Agri Info: Parenting

Adding Green to your Life

Showing posts with label Parenting. Show all posts
Showing posts with label Parenting. Show all posts

March 8, 2024

உங்கள் குழந்தைகளின் ஐ.க்யூ அளவை அதிகரிக்க வேண்டுமா? ஜப்பானியர்களின் வழி இதுதான்!

March 08, 2024 0

 உங்கள் குழந்தைகளின் ஐ.க்யூவை அதிகரிக்க வேண்டுமா அல்லது அதுதான் உங்களின் முக்கியமான திட்டமா? அதற்கு இந்த ஜப்பானிய கலாச்சாரம் உதவுகிறது. இது உங்கள் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது. ஐ.க்யூவுக்கும், மரபணுக்களுக்கும் தொடர்பு உள்ளது. 

சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் தனிநபர் வித்யாசங்கள் என அது மற்றவற்றுடனும் தொடர்புடையது. ஒரு குழந்தையின் அறிவாற்றலை வளர்த்தெடுப்பது அவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்குவது, என ஜப்பானியர்கள் பின்பற்றும் குறிப்புகள் இவைதான்.

ஆர்வத்தை தூண்டி ஆராய வைப்பது

குழந்தை வயதிலேயே ஜப்பானிய கலாச்சாரம் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டி, அவர்களின் ஆராய்ச்சி திறனை அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் குழந்தைகளை கேள்வி கேட்க ஊக்குவியுங்கள். 

அவர்களின் சுற்றத்தை அவர்கள் ஆராயட்டும். அவர்கள் பல அனுபவங்களைப் பெறுவதற்கு உறுதுணையாக இருங்கள். அவர்களின் நடவடிக்கைகளை மூலம் அவர்கள் எதையாவது கண்டுபிடிக்க அனுமதியுங்கள். இயற்கை நடை, மியூசியம்களுக்குச் செல்வது மற்றும் அவர்களுடன் பேசிக்கொண்டோ கற்பது, விளையாடுவது என ஊக்கப்படுத்துங்கள்.

வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்

ஜப்பானிய கலாச்சாரத்தில் படிப்பது என்பது மதிப்புமிக்க ஒன்று, அறிவு வளர்ச்சிக்கு அது மிகவும் அவசியம். உங்கள் குழந்தைகளைச் சுற்றி புத்தகங்களை அடுக்குங்கள். குழந்தை முதலே வாசிக்கப் பழகட்டும். படிப்பதை வழக்கமாக்கி பல்வேறு தலைப்புகளையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அது அவர்களின் அறிவை விரிவாக்கும். அவர்களின் கற்பனை திறனை தூண்டும்.

கடின உழைப்பை ஊக்குவியுங்கள்

விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு என்ற இரண்டும்தான் வெற்றிக்கான திறவுகோல்களாக ஜப்பானியர்கள் கடுமையாக நம்புகிறார்கள். எனவே, உங்கள் குழந்தையை வளர்ச்சி மனப்பான்மைக்கு பழக்கப்படுத்துங்கள். 

அறிவும், திறமையும், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் வருவது என்று அவர்கள் தெரிந்துகொள்ளட்டும். அவர்களின் முயற்சிகளை பாராட்டுங்கள். அவர்கள் மீண்டு எழுவதற்கு அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அவர்களின் சாதனைகளை மட்டும் பாராட்டாதீர்கள். அவர்களின் தோல்விகளில் துணை நில்லுங்கள்.

படிக்க ஏதுவான சூழலை உருவாக்குங்கள்

ஜப்பானில் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதனால் கல்வியில் சாதிப்பது ஊக்குவிக்கப்படுகிறது. வீட்டில் கல்வி கற்பதற்கு ஏதுவான சூழல் உருவாக்கப்படுகிறது. படிப்பதற்கு தனி அறை, வீட்டுப்பாடங்களை எழுதுவதற்கான நேரம், கல்வியை வளப்படுத்தும் செயல்பாடுகள் உங்களின் சொந்த நடவடிக்கைகளின் வழியாக கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவது.

ஒழுக்கத்துக்கு மாதிரியாகுங்கள்

அறிவு வளர்ச்சி மற்றும் படிப்பில் சிறந்து விளங்க ஒழுக்கமும், கவனமும் மிகவும் அவசியம். உங்கள் குழந்தைக்கு சுய ஒழுக்கத்தின் மதிப்பை கற்றுக்கொடுங்கள். நேர மேலாண்மை, தெளிவான எதிர்பார்ப்புகளை உருவாக்கும். வழக்கங்களை அவர்களுக்கு பழக்கப்படுத்துங்கள். 

அவர்களுக்கு வழிகாட்டுங்கள். எப்போதும் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள். அவர்கள் செய்யும் கடின செயல்களை, அவர்கள் செயல்களை அவர்கள் பகிர்ந்து, அவர்கள் மேலாண்மை செய்யுமளவுக்கு பகிர்ந்துகொடுங்கள். அவர்களின் இலக்குகளில் அவர்கள் கவனம் செலுத்த உறுதுணையாகுங்கள்.

பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்தெடுங்கள்

கிரியேட்டிவிட்டி மற்றும் பிரச்னைகளை தீர்க்கும் திறன், ஜப்பானில் அதிகம் மதிக்கப்படுகிறது. அது அறிவு வளர்ச்சிக்கும் உதவுகிறது. உங்கள் குழந்தைகளை ஊக்குவியுங்கள். அவர்களை வித்யாசமாக சிந்திக்க தூண்டுங்கள். 

நுட்பமான தீர்வுகளை பாருங்கள். சவால்களை வளர்ச்சிக்கான வாய்ப்புக்களாக பார்க்க கற்றுக்கொடுங்கள். வெளிப்படையான செயல்களை கொடுங்கள், அவர்கள் தங்களை வெளிக்காட்ட உதவுங்கள், அவர்களின் கிரியேட்டிவிட்டியையும் வளர்த்துவிடுங்கள்.

ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, குழந்தையுன் ஒட்டுமொத்த நலன் மற்றும் நினைவாற்றல் திறனுக்கு நல்லது. உங்கள் குழந்தைகளை சரிவிகித உணவு உட்கொள்ள அறிவுறுத்துங்கள். வழக்கமான உடற்பயிற்சிகள், போதிய உறக்கம் மற்றும் குறைவான திரைநேரத்தையும் ஊக்குவியுங்கள். 

உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும், ஸ்னாக்ஸ்களையும் வழங்குங்கள். ஆரோக்கியமான உறக்க பழக்கங்களை கொடுங்கள். குடும்பம் முழுவதும் சேர்ந்து உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்.

June 10, 2023

உங்கள் 2 குழந்தைகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் அன்பை வளர்க்க என்ன செய்ய வேண்டும்..?

June 10, 2023 0

 வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறது என்றால் எப்போதும் போர்க்களமாகவே காட்சியளிக்கும். இரவு தூங்கி கண் விழிப்பதுதான் தாமதம். எழுந்த உடனேயே குழந்தைகள் பிரச்சினையை தொடங்கி விடுவார்கள். மீண்டும் இரவு தூங்கும் வரையிலும் இந்தச் சண்டைகள் ஓயாது.

அதே சமயம், பெற்றோராகிய நாமே ஆச்சரியம் அடையும் அளவுக்கு எப்போதாவது குழந்தைகள் தங்களுக்குள் கொஞ்சிப் பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் அடுத்த நாளில் மீண்டும் சண்டைகள், கருத்து வேறுபாடுகள் தொடருவதை நாம் பார்க்க முடியும்.

இரண்டு குழந்தைகள் என்றாலும், இரண்டுமே நம் கண்கள் தான். யார் ஒருவர் மீதும் கூடுதல் அன்பை பொழிந்துவிட முடியாது. ஒரு குழந்தையின் மீது மட்டும் பாகுபாடு காட்டிவிடவும் முடியாது. சில வீடுகளில் அப்பா செல்லம், அம்மா செல்லம் என்று குழந்தைகள் இருவேறாக இருப்பதைப் பார்க்க முடியும்.

சிலர் பெண் குழந்தை மீது மட்டும் அளவில்லா பாசம் வைத்திருப்பார்கள். சிலர் ஆண் குழந்தைகளுக்கு மட்டும் அதிகமான சுதந்திரம் கொடுப்பார்கள். ஆனால், இந்த பேதங்களை கடந்து இருவரையும் ஒன்றுபோல வளர்க்க வேண்டும். அவர்களிடையே ஒற்றுமை மேலோங்க நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒற்றுமை மேலோங்க செய்ய வேண்டியவை

  • குதூகலமான வேலைகளை குழந்தைகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதை அவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும்படியாக இருக்க வேண்டும். இதைச் செய்யும்போது ஒருவருக்கு, ஒருவர் கற்றுக் கொள்வதுடன், புரிந்துணர்வு அதிகரிக்கும்.
  • தன் உடன் பிறந்தவர் மீது அன்பும், அக்கறையும் காட்ட வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அதை எப்படியெல்லாம் மேற்கொள்ளலாம் என்பதை அடிக்கடி உணர்த்த வேண்டும்.
  • குழந்தைகளிடையே சின்ன, சின்ன சண்டைகள் ஏற்படுவது சகஜம் தான். ஆனால், முக்கியமான சண்டைகள் நடைபெறும் சமயத்திலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. நாம் தலையிட்டு சுமூகமான முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  • குழந்தைகளின் நற்குணங்களை பாராட்டி, அதைப் போலவே நீயும் இருக்க வேண்டும் என்று மற்றொரு குழந்தையையும் ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் உதவி மனப்பான்மையை உடனுக்குடன் பாராட்ட வேண்டும்.
  • செய்யக் கூடாதவை :

    • ஒரு குழந்தையிடம் மட்டும் அதீத அன்பு காட்டுவது, பாச மழை பொழிவது, அதற்கு மட்டும் கேட்கின்ற அனைத்தையும் வாங்கிக் கொடுப்பது என்று இல்லாமல் இருவரையும் சம அளவில் பார்க்க வேண்டும்.
    • வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இடையே எல்லா விஷயத்திலும் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடாது. தோல்விகள் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தலாம். அதுவே பொறாமைகளுக்கு வழிவகை செய்யும்.
    • குழந்தைகள் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டுமே தவிர, யாரோ ஒருவர் தலைமையேற்க வேண்டும் என்ற வகையில் நாம் நடந்து கொள்ள கூடாது.
    • குழந்தைகள் ஒருவரை, ஒருவர் குற்றம் சுமத்தும் சமயங்களில் அதை கண்டுகொள்ளாமல் கடந்து விடக் கூடாது. எந்தப் பிரச்சினையானாலும் உடனுக்குடன் தீர்த்து வைத்து அன்பையும், சமரசத்தையும் கற்பிக்க வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

May 13, 2023

எதற்கெடுத்தாலும் ’NO’ சொல்லும் பெற்றோரா நீங்கள்..? உங்களுக்கே தெரியாமல் செய்யும் தவறு இதுதான்..!

May 13, 2023 0

 குழந்தை வளர்ப்பு ஒரு கலை. இன்றைய கால கட்டத்தில் தன் குழந்தை எல்லாவற்றிலுமே சிறந்து விளங்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசையாக இருக்கிறது. அதேபோல கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும், விரும்பியதெல்லாம் நடக்க வேண்டும் என்பது பல குழந்தைகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பைப் பொறுத்த வரை குழந்தைகள் என்ன கேட்டாலும் Yes என்று சொல்லும் பெற்றோர் மற்றும் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லும் பெற்றோர் என்று இரண்டு வகையாக இருக்கின்றனர்.

ஆம் என்று சொல்வது இல்லை என்று சொல்வது குழந்தையிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் பாலிவுட் நடிகை மற்றும் இந்திய கிரிக்கெட்டர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவும் எல்லாவற்றுக்கும் YES அல்லது NO என்று சொல்லி வளர்க்கும் பெற்றோர்கள் பற்றியும், அப்படி சொல்வது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார்.

நடிகை அனுஷ்கா ஷர்மாவின் கேள்வி: 

ஒரு நாளைக்கு எத்தனை முறை பெற்றோர்கள் குழந்தைக்கு NO சொல்வார்கள், அதாவது குழந்தை கேட்பதை மறுப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டா கணக்கில் கேள்வி எழுப்பியிருந்தார். பாலிவுட் நடிகையான சோனம் கபூர், தான் ஒரு YES அம்மாவாக இருக்க விரும்பவதாக கூறியுள்ளார்.குழந்தைகள் கேட்கும் எல்லாவற்றுக்கும் ஒன்று சரி என்று சொல்வது அல்லது இல்லை / முடியாது என்று சொல்வது தவறானது.

NO என்று கூறி மறுக்கும் வளர்ப்பு முறை:

ஒரு குழந்தை எதையாவது கேட்கும் பொழுது அதை மறுப்பதற்கு பெற்றோர்களுக்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் குழந்தைக்கு நோ என்று சொல்லி மறுக்கும் பொழுது பெற்றோர்கள் ஒரு விதமான பயம் படபடப்பு அல்லது மிகவும் கடினமாக தான் குழந்தை கேட்கும் பொருளை மறுக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

உதாரணமாக,

‘அம்மா நான் சாக்லேட் சாப்பிடலாமா’ என்று குழந்தை கேட்டால்

இல்லை சாப்பிடக்கூடாது என்ற பதில் கிடைக்கும்.

‘எனக்கு ஒரு புது பொம்மை வாங்கி தருகிறீர்களா’

‘இல்லை’ என்ற பதில் வரும்.

‘நான் வெளியில் போய் விளையாடலாமா’

‘இல்லை. விளையாடக்கூடாது’ என்பது பதிலாகும்.

இவ்வகையான கேள்விகளுக்கு பெற்றோர்களோ NO என்று சொல்லி மறப்பது குழந்தைக்கு சரியான புரிதலை ஏற்படுத்தாது. அல்லது நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்பதில் எந்த விளக்கமும் இல்லை. எனவே நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்பதை சுற்றி குழந்தை பல்வேறு கேள்விகளை உங்களிடம் கேட்கும்

காக்னிட்டிவ் டெவலப்மெண்ட் என்று கூறப்படும் முழு உடல் மற்றும் மூளைரீதியான வளர்ச்சிக்கு குழந்தைகள் பல்வேறு கேள்விகளை கேட்பது தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குழந்தை ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் முனைப்பும் இருந்தால்தான் அதை பற்றிய கேள்விகளை கேட்க துவங்கும்.

கேள்விகள் கேட்பதன் மூலம் அவர்களுக்கு தேவையான தகவல் கிடைக்கும், சரியான புரிதல் ஏற்படும். இதனால் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும். கேள்வி கேட்பது என்பது மிகவும் முக்கியமான திறனாகும். கேள்வி கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் உலகத்தை பற்றி எளிதாக தெரிந்து கொள்வார்கள். அது மட்டுமின்றி பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். எனவே எந்த விளக்கமும் இல்லாமல் நீங்கள் குழந்தை கேட்பதை மறுப்பது அவர்களுடைய ஆர்வத்தை பாதிக்கும்.

YES என்று கூறும் வளர்ப்பு முறை:

குழந்தைகள் கேட்கும் எல்லாவற்றுக்கும் ஆமாம் சரி என்று உடன்படுவதும் சரியானதல்ல. சாக்லேட் சாப்பிடலாமா,வெளியில் சென்று விளையாடலாமா என்று குழந்தைகள் ஒரு சில விஷயங்களை கேட்பதற்கு நீங்கள் ஆம் என்று சொல்லிவிட்டால் குழந்தைகள் உடனே செய்து விடும்.

என்ன கேட்டாலும் நீங்கள் சரி என்று சொல்லி விடுவீர்கள் என்று அவர்கள் மனதில் பதிந்து விடுவதால்,வளர வளர பெரிய விஷயங்களுக்கு கூட நீங்கள் எளிதாக சம்மதம் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வந்துவிடும்.அது மட்டுமின்றி அவர்களுக்கு என்றும் பொறுப்பும் கடமையும் இல்லாமல் போகும்.எனவே நீங்கள் ஆம் என்று சொல்லும்பொழுது அதற்குரிய காரணத்தையும் விளக்க வேண்டும்.

சாக்லேட் சாப்பிடலாம்,ஆனால் ஒரே ஒரு சாக்லேட் அல்லது இரண்டு துண்டுகள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று கூடுதலாக அவர்களுக்கு சொல்ல வேண்டும். பொம்மை வாங்கி தருகிறேன், இப்போது இருக்கும் பொம்மைகளை அடுக்கிவை அதற்கு பிறகு வாங்கலாம் என்று அவர்களுக்கு கூறலாம்.கேட்ட உடனேயே எல்லாம் கிடைத்து விடும் என்ற ஒரு எண்ணம் மட்டும் குழந்தைகளின் மனதில் பெற்றோர்கள் வரவழைக்ககூடாது.

எல்லாவற்றுக்கும் ஆம் என்று சொல்வதால் குழந்தைகள் நல்ல மாதிரியாக வளர மாட்டார்கள். அதேபோல எல்லாவற்றுக்கும் இல்லை என்று மறுப்பதும் அவர்களுக்கு ஒருவிதமான வெறுமையை உண்டாக்கி விடும். ஆனால் இல்லை என்று சொல்வது அவர்களை கொஞ்சம் பொறுப்பாக மாற்றும். எனவே நீங்கள் ஆம் என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலுமே அதற்குரிய காரணத்தை அவர்களுக்கு விளக்கி சொல்லவேண்டும்.


May 2, 2023

ஆன்லைன் மூலம் கற்றுத்தரப்படுகிறது.. மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி..

May 02, 2023 0

 

ஆன்லைன் மூலம் மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக கோவையில் தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோயம்புத்தூரில் தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி கூறியதாவது, “இந்தியாவின் முன்னணி குழந்தைகள் நல அமைப்பான தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் புதிய ஆன்லைன் வகுப்புகளை துவங்கியுள்ளது. இதில் மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் கல்வியை எளிய முறையில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தல், உபகரணங்களை பயன்படுத்தி குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு என வெவ்வேறு வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சியும் ஒருவருட காலத்திற்கு நடைபெறும்.

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சான்றிதழ் படிப்பும், சர்வதேச மாண்டிசோரி கல்வியில் (Montessori education) டிப்ளமோ பயில்வதற்கு பிளஸ் டூ தேர்வு பெற்றிருக்க வேண்டும். சர்வதேச மாண்டிசோரி கல்வியில் முதுகலை டிப்ளமோ படிக்க ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தினமும் இணையம் மூலமாக இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து விவரங்களுக்கு https://ncdconline.org/ என்ற இணையத்தை பார்வையிடலாம். அல்லது 9288026146 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு ஆனந்தி கூறினார்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

May 1, 2023

குழந்தைகளுக்கு 'ஹெல்த் ட்ரிங்ஸ்’கொடுப்பது நல்லதா..? கெட்டதா..? குழந்தைகள் நல மருத்துவரின் பதில்..!

May 01, 2023 0

 கடந்த பல பல தசாப்தங்களாக பல நிறுவனங்கள் குழந்தைகளுக்கான ஹெல்த் டிரிங்ஸ்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றன. பல தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு அவற்றை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் சற்று சிந்தித்து பார்த்தால், ஹெல்த் டிரிங்ஸ் என்ற பெயரில் நம் குழந்தைகளுக்கு நாம் கொடுப்பது சரியான உணவுதானா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக குழந்தைகளுக்கான ஹெல்த் ட்ரிங்ஸ் தாயரிப்புகள் பற்றிய ஒரு முக்கிய கருத்தை முன்வைத்துள்ளார் பிரபல Neonatology and Pediatrics டாக்டரான சவுரப் கன்னா.  இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சவுரப் கன்னா, பெரும்பாலான பிராண்டுகள் தங்களது ஹெல்த் டிரிங்ஸ் தயாரிப்புகளை "எனர்ஜி மற்றும் வைட்டமின்ஸ் நிறைந்த ட்ரிங்ஸ்" என்று விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் மறுபுறம் குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் அதிக அளவு சர்க்கரை அவற்றில் பயன்படுத்தப்படுவதை எங்குமே குறிப்பிடவில்லை என்கிறார்.

மேலும் பேசிய சவுரப், பொதுவாக இந்த தயாரிப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. தவிர குழந்தைகள் வலுவாக இருக்கவும், உயரமாக வளரவும் உதவும் என்ற பிம்பத்தை உருவாக்குகின்றன. ஆனால் உண்மையில் எனர்ஜி ட்ரிங்ஸ் மற்றும் இத்தகைய ஹெல்தி ட்ரிங்க்ஸ்களால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியாது. இதை இம்யூனிசேஷன்/தடுப்பூசிகளால் மட்டுமே செய்ய முடியும் என்கிறார்.

குழந்தைகளுக்காக வாங்கும் ட்ரிங்க்ஸ்களில் பெற்றோர்கள் சரிபார்க்க வேண்டியவை...

ஊட்டச்சத்து நிபுணர் அல்லது குழந்தை மருத்துவரின் பரிந்துரையின்படி, உணவு உட்கொள்வதன் மூலம் ஒரு குழந்தைக்கு கிடைக்காத ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து அல்லது குறைபாட்டை பொறுத்து, அந்த குழந்தைக்கு சப்ளிமென்ட்ஸ் (எனர்ஜி பானங்கள் போன்றவை) பரிந்துரைக்கப்படலாம். அப்போது ஒரு பெற்றோர் வாங்க நினைக்கும் ட்ரிங்ஸில் அதிக சுகர் கன்டென்ட் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். ப்ரோட்டீன்ஸ், வைட்டமின்ஸ், மினரல்ஸ், டிஹெச்ஏ போன்றவை குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் சில பொருட்களாகும். மேலும் இவற்றை குழந்தை உணவின் மூலம் எடுத்து கொள்ளும் நிலை வரும் வரை (சில காலம்) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறார் டாக்டர் சவுரப் கன்னா.

ஹெல்த் டிரிங்க்ஸை குழந்தைக்கு எப்போது பரிந்துரைக்க வேண்டும்.?

இந்த மாதிரியான சப்ளிமென்ட்ஸ் மற்றும் ஹெல்த் டிரிங்க்ஸ்களை குறிப்பிட்ட குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை உணவுகள் மூலம் வழங்க முடியாவிட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும். இவற்றை நீண்ட காலத்திற்கு குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது, மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறார் சவுரப் கன்னா.

இந்த ட்ரிங்க்ஸ்களை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்தால் என்னென்ன சிக்கல்கள் வரலாம்..?

இந்த ட்ரிங்ஸ்களில் நிறைய ப்ராசஸ்டு சுகர்ஸ் உள்ளன. எனவே இவற்றை தொடர்ந்து குழந்தைகள் குடித்தால் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். வரும் 2030-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 27 மில்லியன் குழந்தைகள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. உணவை தவிர்த்துவிட்டு, தங்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை தவறவிடும் குழந்தைகள், இந்த ட்ரிங்ஸ்களை குடித்த பிறகு ஃபுல்-ஆனதாக உணரலாம். இது அவர்களின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். தவிர இந்த ட்ரிங்ஸ்களில் கொடுக்கப்பட்டிருக்கும் இனிப்பு மற்றும் சாக்லேட் சுவைகளுக்கு குழந்தைகள் தொடர்ந்து அடிமையாகலாம் என்கிறார்.

மற்றொரு மருத்துவரான எட்வினா ராஜ் கூறுகையில் ஹெல்த் ட்ரிங்க்ஸ் தவிர ஜாம்ஸ், ஸ்ப்ரெட்ஸ், கேண்டீஸ், ஜெல்லிஸ், கேக்ஸ், பிஸ்கட்ஸ், கெட்ச்அப்ஸ் போன்றவை சர்க்கரையின் ஆதாரங்களாகும். ஒரு குழந்தையின் டயட்டில் இருந்து இவற்றை முற்றிலுமாக நீக்க முடியாது, அப்படி செய்தல் அந்த பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் குழந்தைகளுக்கு அதிகரிக்கும். எனவே அவற்றின் நுகர்வை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தலாம் என்றார்.

ஹெல்த் ட்ரிங்க்ஸ் பற்றி குறிப்பிட்ட எட்வினா ராஜ், ஒவ்வொரு ஹெல்த் டிரிங்க்ஸ்களும் கலவையில் வேறுபடுகிறது. இது அவற்றில் உள்ள additives-ன் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் கொண்டுள்ளது. மேலும் இவை 4 டீஸ்பூன் சப்ளிமென்ட்டில் 12-17 கிராம் வரை கார்போஹைட்ரேட்ஸ்களை கொண்டுள்ளன. இதை பாலில் சேர்க்கும் போது காலை உணவாக உட்கொள்ளும் தானியங்கள் / சப்பாத்தியின் ஒரு serving-க்கு சமம். எனவே ஒரு குழந்தையின் தினசரி உணவைத் திட்டமிடும் போது இதனை கருத்தில் கொள்ள வேண்டும். ஹெல்த் ட்ரிங்க்ஸ் அதிக எடை மற்றும் வாழ்க்கை முறை நோய்களுக்கானஅபாயத்தை அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.

ஆரோக்கிய மாற்று..!

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பொருட்களை விட இயற்கை மூலங்கள் மற்றும் உணவுகளை உட்கொள்வது மிகவும் சிறந்தது மற்றும் ஆரோக்கியமான மாற்றாக இருக்கும் என்கிறார் டாக்டர் கன்னா. உதாரணமாக பெற்றோர்கள் வீட்டிலேயே தங்கள் குழந்தைகளுக்கு மேங்கோ ஷேக் அல்லது வாழைப்பழ ஷேக் செய்து கொடுக்கலாம், இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என பரிந்துரைக்கிறார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

April 26, 2023

போல்டான பெண்களிடம் இருக்கும் குணங்கள்.. உங்களிடம் இதெல்லாம் இருக்கா..?

April 26, 2023 0

 

உறுதியான பெண்களுக்கென சில குணாதிசியங்கள் உள்ளன. அத்தகைய குணாதிசியங்களைப் பற்றி இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். பெண்கள் என்றாலே பொறுமை என்று முன்பெல்லாம் கூறுவது வழக்கம். அதே போல், பெண்களின் குணங்கள் என்று பார்த்தால் அதற்கு ஒரு பெரும் பட்டியலே இருக்கும். ஆனால், இந்தப் பதிவில் உறுதியான பெண்கள் என்னென்ன குணாதிசியங்கள் கொண்டிருப்பார்கள் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.


நம்பிக்கை : பொதுவாக உறுதியான பெண்களுக்கு நம்பிக்கை தான் பக்க பலமாக இருக்கும். அவர்களிடத்தில் அசாதாரணமான குணங்கள் நிறைந்து இருக்கும். அவர்கள் எப்போதும் தங்களால் என்ன முடியும் என்பதை நன்கு அறிந்தே செயல்படுவார்கள். ஆம், நம்பிக்கையுடன் தங்கள் மதிப்பறிந்து செயல்படுவதே அவர்களின் பலம். நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்.


சுதந்திரம்: உறுதியான பெண்கள் எப்பொழுதும் சுதந்திரமாக செயல்படுவது வழக்கம். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழியை போல தன்னிறைவு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கென்று தனி இலக்குகள், விருப்பங்கள், மற்றும் லட்சியம் என அமைத்து, அதை நோக்கி நம்பிக்கையுடன் சுதந்திரமாக பயணிப்பதே அவர்களின் சிறப்பு.

சமத்துவம் : ஆண், பெண் என்ற வித்தியாசம் அல்லது பேதம் பார்க்காமல், தங்களை சமத்துவத்துவத்துடன் அனைவரும் பார்க்க வேண்டும் நடத்த வேண்டும் என்று எண்ணுவார்கள். சமமான மரியாதை அளிக்கப் பட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். எந்த விதமான பேதமோ, தவறான கையாளுதலோ இருந்தால், அதனை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

தெளிவான தகவல் பரிமாற்றம் : எந்த ஒளிவு மறைவும் இல்லாத உண்மையான தகவல் பரிமாற்றத்தையே அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், தேவைகள் மற்றும் யோசனைகளை எந்த வித தயக்கமும் இன்றி தெளிவாக வெளிப்படுத்துவார்கள். அதே போல் அவர்களின் துணையும் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

எல்லைகள் அறிந்து செயல்படுதல் : அவர்களின் எல்லைகள் குறித்து அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். தங்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், அது அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்றும் அறிந்து அவர்கள் தங்கள் நல்வாழ்வு குறித்து விழிப்புடன் இருந்து அதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள். தங்களுக்கான நேரத்தை அமைத்து கொள்வார்கள். இது அவர்களது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இந்த குணங்கள் அத்தனையும் உங்களுக்கும் உள்ளதா? அப்படியென்றால் நீங்கள் ஒரு உறுதியான பெண். இந்த மன உறுதி கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை செய்து முடிக்க பக்க பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

April 12, 2023

உங்கள் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வளர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்..!

April 12, 2023 0

 ஒவ்வொரு பெற்றோருக்கும் வாழ்க்கையில் மிகவும் சவாலான அனுபவங்களில் ஒன்றாக இருப்பது குழந்தை வளர்ப்புதான். அனைத்து பெற்றோரும் தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக மற்றும் நன்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள கூடியவர்களாக வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இருப்பினும் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியாக வளர்ப்பது என்பது பெற்றோருக்கு அவ்வளவு எளிதானது அல்ல. இதற்கு பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் சரியான பேரன்டிங் டெக்னிக்ஸ் தேவை. தொழில்நுட்பமும், கவனச்சிதறல்களும் பெருகிவிட்ட இன்றைய உலகில், ஒருவர் சிறந்த பெற்றோராக இருப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது.

வலுவான உறவுகளை உருவாக்குவது, குழந்தைகளின் சுயமரியாதையை வளர்ப்பது மற்றும் ஆரோக்கியமான நடத்தைகளை ஊக்குவிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவதால் பாசிட்டிவ் பேரன்டிங் டெக்னிக்ஸ் பிரபலமாகி வருகின்றன. பெற்றோருக்குரிய இந்த அணுகுமுறை குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் நேர்மறை கண்ணோட்டத்தை வளர்க்க, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர்களே சமாளிக்க மற்றும் மற்றவர்களுடன் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்க உதவுகின்றன.

மகிழ்ச்சியான மற்றும் நம்பிக்கையான குழந்தைகளை வளர்க்க ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள நுட்பங்கள் இங்கே..

ஒரு மனிதனாக அன்றாடச் சிக்கலில் சிக்கி கொள்வதும், அதனால் நிகழ்காலத்தை நினைக்காமல் கவலைகளில் சிக்கி கொள்வதும் சகஜம். ஆனால் உங்கள் குழந்தையை வளர்க்கும் போது முழு ஈடுபாட்டுடன் இருப்பது மகிழ்ச்சியான குழந்தையை வளர்க்க ஒரு பெற்றோர் செய்ய கூடிய மிக முக்கிய விஷயங்களில் ஒன்றாகும். விளையாட்டாக இருந்தாலும் சரி, புத்தகம் படிப்பதாக இருந்தாலும் சரி அல்லது அவர்களின் நாள் எப்படி சென்றது என்பதை பற்றி கேட்பதாக இருந்தாலும் சரி, உங்கள் குழந்தையுடன் செலவிடும் நேரத்தில் அவர்களின் மீது உங்கள் முழு கவனத்தையும் செலுத்துவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். ஃபோன், டிவி-யை ஒதுக்கி விட்டு அவர்கள் மீது உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

ஒரு குழந்தையின் நடத்தையை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளில் ஒன்று பெற்றோர்கள் எப்போதும் சீரான தன்மையுடன் (Consistency) இருக்க வேண்டும். பேரன்டிங் டெக்னிக்ஸ்களில் Consistency என்பது, உங்கள் எதிர்பார்ப்புகள், எதிர்வினைகள் மற்றும் செயல்களில் நீங்கள் குழந்தைகளால் எளிதில் யூகிக்க கூடியவர்களாக இருப்பது ஆகும். தங்களது பெற்றோரிடம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை குழந்தைகள் அறிவது அவர்கள் பாதுகாப்பாக உணர்வில் வளர உதவும். குழந்தைகளிடம் உங்களை பற்றிய தெளிவான எதிர்பார்ப்புகள் மற்றும் எல்லைகளை அமைப்பதும் இதில் அடக்கம்.

ஒரு குழந்தையின் நடத்தையை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளில் ஒன்று பெற்றோர்கள் எப்போதும் சீரான தன்மையுடன் (Consistency) இருக்க வேண்டும். பேரன்டிங் டெக்னிக்ஸ்களில் Consistency என்பது, உங்கள் எதிர்பார்ப்புகள், எதிர்வினைகள் மற்றும் செயல்களில் நீங்கள் குழந்தைகளால் எளிதில் யூகிக்க கூடியவர்களாக இருப்பது ஆகும். தங்களது பெற்றோரிடம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை குழந்தைகள் அறிவது அவர்கள் பாதுகாப்பாக உணர்வில் வளர உதவும். குழந்தைகளிடம் உங்களை பற்றிய தெளிவான எதிர்பார்ப்புகள் மற்றும் எல்லைகளை அமைப்பதும் இதில் அடக்கம்.

ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள், மேலும் அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த அவர்களை ஊக்குவிக்கவும். இந்த பழக்கம் குழந்தையுடனான உங்கள் பிணைப்பை வலுப்படுத்தவும் உதவும்.

மற்றொருவருடைய உணர்ச்சிப் போக்கை ஊகித்துணர்ந்து அவரது மனப்பாங்கை அறியும் திறன் Empathy எனப்படுகிறது. உங்கள் குழந்தையின் ஃபீலிங்க்ஸ்களுக்கு நீங்கள் Empathy-யை வெளிப்படுத்தும் போது, நீங்கள் அவர்களின் உணர்ச்சிகளைப் பற்றி அக்கறை காட்டுகிறீர்கள் என்பதையும், அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறீர்கள். எனவே உங்கள் குழந்தையின் உணர்வுகளை அங்கீகரித்து அவர்களுக்குத் தேவைப்படும் போது ஆதரவு மற்றும் ஆறுதலை வழங்குவது அவர்களுக்கு அன்பான சூழலில் வளரும் வாய்ப்பை உருவாக்குகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip