நீட் தேர்வில் தேர்ச்சி பெற உதவும் 8 வழிகள் - மாணவர்களுக்கான டிப்ஸ்

   Education News (கல்விச் செய்திகள்)
இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வரும் மே 4-ம் தேதி தேசிய அளவில் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத சுமார் 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் துரிதமாக படிக்க கடைபிடிக்க வேண்டிய சில வழிகளை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

NCERT புத்தகங்கள்

முதலாவதாக, நீட் தேர்வில் NCERT புத்தகங்களை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றை நன்றாக படிப்பது அவசியமாக உள்ளது. ஏனென்றால், NEET தேர்வில் 80-90% கேள்விகள் NCERT புத்தகங்களில் இருந்துதான் கேட்கப்படுகின்றன. குறிப்பாக உயிரியல் பாடத்தை கவனமாக படிக்கவும்.

திட்டமிட்டு படிப்பது

இரண்டாவதாக, திட்டமிட்டு படிக்க வேண்டும். தினமும், வாரம், மாதம் என இலக்குகளை நிர்ணயித்து படிக்கவும். நீட் தேர்விற்கான முழுமையான பாடங்களை பிரித்து காலக்கெடு வைத்து படிப்பது சிறந்த முறையாகும். எந்ததெந்த பாடங்களுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்பதை தெளிவுப்படுத்த உதவும்.

எந்த பாடத்தில் பலவீனமாக இருக்கிறீர்களோ, அதில் அதிக கவனம் செலுத்துங்கள். திட்டமிட்டு படிப்பது அவசியம் ஆகும்.

உயிரியல் பாடம்

மூன்றாவதாக, உயிரியல் படங்களை வரைந்து பயிற்சி செய்யுங்கள். தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை படங்களை வரைந்து, பாகங்களை குறிக்க பயிற்சி செய்யுங்கள். இதன் மூலம் கருத்துக்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

நான்காவதாக, உங்கள் பலவீனமான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக, இயற்பியலில் கணக்குகள் போடுவதில் அல்லது கனிம வேதியியலில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம். அந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். பலவீனமான பகுதியை கண்டறிந்து, அதை முடிந்தவரை சரிசெய்யவது அவசியமாகும்.

மாதிரி தேர்வுகள் முக்கியம்

ஐந்தாவதாக, மாதிரி தேர்வுகள் எழுத வேண்டும். மாதிரி தேர்வுகளை எழுதி, முந்தைய ஆண்டு நீட் கேள்வித்தாள்களையும் பயிற்சி செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் எந்த பாடங்களில் தெளிவாக உள்ளீர்கள், எதனை மீண்டும் படிக்க வேண்டும் என்பவை உறுதிபடுத்திகொள்ள முடியும். மேலும், தேர்வின் நேர மேலாண்மை மற்றும் பதற்றத்தை குறைக்க உதவும்.
நேர மேலாண்மை

ஆறாவதாக, நேரத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று திட்டமிட்டு, கடிகாரத்தை வைத்து பயிற்சி செய்யுங்கள். "நேரத்தை சரியாக நிர்வகிப்பது முக்கியம்".

தினசரி பயிற்சி
ஏழாவதாக, தினமும் படித்ததை நினைவு கூற வேண்டும். பார்முலாஸ், கான்செப்ட் மற்றும் முக்கியமான கோட்பாடுகளை தினமும் நினைவு கூறுங்கள். இதன் மூலம் படித்தது மறக்காமல் இருக்கும்.

ஆரோக்கியமான உணவு


எட்டாவதாக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். சரியான தூக்கம், சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை அவசியம். இது மன அழுத்தத்தை குறைத்து, கவனத்தை அதிகரிக்க உதவும்
.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

0 Comments:

Post a Comment