10, 11, 12 பொதுத்தேர்வுகள்: - உதவி எண்கள் அறிவிப்பு - Agri Info

Education News, Employment News in tamil

March 1, 2025

10, 11, 12 பொதுத்தேர்வுகள்: - உதவி எண்கள் அறிவிப்பு

 தேர்வு மையங்களிலுமாக மொத்தம் 25,57,354 தேர்வர்கள் 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர்.

இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 45,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 மேலும் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க சுமார் 4800 க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேனிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 20,476 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்கு, சொல்வதை எழுதுபவர், தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள்/ தேர்வர்கள்/ பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

 தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வுக் கட்டுப்பாட்டு அறை – தொடர்பு எண்கள்

அலைபேசி தடை:-9498383075 / 9498383076

தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

 அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதரத் தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment