எதிர்பாராத விபத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுத் தேர்வில் கூடுதல் நேர சலுகைகள் வழங்க வேண்டுமென தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வில் பங்கேற்கும் தகுதியான மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் போன்ற உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும், சலுகைகள் கோரியிருந்த நிலையில் ஆணைகள் பெறாத நிலையில், அந்த மாணவர்களுக்கு உதவி இயக்குநர்கள் தங்கள் அளவிலேயே அனுமதி வழங்கி அதற்கான பின்னேற்பாணையை பெற்றுகொள்ளலாம். இதன்பின் சலுகைகள் கோரி விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், எதிர்பாராத விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செயது வழிமுறைகளின்படி அனுமதி வழங்க வேண்டும்.
மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அந்தந்த மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநர்களே முடிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதேபோல்,வழிகாட்டுதலில் இடம்பெறாத நோய்களுக்கு சலுகைகள் வழங்கக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment