ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்குரிய கால அட்டவணை வெளியீடு - Agri Info

Education News, Employment News in tamil

March 12, 2025

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்குரிய கால அட்டவணை வெளியீடு

 

Education News (கல்விச் செய்திகள்)
பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்குரிய கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.


நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 12.58 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன.


இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம்கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 1-ல் தொடங்கி 26-ம் தேதி நிறைவு பெற்றது. இந்நிலையில் ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்குரிய விரிவான தேர்வுக்கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறியலாம். மேலும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

No comments:

Post a Comment