Tips to prepare for Public Exam 2024 : தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் மாதம் முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறவுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை பொறுத்தவரை உயர்கல்விக்கான மூல பாடத்தை தேர்வு செய்யும் வகையில் அமையும். 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் முதன்மையானவை. இந்நிலையில், தேர்விற்கு மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகிறார்கள். பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் சில முக்கிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
மாணவர்களின் நேர மேலாண்மை
பாடங்களை விரைவாக படிக்க வேண்டும் என்றால், அந்தளவிற்கு அதற்கான மனநிலையும் தேவை. அந்த மனநிலை ஏற்படுத்திக்கொள்ளுவதில் மாணவர்கள் தங்களில் கவனத்தை செலுத்த வேண்டும். முதற்கட்டமாக மாணவர்கள் நேர மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறார்கள் என்பது முதல் இரவு தூக்குவது வரை ஒரு நேர அடிப்படையில் கவனம் செலுத்திப் படிப்பது சிறந்த முறையாகும். பள்ளிக்கு செல்வது, உணவு, படிக்கும் நேரம் என்று மட்டுமில்லாமல் உடற்பயிற்சிக்கும் நேர ஒதுக்குவது அவசியம்.
சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருத்தல்
உங்களுடைய அதிக நேரத்தை எடுத்துகொள்ளும் வலிமை சமூக ஊடகங்களுக்கு உள்ளது. மாணவர்கள் அதிக நேரம் சமூக ஊடகங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும். இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் பொழுதுபோக்கிற்கு செலவிடும் நேரத்தை கட்டுபடுத்துவது மிக அவசியமான ஒன்று. அதிக நேரம் சமூக ஊடகங்களில் செலவிடுவது தேர்வு நேரத்தில் கவனச் சிதறலை ஏற்படுத்தக்கூடும்.
காலை, மாலை உடற்பயிற்சி
பள்ளி மாணவர்கள் தினசரி உடற்பயிற்சியை பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். காலை அல்லது மாலை உடற்பயிற்சி செய்ய வேண்டும். மிக கடினமான உடற்பயிற்சி அல்லாது சிறிய அளவிலான மூச்சுப் பயிற்சி, மனதை நிலைப்படுத்த உதவும் தியானம் ஆகியவற்றை செய்யலாம். தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்காமல் சிறிய இடைவெளிக் கொடுத்து அமைதியாக இருப்பது மனதை சாந்தப்படுத்த உதவும்.
மனப்பாடம் செய்வதை தவிர்க்கவும்
படிக்கும் மாணவர்கள் எந்த சூழ்நிலையில் படிக்கிறார்கள் என்பது முக்கியமானது. அமைதியான சூழலை தேர்வு செய்வது உங்களுக்கு உதவும். மனப்பாடும் செய்வதை தவிர்ந்து, பாடத்தை புரிந்து படிக்கவும். தொடக்க முதலே விரைவாக படிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம். மனநிலை நிலைப்படுத்தி, அமைதியான சூழலில் நிதானமாக படித்தால் எளிதாக படிக்கலாம்.
அட்டவணை போட்டு படித்தல்
உங்களுக்கு எளிதாக இருக்கும் பாடங்கள், கடினமாக இருக்கும் பாடங்கள் என பிரித்துக்கொள்ளவும். ஒரு நாளில் எளிமை பாடங்களில் சில மணி நேரம், கடினமான இருக்கும் பாடங்களில் சில மணி நேரம் என வகைப்படுத்த படிக்கலாம். இதனால் சீக்கீரம் சோர்வடைவதை தவிர்க்கலாம். என்னென்ன பாடங்கள் எப்போது படிக்கலாம் என அட்டவணை போட்டுக்கொள்ளுவது சிறந்த வழியாக இருக்கும்.
தினசரி பள்ளியில் படிக்கும் பாடங்களை அன்றே முடிப்பது சிறந்தது
தினசரி பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்களை அன்றே படித்து முடிப்பது சிறப்பாக இருக்கும். இறுதி நேரத்தில் மொத்தமாக படிக்க வேண்டும் என்றால் அதிக கடினமாக மாறிவிடும். எனவே அன்று பாடத்தை அன்றே படித்து முடிக்க வேண்டும். அதே நேரம், ஒரு நாள் தொடக்கம் முந்தைய நாள் படித்தவை எவ்வளவு புரிந்தது என்பதை ஒரு சிறிய தேர்வு வைத்து சரிபடுத்திக்கொள்ள வேண்டும்.
முந்தைய ஆண்டு வினாத்தாள்
எப்போது முதலில் புத்தகத்தை முழுமையாக முடிப்பது சிறந்தது. புத்தகங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். அதனை தொடர்ந்து, முந்தைய ஆண்டு வினாத்தாள்களை வைத்து தேர்வு எழுதி பார்ப்பது ஒரு சிறப்பாக முன்னேற்றமாக இருக்கும். அதில் நீங்கள் செய்யும் தவறுகளை சரிபார்க்கும்போது மீண்டும் அதனை செய்யாமல் இருக்கலாம்.
அரசு வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாள்
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளிக் கல்வித்துறை மாதிரி வினாத்தாள் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு எளிமையாக விடையளிக்கும் வகையில் மாணவர்களுக்கு உதவும் புத்தகங்கள் குறைந்த கட்டணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்விற்கு தயார் ஆகும் மாணவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
பாட வாரியாக தேர்வு
படித்தவரை உள்ள பாடங்களுக்கு நீங்களே ஒரு சிறிய தேர்வு வைத்துக்கொள்ளவும். படித்தவரை எவ்வளவு தெரிகிறது, என்னென்ன மேலும் படிக்க வேண்டும் என்பதை குறித்து அறிந்துகொள்ள முடியும். வாரத்திற்கு ஒரு முறை இத்தேர்வை எழுதுவது நல்லது. தேர்வு நேர அச்சத்தை குறைக்கவும் இது உதவும்.
இறுதி நேரத்தில் கடைபிடிக்க வேண்டியவை
தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்களுக்கு தேர்வு குறித்த அச்சம் ஏற்படும். உங்கள் புத்தகங்களை தாண்டி எதும் கேட்கப்படபோவது இல்லை. நிதானமாக யோசித்து தெரிந்த தகவலை எழுத வேண்டும். தேர்வு அச்சம் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே பாடங்களை முடிப்பது நல்லது. சரியான நேரத்திற்கு தூக்குவது, முறையான உணவு எடுத்துக்கொள்ளுவது, உடற்பயிற்சி, மனநிலையை சமப்படுத்துவது போன்ற சிறிய சிறிய காரியங்கள் கண்டிப்பாக உங்களுக்கு இறுதி நேரத்தில் கைக்கொடுக்கும்.