சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் உற்சாகம் தரக் கூடிய பானமாக காஃபி இருக்கிறது. சோர்வாக உணரும் தருணங்களில் சூடான காஃபி அருந்துவதற்கு ஈடான தருணம் வேறெதுவும் இல்லை. குறிப்பாக மன இறுக்கத்தை போக்குவதற்கு காஃபி உதவியாக இருக்கிறது.
காலை எழுந்து, பல் துலக்கியவுடன் குடிக்கும் சூடான காஃபி மற்றும் நீண்ட நேர பணிச் சோர்வுக்கு பிறகு அருந்தும் ஒரு காஃபி ஆகியவை நம் உடலில் புத்துணர்ச்சி செல்களை தூண்டுவதாக அமையும். காஃபி லேசாக கசப்பு சுவை கொண்டது என்றாலும் கூட, அதை யார் தான் வேண்டாம் சொல்கின்றனர்? காஃபி லவ்வர் என்றால் இன்னும் சொல்லவே தேவையில்லை. வித, விதமான காஃபிகளை அருந்த வேண்டும் என்று விரும்புவார்கள். ஆக, சர்வதேச காஃபி தினத்தில், நாமே தயார் செய்து கொள்ளக் கூடிய 5 விதமான காஃபிக்கள் குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
ஃபிராப்பே : நீங்கள் வழக்கமாக சாப்பிடும் கோல்டு காஃபியைக் காட்டிலும் இது நல்ல தேர்வாக அமையும். ஆனால், இதில் கொஞ்சம் ஐஸ் சேர்க்கப்படுகிறது. இன்ஸ்டன்ட் காஃபி தயார் செய்து, அதில் குளிர்ந்த நீர், சர்க்கரை, பால் ஆகியவற்றை கலந்து இந்த ஃபிரப்பே தயார் செய்கின்றனர். இதை வீட்டிலேயே நாம் எளிமையாக தயார் செய்து விடலாம். அந்த அளவுக்கு இலகுவாக தேவையோ, அந்த அளவுக்கு பிளெண்ட் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, கிளாஸ் பொங்கி வழியும் அளவுக்கு பிளெண்ட் செய்தால் சுவை தாறுமாறாக இருக்கும்.
திராமிசு : காஃபி என்றால், எப்போதுமே அதை பானமாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உணவுப் பொருளாகவும் எடுத்துக் கொள்ளலாம். இத்தாலி உணவு வகையைச் சேர்ந்த இந்த திராமிசுவில் முக்கிய மூலப்பொருள் காஃபி ஆகும். க்ரீம், சாக்கலேட், காஃபி ஆகியவற்றின் காம்பினேஷன் என்பது நம்மை சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்லும்.
சாக்கலேட் காஃபி ட்ரஃபிள் : சாக்கலேட் சாப்பிட அதிக விருப்பம் இல்லாதவர்களுக்கு கூட, அதன் மனம் மிகவும் பிடிக்கும். ஆக, நேரடியாக சாக்கலேட் சாப்பிடவில்லை என்றாலும், காஃபியுடன் அதனை மிக்சிங் செய்து கொள்ளலாம். இது இனிப்பும், கசப்பும் கலந்த சுவையில் இருக்கும்.
டல்கோனா காஃபி : தென் கொரியாவைச் சேர்ந்த டோஃபி என்ற பான வகை தான் டல்கோனா காஃபி என்று பரவலாக அறியப்படுகிறது. இதை எப்படி தயாரிக்க வேண்டும் என்றால், சூடான பாலில் சர்க்கரை சேர்த்து, காஃபியுடன் கலக்கவும், அதனை ஒரு கிளாஸின் பாதி அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் இப்போது மேல் பகுதியில் சில்லென்ற காஃபியை சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டும் கலந்த அனுபவம் நம் மனதை மெய்மறக்கச் செய்யும்.
ஃபில்டர் காஃபி : நீங்கள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர் என்றால் அல்லது பெரும் ரெஸ்டாரண்டுகளுக்கு செல்கிறீர்கள் என்றால் இந்த ஃபில்டர் காஃபி என்ற வார்த்தையை பார்க்காமல் இருக்க முடியாது. கசப்பு மற்றும் இனிப்பு, ஆகியவை சரியாக கலந்துள்ள கலவை இது. இதன் மேல் நிற்கும் நுரையே நமக்கு மிகுந்த மனத்தை தரும்.