Agri Info: Health Tip

Adding Green to your Life

Showing posts with label Health Tip. Show all posts
Showing posts with label Health Tip. Show all posts

December 2, 2024

தொடர் இருமல் மற்றும் சளி உள்ளதா..? ஒருவேளை இந்த நோய் காரணமாக இருக்கலாம்

December 02, 2024 0

 பருவகால ஒவ்வாமை, மாசுபடுத்திகள் அனைத்தும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் தொடர்ந்து இருமல் மற்றும் சளியை அனுபவிக்கிறீர்களா? இது எளிதாக குணமாகவில்லையா? இது மற்றொரு நுரையீரல் நோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்பு உள்ளது.

மருத்துவ ரீதியாக வித்தியாசமான நிமோனியா என்று அழைக்கப்படும் ‘வாக்கிங்’ நிமோனியா, மைக்கோபிளாஸ்மா நிமோனியா, கிளமிடோபிலா நிமோனியா போன்ற பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்களால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படாது. இது பாரம்பரிய நிமோனியாவைப் போலல்லாமல், படிப்படியாக உருவாகிறது.

இது கடுமையான அறிகுறிகள் இல்லாமலும், தனிநபர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர அனுமதிப்பதாலும் “வாக்கிங்” நிமோனியா என்று அழைக்கப்படுகிறது.

News18

வாக்கிங் நிமோனியாவின் அறிகுறிகள்

வாக்கிங் நிமோனியாவின் அறிகுறிகள் நுட்பமானவை. இது பொதுவான சளி அல்லது காய்ச்சலை ஒத்திருக்கலாம். பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

தொடர் இருமல்: வாரக்கணக்கில் நீடித்திருக்கும் வறட்டு இருமல் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். இருமல் இரவில் அல்லது உடல் உழைப்பின் போது மோசமடையலாம்.

சோர்வு: அடிக்கடி வழக்கத்திற்கு மாறான சோர்வு அல்லது பலவீனத்தை அனுபவிப்பார்கள். இது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும்.


லேசான காய்ச்சல் மற்றும் குளிர்: குறைந்த தர காய்ச்சல் (பொதுவாக 102 ° F க்கும் குறைவாக) ஏற்படலாம். இதோடு குளிரும் சேர்ந்து வரும்.

மார்பு வலி: சிலருக்கு லேசான மார்பு அசௌகரியம் ஏற்படலாம், குறிப்பாக இருமல் அல்லது ஆழ்ந்த மூச்சு எடுக்கும்போது.

மூச்சுத் திணறல்: வழக்கமான நிமோனியாவை போல கடுமையானதாக இல்லாவிட்டாலும், சில நபர்களுக்கு உடல் உழைப்பின் போது சுவாசிப்பது சற்று கடினமாக இருக்கலாம்.

தலைவலி மற்றும் தொண்டை வலி: பொதுவான உடல்நலக்குறைவு, தலைவலி மற்றும் தொண்டை புண் ஆகியவை மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து கொள்ளலாம்.

இந்த அறிகுறிகள் பல வாரங்கள் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்

‘வாக்கிங்’ நிமோனியாவைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

- நடைபயிற்சி நிமோனியாவைத் தடுப்பது பல முக்கிய உத்திகளை உள்ளடக்கியது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்ட நபர்கள் போன்ற அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது முக்கியமாகும்.

- ஆரோக்கிய சுகாதார நடைமுறைகள்: சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவுதல் அல்லது சானிடைஸைர் பயன்படுத்துதல் கிருமிகள் பரவுவதைக் குறைக்க உதவும். நோய்வாய்ப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பதும் நல்லது.

- புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்: புகைபிடித்தல் நுரையீரல் திசுக்களை சேதப்படுத்தி நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதோடு சுவாச தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. புகைபிடிப்பதை நிறுத்துவது நுரையீரல் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும்.

- மன அழுத்தத்தை நிர்வகித்தல்: நாள்பட்ட மன அழுத்தம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்யலாம், எனவே மன அழுத்தத்தைக் குறைக்கும் உத்திகள், யோகா, தியானம் அல்லது உடற்பயிற்சி போன்றவை நன்மை பயக்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை: சீரான டயடைப் பராமரித்தல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல் மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

நீங்க தினமும் வெவ்வேறு நேரத்தில் தூங்குறீங்களா..? இதய நோய் ஆபத்து வரலாம்..!

December 02, 2024 0

 ஆழ்ந்த தூக்கம் ஒரு நபரின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆனால் நாம் செய்யும் சில சிறிய தவறுகள் நம் தூக்கத்தை கெடுக்கும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் படுக்க செல்வது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து எபிடோர்மியல் மற்றும் கம்யூனிட்டி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் 40 முதல் 79 வயதுக்குட்பட்ட 72,269 பேரை ஆய்வு செய்தனர். அவர்கள் ஒரு வாரத்திற்கு அவர்களின் தூக்க முறைகளைக் கண்காணிக்க ஆக்ட்டிவிட்டி டிராக்கரையும் அணிந்தனர். இந்த டேட்டாவை விரிவாக ஆராய்ந்த பிறகு, வெவ்வேறு நேரங்களில் தூங்க செல்வது இதய நோய்க்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். சுமார் எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் சிலர் பக்கவாதம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் சிலர் தொடர்ந்து வெவ்வேறு நேரங்களில் படுக்கைக்குச் சென்றனர். எனவே ஒரே நேரத்தில் தூங்குபவர்களை விட இவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்பவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும்,18 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News18

இழந்த தூக்கத்தை ஈடுசெய்ய வெவ்வேறு நேரங்களில் தூங்குவது பயனற்றது:

தூக்கம் வராமல் இருக்கும் போது, ​​சிலர் பகல் மற்றும் மதியம் தூங்க முயற்சிப்பார்கள். ஆனால் இவை எதுவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதன் மூலம் மட்டுமே இதய நோய் அபாயத்தைத் தடுக்க முடியும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் முக்கியமான தகவல்கள் கிடைத்தாலும், அதில் சில வரம்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களிடமிருந்து ஒரு வார தூக்க டேட்டா மட்டுமே சேகரிக்கப்பட்டது. இந்த ஆய்வில் தூக்கத்தை துல்லியமாக கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் முடியவில்லை.

அதே சமயம், தூக்கம் ஒருவரின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வில் வெளிப்படுத்த முடிந்தது. தூங்கும் நேரம் தொடர்பான ஆய்வுகள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆய்வு வெவ்வேறு நேரங்களில் தூங்குவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விவரிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மதிக்கும் மக்கள் சரியான நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கும், எழுந்திருப்பதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது. மேலும், தூக்கத்துடன் உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

காற்று மாசுபாடு உங்கள் மன நலனை பாதிக்குமா...? தெரிஞ்சுக்கலாம் வாங்க.

December 02, 2024 0

 இன்றைய நவீன காலக்கட்டத்தில் காற்று மாசுபாடு என்பது மிக முக்கியமான சுகாதார அபாயங்களில் ஒன்றாகும். மாசுபட்ட காற்று ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இது கடுமையான நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. காற்று மாசுபாடு நுரையீரல் மற்றும் சுவாசத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் காற்று மாசுபாடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அவை மனநலனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?

ஆம், காற்று மாசுபாட்டின் விளைவுகளைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வில், மனநலத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது உங்கள் மனநிலையை மாற்றுகிறது மற்றும் மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இது தவிர மனச்சோர்வு, டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் ஏற்கனவே இந்தப் பிரச்சனைகளுக்கு ஆளாகியிருந்தால், காற்று மாசுபாடு அவற்றை மோசமாக்கும். மாசுபடுத்திகள் மற்றும் அசுத்தமான காற்றை தொடர்ந்து வெளிப்படுத்துவது மன அழுத்த ஹார்மோன்களின் வெளியீட்டை அதிகரிக்கிறது. இது மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், பல வகையான உடல் உபாதைகளுக்கு மக்கள் பலியாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி, அதிகரித்து வரும் மாசுபாடு நமது உடல் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி, மனநலத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சுற்றுச்சூழலில் உள்ள சிறிய மாசுபடுத்திகள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து பின்னர் மூளையை அடையலாம். இது வீக்கத்தையும், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸையும் ஏற்படுத்துகிறது. இது அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் மனநல கோளாறுகளின் அபாயத்துடன் தொடர்புடையது. இது தவிர, அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அமைதியின்மை பிரச்சனையையும் ஏற்படுத்தும்.

மேலும், காற்று மாசுபாடு ஆரம்பகால வாழ்க்கையில் மூளையின் வளர்ச்சியை பாதிக்கிறது. இது குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், சுற்றுச்சூழல் மற்றும் வளிமண்டல மாசுபாட்டின் வெளிப்பாட்டின் மூலம் நரம்பியல் வளர்ச்சி எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. காற்று மாசுபாட்டால் வெளிப்படும் குழந்தைகளுக்கு மன அழுத்தம், பதற்றம், நடத்தையில் பிரச்சனைகள், தூக்கக் கலக்கம் மற்றும் ADHD போன்ற அறிகுறிகள் அதிக அளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

காற்று மாசுபாட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளை குறைப்பதற்கான உதவிக் குறிப்புகள்:

1. காற்றின் தரத்தைக் கண்காணிக்க, ஏர் பொல்லுஷன் மானிட்டர்களை பயன்படுத்தவும் அல்லது ஆன்லைனில் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ்களைப் பார்க்கவும். காற்று மாசுபாடு அளவு அதிகமாக உள்ள நாட்கள் மற்றும் இடங்களில் வெளியில் செல்வதையோ அல்லது உடற்பயிற்சி செய்வதையோ தவிர்க்கவும்.

2. தீங்கு விளைவிக்கக்கூடிய காற்று மாசுபாட்டின் வெளிப்பாட்டைக் குறைக்க N95 மாஸ்க்குகள் அல்லது சுவாசக் கருவிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவும்.

3. குறிப்பாக காற்று மாசுபாடு அளவு அதிகமாக இருக்கும் நாட்களில் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைப்பதன் மூலம் வீட்டின் உட்புற காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியும்.

4. தினமும் உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய சில உடல்நல பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகின்றன.

5. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இது காற்று மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகளை உங்கள் உடல் சமாளிக்க உதவுகிறது.

6. மன அழுத்தமானது காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய சில உடல்நல பிரச்சனைகளை அதிகரிக்கலாம். எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் அல்லது யோகா போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.


November 26, 2024

பிளாக் டீ இப்படி குடிங்க... நீண்ட ஆயுளுடன் இருப்பீங்க..!

November 26, 2024 0

 பெரும்பாலான நபர்கள் விரும்பி பருகக் கூடிய ஒரு பானம்தான் பிளாக் டீ. நம்மில் நிறைய பேருக்கு நம்முடைய காலையை ஒரு கப் பிளாக் டீ உடன்  ஆரம்பித்தால் தான் அந்த நாளே நன்றாக இருக்கும். எனர்ஜி பானங்களில் முன்னிலை வகிப்பது பிளாக் டீ. சோர்வாக இருந்தால் உடனடியாக ஒரு பிளாக் டீ குடித்து பார்க்கலாம் என்று தான் நாம் யோசிப்போம். அதன்பிறகு தான் பிற சிகிச்சைகளுக்கே செல்வோம்.

பிளாக் டீ என்பது நம்முடைய சோர்வை போக்குவது மட்டுமல்லாமல் பல்வேறு விதமான நன்மைகளை நமது ஆரோக்கியத்திற்கு தருகிறது. பிளாக் டீயில் நாள்பட்ட நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன. எனவே பிளாக் டீயை தினமும் சரியான அளவு குடித்து வந்தால் அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது அளிக்கும்.

பிளாக் டீ நம்முடைய இதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. தினமும் பிளாக் டீ குடிப்பது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று பல ஆய்வுகள் மூலமாக கூட நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிளாக் டீ, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் என்றும் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிளாக் டீயில் காஃபின் உள்ளது. மேலும் இதில் L-தியானைன் என்ற அமினோ அமிலமும் காணப்படுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து நம்முடைய கவனிப்பு திறனை அதிகப்படுத்துகிறது. கவனிப்புத்திறனை அதிகப்படுத்துவதற்கு பிளாக் டீ உதவும் என்பது பல ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை சேர்க்கப்படாத பிளாக் டீ, ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கும். மேலும் இதனால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான திறன் நமக்கு கிடைக்கிறது.

News18

எனவே தினமும் பிளாக் டீ குடிப்பது நிச்சயமாக நமக்கு நன்மை தரும். ஆனால் முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் பிளாக் டீ குடிக்க முயற்சி செய்யுங்கள். பிளாக் டீயில் காணப்படும் பாலிபீனால்கள் ஒரு சில வகையான புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் தைராய்டு புற்று நோய்களுக்கு எதிராக பிளாக் டீ செயல்படுவதாக ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன.

அதே நேரத்தில் பிளாக் டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். ஏனெனில் இதனால் நம்முடைய தூக்கத்தின் தரம் பாதிக்கப்படலாம். பிளாக் டீயில் காணப்படும் காஃபின் நம்மை அதிக ஆக்டிவாக வைத்து தூங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே பிளாக் டீயை மிதமான அளவு குடிப்பது நல்லது.

இத்தனை நன்மைகள் தரும் பிளாக் டீயை செய்வது மிகவும் எளிது. இதற்கு 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் அதில் 1/2 தேக்கரண்டி டீ தூள் சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். இப்போது இதில் ஒரு மூடி போட்டு 2 முதல் 3 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். ஒரு டம்ளரில் பிரவுன் சுகர் சேர்த்து அதில் நாம் தயார் செய்துள்ள பிளாக் டீயை வடிகட்டி சேர்க்கவும். சுவையான பிளாக் டீ இப்போது தயாராக உள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சிறுநீரக நோய் ஏன் நீரிழிவு நோயை மோசமாக்குகிறது..? மருத்துவர் தரும் விளக்கம்..!

November 26, 2024 0

 

நீரிழிவு நோய்க்கும் சிறுநீரக நோய்க்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது. இதில் ஒரு நோய் இருந்தால் உங்களுக்கு இருந்தால் கூட மற்றொன்றை மோசமாக்கும். ஒருவேளை ஒருவருக்கு இந்நோய் இரண்டும் இருக்கும்போது இந்த நிலைமைகளை நிர்வகிப்பது இன்னும் கடினமாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

“நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு (CKD) நீரிழிவு நோய், குறிப்பாக டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். நீரிழிவு தொடர்பான உயர் இரத்த சர்க்கரை படிப்படியாக சிறுநீரகத்தின் தமனிகளை மோசமாக்குகிறது. இதனால் உடல் உறுப்புகள் ரத்தத்தில் இருந்து கழிவுகளை அகற்றுவதை கடினமாக்குகிறது. இதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீரிழிவு நெஃப்ரோபதி - மெதுவாக முன்னேறும் நிலை - இறுதி-நிலையான சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்" என்று குருகிராமில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் சிறுநீரகவியல் ஆலோசகர் டாக்டர் மோஹித் கிர்பத் கூறுகிறார்.

சிறுநீரக நோய் இன்சுலின் மற்றும் ரத்த சர்க்கரையை கையாளும் உடலின் திறனை பாதிக்கிறது. இது நீரிழிவு நோயை மிகவும் கடினமாக்குகிறது என டாக்டர் கிர்பத் குறிப்பிடுகிறார். “சாதாரண சிறுநீரக செயல்பாடு ரத்த இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது; இருப்பினும், நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) உள்ள நபர்களில், இன்சுலின் அனுமதி குறைகிறது. இது இரத்த இன்சுலின் செறிவை அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது. அடிக்கடி ரத்தச் சர்க்கரை அளவு குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதன் விளைவாக நீரிழிவு நோயை நிர்வகிப்பதை கடினமாக்குகிறது, ”என்று டாக்டர் கிர்பத் கூறுகிறார்.

News18

மேலும், இதய நோய் உள்ளிட்ட நீரிழிவு தொடர்பான பிரச்சனைகளை அதிகப்படுத்தும் மற்றொரு ஆபத்து காரணியான உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோயால் அடிக்கடி கொண்டு வரப்படுகிறது. " சிறுநீரக நோயால் ஏற்படும் திரவ தேக்கம் மற்றும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு நிலையான இரத்த சர்க்கரை அளவை சவாலாக மாற்றுகின்றன. ஏனென்றால் சிறுநீரகங்களால் நாம் சாப்பிடும் மருந்துப் பொருட்களை முழுமையாகச் செயலாக்கி அகற்ற முடியாததால், பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் விளைவாக, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளையும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்” என்று டாக்டர் கிர்பத் எச்சரிக்கிறார்.

அதுமட்டுமின்றி சிறுநீரக நோய் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை மற்றும் திரவத்தை தக்கவைப்பதால், நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க கடினமாக உள்ளது. டாக்டர் கிர்பத்தின் கூற்றுப்படி, நீரிழிவு நோயை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளும் சரிசெய்யப்பட வேண்டியிருக்கும். ஏனெனில் சிறுநீரகங்கள் மருந்துகளை செயலாக்க மற்றும் வெளியேற்றும் திறன் குறைவாக இருப்பதால், பக்க விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

“சிறுநீரக நோய்க்கும் நீரிழிவு நோய்க்கும் இடையிலான தொடர்பு ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது. இதன் காரணமாக இந்த இரு நோய்களும் உள்ள நபர்கள் தங்கள் ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேலும் மோசமடையாமல் தடுக்க கவனமாக நிர்வகிக்க வேண்டியது அவசியம்” என்று டாக்டர் கிர்பத் வலியுறுத்துகிறார்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இதயத்திற்கு நலன் தரும் பாதாம்… குளிர் காலத்தில் எப்படி சாப்பிடலாம்?

November 26, 2024 0

 தற்போது நாடு முழுவதும் குளிர்காலம் துவங்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் கடும் குளிர் விழ ஆரம்பித்துள்ளது. இந்த குளிர்காலத்தில் நாம் பல்வேறு வகையான பருப்புகள் அல்லது உலர் பழங்களை சாப்பிடுகிறோம். ஏனெனில் அவை நம் உடலுக்கு மிகவும் நன்மை தரும்.

இந்த முக்கியமான பருப்புகளில் ஒன்று பாதாம். பாதாம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் மஞ்சு மாதல்கர் பல்வேறு தகவல்களை அளித்துள்ளார்.

குளிர்காலத்தில் அனைவரும் பாதாம் பருப்பை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பாதாம் உடலில் ஆற்றலை உருவாக்குகிறது. ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கைந்து பாதாம் சாப்பிட வேண்டும். இந்த பாதாமை ஊறவைத்தோ அல்லது ஊற வைக்காமலோ சாப்பிடலாம். பாதாமில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதனுடன், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை இதில் உள்ளன, இவை நம் உடலுக்கு நன்மை தரும்.

மேலும், இதய கோளாறு உள்ளவர்கள் பாதாம் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது அதிக ஆற்றலை வழங்குவதுடன் இதயத்திற்கும் நல்லது. இதை தவிர்த்து, பாதாமை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். நேரடியாக சாப்பிட முடியாத குழந்தைகளுககு பொடியாக இடித்து பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

பாதாம் பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. அதே சமயம் எலும்புகளும் வலுவடையும். பாவால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இதனால் முடிந்தவரை இந்த குளிர்காலத்தில் பாதாம் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்களை வயதான தோற்றத்தில் காண்பிக்கும் 3 பழக்கங்கள்… உடனே தவிர்க்க முயற்சி செய்யுங்கள்...

November 26, 2024 0

 நம்மில் சிலருக்கு வயது குறைவானதாக இருந்தாலும், அவர்களிடம் இருக்கும் தவறான பழக்கங்களால் அவர்களுக்கு தோற்றம் சற்று முதுமை அடைந்தவரை போன்று காணப்படும். அந்த தீய பழக்கங்களை தவிர்த்துக் கொள்வதன் மூலம் மீண்டும் வயதுக்கு ஏற்ற தோற்றத்தை அவர்களால் பெற முடியும்.

இந்த பிரச்சனையானது இன்று உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை காண முடிகிறது. பின்வரும் பழக்கங்களை தவிர்த்துக் கொண்டால் நமது இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

உடற்பயிற்சியை தவிர்த்தல் : தேவைக்கு ஏற்றதை விட அதிக அளவு மக்கள் உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு போதிய அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ஆனால் உடற்பயிற்சி பழக்கம் குறைவதன் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டு, குறைந்த வயது உடையவராக இருந்தாலும் அவரது தோற்றம் வயது அதிகமானவரை போல் மற்றவர்களுக்கு தெரிகிறது.

சூரிய ஒளி குறைபாடு: வைட்டமின் ‘டி’ சத்தை பெறுவதற்கு போதிய அளவு சூரிய ஒளி நம் மீது படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் ‘டி’ குறைபாடு காரணமாக முதுமை அடைந்த தோற்றம் உங்களுக்கு இளம் வயதிலேயே ஏற்படலாம்.

அதிகப்படியான ஸ்கிரீன் டைம்: தொழில்நுட்ப வளர்ச்சி, தேவை மற்றும் பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களுக்காக லேப்டாப், மொபைல் போன்ற ஸ்கிரீன் களில் நாம் அதிக நேரத்தை செலவிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தேவையை மீறி அளவுக்கு அதிகமாக ஸ்கிரீனில், ஸ்கிரீனை பார்க்கும்போது, பயிற்சி போன்ற, பயிற்சி சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உடல் முதுமை அடைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பல காரணங்கள் இருந்தாலும் இந்த 3 பழக்கங்களை தவிர்த்தால் உடலில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டுவரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip