Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025
March 2, 2025
Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Unit - 6 & Set - 8 ) Lesson Plan
State Board, CBSE, ICSE இடையேயான வித்தியாசம் என்ன தெரியுமா..? எது பெஸ்ட் தெரியுமா..? முழுசா படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!
இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேலும், 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் 80.33% ஆகும். இதை தொடர்ந்து, தொழில்துறை அமைப்பான அசோசம் நடத்திய கணக்கெடுப்பின்படி, தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பின்பற்றப்படும் கல்வி முறைகள் பற்றி இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
அதாவது, இந்தியாவில் State Board, CBSE, ICSE, NIOS மற்றும் AISSCE என ஐந்து முக்கிய கல்வி வாரியங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பாடத்திட்டங்கள், கற்றல் முறைகள், மதிப்பீட்டு அளவுகோல்கள் மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கான வாரியங்களை கொண்டுள்ளன. இருப்பினும் தமிழகத்தில் 3 கல்வி வாரியங்கள் மட்டுமே பரவலாக அறியப்படுகிறது.
அதில் முதலாவதாக, “மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ” ஆகும். இது, மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. மேலும், இது பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையே தேசிய அளவில் ஒரே கல்வி தரத்தை வழங்கி வருகிறது. இந்த வாரியம் மூலம் தேசிய அளவில் ஒரே பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது.
இரண்டாவதாக, “மாநில கல்வி வாரியம் (State Board)” ஆனது மாநில அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளையும் நிர்வகிக்கிறது. இம்முறையில் மாநில அரசால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது. இறுதியாக, “இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியம்(ICSE)” ஆனது அதன் சர்வதேச கல்வித் தரநிலைகள் மற்றும் விரிவான பாடத்திட்டத்திற்கு பெயர் பெற்றது. மேலும், ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கும் ICSE வாரியம், மாணவர்களுக்கு பரந்த அளவிலான கல்வி மற்றும் தொழில்முறை நோக்கங்களை கற்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி வாரியங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அதற்கென சொந்த கல்வி வாரியத்தைக் கொண்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான தேர்வுத் தரங்களை தீர்மானிக்கிறது.
மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சலுகைகள்: தேர்வுத் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு
எதிர்பாராத விபத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுத் தேர்வில் கூடுதல் நேர சலுகைகள் வழங்க வேண்டுமென தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வில் பங்கேற்கும் தகுதியான மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் போன்ற உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும், சலுகைகள் கோரியிருந்த நிலையில் ஆணைகள் பெறாத நிலையில், அந்த மாணவர்களுக்கு உதவி இயக்குநர்கள் தங்கள் அளவிலேயே அனுமதி வழங்கி அதற்கான பின்னேற்பாணையை பெற்றுகொள்ளலாம். இதன்பின் சலுகைகள் கோரி விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், எதிர்பாராத விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செயது வழிமுறைகளின்படி அனுமதி வழங்க வேண்டும்.
மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அந்தந்த மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநர்களே முடிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதேபோல்,வழிகாட்டுதலில் இடம்பெறாத நோய்களுக்கு சலுகைகள் வழங்கக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 1, 2025
களஞ்சியம் ஆப் -ல் CL/RL தவிர பிற விடுப்பு விண்ணப்பிற்கும்போது சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறதா?
IFHRMS kalanjium leave apply...Salary deduction???
தற்போது நமது விடுப்புகளை களஞ்சியம் வழியாக விண்ணப்பித்து வருகிறோம்...
CL/RL தவிர பிற விடுப்பு எனில் சம்பளம் பிடித்தம் செய்கிறது என்று குற்றச்சாட்டு பரவலாக வருகிறது 🙏
1) *சரியான விடுப்பு* தான் விண்ணப்பித்து உள்ளாரா என்பதை *உறுதி செய்து* கொ
ள்ளுங்கள்..
Approve it...
Do mark for retry....
Check the bill....
5) duty pay .
Leave pay .. என சரியாக பிரிந்து வந்து இருக்கும்...
( பிரிந்து வருவது problem இல்லை) ..
மொத்த தொகை சரியாக இருக்கும்...
உங்கள் நிலையில் இதை சரி செய்து கொள்ளலாம்....
10, 11, 12 பொதுத்தேர்வுகள்: - உதவி எண்கள் அறிவிப்பு
தேர்வு மையங்களிலுமாக மொத்தம் 25,57,354 தேர்வர்கள் 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர்.
இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 45,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மேலும் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க சுமார் 4800 க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மேனிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 20,476 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்கு, சொல்வதை எழுதுபவர், தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்கள்/ தேர்வர்கள்/ பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை – தொடர்பு எண்கள்
அலைபேசி தடை:-9498383075 / 9498383076
தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதரத் தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.