காலையில், நம் வயிறு காலியாக இருக்கும் போது, நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இதனால், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாத உணவுகள் குறித்து வல்லுநர்கள் கூறியிருப்பது என்ன என்பதை பார்க்கலாம்.
நார்சத்து அதிகம் உள்ள உணவுகள்:
நார்ச்சத்து வயிற்றுக்கு நல்லது. ஆனால் அளவுக்கு மிஞ்சிய வகையிலான அதிக நார்ச்சத்து வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்று வலி போன்ற சிக்கலகளை ஏற்படுத்தும். எனவே, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சரியாக தேர்ந்தெடுத்து, சீரான வகையில், சரியான அளவில் உண்ணுங்கள்.
கார உணவுகள்:
காலையில் காரமான, மசாலா அதிகம் உள்ள மற்றும் பொரித்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது வயிற்று எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனுடன், நீங்கள் வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் நீங்கள் அசௌகரியத்தை உணரலாம்.
காப்பி அல்லது தேநீர்:
பெரும்பாலானோருக்கு காலையில் வெறும் வயிற்றில் தேநீர் மற்றும் காபி சாப்பிட்டால் தான் வேலையே ஓடும். ஆனால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். இதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் நீர் சத்து இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
குளிர்ந்த நீர்:
காலையில் வெறும் வயிற்றில் சாதாரண தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை ஒருபோதும் குடிக்கக்கூடாது. இதன் காரணமாக உங்கள் செரிமான சக்தி குறையத் தொடங்குகிறது.
ஆல்கஹால்:
ஆல்கஹால் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. இது உங்கள் கல்லீரலில் அதிக அழுத்தம் ஏற்படுத்தும் என்பதோடு, ஆல்கஹால் உங்கள் இரத்தத்தில் மிக வேகமாக பரவுகிறது.