Papaya | பப்பாளி சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்.. இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..! - Agri Info

Adding Green to your Life

February 18, 2025

Papaya | பப்பாளி சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்.. இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!

 எல்லா சீசன்களிலும் நமக்கு எளிதாக கிடைக்கும் ஒரு பழம் பப்பாளி ஆகும். இதில் டயட்ரி ஃபைபர் சத்து, அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் கேன்சர் ஏற்படும் அபாயம் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் பப்பாளி பழமானது உடல் எடை மேலாண்மைக்கும் பயனுள்ளதாக இருக்கும். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், பப்பாளி பழம் அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம்... பப்பாளி சாப்பிடுவது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும். இந்த பழத்தை யார் எல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.


கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிட கூடாது. ஏனென்றால் இந்த பழத்தில் லேடெக்ஸ் என்ற ஒரு கலவை உள்ளது. இது கருப்பை சுருக்கங்களை (uterine contractions) ஏற்படுத்தி கருக்கலைப்பு அல்லது முன்கூட்டிய பிரசவத்திற்கு வழிவகுக்கும். தவிர பப்பாளியில் உள்ள பப்பேன் என்ற நொதி கருக்கலைவிற்கு காரணமாகி விடக் கூடும்.


சீரற்ற இதய துடிப்பு கொண்டவர்கள்: பப்பாளி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனினும் சீரற்ற இதய துடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம் அவ்வளவு நல்லதல்ல. இதில் சயனோஜெனிக் கிளைகோசைட்ஸ் எனப்படும் அமினோ ஆசிட் மிதமான அளவில் உள்ளது. இது செரிமான அமைப்பில் ஹைட்ரஜன் சயனைடை உருவாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட அளவில் எடுத்து கொண்டால் பப்பாளி எந்தத் தீங்கும் விளைவிக்காது. இருப்பினும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளின் பிரச்சனை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பப்பாளி பழத்தால் இதே போன்ற எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.


லேடெக்ஸ் அலர்ஜி: லேடெக்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் இருக்கும் கைட்டினேஸஸ் எனப்படும் நொதிகள், லேடெக்ஸ் புரதங்களுடன் கிராஸ்-ரியாக்ட் புரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் கண்களில் நீர் வடிதல் உள்ளிட்டவை அறிகுறிகளாகும். சிலருக்கு பப்பாளியின் வாசனை கூட வராது.


சிறுநீரக கற்கள்: வலுவான ஆன்டிஆக்சிடன்ட்டான வைட்டமின் சி பப்பாளி பழத்தில் அதிகமாக உள்ளது. ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஊட்டச்சத்தை அதிகமாக உட்கொள்வது நிலைமையை மோசமாக்கும். வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வதால், கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயமும் அதிகரிக்கிறது.

ரத்த சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள்:
 நீரிழிவு நோயை நிர்வகிக்க பப்பாளி ஒரு சிறந்த வழி. எனினும் குறைந்த ரத்த சர்க்கரை அளவு (ஹைபோகிளைசீமியா) உள்ளவர்களுக்கு இந்த பழம் அவ்வளவு நல்லதல்ல. இந்த பழத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் இயற்கை பண்புகள் உள்ளன. எனவே ஏற்கனவே ஹைபோகிளைசீமியா நிலை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவானது ஆபத்தான அளவிற்குக் குறையக் கூடும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment