Agri Info: Health Tip

Adding Green to your Life

Showing posts with label Health Tip. Show all posts
Showing posts with label Health Tip. Show all posts

January 18, 2025

Blockages In Heart: இதயத்தில் அடைப்புகள் உள்ளதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள்..!

January 18, 2025 0

 

Blockages In Heart | மார்பு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு, மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது உடற்பயிற்சியின் போது தாடை அல்லது கைகளில் குறிப்பாக தோள்பட்டை பகுதிகளில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடலில் இருக்கும் ஒரு சிக்கலை இவை குறிக்கலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே இதய ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது. இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் அறிகுறிகளை சரியாக புரிந்து கொள்வது நம்முடைய அல்லது நமக்கு நெருக்கமானவர்களின் உயிரை காக்கக் கூடும். இதயத்தில் அடைப்புகள் உள்ளதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

பிளட் பேனல்ஸ் மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம்கள் (EKGs) போன்ற மேம்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் இதய பாதிப்புகளை கண்டறிய தேவைப்படும் அவசியமான நோய் அறிதல் கருவிகளாக இருந்தாலும், இதயத்தில் ஏதேனும் அடைப்புகள் உள்ளதா? என்பதை கண்டறிய நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய பரிசோதனைகள் உள்ளன. இதய கோளாறு இருப்பதற்கான அறிகுறிகள் உங்கள் உடலில் இருக்கிறதா என்பதை எவ்வாறு கண்டறிவது என்பதை பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெர்மி விளக்கி உள்ளார்.


உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதை கவனிப்பதன் முக்கியத்துவம்...

  • நம் உடலில் ஏதாவது பாதிப்புகள் இருக்கும்போது உடல் பெரும்பாலும் சிக்னல்களை வெளிப்படுத்துகிறது. எனவே இந்த அறிகுறிகளை கூர்ந்து கவனித்து பாதிப்புகளை வெளிப்படுத்தும் சிக்னல் தான் இது என்பதை புரிந்து கொள்வது இதயத்தில் இருக்கும் அடைப்புகளை கண்டறிவதற்கான சாத்தியமான முதல் படியாகும்.
  • உடல் செயல்பாடுகளின் போதோ அல்லது உடல் உழைப்பின் போதோ ​​இதயத்திற்கு அதிக ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் தேவைப்படுகிறது. உதாரணமாக அடைப்பு இருந்தால், அடைப்புக்குக் கீழே உள்ள பகுதி உரிய ரத்த விநியோகமின்றி பாதிக்கப்படும். இது அசௌகரிய உணர்வு ஏற்பட அல்லது வலி ஏற்பட வழிவகுக்கும். அதேநேரம் நீங்கள் ஓய்வெடுக்கும் போது, ​​இதயத்திற்கான ஆக்ஸிஜன் தேவை குறைகிறது. மேலும் இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்கியபோது தோன்றிய அறிகுறிகள் தற்காலிகமாக மறைந்து போகக்கூடும்.
  • மார்பு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு, மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது உடற்பயிற்சியின் போது தாடை அல்லது கைகளில் குறிப்பாக தோள்பட்டை பகுதிகளில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடலில் இருக்கும் ஒரு சிக்கலை இவை குறிக்கலாம். எனிமும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அறிகுறிகள் ஓய்வெடுத்த பிறகும் நீடிக்கிறதா அல்லது குறைகிறதா என்பது தான். இந்த அறிகுறிகள் ஏற்பட காரணம் தமனிகளில் (arteries) ஏற்படும் அடைப்பு இதயத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது தான்.

    அறிகுறிகள் இல்லாதது இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துமா?

    மேற்கண்ட அறிகுறிகள் இருப்பதால் மட்டுமே உங்கள் தமனிகளில் அடைப்புகள் இருக்கிறது என்று அர்த்தமில்லை. ஏனென்றால் பாதிப்புகள் கண்டறியப்பட்ட சிலருக்கு குறிப்பிடத்தக்க அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்த போதும் அடைப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த நிலை "silent ischaemia" என்று அழைக்கப்படுகிறது. எனவே தான் வயதிற்கு பின்னர் அனைவருமே, குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், புகைப்பழக்கம் கொண்டவர்கள், நீரிழிவு நோய் அல்லது இதய நோயின் குடும்ப வரலாறு போன்ற ஆபத்து காரணிகளை கொண்டவர்கள் வழக்கமான அடிப்படையில் சுகாதார பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


    வீட்டில் செய்யக்கூடிய எளிய சோதனை

    இதயத்தில் இருக்கும் அடைப்பை கண்டறிய வீட்டிலேயே துல்லியமான முடிவை தர கூடிய சோதனை எதுவும் இல்லை என்றாலும், நம்முடைய அன்றாட நடவடிக்கைகளின் போது உடலில் ஏற்படும் எதிர்வினைகளைக் கவனிப்பது நமக்கு மிக முக்கியம். நீங்கள் கவனிக்க வேண்டியவை குறித்து பார்க்கலாம்.

    மார்பு அசௌகரியம்

    உடற்பயிற்சியின் போது மார்பில் இறுக்கம், அழுத்தம் அல்லது வலி போன்ற எந்தவொரு உணர்வையும் நாம் முக்கியமானதாக கருத வேண்டும். குறிப்பாக இந்த அறிகுறிகள் நாம் ஓய்வெடுக்கும் போது குறைந்துவிட்டால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.

    வலி பரவல்

    தாடை, இடது கை அல்லது முதுகு வரை வலி பரவுவது இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதை குறிக்கலாம்.

    மூச்சுத்திணறல்

    உங்களின் அன்றாட செயல்பாடுகளின்போது வழக்கத்திற்கு மாறாக மூச்சுத்திணறல் ஏற்படுவது உங்கள் இதயம் ரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய சிரமப்படுவதை குறிக்கலாம்.

    சோர்வு

    மார்பு வலி இல்லாவிட்டாலும், தொடர்ச்சியாக அல்லது அசாதாரண சோர்வு உங்களுக்கு நீடிக்கிறது என்றால் அது இதய பிரச்சனைகள் இருப்பதை குறிக்கும் நுட்பமான அறிகுறியாக இருக்கலாம்.
    மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சிகிச்சையை தாமதப்படுத்துவது மாரடைப்பு உள்ளிட்ட கடும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். உங்கள் இதயம் மற்றும் தமனிகளின் நிலையை மதிப்பிட EKG, மன அழுத்த சோதனை அல்லது இமேஜிங் ஆய்வுகள் போன்ற சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.

    இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க சில எளிய வழிமுறைகள்...


    பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் ப்ரோட்டீனை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேநேரம் நிறைவுற்ற கொழுப்புகள், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளை எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்துங்கள்.

    வழக்கமான அடிப்படையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் செயல்பாட்டில் ஈடுபடுங்கள்.

    நாள்பட்ட மன அழுத்தம் இதயத்தைப் பாதிக்கலாம். தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    புகைப்பழக்கம் ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது மற்றும் அடைப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இப்பழக்கம் இருந்தால் நிறுத்துவது உங்கள் இதயத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

    சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்படும் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் உயர் ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.


    (பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்டவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே; மருத்துவ ஆலோசனை இல்லை. இதுதொடர்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

6-6-6 Walking Rule: உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தை 6-6-6 நடைப்பயிற்சி விதியுடன் மாற்றி அமையுங்கள்!

January 18, 2025 0


 

6-6-6 Walking Rule | 6-6-6 நடைப்பயிற்சி விதியானது உங்கள் வாழ்க்கை முறையில் வழக்கமான உடற்பயிற்சியை இணைப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் இணக்கத்தை வழங்குகிறது. வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் நடைமுறைகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்வதன் மூலம், நிலையான நடைப்பயிற்சியின் நன்மைகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தீவிரத்தை அமைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளலாம்.

பரபரப்பான அலுவலக வேலைகளுக்கு மத்தியில், உடற்பயிற்சிக்கான நேரத்தைக் கண்டுபிடிப்பது சவாலானதாக இருக்கலாம். ஜிம் அல்லது யோகா வகுப்புகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு, 6-6-6 என்ற நடைப்பயிற்சி விதி தீர்வை வழங்குகிறது. உங்கள் நடைப்பயிற்சியின் பல்வேறு அம்சங்களில் ஆறாவது எண்ணை உள்ளடக்கிய இந்த எளிதான பின்பற்றக்கூடிய அணுகுமுறை, அதன் எளிமை மற்றும் பிஸியான வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ற ஒன்றாக பிரபலமடைந்து வருகிறது.

6-6-6 நடைப்பயிற்சி விதியானது, ஒரு சீரான மற்றும் கட்டமைக்கப்பட்ட நடைப்பயிற்சியை ஊக்குவிக்கிறது. முதலில் 6 நிமிட வார்ம்-அப்புடன் தொடங்கவும். காலை 6 அல்லது மாலை 6 மணிக்குள் 60 நிமிட நடைப்பயிற்சியில் ஈடுபடவும். அடுத்த 6 நிமிடம் ரிலாக்ஸாக இருக்கவும். இந்த சீரான அமைப்பு இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது, மன நலனை மேம்படுத்துதல் மற்றும் உடல் செயல்பாடுகளை உங்கள் அன்றாட வழக்கத்தின் நிலையான பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6 நிமிட வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் ஆகியவற்றின் செயல்திறன்

  • 6 நிமிட வார்ம்-அப் உங்கள் உடலியல் தயார் நிலையை படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் நடைப்பயணத்தின் உடல் தேவைகளுக்கு உங்கள் உடலை முதன்மைப்படுத்துகிறது. இது படிப்படியாக உங்கள் இதயத் துடிப்பை உயர்த்தி, உங்கள் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிகரித்த பணிச்சுமைக்கு உங்கள் இதய அமைப்பை தயார் செய்கிறது.
  • 6 நிமிட கூல்-டவுன் படிப்படியாக ஓய்வெடுக்கும் நிலைக்குத் திரும்ப உதவுகிறது. ரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றங்களைத் தடுக்கிறது மற்றும் மீட்புக்கு உதவுகிறது. இது உங்கள் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை படிப்படியாகக் குறைக்க அனுமதிக்கிறது.
  • தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி ஏற்படும் அபாயத்தையும் இது குறைக்கிறது. உடற்பயிற்சியின் ஒரு வடிவமாக குறைத்து மதிப்பிடப்படும் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்யும்போது பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
  • கார்டியோவாஸ்குலர் ஆரோக்கியம்: நடைப்பயிற்சி என்பது ஒரு ஏரோபிக் செயல்பாடாகும். இது உங்கள் இதய தசையை பலப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. வழக்கமான நடைபயிற்சி புற தமனி நோய் (பிஏடி) அபாயத்தை குறைப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


எடை மேலாண்மை: 60 நிமிட விறுவிறுப்பான நடைபயிற்சி, பல கலோரிகளை எரித்து, எடை இழப்பு அல்லது பராமரிப்பிற்கு பங்களிக்கும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் ஆற்றலுக்காக கொழுப்பைப் பயன்படுத்துவதற்கான உடலின் திறனை மேம்படுத்துகிறது.

எலும்பு ஆரோக்கியம்: நடைப்பயிற்சி என்பது எடை தாங்கும் பயிற்சியாகும். இது எலும்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் பலவீனமான எலும்புகள் என வகைப்படுத்தப்படும் எலும்புப்புரையை தடுக்க உதவுகிறது. இது வயதானவர்களுக்கும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் மிகவும் முக்கியமானது.


மனநிலை மேம்பாடு: நடைப்பயிற்சி உட்பட உடற்பயிற்சி, மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைத் தணிக்கும் இயற்கையான முறையில் மனநிலையை உயர்த்தக்கூடிய எண்டோர்பினை வெளியிடத் தூண்டுகிறது. நடைப்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. இது உங்கள் உடலுடன் இணைத்து, உங்கள் மனதையும் தெளிவுபடுத்தும். அத்துடன் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும். உங்கள் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி பயணத்தை மாற்ற 6-6-6 விதியை பின்பற்றி பயன் பெறுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப் பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.)

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

படிக்கட்டுகளில் ஏறுவது 10,000 ஸ்டெப்ஸ் நடப்பதை விட அதிக பலன் அளிக்குமா..? ஆய்வில் வெளியான தகவல்!

January 18, 2025 0

 

நடைபயிற்சி செய்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்; எலும்புகள் வலுவடையும்; உடல் எடை குறையும்; என பல விதமான் நன்மைகளை அடுக்கி கொண்டே செல்லலாம். தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது சிறந்தது என நிபுணர்களின் கூற்றுப்படி கூறுகின்றனர். ஏனெனில் இது உடல் இயக்கம் மற்றும் உடலின் சமநிலையை மேம்படுத்தவும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

நடைபயிற்சி செய்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்; எலும்புகள் வலுவடையும்; உடல் எடை குறையும்; என பல விதமான் நன்மைகளை அடுக்கி கொண்டே செல்லலாம். தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது சிறந்தது என நிபுணர்களின் கூற்றுப்படி கூறுகின்றனர். ஏனெனில் இது உடல் இயக்கம் மற்றும் உடலின் சமநிலையை மேம்படுத்தவும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

ஆனால் இந்த எளிய உடற்பயிற்சியின் பலன்களை நீங்கள் கூடுதலாக பெற நினைத்தால் உங்கள் எடை இழப்புக்கான முயற்சிகளை இன்னும் துரிதப்படுத்த நினைத்தால் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பதற்கு பதில் படிக்கட்டுகளில் ஏறுவது பயனுள்ளதாக இருக்கும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ எங்கு வேண்டுமானாலும் இதை எளிதாக மேற்கொள்ளலாம்.


வாக்கிங் ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றாலும், கலோரிகளைக் குறைக்க அல்லது குறைந்த நேரத்தில் விரும்பிய முடிவுகளைப் பெற நிறைய நேரம் எடுக்கும். இதனிடையே சமீபத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 4,50,000 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வானது நடைபயிற்சிக்கு மாற்றாக படிக்கட்டுகளில் ஏறுவதை விரைவான உடல் எடை குறைப்பிற்கு பரிந்துரைத்துள்ளது. படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சியானது குறைந்த நேரத்தில் பயனுள்ள நன்மைகளை வழங்க கூடியதாக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது.


Atherosclerosis என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நாளொன்றுக்கு 5 flights அளவிலான படிக்கட்டுகளில் ஏறுவது அல்லது தோராயமாக 50 படிகள் ஏறுவது இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை 20% குறைப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்கட்டுகளில் அடிக்கடி ஏறுவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் தொடர்புடைய பேராசிரியரான டாக்டர் Lu Qi கூறுகையில், குறிப்பாக தங்களுக்கான உடல் செயல்பாடு பரிந்துரைகளை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு அதிக தீவிரம் கொண்ட படிக்கட்டு ஏறும் செயல்பாடானது கார்டியோரெஸ்பிரேட்டரி ஃபிட்னஸ் மற்றும் லிப்பிட் ப்ரொஃபைலை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாகும், என்கிறார். சமீபத்திய இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பொது மக்களில் ASCVD-க்கான முதன்மை தடுப்பு நடவடிக்கையாக படிக்கட்டு ஏறுதல் செயல்பாடு வழங்கும் நன்மைகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

குறிப்பாக உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் தினசரி படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் பயனடையலாம். சமீபத்திய இந்த ஆய்வு UK Biobank-ல் உள்ள 450,000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தது. ஆய்வில் பங்கேற்றவர்களிடம் வாழ்க்கை முறை மற்றும் படிக்கட்டுகளில் ஏறும் பழக்கம் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த ஆய்வானது சுமார் 1 1/4 ஆண்டுகள் நடத்தப்பட்டுள்ளது. தினமும் அதிகமான படிக்கட்டுகளில் ஏறுவது, இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியை குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறுத்தியவர்களுக்கு இதய நோய் பாதிப்புக்கான ஆபத்து 32 சதவீதம் அதிகரித்ததாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வாக்கிங்குடன் ஒப்பிடும்போது, ​​படிக்கட்டுகளில் ஏறுவது ஒரு மேல்நோக்கிய வாக்கிங் என்பதற்கு சமம். ஏனெனில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக உடலை நகர்த்தி கொண்டு நடக்க வேண்டும் என்பதோடு இது அதிக கலோரிகளை எரிக்கும் எனவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

வழக்கமான நடைப்பயணத்தை விட படிக்கட்டுகளில் ஏறுதல் மிகவும் தீவிரமான செயலாகும். இதன் மூலம் நீங்கள் அதிக கலோரிகளை எரிக்கலாம்.  படிக்கட்டுகளில் ஏறுவது மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அது 10,000 ஸ்டெப்ஸ்களுக்கு நேரடி மாற்றாக இருக்காது. ஏனென்றால் படிகள் இலக்கு 2.5 அடி ஃபீட்டை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒப்பிடும்போது ஸ்டெப்ஸ்கள் குறைவாக இருக்கும். ஒரு பயிற்சியாக படிக்கட்டுகளில் ஏறுவது ஏறுதல் மற்றும் இறங்குதல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நடைபயிற்சி, படிக்கட்டுகளில் ஏறுதல், ஜாகிங் மற்றும் சைக்கிளிங் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் சிறந்தவை. படிக்கட்டுகளில் ஏறுவது வாக்கிங்கை காட்டிலும் தீவிர உடற்பயிற்சியாகக் கருதப்படுவதோடு, குறிப்பிடத்தக்க உடல்நலப் பலன்களை அளிக்கக் கூடியது. இது 10,000 ஸ்டெப்ஸ்களை நடப்பது போல் "திறன் வாய்ந்ததாக" இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இரண்டு செயல்பாடுகளும் உடற்பயிற்சியின் வெவ்வேறு அம்சங்களைக் கொண்டது மற்றும் பெறும் பலன்கள் குறிப்பிட்ட காரணிகளை பொறுத்தது. சிறிது நேரம் படிக்கட்டு ஏறுவது அல்லது ஏறி இறங்குவது கூட இதய நோய் அபாயத்தை கணிசமாக குறைக்கும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

December 17, 2024

மற்றவர்களை விட நீங்கள் குளிரை அதிகமா உணர்கிறீர்களா..? 'இந்த' வைட்டமின் குறைபாடு இருக்கலாம்!

December 17, 2024 0

 குளிர்காலம் வந்துவிட்டால், ஜாக்கெட்டுகள், சால்வைகள் மற்றும் பிற சூடான ஆடைகள் பல வீடுகளில் இருந்து வெளியே வந்திருக்கலாம். சிலர் மற்றவர்களை விட குளிர்ச்சியாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம் அல்லது அனுபவித்திருக்கலாம். ஆனால் பலர் இதற்குப் பின்னால் உள்ள காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பதில்லை, இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உங்களைச் சுற்றியுள்ளவர்களை விட நீங்கள் குளிரால் நடுங்கினால், உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததே காரணம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உங்கள் உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின்கள் மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் இந்த கடுமையான குளிர் ஏற்படுகிறது.

உடல் வெப்பநிலையை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது..?

உடல் வெப்பநிலையை பராமரிப்பது தெர்மோர்குலேஷன் என்று அழைக்கப்படுகிறது. இரும்பு, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் போன்ற வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் இந்த செயல்முறையைத் தடுக்கலாம். இந்த வைட்டமின்கள் இல்லாததால், உங்கள் உடலின் வெப்பத்தைத் தக்கவைக்கும் திறனைக் குறைக்கிறது மற்றும் நீங்கள் அதிக குளிர்ச்சியை உணர்கிறீர்கள்.

இந்த செயல்முறையின் காரணமாக தோராயமாக நமது உடல் 98.6°F (37°C) என்ற வெப்பநிலையை பராமரிக்கப்படுகிறது. மூளை, ரத்த நாளங்கள் மற்றும் வியர்வை சுரப்பிகள் போன்ற அனைத்தும் வெப்ப நிலையை சீராக்குவதற்கு ஒன்றாக இணைந்து வேலை செய்கின்றன. இது குளிர்ச்சியான சூழ்நிலையில் கூட நம்மை சூடாக வைத்திருப்பதையும், வெப்பமான சூழ்நிலையில் கூட நம்மை குளிர்ச்சியாக இருப்பதையும் உறுதி செய்கிறது. இருப்பினும் இந்த சமநிலை ஒரு சில காரணிகளால் சீர்குலைக்கப்படலாம். அவை,

-வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள்
-அளவுக்கு அதிகமான வெப்ப நிலைகள்
-வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள்

News18

ஊட்டச்சத்துக்கும் குளிர் உணர்வுக்கும் இடையே உள்ள தொடர்பு:

நமது உடலில் உள்ள பல ஊட்டச்சத்துக்களில், தெர்மோ ரெகுலேஷன் செயல்முறை சீராக நடைபெறுவதற்கு வைட்டமின் B12, ஃபோலேட் மற்றும் வைட்டமின் C போன்றவை அவசியம். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து வேலை செய்து போதுமான அளவு சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி மற்றும் ஆக்சிஜன் போக்குவரத்தை உறுதி செய்கிறது, இது உடலின் வெப்பநிலையை பராமரிப்பதற்கான முக்கிய கூறுகளாகும்.

உடலில் வெப்பத்திற்கு இரும்பு ஏன் தேவைப்படுகிறது?

உடலில் ஹீமோகுளோபின் தயாரிக்க இரும்புச்சத்து தேவை. ஹீமோகுளோபின் இரத்த சிவப்பணுக்களில் உள்ளது மற்றும் அது உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. உடலில் இரும்புச் சத்து குறையும் போது, ​​ஹீமோகுளோபின் குறைந்து, ஆக்ஸிஜன் சரியாக உடலுக்குச் செல்லாமல், தசைகளில் வெப்பம் உருவாகாது. இதன் காரணமாக, மக்கள் அதிக குளிர், சோர்வு, பலவீனம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

வைட்டமின் பி12 குறைபாடு:

வைட்டமின் பி12 உடலின் சிவப்பு அணுக்கள் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமானது. உடலில் வைட்டமின் பி 12 இல்லாவிட்டால், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி செய்யப்படாவிட்டால், இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இதனால், கை, கால் போன்ற பாகங்கள் குளிர்ச்சியடைகின்றன.

ஃபோலேட் குறைபாடு

ஃபோலேட் என்பது சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதற்கு வைட்டமின் B12 உடன் இணைந்து வேலை செய்கிறது. ஃபோலேட் குறைபாடு ஏற்பட்டால் உங்களுக்கு குளிர், சோர்வு மற்றும் மோசமான ரத்த ஓட்டம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். மேலும், ஃபோலேட் குறைபாடானது பெரும்பாலும் திசுக்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜனை கொண்டு சேர்க்காது.

வைட்டமின் சி மற்றும் இரும்பு உறிஞ்சுதல்:

தோல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் சி முக்கியமானது. ஆனால் உடலில் அது குறையும்போது குளிர் அதிகமாகத் தொடங்குகிறது. இரும்புச்சத்து உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் கேள்விப்படுகிறீர்கள், ஆனால் சில சமயங்களில் அதை சாப்பிட்ட பிறகும் இரும்புச்சத்து குறைபாட்டை உணருவீர்கள், ஏனெனில் உடலில் வைட்டமின் சி இல்லை. உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி அவசியம்.
மற்றவர்களை விட உங்களுக்கு சளி அதிகமாக இருந்தால், உங்கள் உடலில் இந்த வைட்டமின்களில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம். எனவே இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

குளிர் காலத்தில் காலையில் வாக்கிங் செல்வது ஆபத்தானதா...? நிபுணர் சொல்வது என்ன...?

December 17, 2024 0

 நாட்டில் குளிர் சீசன் துவங்கி உள்ள நிலையில், இந்த ஜில் கிளைமேட்டில் காலை சீக்கிரம் எழுந்து விறுவிறுப்பாக வாக்கிங் செல்ல பலரும் விரும்புவார்கள். ஆனால் ஏற்கனவே சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர்காலத்தில் காலை நடைபயிற்சி செய்வது பரிந்துரைக்கப்படாமல் போகலாம்.

குருகிராமில் இருக்கும் சிகே பிர்லா மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் குல்தீப் குமார் குரோவர் பேசுகையில், குளிர் சீசனில் நிலவும் குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று மூச்சுக்குழாயை இறுக்கமாக்குகிறது மற்றும் சுவாசிப்பதை மிகவும் கடினமாக்குகிறது. இது வீசிங், இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, குளிர் சீசனானது ஆஸ்துமா அல்லது சிஓபிடி பிரச்சனையால் ஏற்கனவே அவதிப்படுபவர்களுக்கு சற்று கடினமான சூழலாக இருக்கும். ஏனெனில் இது போன்ற நபர்களின் நுரையீரலை இன்னும் கடினமாக்கும். குளிர்ந்த காற்றை வெப்பமாக்க மற்றும் ஈரப்பதமாக்க அவர்களின் உடல் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். தவிர ஆண்டின் இந்த சீசனில் எழும் மற்றொரு முக்கிய கவலை காற்று மாசு அதிகரிப்பு ஆகும். அதிகாலையில் மாசுபாடு மிகவும் பொதுவானது. ஏனெனில் குளிர்காலத்தில் இருக்கும் temperature inversions கார் போன்ற வாகனங்களில் இருந்து வெளியேறும் மற்றும் தரைக்கு அருகில் உள்ள தொழிற்சாலை உமிழ்வுகள் போன்ற மாசுபாடுகளை தக்கவைக்கிறது.

இது வளிமண்டலத்தில் அதிக அளவிலான தீங்கு விளைவிக்கும் மாசு துகள்களை ஏற்படுத்துவதோடு, நம் நுரையீரலை எரிச்சலூட்டுகிறது. அழற்சி / வீக்கத்தை தீவிரப்படுத்துகிறது. ஏற்கனவே சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் அறிகுறிகளை மோசமாக்குகிறது. மேலும், இது போன்ற மாசுக்கள் நிறைந்த காற்றை ஆஸ்துமா அல்லது வேறு ஏதேனும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் சுவாசிப்பது மேலும் பிரச்சனையை தீவிரமாகும் என்பதால், அவர்கள் வெளிப்புறத்தில் செய்யும் வாக்கிங் போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை மிகவும் கடினமாக்குகிறது என்று டாக்டர் குரோவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், குளிர் சீசனில் பரவலாக காணப்படும் வறண்ட மற்றும் குளிர்ந்த காற்று டிஹைட்ரேஷனை ஏற்படுத்துகிறது, இது சுவாச மண்டலத்தை சேதப்படுத்தும். மேலும் குளிர்ந்த காற்று தொண்டை மற்றும் காற்று பாதைகளை உலர்த்தும் தன்மை கொண்டது என்பதால் இந்த சூழல் சுவாசிப்பதை மிகவும் அசௌகரியமானதாக, கடினமானதாக ஆக்குகிறது. ஏற்கனவே டிஹைட்ரேஷனுக்கு உள்ளானவர்களுக்கு, வயதானவர்கள் அல்லது நாள்பட்ட மருத்துவ நிலைமைகள் உள்ளவர்களுக்கு இது அதிக இருமலை ஏற்படுத்தும் மற்றும் அவர்களுக்கு இருக்கும் சுவாச பிரச்சனை சார்ந்த அறிகுறிகளை அதிகரிக்கச் செய்யும் என்றார்.

தவிர குளிர்காலம் சளி, காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட தொற்றுகள் பரவும் உச்ச சீசனாக உள்ளது. மேலும் குளிர் காற்று நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியைக் குறைக்கிறது. எனவே, உடல் மேற்கண்ட தொற்றுகளால் எளிதில் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. குளிர்காலத்தில் காலை சிறிது நேரம் வாக்கிங் செல்ல விரும்புவோர் வெளியில் செல்வதற்கு முன் வீட்டிற்குள் ப்ரீஹீட் செய்வது, காற்றை moisten-ஆக்க ஸ்கார்வ்ஸ் அல்லது மாஸ்க் பயன்படுத்துவது மற்றும் ஹைட்ரேஷனாக இருப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி குளிர் காலத்தில் வாக்கிங் செல்வது பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பசியின் போது கண்டதையும் சாப்பிடுகிறீர்களா..? அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க.!

December 17, 2024 0

 பசியின்மை அல்லது அதீத பசி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தங்களது தினசரி உணவு உட்கொள்ளலை திட்டமிட உதவும் சரியான மளிகைப் பொருட்கள் என்னென்ன? இந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.

பசியின்மை, புலிமியா மற்றும் அதிகப்படியான உணவுக் கோளாறு போன்ற உணவு பிரச்சனைகள் உங்களது உடல்நலம் மட்டுமின்றி, உங்களது மன நலனையும் கணிசமாக பாதிக்கும். இந்த நிலைமைகள் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவு முறைகளை சீர்குலைக்கும், சிக்கலான உணர்ச்சி மற்றும் உளவியல் சவால்களை உள்ளடக்கியது.

தேர்ந்த மருத்துவப் பராமரிப்பு, சிகிச்சைகள் இந்த பிரச்சனைகளில் இருந்து உங்களை மீட்டெடுக்க முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருப்பினும், உணவுடன் சமநிலையான உறவை உருவாக்குவதும் அவசியம்.

அதன் முதற்படியாக, நன்கு சிந்தித்து மளிகைப் பட்டியலைத் தேர்ந்தெடுப்பதும், இந்த நோயை குணப்படுத்துவதற்கான சிறிய மற்றும் சக்திவாய்ந்த படியாகும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சத்தான மற்றும் பல்வேறு விதமான பொருட்கள் அடங்கிய மளிகைப் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும். இது, உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுவதுடன், கவனத்துடன் சாப்பிடுவதையும் ஊக்குவிக்கிறது மற்றும் உணவுடன் நேர்மறையான தொடர்பையும் வளர்க்கிறது.

இத்தகைய சரியான மளிகைத் தேர்வுகள், உங்களது உணவுப் பிரச்சனைகளில் இருந்து உங்களை எவ்வாறு மீட்டெடுக்கும் என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

மளிகைப் பட்டியல் ஏன் முக்கியமானது?

உணவுப் பிரச்சனைகளை கையாளும்போது, ​​குற்ற உணர்வு, பதற்றம் போன்ற பிரச்சனைகளைத் தூண்டாமல், உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. இவ்வாறாக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மளிகைப் பட்டியலில் பின்வரும் பொருட்கள் இருக்கலாம்.

தேசிய உணவுக் கோளாறுகள் சங்கத்தின் (NEDA) கூற்றுப்படி புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சீரான உணவு, உங்களை மீட்டெடுக்க முக்கியப் பங்கு வகிக்கிறது.

தேவையான சீரான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

நிபுணரின் ஆலோசனைப்படி, எடையை படிப்படியாக மீட்டமைத்தல் அல்லது குறையாமல் நிர்வகிப்பது உங்களது ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

பல்வேறு விதமான மற்றும் பகுதி கட்டுப்பாட்டை பராமரிப்பதன் மூலம் நினைவாற்றலை ஊக்குவிக்க முடியும்.

உங்கள் உடலுக்கு ஒத்துப்போகும் உணவுத் தேர்வுகளை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

முன்னுரிமை அளிக்க வேண்டிய உணவுகள்

முழு தானியங்கள்

ஓட்ஸ், பழுப்பு அரிசி, கினோவா மற்றும் முழு தானிய ரொட்டி போன்ற முழு தானியங்கள் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த ஆதாரங்கள். இந்த முழு தானியங்கள் நீடித்த ஆற்றலை வழங்குவதோடு, கட்டுப்பாடான உணவுப் பழக்க வழக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

புரதங்கள்

முட்டை, கோழி, மீன், டோஃபு, பருப்பு மற்றும் பீன்ஸ் போன்ற மெலிந்த புரதங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். புரோட்டீன்கள் தசை பிரச்சனைகளை சரிசெய்யவும், உங்கள் திருப்திக்கும் உதவுகின்றன. பசி மற்றும் அதிகபடியான உணவைக் குறைக்க உதவுகின்றன.

ஆரோக்கியமான கொழுப்புகள்

அவோகேடோ, நட்ஸ்கள், விதைகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும், அவை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், மனநிலையை சீராக்கவும் உதவுகின்றன.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்குகின்றன. வாழைப்பழங்கள், கீரைகள், பெர்ரி மற்றும் கேரட் ஆகியவை ஆற்றல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு குறிப்பாக நன்மை பயக்கும்.

பால் பொருட்கள்

தயிர், பால் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்கள் (அல்லது பாதாம் பால் போன்ற வலுவூட்டப்பட்ட தாவர அடிப்படையிலான விருப்பங்கள்) எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி-ஐ வழங்குகின்றன. இது உணவுக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.

தின்பண்டங்கள்

நட்ஸ், டிரெயில் மிக்ஸ், ஹம்முஸ் மற்றும் முழு தானிய உணவுகள் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களை எடுத்துக் கொள்ளவும். இவை கவனமாக சாப்பிடுவதை எளிதாக்குகின்றன மற்றும் அதிக உணவு உண்ணும் பிரச்சனைகளை தடுக்கின்றன.

நீரேற்றமாக இருக்க உதவும் பானங்கள்

நீரேற்றமாக இருப்பதற்காக மூலிகை தேநீர், தேங்காய் தண்ணீர் மற்றும் பழங்கள் மூழ்கடிக்கப்பட்ட தண்ணீர் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கவும். இத்தகைய பானங்களை தேர்ந்தெடுக்கும் அதேவேளையில், அதிகபடியான காஃபியை குடிப்பதை தவிர்க்கவும்.

ஊட்டச்சத்து

நட் வெண்ணெய், தஹினி மற்றும் சல்சா போன்றவற்றைச் சேர்க்கவும். அவை உங்கள் உணவை அதிகப்படுத்தாமல், சுவையையும், ஊட்டச்சத்துக்களையும் சேர்க்கின்றன.

தவிர்க்க வேண்டிய அல்லது கட்டுப்படுத்த வேண்டிய உணவுகள்

சத்தான உணவுகளில் கவனம் செலுத்தும் அதே வேளையில், ​​அதிக பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்கள் போன்றவற்றை உட்கொள்வதை கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம்.

சமச்சீர் உணவு திட்டத்தை உருவாக்குதல்

காலை உணவு

முழு தானியங்கள் (ஓட்ஸ்), மெல்லிய புரதம் (வேகவைத்த முட்டை) மற்றும் பழங்கள் (வாழைப்பழத் துண்டுகள்) ஆகியவற்றுடன் உங்கள் நாளை சரியாக தொடங்குங்கள்.

மதிய உணவு

சமச்சீரான மதிய உணவுக்கு வறுக்கப்பட்ட கோழி, இலை கீரைகள், அவோகேடோ மற்றும் ஆலிவ் எண்ணெய்யுடன் கூடிய குயினோவா சாலட்டை முயற்சிக்கவும்.

சிற்றுண்டி

பாதாம் பால், கீரை மற்றும் உறைந்த பெர்ரிகளால் செய்யப்பட்ட மிக்ஸ் அல்லது ஸ்மூத்தியை தேர்வு செய்யவும்.

இரவு உணவு

ஆரோக்கியமான ஊட்டச்சத்துடன் உங்கள் நாளை முடிக்க, வறுத்த காய்கறிகள் மற்றும் பழுப்பு அரிசியுடன் சுட்ட சால்மனை தேர்வு செய்யலாம்.

இனிப்பு
குற்ற உணர்வு இல்லாமல் உங்களது இனிப்பு பசியை திருப்திப்படுத்த டார்க் சாக்லேட் அல்லது தயிருடன் தேன் கலந்து சாப்பிடலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

December 13, 2024

லாக்டு-இன்-சிண்ட்ரோமின் வித்தியாசமான அறிகுறிகள்... டாக்டர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நோயாளி!

December 13, 2024 0

 லாக்டு-இன்-சிண்ட்ரோம் (Locked-in-Syndrome) எனப்படும் ஒரு அரிய வகை நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு அமெரிக்க நபர் அதிலிருந்து அவர் மீண்டு வந்த தன்னுடைய அனுபவத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு உள்ளார். அசையாமல் வாய் பேச முடியாமல் 10 மாதங்கள் இவ்வாறு அவர் இருந்துள்ளார். மே 2017-ல் ஜேக் ஹேண்டில் என்று சொல்லப்படும் அவருக்கு ஒரு சில விசித்திரமான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளது. அதில் உரத்த குரல் மற்றும் சமநிலையின்மை போன்றவை அடங்கும். ஆரம்பத்தில் இவருக்கு தவறாக நோய் கண்டறிதல் செய்யப்பட்டாலும் பிறகு இவருக்கு லாக்டு-இன்-சிண்ட்ரோம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

லாக்டு-இன்-சிண்ட்ரோம் என்பது என்ன?

லாக்டு-இன்-சிண்ட்ரோம் என்பது கண்களில் உள்ள தசைகளைத் தவிர பிற தசைகள் அனைத்தையும் பாதித்து உடலை முழுவதுமாக முடக்கிப் போடும் ஒரு கோளாறு. இதில் நோயாளிகள்தங்களுடைய கண்களை திறக்கலாம் மற்றும் அதனை சுழற்றலாம், தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். எனினும் அவர்களால் பேசவோ அல்லது நகரவோ முடியாது. மூளைத் தண்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த நிலை ஏற்படுகிறது. ஹேண்டலைப் பொறுத்தவரை அவர் அளவுக்கு அதிகமாக போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்ததால் அவருடைய மூளையின் செயல்பாடு பெருமளவு குறைந்தது. இப்போது ஹேண்டலின் அனுபவத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

லாக்டு-இன்-சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இந்த நிலையில் அவர் இருந்த பொழுது அவரைச் சுற்றி இருந்த நபர்கள் என்னென்ன பேசினார்கள் என்பது ஹேண்டிலுக்கு நினைவிருப்பதாக அவர் கூறுகிறார். இது அவரை இன்னும் அசௌகரியமானதாக மாற்றி உள்ளது. தான் ஏதோ ஒரு தனித்த அறையில் கைதி போல இருந்ததை உணர்ந்ததாக அவர் கூறினார். அவருடைய தேவைகளை பிறருக்கு சொல்ல முடியாமல் வலியையும், அசௌகரித்தையும் அனுபவித்துள்ளார்.

இவர் மூளை சாவு அடைந்து விட்டார் என்று மருத்துவர்கள் நினைத்துக் கொண்டு இவருக்கு வழங்கி வந்த உயிரை காப்பாற்றும் கருவிகளை எடுத்து விடலாம் என்று முடிவு செய்தனர். எனினும் அவருடைய மூளை இயல்பாகவே செயல்பட்டு வந்தது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. “கவனிப்பதை தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. எனக்கு முன்னால் இருக்கும் நேரடி பகுதியை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது, என்னை மருத்துவ ஊழியர்கள் எப்படி படுக்க வைப்பார்களோ அந்த அடிப்படையிலேயே எனக்கு முன்னால் இருந்தவற்றை காண முடிந்தது.

என்னுடைய வாய் வறண்டு போனாலோ, எனக்கு பசித்தாலோ அல்லது எனக்கு அரித்தாலோ அதனை என்னால் பிறரிடம் கூற முடியவில்லை. ஒரு சில மாதங்கள் சிகிச்சை பெற்ற பிறகு ஹேண்டில் அவருடைய தசைகள் மீது கட்டுப்பாட்டை பெற்றார். மேலும் மெல்ல மெல்ல அவரால் பேசவும், நடக்கவும் முடிந்தது. அனைத்தையும் அவர் ஆரம்பத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. தன்னுடைய கைகளையும், கால்களையும் எப்படி அசைக்க வேண்டும், எப்படி பேச வேண்டும் ஆகியவற்றை கற்றுக் கொண்டார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் இறுதியில் அவர் ஓரளவு குணமடைந்து தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும் நிலைக்கு வந்தார். இவருடைய கதை ஊக்கமளிக்கும் விதமாக மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதியாக மாறினார். மேலும் இவர் Ahoi என்ற நிறுவனத்தில் கோ-ஃபவுண்டராக இணைந்தார்.
அதில் அவர் மாற்றுத்திறனாளிகள் அனுபவித்து வரும் சவால்களை எதிர்கொள்ள உதவி அவர்களுக்கு சேவைகளை வழங்கி வந்தார். மேலும் இவருடைய கதை மிகவும் தனித்துவமானது என்றும், குணமடைதலுக்கான சாத்தியங்களைவெளிப்படுத்துவதாகவும், இதேபோன்ற நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உதவியும், ஆதரவும் தேவைப்படுவதையும் அவர் வலியுறுத்தினார். குணமடையும் செயல்முறையில் இருக்கும் நபர்கள் ஒருபோதும் மனம் தளரக்கூடாது, தொடர்ந்து போராட வேண்டும் என்று ஹேண்டில் மக்களுக்கு கூறியுள்ளார். என்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு மக்களை ஊக்குவிப்பதற்கு நான் விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் வயதை வேகமாக்குகிறதா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

December 13, 2024 0

 சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வின் மூலம், தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவு வேகமான வயது முதிர்வுக்கு காரணமாவதுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளையும் வலியுறுத்துகிறது.

சிப்ஸ், பிஸ்கட், சாசேஜஸ், பர்கர்கள், குளிர்பானங்கள் மற்றும் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் போன்ற தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட விரும்புபரா நீங்கள்? அப்படியெனில், இனி ஜாக்கிரதையாக இருங்கள். இவை உயிரியல் ரீதியாக உங்களது வயதை வேகமாக்கும் என்று ஒரு ஆய்வு எச்சரித்துள்ளது.

ஒரு நபரின் உயிரியல் வயது என்பது, ஒரு நபரின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான புதிய வழியாகும். பல்வேறு மூலக்கூறு பயோமார்க்ஸர்களின் அடிப்படையில் ஒரு நபர் எவ்வளவு வயதானவராகத் தோன்றுகிறார் என்பதை இது குறிக்கிறது.


ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்ட ஒருவருக்கு, அவர்களின் காலவரிசை வயதைக் காட்டிலும் உயிரியல் வயது குறைவானதாக இருக்கலாம், அதே சமயம் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது போன்ற மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள், உயிரியல் முதுமையை துரிதப்படுத்தும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஏஜ் அண்ட் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், அமெரிக்காவில் இருந்து 20 முதல் 79 வயதுடைய 16,055 பங்கேற்பாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வு ஒவ்வொரு 10 சதவீத அதிகரிப்புக்கும், உயிரியல் மற்றும் காலவரிசை வயதுக்கு இடையிலான இடைவெளி தோராயமாக 2.4 மாதங்களுக்கும் விரிவடைகிறது என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

News18

தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிக நுகர்வு கொண்ட பங்கேற்பாளர்கள் (அவர்களின் உணவில் உள்ள ஆற்றல் உட்கொள்ளலில் 68-100 சதவீதம்) உயிரியல் ரீதியாக குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துக்கொண்டவர்களை விட 0.86 வயது மூத்தவர்கள் (அவர்களின் உணவில் 39 சதவீதம் அல்லது குறைவான ஆற்றல் உட்கொள்ளல்) என்பது தெரியவந்துள்ளது.

ஊட்டச்சத்து உயிர் வேதியியலாளரும், பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து, உணவுமுறை மற்றும் உணவுத் துறையின் மூத்த விரிவுரையாளரும், மருத்துவருமான பார்பரா கார்டோசோவின் கண்டுபிடிப்புகள் முடிந்தவரை பதப்படுத்தப்படாத மற்றும் குறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார்.

“எங்கள் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் மிகப்பெரியது, எங்கள் கணிப்புகள் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வு மூலம் மொத்த ஆற்றல் உட்கொள்ளலில் ஒவ்வொரு 10 சதவிகிதம் அதிகரிப்பிற்கும், கிட்டத்தட்ட 2 சதவிகிதம் இறப்பு ஆபத்து மற்றும் இரண்டு ஆண்டுகள் 0.5 சதவிகிதம் நாள்பட்ட நோய் அபாயம் உள்ளது என்பதைக் காட்டுகிறது.” என்று அவர் மேலும் கூறினார்.தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பது பொதுவாக வீட்டு சமையலில் பயன்படுத்தப்படாத ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள், உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப், சுவை மேம்படுத்திகள் மற்றும் இரண்டு கலவைகளை கலக்கும் எமல்சிஃபையர்கள் போன்ற பொருட்களைக் கொண்ட தொழில்முறை உருவாக்கங்கள் ஆகும்.

இந்த உணவுகளில் அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்புகள் மற்றும் பிற ஆரோக்கியமற்ற கூறுகள் உள்ளன, மேலும் தேவைக்கு ஏற்பவும், பதப்படுத்தி நீண்ட நாள் பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பெருங்குடல் புற்றுநோயை தடுக்க இந்த 2 போதுமா..? ஆராய்ச்சியாளர்களின் தகவல்.!

December 13, 2024 0

 இளம் வயதினரிடையே பெருங்குடல் புற்றுநோயானது ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் எளிய உணவு மாற்றங்கள் மூலம் இதை மாற்ற முடியும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்த ஆராய்ச்சி, சிறந்த உணவுப் பழக்கம் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட செரிமானப் புற்றுநோய்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் எனக் கூறுகிறது.

பெருங்குடல் புற்றுநோய்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் 54 வயது மற்றும் அதை விட இள வயதினருக்கு ஏற்படுகிறது. இது 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விகிதத்தை விட இருமடங்காகும். இந்த அதிகரிப்பு தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இதில் உணவுமுறை ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சக்தி

நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகள் நிறைந்த உணவுகள் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை 15 சதவிகிதம் குறைக்கும் என்று ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.

News18

“அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஊக்குவிக்கின்றன. இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது” என்று ஃபிளிண்டர்ஸ் ஹெல்த் அண்ட் மெடிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் உள்ள ஊட்டச்சத்து தொற்றுநோயியல் நிபுணர் யோஹன்னஸ் மெலகு கூறுகிறார். அதேப்போல் ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்ப்பதோடு சர்க்கரை மற்றும் மதுபான உட்கொள்ளலைக் குறைப்பதும் முக்கியமானது.

ஆரோக்கியமற்ற உணவுகள் ஆபத்தை அதிகரிக்கும்

இதற்கு நேர்மாறாக, சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவை பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை 14 சதவிகிதம் அதிகரிக்கின்றன.

அதிக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் முழு தானியங்களை உட்கொள்பவர்கள் பெருங்குடல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை 17 சதவீதம் குறைவாக அனுபவித்தனர். இது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் பாதுகாப்பு விளைவை எடுத்துக்காட்டுகிறது.

பெருங்குடல், மலக்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களை உள்ளடக்கிய இரைப்பை குடல் புற்றுநோய்கள், உலகளவில் 4 புற்றுநோய்களில் ஒன்றாகவும் மற்றும் 3 இல் 1 புற்றுநோய் இறப்புகளுக்கும் காரணமாக இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆபத்தான விஷயம் என்னவென்றால், 50 வயதிற்குட்பட்டவர்களில் செரிமான புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

செரிமான புற்றுநோய் விகிதங்கள், குறிப்பாக இளைய மக்களிடையே உயர்ந்து வருவதால் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இந்தக் கண்டுபிடிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மேலும் செயலூக்கமான ஊட்டச்சத்தின் மூலம் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், செயல்படவும் சரியான நேரம் வந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நார்ச்சத்து நிறைந்த மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சர்க்கரை பானங்களைக் கட்டுப்படுத்துவது நீண்ட கால ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நீங்க மொத்தமா சர்க்கரையை தவிர்த்துட்டீங்களா..? அப்படி மட்டும் பண்ணாதீங்க..!

December 13, 2024 0

 

சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களை குடிப்பதால் நம் ஆரோக்கியத்தில் ஏற்படும் தீங்குகளை நாம் நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் பொதுவாக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.

சர்க்கரையை முற்றிலுமாகத் தவிர்ப்பதை விட, அவ்வப்போது கேக் போன்ற இனிப்புகள் சாப்பிடுவது உங்கள் இதயத்திற்கு நல்லது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ஆனால் எக்காரணம் கொண்டும் சர்க்கரை பானங்கள் பக்கம் போய்விடாதீர்கள்.

ஸ்வீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகத்தின் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பல்வேறு வகையான சர்க்கரை நுகர்வு இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதிக சர்க்கரை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்றாலும், ​​​​எப்போதாவது சாப்பிடுவது உண்மையில் சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு நல்லதே என இந்த ஆய்வு கூறுகிறது. அதேசமயம் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்களை குடிப்பது பக்கவாதம், இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

மறுபுறம், சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பவர்களுடன் ஒப்பிடும்போது, ​​​​இனிப்பு தின்பண்டங்கள் அல்லது தேன் கலந்த உணவுகள் போன்ற எப்போதாவது சர்க்கரை தின்பண்டங்களை அனுபவிக்கும் நபர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து குறைவாக இருக்கிறது.

News18

நீங்கள் எவ்வளவு சர்க்கரை உட்கொள்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, அது எங்கிருந்து வருகிறது, அது உங்கள் வாழ்க்கை முறைக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதுதான் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

அதேசமயம் சர்க்கரை குளிர்பானங்கள் பெரும்பாலும் பசியைப் பூர்த்தி செய்யத் தவறிவிடுகின்றன. இதன் காரணமாக அதிகப்படியான நுகர்வுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு நேர்மாறாக, காஃபி குடிக்கும் போது இனிப்பு தின்பண்டங்கள் சாப்பிடும் கலாச்சாரம் பல நாடுகளில் உள்ளது. இதை அளவாக சாப்பிடுவதால் பெரிதாக எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஏன் மிகவும் சிறிய சர்க்கரை சிறந்ததாக இருக்காது..?

இதற்கிடையில் மிகக் குறைந்த சர்க்கரை உட்கொள்ளல் சிறந்ததல்ல என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எப்போதாவது இனிப்பு பதார்த்தங்களை உட்கொள்பவர்களை விட சர்க்கரை தின்பண்டங்களை முற்றிலுமாகத் தவிர்ப்பவர்கள் இதய நோய்களுக்கான அதிக ஆபத்துகளைக் கொண்டவர்களாக தெரிய வந்துள்ளது.
“எங்கள் ஆய்வில் இதற்கான காரணத்தையும் விளைவையும் நிரூபிக்க முடியவில்லை என்றாலும், நல்ல இதய ஆரோக்கியத்திற்கு சர்க்கரையை முற்றிலுமாக அகற்றுவது அவசியமில்லை என்று கண்டுபிடிப்புகள் தெரிவிப்பதாக” ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சி கூறுவது என்ன?

இந்தக் கண்டுபிடிப்புகள் ஒரு நுணுக்கமான தகவலை வழங்கினாலும், உணவுப் பழக்கங்கள் கலாச்சார மற்றும் அந்தந்த பகுதிகளுக்கானவை என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.

“இந்த முடிவுகள் ஸ்வீடிஷ் மக்கள் மற்றும் அவர்களின் மரபுகளை அடிப்படையாகக் கொண்டவை. இது மற்ற நாட்டில் வாழும் மக்களுக்கு நேரடியாகப் பொருந்தாது,” என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆகவே திருவிழா காலங்களில், விசேஷ நாட்களில் இனிப்பு தின்பண்டங்கள் அல்லது கேக் சாப்பிடுவது பெரிதாக எந்தப் பிரச்சனையும் ஏற்படுத்தாது. ஆனால் சோடாக்களை ஒருபோதும் குடிக்காதீர்கள்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

December 2, 2024

தொடர் இருமல் மற்றும் சளி உள்ளதா..? ஒருவேளை இந்த நோய் காரணமாக இருக்கலாம்

December 02, 2024 0

 பருவகால ஒவ்வாமை, மாசுபடுத்திகள் அனைத்தும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் தொடர்ந்து இருமல் மற்றும் சளியை அனுபவிக்கிறீர்களா? இது எளிதாக குணமாகவில்லையா? இது மற்றொரு நுரையீரல் நோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்பு உள்ளது.

மருத்துவ ரீதியாக வித்தியாசமான நிமோனியா என்று அழைக்கப்படும் ‘வாக்கிங்’ நிமோனியா, மைக்கோபிளாஸ்மா நிமோனியா, கிளமிடோபிலா நிமோனியா போன்ற பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்களால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படாது. இது பாரம்பரிய நிமோனியாவைப் போலல்லாமல், படிப்படியாக உருவாகிறது.

இது கடுமையான அறிகுறிகள் இல்லாமலும், தனிநபர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர அனுமதிப்பதாலும் “வாக்கிங்” நிமோனியா என்று அழைக்கப்படுகிறது.

News18

வாக்கிங் நிமோனியாவின் அறிகுறிகள்

வாக்கிங் நிமோனியாவின் அறிகுறிகள் நுட்பமானவை. இது பொதுவான சளி அல்லது காய்ச்சலை ஒத்திருக்கலாம். பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

தொடர் இருமல்: வாரக்கணக்கில் நீடித்திருக்கும் வறட்டு இருமல் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். இருமல் இரவில் அல்லது உடல் உழைப்பின் போது மோசமடையலாம்.

சோர்வு: அடிக்கடி வழக்கத்திற்கு மாறான சோர்வு அல்லது பலவீனத்தை அனுபவிப்பார்கள். இது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும்.


லேசான காய்ச்சல் மற்றும் குளிர்: குறைந்த தர காய்ச்சல் (பொதுவாக 102 ° F க்கும் குறைவாக) ஏற்படலாம். இதோடு குளிரும் சேர்ந்து வரும்.

மார்பு வலி: சிலருக்கு லேசான மார்பு அசௌகரியம் ஏற்படலாம், குறிப்பாக இருமல் அல்லது ஆழ்ந்த மூச்சு எடுக்கும்போது.

மூச்சுத் திணறல்: வழக்கமான நிமோனியாவை போல கடுமையானதாக இல்லாவிட்டாலும், சில நபர்களுக்கு உடல் உழைப்பின் போது சுவாசிப்பது சற்று கடினமாக இருக்கலாம்.

தலைவலி மற்றும் தொண்டை வலி: பொதுவான உடல்நலக்குறைவு, தலைவலி மற்றும் தொண்டை புண் ஆகியவை மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து கொள்ளலாம்.

இந்த அறிகுறிகள் பல வாரங்கள் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்

‘வாக்கிங்’ நிமோனியாவைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

- நடைபயிற்சி நிமோனியாவைத் தடுப்பது பல முக்கிய உத்திகளை உள்ளடக்கியது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்ட நபர்கள் போன்ற அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது முக்கியமாகும்.

- ஆரோக்கிய சுகாதார நடைமுறைகள்: சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவுதல் அல்லது சானிடைஸைர் பயன்படுத்துதல் கிருமிகள் பரவுவதைக் குறைக்க உதவும். நோய்வாய்ப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பதும் நல்லது.

- புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்: புகைபிடித்தல் நுரையீரல் திசுக்களை சேதப்படுத்தி நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதோடு சுவாச தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. புகைபிடிப்பதை நிறுத்துவது நுரையீரல் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும்.

- மன அழுத்தத்தை நிர்வகித்தல்: நாள்பட்ட மன அழுத்தம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்யலாம், எனவே மன அழுத்தத்தைக் குறைக்கும் உத்திகள், யோகா, தியானம் அல்லது உடற்பயிற்சி போன்றவை நன்மை பயக்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை: சீரான டயடைப் பராமரித்தல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல் மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

நீங்க தினமும் வெவ்வேறு நேரத்தில் தூங்குறீங்களா..? இதய நோய் ஆபத்து வரலாம்..!

December 02, 2024 0

 ஆழ்ந்த தூக்கம் ஒரு நபரின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆனால் நாம் செய்யும் சில சிறிய தவறுகள் நம் தூக்கத்தை கெடுக்கும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் படுக்க செல்வது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து எபிடோர்மியல் மற்றும் கம்யூனிட்டி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் 40 முதல் 79 வயதுக்குட்பட்ட 72,269 பேரை ஆய்வு செய்தனர். அவர்கள் ஒரு வாரத்திற்கு அவர்களின் தூக்க முறைகளைக் கண்காணிக்க ஆக்ட்டிவிட்டி டிராக்கரையும் அணிந்தனர். இந்த டேட்டாவை விரிவாக ஆராய்ந்த பிறகு, வெவ்வேறு நேரங்களில் தூங்க செல்வது இதய நோய்க்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். சுமார் எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் சிலர் பக்கவாதம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் சிலர் தொடர்ந்து வெவ்வேறு நேரங்களில் படுக்கைக்குச் சென்றனர். எனவே ஒரே நேரத்தில் தூங்குபவர்களை விட இவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்பவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும்,18 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News18

இழந்த தூக்கத்தை ஈடுசெய்ய வெவ்வேறு நேரங்களில் தூங்குவது பயனற்றது:

தூக்கம் வராமல் இருக்கும் போது, ​​சிலர் பகல் மற்றும் மதியம் தூங்க முயற்சிப்பார்கள். ஆனால் இவை எதுவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதன் மூலம் மட்டுமே இதய நோய் அபாயத்தைத் தடுக்க முடியும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் முக்கியமான தகவல்கள் கிடைத்தாலும், அதில் சில வரம்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களிடமிருந்து ஒரு வார தூக்க டேட்டா மட்டுமே சேகரிக்கப்பட்டது. இந்த ஆய்வில் தூக்கத்தை துல்லியமாக கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் முடியவில்லை.

அதே சமயம், தூக்கம் ஒருவரின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வில் வெளிப்படுத்த முடிந்தது. தூங்கும் நேரம் தொடர்பான ஆய்வுகள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆய்வு வெவ்வேறு நேரங்களில் தூங்குவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விவரிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மதிக்கும் மக்கள் சரியான நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கும், எழுந்திருப்பதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது. மேலும், தூக்கத்துடன் உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.