யூடியூப் சேனல் மூலம் பொருட்கள் விற்பனை செய்து இரட்டிப்பு லாபம் பெறுவது எப்படி? தமிழக அரசு தரும் 3 நாட்கள் பயிற்சி - Agri Info

Adding Green to your Life

February 25, 2025

யூடியூப் சேனல் மூலம் பொருட்கள் விற்பனை செய்து இரட்டிப்பு லாபம் பெறுவது எப்படி? தமிழக அரசு தரும் 3 நாட்கள் பயிற்சி

 நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் சமூக ஊடகங்கள் பொதுப்போக்கு இடமாக மட்டுமில்லாமல், ஆன்லைன் வர்த்தக தளங்களாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதில் வீடியோக்களை தவிர்க்கவே முடியாது. சர்வதேச அளவில் யூடியூப் வீடியோக்களின் மூலம் பொருட்கள் விற்பனை செய்து இரட்டிப்பு லாபம் பெறுபவர்கள் ஏராளம். யூடியூப்பில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்தே பலர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். தொழில் செய்பவர்களுக்கும் யூடியூப் வீடியோக்கள் மூலம் அவர்களின் பொருட்களை விற்பனை செய்து லாபம் பெற முடியும்.


ஆனால் இதையெல்லாம் எப்படி தொடங்குவது, யூடியூப் சேனல் மூலம் நமது பொருட்களை சந்தைப்படுத்துவது எப்படி என பலருக்கு கேள்வி எழுகிறது. உங்களுக்கு நிபுணர்கள் கொண்டு தமிழக அரசே பயிற்சி அளித்தால் எப்படி இருக்கும்? ஆம், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் சொந்தமாக யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் “யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல்” தொடர்பான பயிற்சியை 3 நாட்களுக்கு வழங்க உள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவலில், “ தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 05.03.2025 முதல் 07.03.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் https://www.editn.in/ என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். . மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை . 8668108141 / 8668102600/7010143022 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 என்ற அலுவலக முகவரியில் நேரில் சென்றும் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

தமிழக அரசு வழங்கும் இப்பயிற்சி குறைவான கட்டணத்தில் நிபுணர்கள் கொண்டு தனித்துவமாக நடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் நபர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

No comments:

Post a Comment