உடற்பயிற்சிகளில் பலவகை உள்ளன. அவற்றில் நடைப்பயிற்சியும் ஒன்று. உலகெங்கும் நடைப்பயிற்சி பிரபலமாக இருக்கிறது.
கடுமையான உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் அல்லது விருப்பமில்லாதவர்கள் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். இவர்கள் மட்டுமின்றி உடல்திறன் அதிகமுள்ளவர்களும் நடைப்பயிற்சியை விரும்புவது குறிப்பிடத்தக்கது.
மிக எளிதாக, எவ்வித செலவும் இன்றி செய்யக்கூடிய நடைப்பயிற்சி எல்லா வயதினருக்கும் பொருந்தும்.
காற்பந்து, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைப்பயிற்சி சுவாராசியமானதல்ல என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
இதை மறுக்கும் சிலர், நடைப்பயிற்சியை எவ்வாறு சுவாரசியமாக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளனர்.
நடைப்பயிற்சியில் அதிக ஆர்வமுள்ளவர்கள் சிலர் முன்வைத்துள்ள ஆலோசனைகளைச் சற்று பார்க்கலாம்.
மேடு பள்ளம் உள்ள பாதை
சம தளமான பாதையில் நடைப் பயிற்சி மேற்கொள்ளாமல் கரடு முரடான, மேடு, பள்ளமான வழியைத் தேர்வு செய்யலாம். அது நடைப்பயிற்சியை சுவாரசியமானதாகவும் சவாலானதாகவும் மாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடைப் பயிற்சி
உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது அதிக எடை கொண்ட பொருள்களையோ
அல்லது ‘டம்ப்பெல்ஸ்’ எனப்படும் உடற்பயிற்சிக் கருவியையோ கைகளில் தூக்கியவாறு நடைப்பயிற்சி செய்யலாம்.
இது ஒரே நேரத்தில் கார்டியோ மற்றும் உடல் வலிமைக்கான பயிற்சியைச் செய்வதற்கு வழிவகுக்கும்.
நடைப்பயிற்சி செய்யும்போது அதிக ஆற்றலை உற்பத்தி செய்வதற்கும் வித்திடும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு இந்த வகை எடைப் பயிற்சி மிகவும் பொருத்தமானது என்று உடற்பயிற்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளின் அபாயத்தையும் இது 17 விழுக்காடு குறைக்கிறது.
அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படாமல் இருக்க இந்த நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.
தடுப்புப் பலகை/கயிற்றாட்டம்
வெறுமனே நடந்துகொண்டிருந்தால் சலிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது.
எனவே இடையிடையே வேறு சில எளிய பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
தடை தாண்டும் போட்டிக்கான கட்டமைப்பு போல் சில அடி உயரத்திற்கு வரிசையாக தடுப்புப்
பலகைகளை அமைத்து கால்களால் தாண்டி பயிற்சி செய்யலாம்.
அதனை செய்ய முடியாத பட்சத்தில் கயிற்றாட்டத்தில் ஈடுபடலாம்.
நடைப்பயிற்சி செய்துவிட்டு 50 முறை கயிற்றாட்டம் பயிற்சி மேற்கொள்வது சிறப்பானது.
அதன்பிறகு சிறிது ஓய்வு எடுத்துவிட்டு நடைப்பயிற்சியைத் தொடரலாம்.
இந்தப் பயிற்சிகளைச் செய்யும்போது கணுக்காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது.
கேலரிகளை எரிக்க உதவும் ‘புஷ் அப்’ பயிற்சி
நடைப்பயிற்சிக்கு இடையே ‘புஷ் அப்’ எனப்படும் தண்டால் பயிற்சியும் மேற்கொள்ளலாம்.
இத்தகைய பயிற்சி முறைகள் வழக்கமாக எரிக்கக் கூடிய கேலரிகளை இருமடங்காக உயர்த்துவதற்கு உதவும்.
நண்பர்களுடன் இணைந்து நடைப்பயிற்சியில் ஈடுபடுதல்
தனியாக நடைப்பயிற்சி செய்வதைவிட நண்பர்களுடன் இணைந்து அதில் ஈடுபடுவது நடைத் திறனை அதிகரிக்க உதவும்.
வழக்கமாக நடைப்பயிற்சிக்குச் செலவிடும் நேரத்தைப் பற்றி
கவலைப்படாமல் நண்பர்களுடன் பேசியபடி அதிக தூரம் செல்லலாம். அப்படி நடக்கும்போது சோர்வும் சட்டென்று எட்டிப்பார்க்காது.
அதிக கலோரிகளையும் எரித்து விடலாம்.
இந்த வழிமுறையில் உங்கள் ஆரோக்கியம் மட்டுமின்றி
நண்பர்களின் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் மேம்படுத்தலாம். ‘நண்பர்களுடன் நடைப்பயிற்சிக்குச் செல்லும் மூத்தோர், சிறந்த உடல்நிலையைக் கொண்டிருப்பதாகவும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனு
பவிப்பதாகவும் இதுதொடர்பாக ஆய்வு நடத்திய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
தியானத்துக்குச் சமம்
இந்தியாவின் தேசிய சுகாதாரக் கழகம் நடத்திய ஆய்வின்படி,
தியானம் என்பது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பயிற்சியாகும்.
மனதையும் உடலையும் ஒரே சமயத்தில் தளர்த்தி, ஆயுள்காலம் மற்றும் வளர்சிதை மாற்றத்தைத் தியானம் ஒழுங்குபடுத்தக்கூடியது.
புல்வெளியில் வெறும் காலில் நடைப்பயிற்சி மேற்கொள்வது கால்களுக்கும் மனதுக்கும் இதமளிக்கும்.
உடல் ஆரோக்கியத்தை இது மேம்படுத்துகிறது. பூங்காவில் நடப்பது மனதை நிதானப்படுத்தவும் உதவுவதுடன் தியானம் செய்வது போன்ற பலனை தரும்.
படிக்கட்டுகள்
அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், கடைத்தொகுதிகள், வர்த்தக நிறுவனங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது படிக்கட்டுகளுக்குப் பதிலாக மின்தூக்கியில் செல்லவே பலரும் விரும்புகிறார்கள். இதன் காரண மாகப் படிக்கட்டில் ஏறும் பழக்கம் குறைந்துபோய்விட்டது. நாள்தோறும் படிக்கட்டு ஏறுவதற்கும் சில நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். அதுவும் பல நோய் அபாயங்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும்.
Click here to join whatsapp group for daily health tip