Education News (கல்விச் செய்திகள்)
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமையினால் (NTA)நடத்தப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) கட்டாயமாகும். 2025-ம் ஆண்டு இளநிலை நீட் தேர்வு வரும் மே 4-ம் தேதி தேசிய அளவில் ஓஎம்ஆர் முறையில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு சுமார் 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், எம்.பி.பி.எஸ் சீட் பெற நீட் தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் தேவை, நீட் தேர்வு தேர்ச்சி மதிப்பண்கள் ஆகியவற்றை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
இளநிலை நீட் தேர்வு என்றால் என்ன?
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு சுருக்கமாக நீட் (NEET) எனக் குறிப்பிடப்படுகிறது. தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கைக்கான தகுதித் தேர்வாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET UG) கட்டாயமாகும். வெளிநாடுகளில் மருத்துவப் படிக்க விரும்புகிறவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2019ஆம் ஆண்டு முதல் இளநிலை நீட் தேர்வு தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படுகிறது.
என்னென்ன மருத்துவப் படிப்புகளில் சேரலாம்?
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), சித்தா (BAMS), யுனானி (BUMS), ஆயுர்வேத ( BSMS) மற்றும் ஹோமியோபதி (BHMS) ஆகிய படிப்பிற்கான சேர்க்கைக்கு நீட் அவசியமாகும். மேலும், செவிலியர் (B.Sc. Nursing), கால்நடை மருத்துவம் (BVSc & AH) ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நீட் தேர்வு மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.
இளநிலை நீட் தேர்வு 2025
தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் நீட் தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி 7-ம் தேதி முதல் வெளியாகி மார்ச் 7-ம் தேதி வரை பெறப்பட்டது. தொடர்ந்து விண்ணப்ப திருத்தம் மார்ச் 9 முதல் தொடங்கி மார்ச் 11-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்விற்கு சுமார் 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நீட் தேர்வு வினாத்தாள் Section A மற்றும் Section B என அமைக்கப்பட்டு இருக்கும். இந்தாண்டு முதல் Section B என்பது நீக்கப்படுகிறது. எனவே கேட்கப்படும் 180 கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். இயற்பியலில் 45 கேள்விகள், வேதியியலில் 45 கேள்விகள் மற்றும் உயிரியலில் 90 என மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 3 மணி நேரத்திற்கு மட்டுமே தேர்வு நடைபெறும். ஓஎம்ஆர் முறையில் தேசிய அளவில் ஒரே நேரத்தில் மே 4-ம் தேதி தேர்வு நடைபெறும்.
நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண்
நீட் தேர்வில் தேர்ச்சி பெறப் பொதுப்பிரிவினருக்கு 50 சதவீதம் (Percentile), எஸ்சி/எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கு 40% மற்றும் பொதுப்பிரிவு/ பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு 45% தேர்ச்சி விகிதமாக வைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி சதவீதத்தை பொறுத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் மாறுப்படும்.கடந்த ஆண்டு தரவுகள்படி, பொதுப் பிரிவு - 720 முதல் 162, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு - 161 முதல் 127 ஆக கட்-ஆஃப் மதிப்பெண்கள் இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு பொது பிரிவு - 161 முதல் 144, ஒபிசி, எஸ்சி,எஸ்டி பிரிவு - 143 முதல் 127 வரை இருந்தது. அதன் அடிப்படையில் இந்தாண்டுக்கான தேர்ச்சி அளவை பொறுத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் மாறுப்படும்.
எம்.பி.பி.எஸ் கட்-ஆஃப் மதிப்பெண்கள்
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு பொதுப் பிரிவில் 650 முதல் கட்-ஆஃப் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கு 500 அதிகமாகவும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 600க்கு மேல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கு 650 முதல் 700 வரை கட்-ஆஃப் மதிப்பெண்கள் அமையலாம். எஸ்சி, எஸ்டி பிரிவனருக்கு 550 முதல் இருக்கலாம். இதர பிரிவினருக்கு 600 முதல் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அமையலாம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment