Agri Info: Corona | Omicron News

Adding Green to your Life

Showing posts with label Corona | Omicron News. Show all posts
Showing posts with label Corona | Omicron News. Show all posts

June 30, 2022

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு குறித்து அதிகரிக்கும் வழிப்புணர்வு..

June 30, 2022 0

 கொரோனா வைரஸ் ஒருவரின் உடம்பிலிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் விலகிவிட்டாலும் அது உடலில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இருதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் அதிகமாக காணப்படுவதாக தொற்று நோய் நிபுணர் ஸ்பூர்த்தி கூறுகிறார்.

மாரடைப்பு, இருதய தசைகள் வலுவிழப்பது, நுரையீரல் தொற்று, நுரையீரல் ரத்த கட்டு, நுரையீரலுக்கு வெளியே காற்று அல்லது நீர் கோர்த்து நிற்பது உள்ளிட்டவை கொரோனாவுக்கு பின் ஏற்படும் பாதிப்புகள் ஆகும் என்கிறார்.

இவை சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம் என்பதால் கொரோனாவுக்கு பின் உரிய மருத்துவ ஆலோசனைகள் பெறுவது அவசியம் என வலியுறுத்துகிறார்.

நுரையீரலில் உள்ள ஆல்வியோலே என்ற பலூன் போன்ற பகுதி தான் ஆக்சிஜன் நுரையீல் உள்ளே செல்ல வழி செய்கிறத கொரோனா நோயாளிகளில் இந்த பகுதி பாதிக்கப்பட்டு வடு போல் ஆகிவிடுறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இது போன்ற கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய மருந்து கிடையாது.

எனவே தசைகளை வலுப்படுத்த சில பயிற்சிகள் செய்யலாம். நுரையீரலில் ரத்த கட்டு இருந்தால் அதை கரைக்க மருந்து கொடுக்கப்படும் என நுரையீரல் சிறப்பு மருத்துவர் சுரேஷ் கூறுகிறார்.

கொரோனா என்ற வைரஸ் நோயை எதிர்த்து உடலின் எதிர்ப்பு சக்தி போராடுகிறது. அது எதிர்த்து போராடும் போது உடலின் பிற உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி தான் மாரடைப்பு, மூளை பக்கவாதம், சிறுநீரக கோளாறு ஏற்படுகின்றன.

இதுவரை சர்வதேச அளவில் நுரையீரல் பாதிப்புகள் மட்டும் தான் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பல பாதிப்புகள் நோயாளிகளிடம் காணப்படுகின்றன என நுரையீரல் சிறப்பு நிபுணர் ஜாக்கின் மோசஸ் கூறுகிறார்.

Click here to join whatsapp group for daily health tip

January 10, 2022

சளி, இருமல், உடல் வலி இருந்தாலே பரிசோதனை : புதிய நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு

January 10, 2022 0

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனைக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.



சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில தற்போதுவரை உலகம் முழுவதும் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்க 30 கோடியை கடந்துள்ள நிலையில், பல நாடுகளி்ல் கொரோனா தொற்றின்  4-வது மற்றும் 5-வது அலை பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த ஆண்டு இறுதியில் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனர். ஆனால் கடந்ந நவம்பர் இறுதியில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குடன் மற்றும்  கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மீண்டும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும், முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பி்ன்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்ற நாட்களில் இரவு நேர ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து அரவு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு நேரத்தில் காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில். தற்போது தமிழக அரசு சார்பில், கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, காய்ச்சல் சளி மற்றும் உடல் வலி இருப்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் இணை நோய்கள் மற்றும் 60 வயதை கடந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 60 வயதிற்கு குறைவாக இருந்தாலும் அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனை அல்லது வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தால் 7 நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒமிக்ரானின் ஆபத்தான ஐந்து அறிகுறிகள் - Omicron symptoms

January 10, 2022 0

 நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவின் புதிய மாறுபாட்டான ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.



Omicron symptoms: நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. கொரோனாவின் புதிய மாறுபாட்டான ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு மாதத்திற்குள், கொரோனாவின் புதிய மாறுபாடான, ஒமிக்ரான், உலகம் முழுவதையும் மூழ்கடித்தது. முன்பு காணப்படாத அறிகுறிகளை Omicron இல் காண்கிறது. ஒமிக்ரானின் ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்துக் கொண்டால், அதைக் கட்டுப்படுத்துவது எளிது என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய சில அறிகுறிகளைப் பற்றி இங்கே நாங்கள் உங்களுக்கு கூறயுள்ளோம்.

1. நீலம் மற்றும் சாம்பல் நிற நகங்கள்: இது ஒமிக்ரானின் (Omicron) ஆரம்ப அறிகுறிகளில் காணப்படுகிறது. ஒமிக்ரானால் (Symptoms of Omicron) பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்களின் நகங்கள் நீலமாக மாறத் தொடங்கும். இதுபோன்ற ஏதாவது ஒன்றை நீங்கள் கண்டால், மருத்துவரை அணுகவும்.

2. தோலில் ஏற்படும் விளைவு: உங்கள் தோலில் திடீர் புள்ளிகள் இருந்தால் அல்லது தோல், உதடுகள் நீல நிறமாக மாறினால், நீங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

3. சுவாசிப்பதில் சிரமம்: திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ, மார்பு இறுக்கமாக உணர்ந்தாலோ கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

4. சோர்வு மற்றும் உடல் வலி: நீங்கள் சோர்வாக உணர்ந்தாலோ அல்லது இடுப்பின் கீழ் பகுதியில் தாங்க முடியாத வலி இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும். இது Omicron இன் முக்கிய அறிகுறிகளாகும். 

5. இரவில் வியர்த்தால்: இரவில் தூங்கும் போது அதிகளவில் வியர்த்தால், இதுவும் ஒமிக்ரானின் அறிகுறியாக இருக்கலாம்.


இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி பதிவு செய்வது எப்படி? Covisheild Or Covaxin ?

January 10, 2022 0
 மத்திய அரசின் அறிவிப்பின்படி இந்தியாவில் மக்களுக்கு 10.01.2022 பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படது.

மத்திய அரசின் அறிவிப்புப்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் தகுதியான மக்களுக்கு ஜனவரி-10 முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கிது

 இவை முதற்கட்டமாக சுகாதாரம் மற்றும் முன்னிலை பணியாளர்கள்,  60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட இருக்கிறது.  

இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் covisheild போடுவதா அல்லது covaxin போடுவதா என்று மக்களுக்கு குழப்பம் ஏற்படும்.  இந்நிலையில் இதற்கு முன் பெற்றுக்கொண்ட தடுப்பூசியை தான் பெற்றுக்கொள்ள என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

முதல் இரண்டு தடுப்பூசிகள் covisheildஐ செலுத்தியவர்கள், தற்போது போடப்படும் மூன்றாவது டோஸிலும் covisheild ஐ தான் தேர்ந்தெடுக்க வேண்டும். 


அதேபோல முதல் இரண்டு தடுப்பூசிகள் covaxin ஐ செலுத்தியவர்கள், தற்போது போடப்படும் மூன்றாவது டோஸிலும் covaxin ஐ தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.   இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறுகையில், covisheild பெற்றவர்கள் covisheild  தான் பெறுவார்கள், covaxin பெற்றவர்கள் covaxin  தான் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.  மேலும் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்ட தகுதியுள்ள மக்கள் நேரடியாக  எந்த தடுப்பூசி மையத்திற்கும் சென்று பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.  சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் கோவிட்-19 தடுப்பூசிக்கான பதிவு 08.01.2022 சனிக்கிழமை மாலை முதல் CoWIN தளத்தில் தொடங்கியது. 

இதுகுறித்து தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கூடுதல் செயலாளரும் பணி இயக்குனருமான விகாஸ் ஷீல் பதிவிட்ட ட்வீட்டில், "HCWs/FLWs மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட  குடிமக்களுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு விண்ணப்பம் Co-WIN ல் தொடங்கப்பட்டுள்ளது.  தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய http://cowin.gov.in ஐப் பார்வையிடவும்" என்று பதிவிட்டுள்ளார்.  ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் தடுப்பூசிக்கான முன்பதிவுகள் நடத்தப்படும்.  Co-WIN அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது டோஸின் தேதியின் அடிப்படையில் (9 மாதங்கள் அதாவது இரண்டாவது டோஸ் எடுக்கப்பட்ட நாளிலிருந்து 39 வாரங்கள்)  தடுப்பூசி செலுத்தப்படும்.  மேலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி நினைவுபடுத்தப்படும்.

January 9, 2022

ஒமைக்ரான் வைரஸ் பிஏ.1 பிஏ.2 பிஏ.3 என 3 வகையாக மாறுகிறது- மருத்துவ நிபுணர்கள் தகவல்

January 09, 2022 0

 ஒமைக்ரான் மற்றும் அதன் 3 வகையான மாற்றங்கள் டெல்டாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுகிறது. இனி வரும் காலங்களில் ஒமைக்ரானின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் (பி.1.1.529) கடந்த மாதம் 2-ந் தேதி இந்தியாவுக்கு பரவியது.



கர்நாடக மாநிலத்தில் டாக்டர் உள்பட 2 பேருக்கு முதல் முதலாக ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், கேரளா, தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்களுக்கு இந்த உருமாறிய கொரோனா பரவியது.

தற்போது இந்தியாவில் ஒமைக்ரானின் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டிவிட்டது. 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் தொற்று உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வரும் இன்சாகோக் அமைப்பின் உயிரி தொழில்நுட்பத் துறையினர் ஒமைக்ரான் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சோதனை விவரங்களை பரிசோதித்தனர்.

இந்த ஆய்வின்படி ஒமைக்ரான் வைரஸ் 3 வகையாக மாற்றம் அடைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவ நிபுணர் ஒருவர் கூறியதாவது:-

ஒமைக்ரான் தற்போது 3 வகையாக மாறி வருகிறது. பிஏ.1, பிஏ.2 மற்றும் பிஏ.3 என 3 வழித் தோன்றல்களை கொண்டு இருக்கிறது.

இதில் பிஏ.1 குறைந்த வீரியம் மிக்கது. மிகவும் அதிகமாக பரவக்கூடியது. இதன் காரணமாகவே இந்தியாவில் தற்போது கொரோனா அதிகமாக பரவி வருகிறது.

ஒமைக்ரான் மற்றும் அதன் 3 வகையான மாற்றங்கள் டெல்டாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுகிறது. இனி வரும் காலங்களில் ஒமைக்ரானின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும்.

பிஏ.1 மற்றும் பிஏ.3 ஸ்பைக் புரதத்தில் 60 முதல் 70 சதவீதம் நீக்கம் உள்ளது. பிஏ.2வில் ஸ்பைக் புரதத்தில் 69-70 சதவீதம் நீக்கம் இல்லை. ஆர்.டி.-பி.சி.ஆர் மற்றும் எஸ்.ஜி.டி.எப். கிட் இந்தியாவில் ஆரம்பகால ஒமைக்ரான் கட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் ஒமைக்ரான் பிஏ.3 மாற்றத்தை நாங்கள் இன்னும் அடையாளம் காணவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்


அதிவேகமெடுத்த ஓமைக்ரான்… குழந்தைகளுக்கு முதலில் செய்ய வேண்டியவை குறித்த கைட்லைன்


சாதாரண சளியா? ஒமைக்ரானா? வித்தியாசம் என்ன? அறிகுறிகள் சொல்வதென்ன?

அதிவேகமெடுத்த ஓமைக்ரான்… குழந்தைகளுக்கு முதலில் செய்ய வேண்டியவை குறித்த கைட்லைன்

January 09, 2022 0

 இரண்டாம் அலை ஓய்ந்த பிறகு தற்போது சமீபத்தில் பரவிவரும் ஓமைக்ரான் நோயானது தமிழகத்திலும் அதிவேகத்தில் பரவி வருகிறது. குழந்தைகள் மத்தியிலும் ஒமைக்ரான் எளிதில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இருப்பினும், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் பெற்றோர்கள் முன்பை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மிக எளிய வழிகளில் ஒன்று ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை சாப்பிடுவது. சமீபத்தில், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் மற்றும் அவரது குழுவினர் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில முக்கிய டிப்ஸ்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், பெருந்தொற்று நேரத்தில் உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் சுசித்ரா நம்மிடம் பகிர்ந்தவற்றை பார்க்கலாம்.

உங்கள் குழந்தைகளுக்கு நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு சீசன் பழங்கள் அல்லது உள்ளூர் பழங்களை கொடுக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகள் முழு பழத்தையும் சாப்பிட விரும்பவில்லை என்றால், அந்த பழங்களை சிறிதளவு கொடுப்பது கூட அவர்களுக்கு குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.


ராகி லட்டு (அ) அல்வா:

எப்போதுமே அனைவரும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆரோக்கியமான மற்றும் சத்தான ஒன்றை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ரொட்டி, நெய் மற்றும் ஜாகிரி ரோல் (jaggery roll), சுஜி அல்வா அல்லது ராகி லட்டு போன்ற இனிபான மற்றும் எளிய உணவை கொடுப்பது குழந்தைகளை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.


அரிசி:

அரிசியில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக அதில் ஒரு சிறப்பு வகையான அமினோ அமிலம் உள்ளது. ஜீரணிக்க எளிதான மற்றும் சுவையான அரிசி குழந்தைகளின் டயட்டில் சேர்க்க வேண்டிய ஒரு முக்கியமான உணவு ஆகும். பருப்பு, அரிசி மற்றும் நெய் ஆகியவை குழந்தைகளுக்கு சிறந்த உணவு விருப்பமாக இருக்கின்றன.

ஊறுகாய் அல்லது சட்னி:

குழந்தைகளின் தினசரி உணவில் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சில ஊறுகாய் அல்லது சட்னி வகைகள் இருப்பதும் அவசியம். இந்த சைடிஷ்கள் குழந்தைகளின் குடல் பாக்டீரியாக்கள் செழிக்க உதவும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவும்.

முந்திரி:

மதிய உணவிற்கு இடையில் சில முந்திரிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது அவர்களை சுறுசுறுப்புடனும், ஆற்றலுடனும் வைத்திருக்கும். இவை வலிகளையும் குறைக்க உதவும்.

ஆரோக்கியமாக சாப்பிடுவதைத் தவிர, பொதுவாக நம் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் வேறு சில விஷயங்களும் உள்ளன. உணவு என்பது ஒரு காரணி, இது உண்மையில் உங்கள் நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் நாம் அறியாமல் செய்யும் வேறு சில அன்றாட நடவடிக்கைகள் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பதால் குழந்தைகளின் தூக்க பழக்கவழக்கம் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அவர்களின் தூக்கத்தை முறையாக பேணுவது பெற்றோர்களின் கடமை. தவிர குழந்தைகளை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வைப்பதும் மற்றொரு முக்கியமான வாழ்க்கை முறை பழக்கமாகும்.

January 7, 2022

சாதாரண சளியா? ஒமைக்ரானா? வித்தியாசம் என்ன? அறிகுறிகள் சொல்வதென்ன?

January 07, 2022 0

 நடப்பது குளிர்காலம் என்பதால் பலருக்கும் சளி காய்ச்சல் உள்ளிட்ட தொல்லைகள் காணப்படுகின்றன. இதற்கு மத்தியில், நம்மை பாதித்திருப்பது சாதாரண சளியா அல்லது ஒமைக்ரான் பாதிப்பா என்பதை கண்டறிவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.



 அதிகரித்து வரும் பாதிப்புகள் மற்றும் மாறிவரும் வானிலைக்கு மத்தியில், சளி, இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் உங்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளலாம். அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.

நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் இன்னும் குளிர்காலத்தை அனுபவித்து வருகின்றன அல்லது குளிர்காலம் முடிவடைய உள்ளதால் வானிலையில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படுகின்றன.

காலநிலை மாறுபாடு:


இத்தகைய காலநிலையில் ஒரு நபருக்கு சளி மற்றும் இருமல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஜலதோஷம் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட கோவிட்-டின் ஒமைக்ரான் மாறுபாட்டின் பரவலுக்கு மத்தியில், மக்கள் வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சையைப் பெற வேண்டும்.

சளி, ஒமைக்ரான் வித்தியாசம் :

இருமல், சுவை மற்றும் வாசனை இழப்பு, சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் அதிக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளால் கோவிட் பொதுவாக அடையாளம் காணப்படுகின்றன.

ஆனால், புதிய கோவிட் ஒமைக்ரானைப் பற்றி நாம் பேசினால், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, மூக்கு ஒழுகுதல், தொடர்ந்து இருமல், சோர்வு மற்றும் எரிச்சல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். இது தவிர, குமட்டல் மற்றும் பசியின்மை ஆகியவை மாறுபாட்டின் இரண்டு புதிய அறிகுறிகளாக இருப்பதை ஸோ (Zoe) என்ற செயலி தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

தீவிர அறிகுறிகள்:


தொண்டை வலி, உடல் வலி, இரவில் வியர்த்தல் மற்றும் தும்மல் ஆகியவை மற்ற அறிகுறிகளாகும். ஒமைக்ரானின் இந்த அறிகுறிகள் பொதுவான சளி மற்றும் இருமலுடன் அடிக்கடி குழப்பமடையலாம்.

ஏனெனில் தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல், அதைத் தொடர்ந்து இருமல், தும்மல் மற்றும் தலைவலி ஆகியவை பிந்தைய அறிகுறிகளாகும்.


கரோனா பரவல்

இரண்டு நிலைகளிலும் உள்ள வைரஸ் மேல் சுவாச மண்டலத்தை பாதிக்கும் என்பதால் அறிகுறிகள் மிகவும் ஒத்தவை. அறிகுறிகள் தவறாக இருக்கலாம் என்றாலும், ஒரு நபர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தால், அறிகுறிகளின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


அதிக தண்ணீர் குடியுங்கள்:


இருப்பினும், நீங்கள் இன்னும் குழப்பமாக இருந்தால், சரியான சிகிச்சையைப் பெற, வைரஸை நீங்களே பரிசோதித்துக்கொள்ளுங்கள். இதற்கிடையில், ஆஸ்திரேலிய வல்லுநர்கள் வீட்டிலேயே கோவிட் நோயிலிருந்து மீள்வதற்கு தண்ணீர் உட்கொள்ளலை அதிகரிக்கவும், சரியான படுக்கை ஓய்வை உறுதிப்படுத்தவும் பரிந்துரைக்கின்றனர்.

முந்தைய வகைகளுடன் ஒப்பிடும்போது, குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு, ஒமைக்ரான் கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தாது என்று இதுவரை அறிக்கைகள் காட்டுகின்றன. ஆனால் சமீபத்திய அறிக்கையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.


ஒமைக்ரான் ஜலதோஷம் அல்ல:


ஒமைக்ரான் ஜலதோஷம் அல்ல. சில அறிக்கைகள் டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் பாதிப்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது என்றாலும், இன்னும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் ஒமைக்ரான் மற்றும் டெல்டா பாதிப்பினால் இறப்பவர்கள் உள்ளனர். மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதனும் ட்விட்டரில் "ஒமைக்ரான் சாதாரண ஜலதோஷம் அல்ல" என்று கூறியுள்ளார்.


விழிப்புடன் இருக்க வேண்டும்:


மேலும், "அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை பரிசோதிக்கவும், ஆலோசனை செய்யவும் மற்றும் கண்காணிக்கவும் அமைப்புகள் இருப்பது முக்கியம். இந்த ஒமைக்ரான் பாதிப்புகள் திடீரென்று அதிகரிக்கலாம்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


உலக சுகாதார அமைப்பு:


லேசான தொற்று என அறியப்பட்டாலும், சில நாடுகளில் ஒமைக்ரான் காரணமாக இறப்புகள் பதிவாகியுள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், மக்கள் வீட்டிலேயே இருக்கவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் சுகாதார அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.