எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்விக் கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி - தமிழக அரசு உத்தரவு - Agri Info

Adding Green to your Life

February 4, 2025

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்விக் கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி - தமிழக அரசு உத்தரவு


1349466

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு கல்விக் கடன்கள் வழங்கப்பட்டது.


அந்தக் கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையை மாணவர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும், வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதையும் தள்ளுபடி செய்து (Write off proposal) அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

No comments:

Post a Comment