மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்று பிளாக் காபி. பிளாக் காபி என்பது பால் அல்லது சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படும் காபி. பிளாக் காபியை தினமும் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பிளாக் காபியில் உள்ள காஃபின் கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கிறது மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கவும் உதவுகிறது.
பிளாக் காபியை சில உணவுகளுடன் இணைக்கும்போது உடல் எடையை விரைவாக குறைக்கவும் உதவுகிறது. சரியான உணவுடன் இணைந்து அருந்துவது கொழுப்பை எரிக்கவும், பசியைக் குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஊக்குவிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. விரைவான எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக பிளாக் காபியுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய 5 உணவுகள் இங்கே.
1. அவகேடோ பழம் : அவகேடோ பழம் ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதை பிளாக் காபியுடன் இணைக்கும்போது, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் காஃபின் ஆகியவற்றின் சீரான கலவையை வழங்குகின்றன. இது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி, பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.
2. முட்டைகள் : பிளாக் காபியுடன் முட்டைகளை சேர்த்து சாப்பிடுவது உடற்பயிற்சி செய்பவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், நாள் முழுவதும் உங்களை முழுமையாகவும், திருப்தியாகவும் உணர வைக்கும். எனவே தினமும் இரண்டு முட்டைகளை உங்கள் அன்றாட உணவு பட்டியலில் இணைத்து கொள்ளுங்கள்.
3. கிரேக்க தயிர் : கிரேக்க தயிர் காலை உணவு அல்லது சிற்றுண்டிக்கு திருப்திகரமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். கூடுதல் ஊட்டச்சத்திற்காக நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பெர்ரிகள் அல்லது சிறிது சியா விதைகளைச் சேர்க்கவும். இதன் மூலம் உங்களுக்கு தேவையான சீரான உணவு கிடைக்கும்.
4. நட்ஸ் மற்றும் விதைகள் : பிளாக் காபியுடன் நட்ஸ் மற்றும் விதைகளை சேர்த்து சாப்பிடுவது பசியைத் தடுக்க உதவுகின்றன மற்றும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. உங்கள் காலை காபியுடன் ஒரு சிறிய கைப்பிடி அளவு பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் மற்றும் ஆளி விதை, சூரிய காந்தி விதைகள் போன்ற விதைகளையும் சேர்த்து கொள்வது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவும், நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும்.
5. பெர்ரி : பெர்ரிகளை பிளாக் காபியுடன் இணைப்பது உங்கள் காலை பானத்தின் சுவையை அதிகரிக்கும். அதே நேரத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு கொழுப்பை எரிக்கவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment