுநேரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.


10:42 am, 01 பிப்ரவரி 2025

குடியரசுத் தலைவருடன்

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.


இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு செல்லும் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறவுள்ளார்.


10:42 am, 01 பிப்ரவரி 2025

பங்குச் சந்தைகள்

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்ற

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது.


பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.


வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும்.


பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்க திட்டம்.


உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க திட்டம் அறிமுகம்.


சிறப்பான சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க திட்டம்.


பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.


பிகார் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் அறிவிப்பு


வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும்.


தெலுங்கு கவிதையை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றினார்.


உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது என்றும், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாகவும் நிர்மலா சீதாராமன் பெருமிதம்.

* நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment