மாடித் தோட்டம், வீட்டுத்தோட்டம், பால்கனியில் தோட்டம் என வீட்டின் எந்த பகுதியில் தோட்டம் அமைத்தாலும் செடிகளின் வகை மற்றும் தன்மையைப் பொறுத்து அவற்றின் இடம் மற்றும் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். பலரது வீட்டுத் தோட்டத்திலும் அதிகளவு இடம் பெறுவது காய்கறி செடிகளே. பொதுவாக காய்கறி தோட்டம் அமைக்கும் போது நாம் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவை:
April 21, 2022
காய்கறி தோட்டம் அமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..
January 15, 2022
மாதம் 50,000 ரூபாய்... வீட்டுத்தோட்டத்திலேயே மண்புழு உரம், பஞ்சகவ்யா விற்கலாம்!
வீட்டுத்தோட்டம்
அவர் இங்கேயே வேலை பார்க்க ஆரம்பிக்க, நான் நாட்டு விதைகளைத் தேடித் தேடி சேகரிக்க ஆரம்பிச்சேன். இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறைகளைக் கத்துகிட்டேன். பல ஊர்களுக்குப் போய் இயற்கை வழியில் விவசாயம் செய்ற விவசாயிகளைச் சந்திச்சு பேசுனேன். நம்மாழ்வார் ஐயா கருத்துகள், இயற்கை தொடர்பான புத்தகங் களையும் படிக்க ஆரம்பிச்சேன். ஓரளவு இயற்கை விவசாயம் தொடர்பா தெரிஞ்சுகிட்ட பிறகு, 2016-ம் வருஷம் என்னோட வீட்டு மொட்டை மாடியில மாடித்தோட்டம் அமைக்க ஆரம்பிச்சேன். நாட்டுக் காய்கறி, கீரை விதை களைத்தான் பயன்படுத்துனேன். விதை முளைச்சு, செழிப்பா வளர்றதைப் பார்க்கப் பார்க்கச் சந்தோஷமா இருந்தது. முதல் காய்களை அறுவடை செய்யும்போது ஆர்வமும் மகிழ்ச்சியும் அதிகமாச்சு’’ என்றவர் தனது மாடித்தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
January 10, 2022
வீட்டிலேயே வளர்க்க வேண்டிய அற்புதமான மூலிகை செடிகள் !!
இந்த தலைப்பே சுவாரஸ்யமான தலைப்புங்க. இதுவரை எந்த ஒரு மூலிகை வேண்டுமென்றாலும் நீங்கள் நாட்டு மருந்து கடை அல்லது எங்கயாவது தேடி அலைய வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் அழகான வீட்டிலேயே பலன் தரக்கூடிய சில மூலிகை தாவரங்களை உங்கள் வீட்டிலேயே வளர்த்து பயன் பெறலாம்.
இதன் மூலம் நான் பெற்ற அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எந்த மாதிரியான மூலிகை செடிகளை எப்படி உங்கள் வீட்டில் வளர்த்து பாரமரிக்கலாம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
இந்த மூலிகை செடிகள் தான் தற்போது ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நம்முடைய உடலுக்கு எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இது ரெம்ப பாதுகாப்பான முறையாக இருப்பதோடு செலவு குறைந்த முறையும் கூட.
இந்த மூலிகை செடிகள் எல்லாம் எங்கள் பாட்டி சில வைத்திய முறைக்கு பயன்படுத்தி அதன் மூலம் பயனையையும் அடைந்துள்ளனர். இந்த மூலிகை செடிகளை சில வீட்டு வைத்தியங்களுக்கு பயன்படுத்தலாம். உங்கள் மருத்துவர் ஆலோசனையும் மேற்கொள்ளவது நல்லது.
சரி வாங்க இப்பொழுது எந்த மாதிரியான மூலிகை செடிகளை உங்கள் வீட்டில் வளர்க்கலாம் மற்றும் அதன் அற்புதமான மருத்துவ குணங்கள் பற்றி காணலாம்.
துளசி
துளசி ஒரு இந்து மதத்தின் புனித செடியாக கருதப்படுகிறது. மேலும் இது ஹோலி பேசில் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவ குணங்களில் தலை சிறந்து இருப்பதால் மூலிகை செடிகளின் ராணி என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. இதை அப்படியே அல்லது ஹெர்பல் டீ யாக போட்டு சாப்பிடலாம்.
இந்த துளசியில் நான்கு வகைகள் உள்ளன. ராம துளசி, வன துளசி, கிருஷ்ணா துளசி, கற்பூர துளசி. இதில் கற்பூர துளசி பெரும்பாலும் வெளிபயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. கற்பூர துளிசி எண்ணெய் காது பிரச்சினைகள் மற்றும் காது சொட்டு மருந்தாக பயன்படுகிறது. மேலும் இந்த ஆயில் சோப்பு, ஷாம்பு போன்று உடம்பை சுத்தப்படுத்தும் பொருளாகவும் அமைகிறது. துளசியில் கிருமி எதிர்ப்பு சக்தி, பூஞ்சை எதிர்ப்பு பொருள்கள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள், ஆன்டி பயோடிக் பொருட்கள் போன்றவை காய்ச்சல், சலதோஷம் மற்றும் மூச்சு பிரச்சினைகள் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
ராம துளசி இலைகள் நீண்ட நாள்பட்ட மூச்சுப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த துளிசியின் சாறு காய்ச்சல், சலதோஷம், இருமல் மற்றும் சுவாச பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும் மலேரியாவை சரி செய்யவும் துளசி பயன்படுகிறது.
சீரண பிரச்சினை, காலரா, இன்ஸோமினியா, ஹைஸ்ட்ரியா போன்றவற்றை எதிர்த்தும் செயல்படுகிறது. சுத்தமான துளசி இலைகளை மில்லியன் மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
வெந்தயம்
வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது. நமது உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவி புரிகிறது. இது எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற படி வளரும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும். உடம்பை ஆரோக்கியமாக வைப்பதற்கும் உடல் எடையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
வெந்தயம் கல்லீரல் புற்றுநோயை தடுக்கிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. புதிய பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி, குடல் அலர்ஜி குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. கெட்ட சுவாசத்தை தடுக்கிறது. இந்த அற்புதமான மூலிகை செடியை வீட்டிலேயே வளர்த்து நாம் பயன் பெறலாம்.
லெமன் கிராஸ்
லெமன் கிராஸ் மற்றொரு மூலிகை செடியாகும். இதையும் வீட்டிலேயே வளர்த்து நாம் பயன் பெறலாம். சின்ன ஒரு ஜாடியில் கூட எளிதாக இதை வளர்க்கலாம். இது எண்ணிலடங்காத மருத்துவ பயன்களை அள்ளித் தருகிறது. இது டீ, சாலட்ஸ், சூப், மற்றும் நிறைய சமையல் வகைகளில் பயன்படுகிறது.
இந்த லெமன் கிராஸ் நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இதிலுள்ள ஆன்டி பைரிடிக் பொருள் அதிகமான காய்ச்சலை கூட குணப்படுத்தி விடுகின்றது. மூச்சுப் பிரச்சினை மற்றும் தொண்டை புண் போன்றவற்றிற்கும் பயன்படுகிறது. மேலும் இது எல்லா விதமான வலிகளான அடி வயிற்றில் வலி, தலைவலி, மூட்டு வலி, தசை வலி, சீரண மண்டல கோளாறுகள், தசை சுருக்கம், வயிற்று வலி போன்றவற்றிற்கும் பயன்படுகிறது.
கற்றாழை
கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை செடியாகும். இது எங்கு வேணும்னாலும் வளரும். நன்றாக வளர்வதற்கு சூரிய ஒளி தேவை. இது கண்டிப்பாக வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை செடியாகும். இதை உங்கள் வீட்டில் வளர்த்தால் கொசுக்கள் வராமல் இருக்க இது உதவுகிறது. இது வெளி மற்றும் உள் என்ற இரண்டு பயன்பாட்டிற்கும் பயன்படுகிறது. இது நல்ல நீர்ச்சத்தை கொடுக்கக்கூடிய மூலிகையாக உள்ளது.,
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நமது உடம்பு வயதாகுவதை தடுக்கிறது. நீங்கள் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அடிபட்ட மற்றும் வெட்டப்பட்ட காயங்கள் மற்றும் தீ காயங்கள் போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. அலற்சியை எதிர்க்கிறது. மேலும் உங்கள் சருமம் மற்றும் தலை முடிகளை பாதுகாக்கிறது.
இந்த கற்றாழை ஜூஸை குடித்தால் பசியின்மை, சீரண சக்தி கோளாறுகள், மலச்சிக்கல், குடல் அல்சர் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
புதினா :
இந்த மூலிகை செடி உலகளவில் எல்லாராலும் வளர்க்கப்படும் முக்கிய செடியாகும். ஒரு சிறிய தொட்டியில் எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடிய இவற்றை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம்.
இதில் இயற்கையாகவே மக்னீசியம், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி போன்றவைகள் உள்ளன. இதன் இலைகளிருந்து தயாரிக்கப்படும் சாறு தசைகளுக்கு ரிலாக்ஸ் கொடுக்க பயன்படுகிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.
மேலும் வாய்வு, வயிற்று மந்தம், காய்ச்சல், எரிச்சலுடன் மலம் கழித்தல், பெருங்குடல் பிரச்சினை போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. நமது உடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியினை தடுக்கிறது.
வல்லாரை கீரை
மற்றொரு வீட்டிலேயே வளர்க்க கூடிய ஈஸியான செடி வல்லாரை ஆகும். இது நமது மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் மிகச் சிறந்த மூலிகை பொருளாகும். இந்த சின்ன மூலிகை செடி அல்சர், சரும பாதிப்பு, இரத்த குழாய் சுருக்கம் போன்றவற்றை சரியாக்குகிறது.
நீங்கள் எப்பொழுதும் இளமையாக இருக்க நினைத்தால் இதை தினமும் உணவில் சேர்த்து கொண்டாலே போதும். இதன் இலைகளை கசக்கி பிழிந்த சாறு வெளியில் ஏற்படும் புண்களை குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் மூளை மற்றும் நரம்பு மண்டல சீரான இயக்கத்திற்கு பயன்படுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது.
அஸ்வகந்தா
அஸ்வகந்தா முந்தைய கால ஆயுர்வேத முறைகளிலிருந்து பயன்படுத்தப்படும் மூலிகை செடியாகும். இதை வீட்டிலேயே வளர்க்கலாம். இது மன அழுத்தம் குறைப்பதற்கும் மற்றும் நரம்பு மண்டல பாதுகாப்பிற்கும் பயன்படுகிறது.
இந்த பழைய மூலிகை செடி கருவுறுதல், காயங்களை குணப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. இதய இயக்கத்திற்கு டானிக்காக செயல்படுகிறது.
கண்களின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. மேலும் இது மன அழுத்தத்தை குறைத்து கவலைகள், அனிஸ்சிட்டி போன்றவை வராமலும் தடுக்கிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்தல், கொலஸ்ட்ரால் அளவை குறைத்தல் போன்ற அற்புதமான பலன்களை அள்ளித் தருகிறது.
லெமன் பாம்
வீட்டில் வளர்க்கக்கூடிய மற்றொரு தாவரம் லெமன் பாம் ஆகும். இதன் இலைகள் பார்ப்பதற்கு லெமன் மர இலைகளை போல் இருப்பதால் இந்த பெயர் பெற்றுள்ளது.
இதன் இலைகளை கசக்கி அதன் சாற்றை உடம்பில் தேய்த்து கொண்டால் இயற்கை கொசு விரட்டியாக செயல்படும். தொண்டை புண், சலதோஷம், காய்ச்சல், தலைவலி, மன அழுத்தம், சீரண மண்டல பிரச்சினைகள் போன்றவற்றிற்கும் பயன்படுகிறது.
December 18, 2021
வீட்டில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி ??
சுவையான கொத்தமல்லியை விதைப்பது, வளர்ப்பது மற்றும்
அறுவடை செய்வது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இக்கட்டுரையில் காணலாம்
கொத்தமல்லி தாய், சீனம், ஜப்பானியம், இந்திய மற்றும் மத்திய கிழக்கு உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கபடுகிறது.
இதன் இலைகள், தண்டுகள், விதைகள் மற்றும் அனைத்து பாகங்களும் சமையலுக்கு பயன் படுகிறது. இது சாலட் உணவுகளுக்கு புதிய சுவையை சேர்க்க பயன்படுகிறது.
எளிதில் வளரக்கூடிய இலை மூலிகையான கொத்தமல்லியை நேரடியாக மண்ணில் அல்லது தொட்டிகளில் விதைத்த விதைகளில் இருந்து வளர்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பை (Grow Bags ) அல்லது தொட்டி அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு.
- விதைகள்
- பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
தொட்டி அல்லது பைகளுக்கு அளவு, வடிவம் என்று
எதுவும் தேவைப்படாது. அதனால் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம், செராமிக் என எதுவாக
வேண்டுமானாலும் இருக்கலாம். கீரைகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, அரை அடி
ஆழத்திற்கு மேல் மண் நிரப்பினால் போதுமானது.
இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல்,
ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும்.
விதைத்தல்
கொத்தமல்லி விதைகளை பைகளில் தூவி கிளறி விட
வேண்டும். அதில் நிரப்பியுள்ள கலவையை கொண்டு மெல்லிய போர்வை போல் அமைக்க வேண்டும்.
கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து தான் விதைக்க வேண்டும். இல்லையெனில் விதைகள்
முளைக்காது.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும்.
பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
உரங்கள்
பூச்சிகளிடமிருந்து காக்க அடுப்பங்கரை குப்பை
மற்றும் பஞ்சகாவ்யா போதுமானது. டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை
உரமாக போடலாம்.
பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில்
கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
அதிகளவு வெய்யில் படுவதால் கீரைகள் வாடி விடும்.
இதை ஈடுகட்ட கீரை வளர்க்கும் பகுதியைச் சுற்றிலும் வலை அமைக்கலாம். இல்லையெனில்
சிறிது நிழல் விழும் இடத்தில் வைக்கலாம்.
அறுவடை
நன்கு திரண்ட பழங்களை இரு நாட்களுக்கு ஒரு முறை
அறுவடை செய்ய வேண்டும்.
பயன்கள்:
- இதில் விட்டமின் ‘A’ சத்து உள்ளதால், கண் பார்வை தெளிவாகிறது. விட்டமின் ‘C’ சத்தும் இந்த கீரையில் அதிகம் உள்ளதால் உடலில் ஏற்படக்கூடிய சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற தோல் நோய்களை குணமாக்கும் தன்மை உள்ளது.
- இது ஜீரணத்தை தூண்டுகிறது. வாந்தி மற்றும் விக்கலை தடுக்கிறது.
- கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.
- எலும்புகள், பற்கள் ஆகியவற்றிற்கு தேவையான கால்சியம் சத்து இதில் உள்ளது. நோயாளிகளுக்கு நாக்கு ருசி மாறி, வாய்க் கசப்புத்தன்மை ஏற்பட்டுவிடும். அவர்கள் இந்தக்கீரையை துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு ருசி பழைய நிலைக்கு வந்துவிடும்.
- சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளவர்கள் கீரை 50 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 கிராம் எடுத்துக்கொண்டு இவற்றுடன் எலுமிச்சை சாறு தேவையான அளவு இட்டு அரைத்து புண்கள் மேல் தடவி வர விரைவில் குணமாகும்.
- உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.
December 9, 2021
மாடித்தோட்டம் - மாடித்தோட்டத்தின் நன்மைகளை, லபமா?? நஸ்டமா?? ஒரு கம்ப்ளீட் கைடு!
மாடித்தோட்டத்தின் நன்மைகளை தெரிந்து கொள்வது ஏன் முக்கியம்?
பசுமைப் புரட்சி மற்றும் உலகமயமாக்கல் போன்ற காரணங்களால் நமது மரபுசார் விவசாயம் நம்மைவிட்டு அதிக தூரத்துக்குச் சென்றுவிட்டது. ஓடும் நீரைத் தடுத்து நிறுத்தி, அணைகட்டி விவசாயம் பார்த்த முன்னோர்களின் வழிவந்த நாம், இன்று புழுங்கல் அரிசிக்கும் பச்சரிசிக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்துவருகிறோம். உற்பத்தியை அதிகமாக்கும் நோக்கத்தில் ரசாயன உரங்களைக் கொட்டி வேதிப்பொருள்களின் தாக்கமுள்ளவற்றைத்தான் உணவாகத்தான் சாப்பிடுகிறோம்.
இயற்கைவழி விவசாயத்தில் விளைந்த காய்கறிகளைத்தான் நாம் உண்ண வேண்டும். அதற்கு மூன்று வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று, இயற்கை விவசாயம் செய்வது. இரண்டாவது, இயற்கை விவசாயப் பொருட்களை நம்பத் தகுந்த விவசாயிகளிடம் நேரடியாகப் பெறுவது. இறுதியாக, மாடித்தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டம் மூலமாக இயற்கையான காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்வது. இவற்றில் நகரவாசிகளுக்கு இருக்கும் வாய்ப்பென்பது மாடித்தோட்டம் அமைப்பதுதான்.
பெரும்பாலான மக்களிடம் மாடித்தோட்டம் அமைக்கும் ஆர்வம் இருந்தாலும்கூட, அவற்றைச் சரியாக அமைப்பது எப்படி என்பது குறித்த தெளிவு இல்லை. ஆனால், இந்த விஷயங்களைப் பின்பற்றினால் உங்கள் வீட்டு மாடியிலும் அள்ள அள்ளக் குறையாத காய்கறிகளை அறுவடை செய்யலாம்.
மாடித்தோட்டம் எப்படி அமைப்பது?
மாடித்தோட்டம் அமைக்க முதலில் தேர்வு செய்யவேண்டியது இடத்தைத்தான். இதற்கெனத் தனியாக ஓர் இடம் தேவையில்லை. மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச் சுவர்கள் மற்றும் தொங்கு தொட்டிகள் என மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஏராளமான இடமும் வழியும் உள்ளன. இதனால் மொட்டைமாடியின் தளம் வீணாகும் என்ற கவலை வேண்டாம். கீழே பாலித்தீன் விரிப்பை விரித்து அதன்மீது வைக்கலாம். இது தவிர, பிவிசி பைப்புகள், கட்டையாலான பலகைகள் எனப் பல தீர்வுகள் இருக்கின்றன. முதலில் நாம் தேர்வு செய்யவேண்டியது வெயில்படும் படியான இடம். அதிக வெயில் படும்படியான இடங்களில் நிழல் வலைக்குடில் அமைப்பது சிறந்தது. நிழல் வலைக்குடில் அமைப்பதற்குப் பல எளிய வழிமுறைகளும் இருக்கின்றன. தொட்டிகள் அமைக்கும்போது எல்லா தொட்டிகளையும் ஒன்றாக அமைக்காமல், எளிதாகப் பராமரிக்கும் செடிகளைத் தனியாகவும், அதிக நேரம் பராமரிக்கும் செடிகளைத் தனியாகவும் பிரித்து அமைக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பைகள், மண் தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்ட பொருட்களில் செடிகளை வளர்க்கலாம். இந்தத் தொட்டிகளில் செம்மண், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, ஆகியவை கலந்து அடியுரமாகக் கொடுக்க வேண்டும். தென்னை நார்க்கழிவு, மண்ணின் ஈரப்பதத்தை முழுமையாகத் தக்கவைத்துச் செடிகளைக் காக்கும். அளவுக்கு அதிகமாகப் போட்டால் செடிகளுக்கு வேர் அழுகல் நோய் ஏற்பட்டு பாதிப்படையும். செம்மண், மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்களும் பயிர்கள் வளர்வதற்குத் தேவையான சத்துகளைக் கொடுக்கும். வேப்பம் பிண்ணாக்கு பயிர்களுக்கு நோய்கள் வராமல் தடுத்து, கிருமிகளை அழிக்கும். மண்கலவை தயாரானதும் உடனே விதைகளை விதைக்கக்கூடாது. 7 முதல் 10 நாட்களில் நாம் தயார் செய்த மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதன் பிறகே அதில் எந்த ஒரு விதையையும் நடவு செய்ய வேண்டும். அதன் பிறகு விதைப்பு செய்தால், நல்ல விளைச்சல் நிச்சயம்.
எப்படி விதைப்பது?
விதைகளைத் தேர்வு செய்யும்போதும், நடவு செய்யும்போதும் கவனம் தேவை. பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இடவேண்டும். தொட்டியில் நடும் விதைகளை முற்றிய காய்கறிகளிலிருந்து எடுக்கலாம். கடைகளில் வாங்கி வந்தும் நடவு செய்யலாம். விதைக்கும் விதை நாட்டு விதையாக இருத்தல் இன்னும் சிறப்பு. விதையின் உருவத்தைவிட இரண்டு மடங்கு ஆழத்தில் நடவுசெய்தால் போதுமானது. அதன்பின்னர், மண்ணால் மூடிவிட வேண்டும். கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் போன்ற பயிர்களை நாற்று விட்டு நடவுசெய்வது மிக அவசியம். வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும். விதை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும்.
தொட்டியில் அதிகமான ஆழத்தில் நடக்கூடாது, அதேபோல வழிய வழியத் தண்ணீர் ஊற்றுவதையும் தவிர்க்க வேண்டும். தண்ணீரைத் தெளிக்க உதவும் பூவாளியைப் பயன்படுத்துவது நல்லது. காய்கறிகளின் விதைகளைப் பயன்படுத்தினால், செடி வளர்க்க பைகள் அல்லது தொட்டிகளைப் பயன்படுத்தலாம். இதற்கு அளவு, வடிவம் என எதுவும் கிடையாது. கீரையாக இருந்தால் பாத்தி அமைப்பது போன்று நடலாம். மேலும் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம் என எல்லா வகை பொருள்களிலும் வளர்க்கலாம். செடிகள் வளர்ப்பதற்காகப் பைகளில் அடியுரம் கலந்த மண்ணை நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக்கூடாது.
எப்போது விதைக்க வேண்டும்?
மாடித்தோட்டத்தில் காலநிலையைக் கவனிக்க வேண்டும். அதாவது ஜூன், ஜூலை மாதங்கள் மாடித்தோட்டம் அமைக்க சரியான மாதம். கோடைக்காலத்தில் எக்காரணம் கொண்டும் விதைகள் நடவு செய்யக்கூடாது. அதன் பின்னர் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் நடலாம். சிலர் குளிர்கால காய்கறிகளான பீட்ரூட், முட்டைகோஸ், அன்னாசி, கேரட் ஆகியவற்றை அக்டோபர் மாதங்களில் நடவு செய்கிறார்கள்.
எப்படிப் பராமரிப்பது?
மாடித்தோட்டத்தில் முக்கியமானது பராமரிப்புதான். ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் ஊற்ற வேண்டும். தொட்டி நிரம்பி வழியும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றக்கூடாது. மாடித்தோட்டத்துக்கு உபயோகப்படுத்தும் உரங்கள் உயிரி உரங்களாகவும், இயற்கை உரங்களாகவும் இருப்பது நல்லது. மாடித்தோட்டத்தில் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டால் மூலிகைப்பூச்சி விரட்டியைக் கலந்து தெளிக்கலாம். செடிகளின் வளர்ச்சிக்குப் பஞ்சகவ்யா தெளிக்கலாம். வேரின் ஆழத்தில் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க, வேப்பெண்ணெய்க் கரைசலை நீரில் கலந்துவிடலாம். தற்போது, பெரும்பாலான மக்கள் மாடித்தோட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனமும் அமைத்து வருகின்றனர்.
வாரம் ஒரு முறை செடியைச் சுற்றி மண்ணைக் கொத்திவிட வேண்டும். மண்ணைக் கொத்திவிட்ட பின்பும் பஞ்சகவ்யா தெளிக்கலாம். காய்கள் முற்றிவிடாமல் அவ்வப்போது அறுவடை செய்துவிடவேண்டும். விதைகள் தேவைப்பட்டால், காய்களை முற்றவிடலாம்.
என்னென்ன இடுபொருட்களைப் பயன்படுத்தலாம்?
செடிகள் அதிக காய்களைத் தருவதற்கு, பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஊற்ற வேண்டும். பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க, வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின்மேல் தெளிக்க வேண்டும். ஒருமுறை விளைந்த செடிகளின் மகசூலுக்குப் பின்னர் மீண்டும் அதில் மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, மாட்டு எரு ஆகியவற்றைக் கலந்து மீண்டும் அந்த மண்ணைப் பயன்படுத்தலாம்.
என்னென்ன இடுபொருட்களைப் பயன்படுத்தலாம்?
செடிகள் அதிக காய்களைத் தருவதற்கு, பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஊற்ற வேண்டும். பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க, வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின்மேல் தெளிக்க வேண்டும். ஒருமுறை விளைந்த செடிகளின் மகசூலுக்குப் பின்னர் மீண்டும் அதில் மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, மாட்டு எரு ஆகியவற்றைக் கலந்து மீண்டும் அந்த மண்ணைப் பயன்படுத்தலாம்.
இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
மாடித்தோட்டத்தில் விளையும் பொருட்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். இதுதவிர, அவசர காலங்களுக்குத் தேவையான மூலிகைகளை வளர்ப்பது இன்னும் நன்மை தரும். மாடித்தோட்டத்தினால் வீடுகள் குளிர்ச்சியடையும். அதனால் வீட்டில் ஏ.சி போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடும் குறையும். மாடித்தோட்டத்தைப் பராமரிக்கும்போது, மனம் கவலையிலிருந்து விடுபடும். நாள் முழுவதும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் மாடித்தோட்டம் ஒரு சிறந்த உளவியல் மருந்து. வீட்டில் மக்கும் குப்பைகளான பழக்கழிவுகள், காய்கறித் தோல்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை வெளியில் கொட்டத் தேவையில்லை. செடிகளுக்கு உரமாகப் போடலாம். மாடித்தோட்டத்தில் அதிகமாக விளையும் காய்கறிகளைப் பக்கத்து வீடுகளுக்குக் கொடுப்பதன் மூலமாக நட்பையும் சம்பாதிக்கலாம். இதுபோல இன்னும் பல நன்மைகள் மாடித்தோட்டத்தில் இருக்கின்றன.
உங்கள் வீட்டில் கண்டிபாகா வளர்க்க வேண்டிய 10 மருத்துவ தாவரங்கள்!!
துளசி :
துளசி மருத்துவ குணங்களில் தலை சிறந்து இருப்பதால் மூலிகை செடிகளின் ராணி என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. இதை அப்படியே அல்லது ஹெர்பல் டீ யாக போட்டு சாப்பிடலாம். இந்த துளசியில் நான்கு வகைகள் உள்ளன. ராம துளசி, வன துளசி, கிருஷ்ணா துளசி, கற்பூர துளசி. இதில் கற்பூர துளசி பெரும்பாலும் வெளிபயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. கற்பூர துளிசி எண்ணெய் காது பிரச்சினைகள் மற்றும் காது சொட்டு மருந்தாக பயன்படுகிறது. மேலும் இந்த ஆயில் சோப்பு, ஷாம்பு போன்று உடம்பை சுத்தப்படுத்தும் பொருளாகவும் அமைகிறது. துளசியில் கிருமி எதிர்ப்பு சக்தி, பூஞ்சை எதிர்ப்பு பொருள்கள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள், ஆன்டி பயோடிக் பொருட்கள் போன்றவை காய்ச்சல், சலதோஷம் மற்றும் மூச்சு பிரச்சினைகள் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. ராம துளசி இலைகள் நீண்ட நாள்பட்ட மூச்சுப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த துளிசியின் சாறு காய்ச்சல், சலதோஷம், இருமல் மற்றும் சுவாச பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும் மலேரியாவை சரி செய்யவும் துளசி பயன்படுகிறது. சீரண பிரச்சினை, காலரா, இன்ஸோமினியா, ஹைஸ்ட்ரியா போன்றவற்றை எதிர்த்தும் செயல்படுகிறது. சுத்தமான துளசி இலைகளை மில்லியன் மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
வெந்தயம்:
December 6, 2021
நீங்கள் சுவாசிக்கும் காற்றினை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமா? இதோ எளிய வழி | Super Indoor Plants Which Can Actually Purify the Air in Your Home
பெருகி வரும் காற்று மாசினால் சுற்று சூழல் பெருமளவு பாதிப்புக்குள்ளாகி வருகிறது. சுத்தமான காற்றை சுவாசிப்பதே கடினமாகிவிட்டது. முடிந்த வரை நம் சுற்றுப்புறத்தை மரங்களால் பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்சம் நாம் நமது வீட்டை சுற்றி மரங்கள் ஒன்றோ, இரண்டோ மரங்களை நட வேண்டும். அதுமட்டுமல்லாது செடி, கொடிகளை வளர்த்து மாசில் இருந்து நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களை பாதுகாக்கும்.
நகரங்கில் குடிருப்பவர்களுக்கு சுத்தமான காற்று என்பது சற்று கடினமாகிவிட்டது. வீட்டில் உள்ள காற்றை தூய்மை ஆக்குவதற்கு என்று சில செடிகளை பரிந்துரைக்கிறார்கள். இந்த வகை செடிகளை வீட்டில் வளர்க்கும் போது காற்று சுத்தமாவதுடன், நமக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் ’ Natural Air Purifier ‘ பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற, அதிக நன்மைகளை தரும் செடிகளைப் பற்றிய பார்வை இதோ…
கற்றாழை (Aloevera)
மூங்கில் செடி (Bamboo Plant)
மருள் (Snake Plant)
மருள் தண்ணீரின்றி பல நாட்கள் வாழக்கூடியது. குறைந்த வெளிச்சதிலும் நன்கு செழித்து வளர கூடியது. எல்லாவற்றிற்கும் மேலாக நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை நாள் முழுவதும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. இது படுக்கையறையில் வைபதற்கு ஏற்ற தாவரமாகும். நாசாவால் அடையாளம் காணப்பட்ட சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரங்களில் இதுவும் ஒன்று.
மணிபிளான்ட் (Money plant)
நம்மில் பலருக்கும் மணி பிளான்ட் என்றால் செல்வதை கொடுக்கும் தாவர இனம் என்று மட்டுமே தெரியும். ஆனால் காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. இந்த செடியை டெவில் ஐவி என்றும் சொல்வார்கள். இந்த செடியானது வீட்டில் உள்ள ஃபார்மால்டிஹைடு, பென்சைன் மற்றும் சைலின் போன்ற தூசிகளை முற்றிலும் வெளியேற்றி, வீட்டை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்
எலுமிச்சைப்புல் (Lemon grass)
அருகம்புல், கோதுமைப்புல் போல எலுமிச்சைப் புல்லும் நமக்கு நன்மை பயக்கும் செடி என்கிறார்கள். நல்ல வாசனையை தரக் கூடியது, இதனால் லெமன் கிராஸ் பாக்டீரியாக்கள், காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் இவற்றை அழித்து சுத்தமான காற்றை தருகிறது.
ஐவி (Ivy)