Agri Info: Educational News Tamil

Education News, Employment News in tamil

Showing posts with label Educational News Tamil. Show all posts
Showing posts with label Educational News Tamil. Show all posts

April 3, 2025

100 days challenge - 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடைவுத் திறனை ஆய்வு செய்ய உத்தரவு.

April 03, 2025 0

  Education News (கல்விச் செய்திகள்)

தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல் , கழித்தல் பெருக்கல் , வகுத்தல் ஆகிய திறன்களில் தயார் நிலையில் உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்ட 4,552 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடிப்படைத் திறனை அளவிடும் செயல்பாடு பின்வருமாறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) தெரிவிக்கப்படுகிறது.

IMG-20250403-WA0038

IMG-20250403-WA0039

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

SMART BOARD & HI TECH LAB பயன்படுத்துதல் சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுரைகள்

April 03, 2025 0

  Education News (கல்விச் செய்திகள்)

தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, 

🗣️Hi-Tech labs & Smart Classrooms 100% பணிகள் நிறைவடைந்த பள்ளிகளில் ,

🗣️தினந்தோறும் காலை 10 am மணி முதல் மாலை 4 pm வரை 

🗣️Hi-Tech Lab & Smart Classroom ஆகியவற்றை on செய்து வைத்திருக்க வேண்டும்.

🗣️கற்றல் கற்பித்தலுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும். 

🗣️வாரம் ஒரு முறை தூய்மைப்படுத்தி பராமரித்தல் வேண்டும். 

🗣️ *தொழில்நுட்ப குறைபாடுகள்* ( server computer not working, smart board not working , UPS Problem, meraki problem) இருப்பின் *044 - 40116100* என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு complaints - Raise கொடுக்க வேண்டும். 

🗣️ *Network problem* இருப்பின் தங்கள் பள்ளிக்கு இணைய இணைப்பு கொடுத்த bsnl vendor ஐ தொடர்புகொண்டு உடனுக்குடன் சரி செய்யவும். 

🗣️Electrical problem- low/ high voltage, circuit problem, wiring problem இருப்பின் தங்கள் பகுதிக்கு உட்பட்ட  EB ( மின்சாரத்துறை) 

🗣️அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும்.

🗣️விடுமுறை நாட்களில் பாதுகாப்பாக அறையினை பூட்டி, தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும் வலியுறுத்தப்படுகிறது.

🗣️Hi-Tech Lab and Smart Classroom இன் முக்கியத்துவம் உணர்ந்து அதனை முறையாக பயன்படுத்தவும், அனைத்து ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தலை வலுப்படுத்தவும், மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்தவும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் Scholarship & Student Profile தகவல்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் - கல்வித்துறை

April 03, 2025 0

  Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250403_205107

Pre Matric & Post Matric உதவித்தொகை - மாணவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் ஒரு வார காலத்திற்குள் மாணவர்களின் தகவல்களை EMIS வலைதளத்தில் தேவை எனில் உரிய விவரங்களை சரிசெய்து அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும் , வகுப்பு 8,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்களை " Student Profile " update சரியாக உள்ளதை அந்தந்த வகுப்பாசிரியர் உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இவ்வலுவலகத்தினால் அனுப்பப்பட்ட ஆணையின் நகலை உடன் அனுப்பிடவும் தெரிவிக்கப்படுகிறது.

DSE - Pre Matric & Post Matric Scholarship - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

01.04.2025 முதல் IFHRMS இல் புதிய update என்னென்ன?

April 03, 2025 0

Education News (கல்விச் செய்திகள்)

.com/

01.04.2025 முதல் IFHRMS இல் புதிய update :

1. இனி வரும் நாட்களில் மின்சார கட்டணம் நேரடியாக EB account வில் செலுத்துவது போன்று இருக்கும்.

2. Selection grade arrear, increment arrear போன்றவற்றை தயார் செய்யும் பொழுது auto arrear calculation பயன்படுத்த வேண்டும். ( March 2024 முதல் எனேபிள் செய்யப்பட்டுள்ளது).

3. வங்கி கணக்கு எண் மாற்றம் செய்வதற்கு இனிமேல் கருவூலத்திற்கு செல்ல தேவையில்லை எப்பொழுதும் போன்ற DDO approval செய்தாலே போதுமானது.

4. புதிதாக பணியேற்றுள்ள பணியாளர்களுக்கு CPS நம்பர் புதிய IFHRMS number create செய்யும்பொழுது ஆட்டோமேட்டிக்காக generate ஆகும் இதில் basic pay zero என்றும் nominee details empty ஆகவும் இருக்கும் இதனை பின்னர் அப்டேட் செய்து கொள்ளலாம்.

5. Plus minus report சென்ற மாதம் வரை html file ஆக டவுன்லோட் ஆகியது இதில் *show all இன்று கொடுத்தோம் என்றால் மட்டுமே பில் குரூப்பில் உள்ள அனைத்து பணியாளர்களின் பெயரும் enable ஆகும்* இம்மாதத்தில் bill group வாரியாக plus minus report மற்றும் html பதிலாக pdf ஆக டவுன்லோட் ஆகும் என்று நம்புவோமாக.....

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

April 03, 2025 0

  Education News (கல்விச் செய்திகள்)
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி இன்று (ஏப்ரல் 4) தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஆண்டுதோறும் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ல் தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது திருத்துதல் முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன. விடைத்தாள் திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 46 ஆயிரம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர். அதன் பின்னர் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. திருத்துதலின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தர ஊதியம் 5400 பதிலாக தர ஊதியம் 4700 நிர்ணயம் மாநில கணக்காயர் அலுவலகம் ஆணை

April 03, 2025 0

 Education News (கல்விச் செய்திகள்)

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலையில் தர ஊதியம் 5400 பெற்று பின்னர் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தர ஊதியம் 5400 பதிலாக தர ஊதியம் 4700 நிர்ணயம் மாநில கணக்காயர் அலுவலகம் ஆணை

IMG-20250402-WA0030_wm

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

பள்ளி ஆண்டு விழாவில் திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்புவது . சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

April 03, 2025 0

  Education News (கல்விச் செய்திகள்)

.com/

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் " அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும் . இதில் மாணவர்களின் கலை , இலக்கியம் விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் . இதற்கென சுமார் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் . " என அறிவிக்கப்பட்டது.

 இதனைதொடர்ந்து . 2024- 2025 ஆம் ஆண்டிற்கான பள்ளி ஆண்டு விழா கொண்டாடிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ரூ .15 கோடி தொடக்கக் கல்வி துறையினையும் உள்ளடக்கி தொகை பகிர்ந்தளிக்கப்பட்டு விழாவிற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

 கிருஷ்ணகிரி மாவட்டம் , பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு 5 மாணவர்கள் நடனம் ஆடியும் மற்றும் ஒரு மாணவன் வீரப்பன் படம் பொறிக்கப்பட்ட டி - சர்ட்டை கையில் பிடித்துக் காட்டியதோடு . 2 மாணவர்கள் கட்சித் துண்டுகளை அணிந்து நடனம் ஆடியுள்ளதாகவும் . அரசுப் பள்ளிகளில் இத்தகைய திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்புவது . சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் புகார் மனு இவ்வலுகத்தில் பெறப்பட்டுள்ளது.

எனவே , பள்ளி ஆண்டு விழாவில் மேற்காண் புகார்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் , இதுபோன்ற நிகழ்வுகளில் , தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதியின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்பதனை அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு திட்டவட்டமாக தெரிவித்து சுற்றறிக்கை அனுப்பி ஒப்புதல் பெற்று கோப்பில் பராமரித்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

Screenshot_20250402_222314

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

உள்ளூர் மொழிகளில் பாடநூல்கள் மொழிபெயர்ப்பு: பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு

April 03, 2025 0

 Education News (கல்விச் செய்திகள்)

1356675

உள்ளூர் மொழிகளில் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பாடநூல்களை உருவாக்குவதற்காக கல்லூரி பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: பாரதிய பாஷா புஸ்தக் என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்திய மொழிகளில் எண்ணிம வழியிலான (மின் நூல்கள்) புத்தகங்களை வழங்குவதற்கான ஒரு புதிய முன்னெடுப்பாகும். கல்வி கற்பதை மேலும் எளிதாக அணுகக் கூடியதாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பாடங்களை ஆங்கிலம் மற்றும் 22 இந்திய மொழிகளில் நேரடியாக எழுதவும், ஏற்கெனவே ஆங்கிலத்தில் உள்ள பாடப் புத்தகங்களை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை இணையதளத்தில் மின் நூல்களாக பதிவேற்றம் செய்யப்பட்டு பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக்கல்வி நூல்கள், பாடப்பொருள் சார்ந்த கற்றல் வளங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் பாடநூல்கள் உருவாக்கப் பணிகள் மற்றும் பாடப்பொருள் தயாரித்தலில் பங்கெடுக்க விரும்பும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் இது தொடர்பான தங்களது விருப்பத்தை ஏஐசிடிஇ தளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )

2% DA அரியர் தொகை உங்களுக்கு எவ்வளவு?

April 03, 2025 0

    Education News (கல்விச் செய்திகள்)

2% DA அரியர் தொகை உங்களுக்கு எவ்வளவு?

IMG-20250403-WA0016

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

சிறுபான்மை பள்ளிகளுக்கும் TET அவசியம் - 02.04.2025 அன்றைய தீர்ப்பு.

April 03, 2025 0

   Education News (கல்விச் செய்திகள்)

02.04.2025 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு  சிறுபான்மை பள்ளிகளுக்கும் TET அவசியம் என தீர்ப்பு வழங்கியுள்ளது !!!

👇👇👇

Judgement Copy - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) 

9 முதல் 12-ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

April 03, 2025 0

   Education News (கல்விச் செய்திகள்)

.com/

வரும் கல்வியாண்டு முதல் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநர் பிரக்யா எம்.சிங், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டங்கள் 2025-26 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரவுள்ளது.

கல்வி உள்ளடக்கம், தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் கூடுதல் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அனுபவ கற்றல், திறன்சார்ந்த மதிப்பீடுகள், இடைநிலை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களின் கருத்தியல் புரிதல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும்.

புதிய பாடத்திட்டங்களை https://cbseacademic.nic.in/curriculum_2026.html என்ற பக்கத்தில் சென்று பார்த்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

பாலிடெக்னிக் டிப்ளமா பயின்றோர் தொழில்பயிற்சியுடன் கூடிய பிஇ-க்கு விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை.

April 03, 2025 0

    Education News (கல்விச் செய்திகள்)

பாலிடெக்னிக் டிப்ளமா படித்த மாணவர்கள் தொழில்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனத்தின் முழு உதவியுடன் பி.இ. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ற தொழில்பயிற்சியுடன் கூடிய பொறியியல் படிப்பு வழங்கப்படுகிறது. இந்த 4 ஆண்டு கால பட்டப் படிப்பில் பாலிடெக்னிக் டிப்ளமா ( எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், இசிஇ, மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டோ மொபைல்) முடித்தவர்கள் சேரலாம்.

டிப்ளமா படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும் போதே தொழில் பயிற்சியுடன் மாதம் தோறும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அதோடு கல்விக்கட்டணம், உணவு, போக்குவரத்து , மருத்துக் காப்பீடு ஆகிய அனைத்து செலவுகளையும் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.

தற்போது 2025-2026 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் (2025-2026) ஒருங்கிணைந்த பயிற்சியுடன் கூடிய பி.இ. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்காக cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் (2024-205) டிப்ளமா படிப்பை முடிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி கடந்த 2022, 2023, 2024- ம் ஆண்டுகளில் படித்து முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவராவர். டிப்ளமா மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 1-ம் தேதி (இன்று) தொடங்கியுள்ளது. விண்ணப்ப கட்டணம் செலுத்துவது, சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றுவது ஆகிய பணிகளை ஏப்ரல் 4 முதல் மேற்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 30-ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

April 1, 2025

1-5 வகுப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை - DEE செயல்முறைகள்!

April 01, 2025 0

    Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250401_181640

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது . தமிழ் நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்தல்களின்படிவும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

 எனவே , கீழ்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் மூலம் வட்டாரக் கல்வி அலுவலருக்கும் மற்றும் தலைமை ஆசிரியருக்கும் அறிவுத்தப்படுகிறது .

Revised -Annual Exam April 2025- I to V

Download here