Search

உலக மனநல தினம் 2022 இன்று..!

 உலக மனநல தினம் 2022: மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலக மனநல தினம் முதன்முறையாக அக்டோபர் 10, 1992 அன்று அனுசரிக்கப்பட்டது. இது 150க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளைக் கொண்ட உலகளாவிய அமைப்பான மனநலத்திற்கான உலகக் கூட்டமைப்பின் ஒரு முன்முயற்சியாகும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் முதன்மை நோக்கமாக கொள்ளப்பட்டது.

1994 ஆம் ஆண்டில், உலக மனநல தினம் 'உலகம் முழுவதும் மனநல சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல்' என்ற ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் முதல் முறையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள், 'உலகளாவிய முன்னுரிமையாக அனைவருக்கும் மனநலம் மற்றும் நல்வாழ்வை ஏற்படுத்துதல்' என்பதாகும்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி , இந்த நாள் மனநலப் பிரச்சினைகளில் பணிபுரியும் அனைவருக்கும் தங்கள் வேலையைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் துறையில் எடுக்கும் முயற்சிகள் எவ்வளவு முக்கியமானவை மற்றும் இன்னும் எவ்வளவு செய்ய வேண்டும் என்பதற்கான முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.

மனிதன் நல்ல மனநலத்துடன் இருந்தால் தான் அவன் செய்யும் செயல், திறன் பெற்றதாக இருக்கும். அவனுக்கு மட்டும் இன்றி உலக நன்மைக்கும் வழிவகுக்கும். கடந்த சில ஆண்டுகளில், WHO மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் உலகளாவிய வளர்ச்சி இலக்குகளை அடைவதில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டுள்ளன.

WHO இன் கூற்றுப்படி, இயலாமைக்கான முக்கிய காரணங்களில் மனச்சோர்வு ஒன்றாகும், மேலும் 15 மற்றும் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே தற்கொலை என்பது மரணத்திற்கான நான்காவது முக்கிய காரணமாகும். மனநலம் மேம்படுத்துவது தற்கொலைகளை பெரிதளவில் குறைக்கும்.

இந்திய சூழலில், மனநலம் பற்றிய உரையாடல்கள் வேகமாக வலுப்பெற்று வருகின்றன. குறிப்பாக கொரோனா தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு. சமூக தொடர்புகள் இல்லாமை, தொலைதூர வேலை மற்றும் நீண்ட காலத்திற்கு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது ஆயிரக்கணக்கான இந்தியர்களின் மன நலனை பாதித்து வருகிறது.

இந்திய நிறுவனங்கள் ஊழியர்களின் மன நலனையே முதன்மையாகக் கொண்டுள்ளன. மனநலப் பிரச்சினைகளைக் கையாள்பவர்களுக்கு உதவ புதிய வழிகளை வகுத்து செயல்படுத்த பல நிறுவனங்கள் முன் வந்துள்ளன.


Click here to join whatsapp group for daily health tip

சூடா ஒரு மூலிகை தேநீர் போதும்! மழைக்கால நோயெல்லாம் தூரம் ஓடும்! செய்முறை டிப்ஸ்!

 உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன பெய்ய தொடங்கியுள்ளது. மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளால் நாம் பாதிப்பு அடைய வாய்ப்பு உண்டு. குறிப்பாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்பட்சத்தில் இந்த நோய்கள் நம்மை எளிதில் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.ஆகவே, மழைக்கால நோய்களை விரட்டியடிக்கும் வகையில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடனே ஏதோ மருந்து, மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்று நினைத்து விட வேண்டாம். சாதாரணமாக நம் வீட்டின் சமையல் அறையில் உள்ள பொருட்களிலேயே மருத்துவ குணம் நிறைய உள்ளது.இஞ்சி, மஞ்சள், இலவங்கம் ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கான ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துக்கள் நிறைய உள்ளன. நம் உடலில் நன்மை செய்யும் பாக்டீரியா வளருவதற்கு இவை உதவிகரமாக இருக்கின்றன. அந்த பாக்டீரியா வளரும்போது தீய பாக்டீரியாக்களை எதிர்த்து போராட தொடங்கி விடும்.

என்னென்ன பலன் கிடைக்கும்?
இஞ்சி, மஞ்சள், இலவங்கம் அடங்கிய மூலிகை தேநீர் அருந்தினால் கவலை, மன அழுத்தம் போன்றவை குறையும். இதய நோய்களை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும். நீரிழிவு நோயாளிகள் இந்த தேநீரை அருந்தி வந்தால் சர்க்கரை அளவு சீராக இருக்கும். நம் உடலில் ஏற்படக் கூடிய அனைத்து வகை அழற்சிகளை இது சரி செய்யக் கூடியது.

செய்முறை
அனைத்து மூலப் பொருட்களையும் தண்ணீரில் கலந்து, மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பிறகு இதனை வடிகட்டி இளம் சூட்டில் பருகலாம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, பருவகால நோய்களை எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும். உடலுக்கு நன்மை தரக் கூடியதுதான் என்றாலும் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டாம். வாரம் இருமுறை எடுத்துக் கொள்ளலாம்.


Click here to join whatsapp group for daily health tip

1 கிராம் உப்பை குறைத்தால்..

 ஒரு நாளைக்கு 1 கிராம் உப்பை குறைப்பது 2030-ம் ஆண்டளவில் 90 லட்சம் இதய நோய் பாதிப்புகளை குறைக்கும். 

40 லட்சம் உயிர்களை காப்பாற்றும் என்கிறது, புதிய ஆய்வு. அதற்கேற்ப உப்பின் பயன்பாடு உலகளவில் பரவலாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது. 

சமையலில் உப்பை அதிகம் உபயோகிப்பது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்துவிடும். ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, நரம்புகளை தூண்டுவதற்கும், தசைகளை சுருக்குவதற்கும், தளர் வடைய செய்வதற்கும், தண்ணீர் மற்றும் தாதுக்களின் சம நிலையை பராமரிப்பதற்கும் மனித உடலுக்கு சிறிதளவு சோடியம் (உப்பு) தேவைப்படுகிறது.


சீனாவில் நிகழும் கிட்டத்தட்ட 40 சதவீதம் இறப்புகளுக்கு இதய நோய்களே காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, சீனர்கள் தினமும் 11 கிராம் உப்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

 இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பை குறைப்பதன் மூலம் தமனிகளின் சீரற்ற செயல்பாடுகளால் இதய நோய் ஏற்படும் அபாயத்தை 4 சதவீதம் குறைக்க முடியும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 6 சதவீதம் குறைக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெளிவுபடுத்தி உள்ளது.

தினமும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால்..

தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்ள நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் சிறிது தூரம் நடக்கும் பழக்கத்தை பின்பற்றுவது உடல் நலத்திற்கு அவசியமானது. நடப்பதால் கிடைக்கும் நன்மைகளை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. 

சமீபத்திய ஆய்வு முடிவின்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடப்பது புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். முதுமையை தள்ளிப்போடும். திடீர் இறப்பு அபாயத்தை தடுக்கும் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வு முடிவு ஜமா இன்டர்னல் மெடிசின் மற்றும் ஜமா நியூராலஜி இதழில் வெளியிடப்பட்டது.

 40 முதல் 79 வயதுக்குட்பட்ட 78 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் புற்றுநோய், டிமென்ஷியா உள்ளிட்ட எந்தவொரு நோய் பாதிப்புக்கும் ஆளாகாதவர்கள். அவர்கள் அனைவரும் தினமும் 10 ஆயிரம் அடி தூரம் நடக்க வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வேகமாக நடப்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது. தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் போர்ஜா டெல் போசோ க்ரூஸ், ''ஒரு நாளைக்கு 3,800 அடிகள் நடப்பது கூட டிமென்ஷியா அபாயத்தை 25 சதவிகிதம் குறைக்க உதவும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்றார். 

ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடப்பதன் மூலம் 8 முதல் 11 சதவீதம் வரை அகால மரணம் அடையும் அபாயத்தை குறைக்கலாம் என்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



 Click here to join whatsapp group for daily health tip

அடிக்கடி முதுகு வலி ஏற்படுவது கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கான அறிகுறியா..?

 இதயம் சம்பந்தப்பட்ட நோய் கண்டறியப்பட்டாலும் அல்லது கண்டறியப்படாத நிலையிலும், இதயத்தின் செயல்பாடு திடீரென்று நின்று போவதைத்தான் கார்டியாக் அரெஸ்ட் என்று குறிப்பிடுகின்றனர். இதனை சில அறிகுறிகள் மற்றும் எச்சரிக்கைகள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும்போது உடல் எத்தகைய மாற்றங்களை வெளிப்படுத்தும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உடனடி மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ உதவியின் மூலமாக மதிப்புமிக்க மனித உயிரை காப்பாற்ற முடியும்.

அதே சமயம், கார்டியாக் அரெஸ்டுடன் தொடர்புடைய முதுகு வலி ஒன்றை மட்டுமே அதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியுமா? என்றால் நிச்சயமாக இல்லை. இதனுடன் பிற அறிகுறிகளும் சேர்ந்து வரும்.

கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன?

ஹார்ட் அட்டாக் அல்லது இதய செயலிழப்பு ஆகியவற்றை தொடர்ந்து கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும். இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்த நாளங்களில் திடீரென்று அடைப்பு ஏற்படுவது அல்லது இதயத்தின் மின்னியக்க செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது ஆகியவற்றை தொடர்ந்து கார்டியாக் அரெஸ்ட் நிகழும்.

கார்டியாக் அரெஸ்ட்கான பொதுவான அறிகுறி முதுகு வலி ஆகும். இதனுடன் முன், இடது அல்லது வலது தோள்பட்டை வலி, இடது கை வலி, வலது கை வலி, மேல் தாடை, கழுத்து வலி, இரண்டு தோள்பட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.

எந்த வயதினருக்கும், எப்போது வேண்டுமானாலும் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் மிதமான வலி அல்லது அசௌகரியம் மூலமாக இது நிகழ இருப்பதை தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, வழக்கத்திற்கு மாறான முதுகு வலி ஏற்படும்போது அதனை அலட்சியம் செய்யக் கூடாது என்று தெரிவிக்கின்றனர்.

முதுகுவலியை வேறுபடுத்தி பார்ப்பது எப்படி?

சாதாரண முதுகு வலி அல்லது கார்டியாக் அரெஸ்ட் தொடர்புடைய முதுகு வலி, இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். மேல் முதுகுப் பகுதியில் மிகக் கடுமையான வலி ஏற்படுவது கார்டியாக் அரெஸ்ட்க்கான அறிகுறி ஆகும். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத்தான் இந்த அறிகுறிகள் மிக அதிகமாக தென்படும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

அறிகுறி தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் முதலில் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று இசிஜி, எக்கோ, டிஎம்டி போன்ற பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். அதை செய்தால் மட்டுமே அது சாதாரண முதுகு வலியா அல்லது கார்டியாக் அரெஸ்ட்க்கான அறிகுறியா என்பது தெரியவரும்.

தடுப்பு நடவடிக்கைகள் :

தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் ஆகியவை நம் வாழ்வியலில் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்கள் ஆகும். இதுதவிர அவ்வபோது ரத்த அழுத்தப் பரிசோதனை, பிற இதய பரிசோதனைகள் போன்றவற்றை அவ்வபோது செய்து கொள்ள வேண்டும்.


Click here to join whatsapp group for daily health tip

அதிகமாக ஷாப்பிங் செய்வது ஒருவித மனநோய் : விவரிக்கிறார் மனநல மருத்துவர்!

 தேவையற்ற காரணங்களுக்காக அளவுக்கு மீறி ஷாப்பிங் செய்வது என்ற ஒருவித மனநோயின் வெளிப்பாடு என்று மன நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நோயின் உச்சநிலையை அடைந்தவர்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையாகி கையில் காசு இல்லாத சமயத்திலும் கூட வாடிக்கையாளரை போல் கடைக்கும் நுழைந்து பொருளை திருடி கொண்டு வந்து விடுவார்கள்.

யாருக்குத்தான் ஷாப்பிங் செய்ய பிடிக்காது? சிறு குழந்தையாக இருக்கும்போது விளையாட்டு பொருட்கள் வாங்குவதில் துவங்கி, வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பும் நமக்கு தேவையான பொருட்களை வாங்குவதும், நமக்கு பிடித்தவர்களுக்கு வாங்கி கொடுப்பதும் மகிழ்ச்சியான ஒன்று தான். முக்கியமாக ஆண்களைவிட பெண்களுக்கு இதில் ஆர்வம் அதிகம். தங்களுக்கு தேவையோ இல்லையோ, ஏதேனும் ஒரு புதிய பொருள் சந்தையில் அறிமுகமானதும் அதை வாங்கி உபயோகப்படுத்தி பார்த்து, பின்பு தூக்கி எறிவதில் பெண்களுக்கு எப்போதும் அலாதியான சந்தோஷம் உண்டு.

இவ்வளவு நாட்கள் இது பெண்களாகிய எங்களுக்கு மட்டும் தான் புரியும் எனவும், பெண்களின் இயல்பே இப்படித்தான் என்பது போலவும் வாதங்கள் பெண்களின் தரப்பில் வைக்கப்பட்டு வந்த நிலையில், அதிகமாக ஷாப்பிங் செய்வது என்பது ஒருவித மனநோய் என மன நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். BSD என பெயரிடப்பட்டுள்ள இந்த “பையிங் ஷாப்பிங் டிசாடர்” பொதுவாக ஷாப்பிங் செய்வதற்கு அடிமையான ஒருவரை குறிக்கிறது. ஒரு பொருள் நமக்கு அத்தியாவசியமாக தேவையே இல்லை எனினும் அதை பார்த்து விட்டதாலேயே அல்லது ஏதேனும் வாங்க வேண்டும் என்பதற்காகவே அப்பொருளை வாங்குவது போன்றவை இந்த நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

உலகில் பலருக்கு இந்த அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்தாலும், இதனை கண்டறிவதற்கான சரியான வழிமுறை தற்போது வரை வெளியிடப்படவில்லை. கிட்டத்தட்ட சூதாட்டத்திற்கு அடிமையாகி இருக்கும் மக்களைப் போலவே, இந்த ஷாப்பிங் டிசார்டரால் பாதிக்கப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். தங்களுக்குத் தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதை அறிந்தும் தேவையற்ற பொருளை வாங்குவதும் இணையதளங்களில் தேடித் தேடி பொருட்களை வாங்குவதில் ஆர்வமாக இருப்பதும் இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.

இதில் தாங்கள் செய்வது தவறான செயல் என்றும் தனக்கு தேவையே இல்லாத பொருள் என்றும் இதை வாங்குவதால் எந்த பயனும் இல்லை ஆகியவை தெரிந்தும், அப்பொருளை வாங்கும் எண்ணத்தை அவர்களால் கட்டுப்படுத்தவே முடியாது. இந்த நோயின் உச்சநிலையை அடைந்தவர்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையாகி கையில் காசு இல்லாத சமயத்திலும் கூட வாடிக்கையாளரை போல் கடைக்கும் நுழைந்து பொருளை திருடி கொண்டு வந்து விடுவார்கள். அந்த அளவிற்கு ஷாப்பிங் மோகம் அவர்களை ஆட்டி வைக்கிறது.

இந்த ஷாப்பிங் செய்வதற்கு அடிமையானவர்களின் மன நோயைப் பற்றி துவாரகாவின், HCMCT மணிபால் மருத்துவமனையில் பணிபுரியும் உளவியல் நிபுணர் ருச்சி சர்மா என்பவர் நோய்க்கான சில அறிகுறிகளை பற்றி தெரிவித்துள்ளார்.

மொபைல் போனில் நீண்ட நேரத்தை செலவிடுதல்:

இவர்கள் தினந்தோறும் சந்தையில் ஏதாவது புதிய பொருள் அறிமுகமாகியுள்ளதா என்பதை பார்ப்பதற்காகவே மொபைல் போனில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். பொருட்கள் வாங்கும் வலைதளத்திற்கு தினமும் சென்று அப்பொருட்களை தேடி தேடி வாங்குவார்கள். இது ஷாபாஃபோலிக் என்ற நோயின் அறிகுறிகளுள் ஒன்று.

கடன் வாங்கி ஷாப்பிங் செய்வது

இது நான் நோயின் முற்றிவிட்டதர்கான அறிகுறி ஆகும். ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களால் ஷாப்பிங் செய்யும் ஆசையை கைவிட முடிவதில்லை. அவர்கள் விரும்பும் பொருள் மிக அதிக விலையோடு இருந்தாலோ அல்லது அவர்களுக்கு விரும்பும் பொருளை வாங்குவதற்கு அவர்களிடம் பணம் இல்லை என்றாலோ, யாரிடமாவது கடன் வாங்கியாவது அந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று துடிப்பார்கள். ஒரு முறை இரண்டு முறை என எப்போதாவது முக்கிய தேவைக்காக கடன் வாங்கினால் அதில் பிரச்சனையில்லை. ஆனால் அடிக்கடி இப்படி கடன் வாங்கி ஷாப்பிங் செய்வது நோய் முற்றி வருவதன் அறிகுறியாக இருக்கும்.

தேவையற்ற பொருட்களை வாங்குவது

இவர்களுக்கு உண்மையாகவே ஒரு பொருள் தேவைப்படாத நேரத்திலும் தன்னுடைய மன அழுத்தத்தை குறைப்பதற்காக ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும் என்பதற்காக அப்பொருளை வாங்குவார்கள்.

ஷாப்பிங் செய்த தடயங்களை மறைத்து விடுதல்

இந்த ஷாபிங் செய்யும் நோய்க்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் தங்கள் நெருக்கமானவர்களுக்கு அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியாமல் பல பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். அவ்வாறு செய்யும்போது தேவையற்ற வசைபாடுதல்களில் இருந்து தப்பிப்பதற்காக ஷாப்பிங் செய்த பில், ஷாப்பிங் பேக் ஆகியவற்றை எங்கேனும் யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுவார்கள் அல்லது அழித்து விடுவார்கள். பெரும்பாலும் அவர்கள் ஷாப்பிங் சென்று வந்த பிறகு அவர்கள் வாங்கியதாக சொல்லும் மதிப்பும் அவர்கள் உண்மையிலேயே வாங்கிய பொருளின் மதிப்பும் மாறுபட்டே இருக்கும்.

இந்த ஷாப்பிங் செய்யும் மனநோயானது அதிக அளவில் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கும் மன அழுத்தத்திலிருந்து விரும்புபவர்களுக்கும் அதிகமாக ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு ஷாப்பிங் செய்வதன் மூலம் அவர்கள் தங்களது மன அழுத்தம் நீங்குவதாக உணர்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்று விடும்போது நெருக்கமானவர்களுடன் உறவில் விரிசல் ஏற்படுவதும், மேலும் தேவையற்ற கோபம் எரிச்சல் ஆகியவற்றையும் மற்றவர்கள் மீது வெளிப்படுத்த துவங்குவார்கள்.

முக்கியமாக அதிகமாக ஷாப்பிங் செய்து செய்து ஒரு கட்டத்தில் மிகப்பெரிய கடனாளியாக மாறிவிடவும் வாய்ப்பு உண்டு. எனவே இப்படிப்பட்ட அறிகுறிகள் உங்கள் வீட்டில் இருக்கும் அல்லது உங்களுக்கு நெருக்கமானவருக்கும் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கவுன்சிலிங் அழைத்துச் செல்வது உகந்ததாக இருக்கும்.

Click here to join whatsapp group for daily health tip


இந்த இசையை கேட்டால் தூக்கம் தானா வருமாம்... தூக்கமின்மை பிரச்சனையை விரட்ட ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு..!

 இரவில் தூங்கும் நேரத்தில் இசையைக் கேட்பது நமது இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தைக் குறைப்பதற்கும், மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைப்பதற்கும் உதவுகிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

தூக்கம் வரவில்லையா? மனம் பாரமாக உள்ளதா? சந்தோஷமா? என அனைத்துச் சூழல்களிலும் நம்மை ஒருநிலைப்படுத்துவது இசை தான். அதிலும் தூக்கம் வராதவர்கள் பலரின் காதுகளில் இளையராஜாவின் இசை ரீங்காரம் அடிக்கும். ஆனால் இப்படி தூங்கும் போது பாடல்களைக் கேட்டாதீர்கள் என்பார்கள். நல்ல தூக்கத்திற்காக நமக்கு என்ன தோன்றுகிறதோ? அதை நிச்சயம் செய்யலாம்.

“ஒரு நாள் தூக்கம் பல நாள் கெடுதி“ என்பார்கள். ஆம் இரவில் நல்ல தூக்கம் இல்லை என்றால் ஒருவரின் மனம் ஒருநிலையில் இல்லாமல் இருப்பதோடு பல்வேறு உடல் நலக்கோளாறுகளையும் நமக்கு ஏற்படுத்துகிறது. பொதுவாக உலகளவில் சுமார் 62 சதவீத பெரியவர்கள் இரவில் நன்றாக தூக்கம் வரவில்லை என்று நினைக்கிறார்கள். இந்த நிலைமை உங்களுக்கும் ஏற்படுகிறதா? தூக்கம் வரவில்லை என்றால் என்ன மாதிரியான இசையை நீங்கள் கேட்பீர்கள்? என்ன மாதிரியான இசை உங்களின் மனதை இதமாக்கும் என்பது குறித்து வல்லுனர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை நாமும் தெரிந்துக் கொள்வோம்…

நல்ல தூக்கத்தைத்தரும் மெல்லிசை (slow Tempo):

பெரும்பாலும் இரவு நேரங்களில் தூக்கம் வரவில்லை என்றால், மனதிற்கு இதம் தரக்கூடிய பாடல்களை நாம் கேட்டிருப்போம். அதில் முக்கியமானது மெல்லிசை தான். எனவே கடந்த காலத்தில் நீங்கள் தூங்குவதற்கு உதவிய அல்லது சிறிது நேரம் ஓய்வெடுக்க உதவிய பாடல்களை நீங்கள் கேட்டிருந்தால், அதற்கென்று ஒரு தனிப்பட்ட பிளேஸிஸ்ட்டை உருவாக்கவும். உங்களுக்கு தூக்கம் வராத நேரத்தில் இந்த பாடல்களை நீங்கள் கேட்க ஆரம்பியுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.

பொதுவாக டெம்போ என்பது இசை இசைக்கப்படும் வேகத்தை குறிக்கிறது. பெரும்பாலும் நிமிட துடிப்புகளின் அளவு என்றும் கணக்கிடப்படுகிறது. எனவே மனித இதயம் 60 முதல் 100 பிபிஎம் வரை துடிக்கும் என்பதால் 60-80 பிபிஎம் வரையிலான டெம்போவுடன் இசையைக் கேட்பது உடலின் சொந்த தாளங்களுடன் ஒத்திசைக்க உதவும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே உங்களுக்கு எது பிடித்த இசையோ அதைக் கேட்க முயலுங்கள். மேலும் கடினமாக ராக் போன்ற பாடல்கள் எதுவாக இருந்தாலும் உங்களது மனதிற்கு எது இதமளிக்கிறது என்பதை முதலில் கண்டுபிடிக்க முயலுங்கள். மனித உடலில் ஏராளமான இசை உள்ளதால், இதயத்தைப் போலவே மூளைக்கும் அதன் சொந்த தாளங்கள் உள்ளதால் சில இசை உங்களது தூக்கத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்.

இசைக்கும் தூக்கத்திற்கும் உள்ள தொடர்பு:

தூங்குவதற்கு உதவும் இசையை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் அந்த ஆல்பா அதிர்வெண்ணை செயல்படுத்தக்கூடிய பாடல்களைத் தேடுமாறு Vago பரிந்துரைக்கிறார். உண்மையில் மூளை அலைகளை அளவிடாமல் இப்படிப்பட்ட இசையை எப்படி கண்டுபிடிப்பது? என்ற சந்தேகம் நிச்சயம் அனைவருக்கும் ஏற்படும். இது ஒன்றும் உங்களுக்கு மிகப்பெரிய விஷயம் இல்லை.

ஏதாவது ஒரு பாடலைக் கேட்கும் போது நம்மை அறியாமலேயே இதயத்தில் ஒருவித புத்துணர்வு ஏற்படும். எனவே அந்த பாடல் என்ன என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்து கேட்க முயலுங்கள். மேலும் நீங்கள் தூங்கும் போது உங்களது மொபைல் போன்களைப் பயன்படுத்தும் நிலை இருந்தால் தாராளமாக பயன்படுத்தவும். இது உங்களை நிம்மதியான உறக்கத்திற்கு இட்டு செல்ல உதவும் என்றால் செய்யலாம். எனவே உடல் ஆரோக்கியத்திற்கு உங்களுக்கு பிடித்த பாடல்களைக் கேட்டு நல்ல தூக்கத்திற்கு வழிவகை செய்து கொள்ளுங்கள்.


How to: வயிறு உப்புசத்திலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of bloating?

 ``Bloating என்பது வயிற்றுப்பகுதியில் வாயு நிரம்பிவிடுவதால் வயிறு கனத்துப் போதல் அல்லது உப்பிப்போதல். சிலருக்கு இப்பிரச்னை சாப்பிட்ட உடனே ஏற்படும். சிலருக்கு சாப்பிட்ட 3 மணி நேரம் கழித்துகூட ஏற்படும்."

சாப்பிட்ட உடனோ, சில மணி நேரம் கழித்தோ வயிற்றுப் பகுதியில் வாயு நிரம்பி வயிறு உப்பிப்போவதை `Bloating' என்று கூறுகிறோம். நம் அன்றாட வாழ்க்கையில் பலரும் எதிர்கொள்ளும் இப்பிரச்னையை எவ்வாறு சரிசெய்வது என்று சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதா.

``Bloating என்பது வயிற்றுப்பகுதியில் வாயு நிரம்பிவிடுவதால் வயிறு கனத்துப் போதல் அல்லது உப்பிப்போதல். சிலருக்கு இப்பிரச்னை சாப்பிட்ட உடனே ஏற்படும். சிலருக்கு சாப்பிட்ட 3 மணி நேரம் கழித்துகூட ஏற்படும்.

காரணம்...

வயிற்றுப்பகுதியில் வாயு நிரம்புவதற்கு முக்கியக் காரணம், சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளாததுதான். செரிமானத்துக்காக வேண்டி இரைப்பையில் சில வகையான அமிலங்கள் சுரக்கின்றன. நமது வாயில் சுரக்கும் உமிழ்நீரோடு கலந்து உணவு உட்கொள்கையில் இரைப்பைக்குச் செல்லும் உணவு நன்கு செரிமானம் ஆகும்.

ஆனால், சரியான நேரத்துக்குச் சாப்பிடாதபோது, இரைப்பையில் அமிலச்சுரப்பு ஏற்பட்டு இரைப்பையின் சுவர்களை புண்ணாக்கிவிடும். இந்த அமிலச்சுரப்பின் விளைவாக இரைப்பையில் மந்தத்தன்மை ஏற்பட்டுவிடும்.


இரண்டு வகை பாக்டீரியாக்கள்...

SIBO (Small Intestinal Bacterial Overgrowth) என்று சொல்லப்படக்கூடிய சிறுகுடலில் தீமை செய்யும் பாக்டீரியாக்களின் பெருக்கமும் வயிறு உப்பிப் போவதற்கான காரணங்களில் மிகவும் முக்கியமானது.

பொதுவாக, நாம் சாப்பிடுகிற உணவுப்பொருள் உணவுக்குழாய் வழியாக இரைப்பைக்குச் சென்று சேர்ந்து, அங்கு செரிமானம் ஆகி சிறுகுடலுக்குச் செல்லும்.

அங்கு, உணவிலுள்ள சத்துகள் பிரிக்கப்பட்ட பிறகு, அதன் எஞ்சிய கழிவுகள் பெருங்குடல் வழியாக மலக்குடலுக்குச் சென்று வெளியேறும். உணவுப்பொருள் சிறுகுடலில் இருந்து பெருங்குடலுக்குச் சென்று சேரும் இடத்தில் பாக்டீரியாக்கள் நிறைய இருக்கும். அவற்றுள் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், தீமை செய்யும் பாக்டீரியாக்கள் ஆகிய இருவகையான பாக்டீரியாக்களும் அடக்கம். நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செரிமானத்துக்கு உதவுகின்றன. தீமை செய்யும் பாக்டீரியாக்கள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். இவ்வகையான பாக்டீரியாக்கள் செரிமானமாகாமல் உள்ள உணவுகளோடு வினைபுரிந்து வாயுக்களை உற்பத்தி செய்யும். இதனாலும் வயிறு உப்பும் பிரச்னை ஏற்படும்.


மருத்துவர்கள் ஆன்டி பயாட்டிக் மாத்திரைகள் தரும்போது கூடவே ப்ரோ பயாட்டிக் மாத்திரையும் தருவார்கள். ஏனென்றால், ஆன்டி பயாட்டிக் மாத்திரை அனைத்து விதமான பாக்டீரியாக்களையும் அழித்துவிடும் என்பதால், செரிமானத்துக்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்காக ப்ரோ பயாட்டிக் மாத்திரைகள் தரப்படுகின்றன.

நமது உணவுப்பழக்கம் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. முன்பு தண்ணீரில் ஊறவைத்த பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிட்டோம். அவ்வுணவில் இயற்கையாகவே ப்ரோ பயாட்டிக் இருந்தது. இன்றைக்கு உணவுப்பழக்கம் மாறிவிட்டதால் ப்ரோ பயாட்டிக்கை மாத்திரை வழியாக உட்கொள்ள வேண்டியிருக்கிறது.


Click here to join whatsapp group for daily health tip

வேலையைத் தள்ளிப்போடும் பழக்கத்தைக் கைவிடுவது எப்படி? | How to overcome procrastination?

 நாம் எவ்வளவுதான் திறமையானவராக, கிரியேட்டிவ் நபராக இருந்தாலும் செய்ய வேண்டிய வேலையைத் தள்ளிப்போடும் பழக்கம் (procrastination) வேலை, தொழிலில் நம் முன்னேற்றத்துக்குத் தடையாக அமைந்துவிடும். இதை எப்படி கைவிடுவது?


நம்மில் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று, நேரத்தை சரியாகப் பயன்படுத்தாமல் சோம்பேறித்தனத்துடன் இருப்பது. அதிலும் குறிப்பாக மாற்றிக்கொள்ளவே முடியாத விஷயமாக இருப்பது, உடனே செய்ய வேண்டிய, செய்ய முடிகிற விஷயத்தைக்கூட `பிறகு செய்யலாம்', `நாளைக்கு செய்து கொள்ளலாம்' எனத் தள்ளிப்போடுவது. நாம் எவ்வளவுதான் திறமையானவராக, கிரியேட்டிவ் நபராக இருந்தாலும் வேலையை இப்படி தள்ளிப்போடும் பழக்கம் (procrastination) வேலை, தொழிலில் நம் முன்னேற்றத்துக்குத் தடையாக அமைந்துவிடும். இதை எப்படிக் கைவிடுவது? சில டிப்ஸ்...

1. நேர அட்டவணை

தள்ளிப்போடுதல் மனநிலையை மாற்ற முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, வேலைக்கான நேர அட்டவணையை வகுத்துக்கொள்வது. இந்த நேரத்தில்/நேரத்துக்குள் இந்தந்த வேலைகளை முடித்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே உத்தரவிட்டுச் செயல்படுத்துங்கள்.

2. கேள்வி கேளுங்கள்

ஒரு வேலையைத் தள்ளிப்போடும் முன் உங்களிடம் நீங்களே இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: `ஏன் நாம் இதைத் தள்ளிப்போட வேண்டும்? இதனால் ஏற்படப்போகும் பிரச்னைகள் என்னென்ன? தள்ளிப்போடுவதால் நமக்குக் கிடைக்கும் நஷ்டம் என்னவாக இருக்கும்? ஒருவேளை நாம் இந்த வேலையை நேரத்துக்கு முடித்துவிட்டால் கிடைக்கும் மகிழ்ச்சி என்ன?' இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு வேலையைத் தள்ளிப்போடாமல் செய்வதற்கான உத்வேகம் கிடைக்கும், தள்ளிப்போட்டால் ஏற்படும் விளைவுகளும் புரியும்.

3. இயல்பாக இருங்கள்

ஒரு செயலை செய்து முடிக்க, ஒரு வீரனைப்போல உங்களை உணராமல், வழக்கத்துக்கு மீறிய செயல்களைச் செய்யாமல், இயல்பாக இருங்கள். சாதாரணமாகவே அதையெல்லாம் செய்து முடிக்க இயலும் என்பதை நம்புங்கள். கிடைக்கும் நேரத்தில், செய்யக்கூடிய அவசியமான செயல்களை உடனுக்குடன் செய்து பழகுங்கள். அதை உங்கள் இயல்பாக மாற்றுங்கள். இந்தப் பழக்கத்தில் உங்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு, எந்த வேலையையும் உங்களைத் தள்ளிப்போட வைக்காது.

4. பிரித்துக்கொள்ளுங்கள்

ஒரு நேரத்தில் ஒரு பெரிய வேலையைச் செய்ய வேண்டிய சூழல் வரும்போது, அதிலுள்ள சிரமங்களை நினைத்து அதைத் தள்ளிப் போடாதீர்கள். தள்ளிப்போடுவதால் டெட்லைன் உள்ளிட்ட இன்னும் சில சிரமங்களும் அதில் சேரவே செய்யும் என்பதால், இன்னும் சோர்வடைவீர்கள். மாறாக, ஒரு பெரிய வேலையை, முதலில் செய்ய வேண்டியது, அடுத்து செய்ய வேண்டியது, இறுதி வடிவம் என்று சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றாகச் செய்துமுடித்துக்கொண்டே வாருங்கள். சிறிது சிறிதாகச் செய்யும்போது, தள்ளிப்போடும் எண்ணம் குறையும்.

5. சாக்குபோக்குகளைக் குறையுங்கள்

ஒரு வேலையைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்து முடிக்காமல் இருக்க, `எனக்கு நேரமே இல்லை', `எனக்கு மன அழுத்தமாக இருக்கிறது', `இதை செய்வதற்கான மனநிலையில் இப்போது நான் இல்லை' என்று உங்களுக்கு நீங்களாகவே காரணங்களைத் தேடிக்கொள்ளாதீர்கள், சொல்லிக் கொள்ளாதீர்கள். உண்மையில் இவை காரணங்கள் அல்ல, சாக்குக்களே என்பதை உணருங்கள். உங்களால் எந்த நேரத்திலும், நீங்கள் நினைத்தால் ஒரு வேலையைச் செய்து முடிக்க முடியும். இதை உங்கள் மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள்.

6. டேட்டாவை ஆஃப் செய்யுங்கள்

இன்று பலரின் வேலைகளையும் தேங்கவைப்பது, இணையப் பயன்பாடுதான். நீங்கள் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில், மற்ற செயல்களில் ஈடுபடுவதைக் குறைத்துக்கொள்வது மிக முக்கியம் என்பதால், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, டேட்டாவை ஆஃப் செய்வது, தேவைப்பட்டால் செல்போனையே ஆஃப் செய்வது (இது அனைவரின் பணிக்கும் பொருந்தாது) என்று உங்களை நீங்களே கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.

7. உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்

உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு செயலைக் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிட்டால், உங்களுக்குப் பிடித்த ஒரு செயலை செய்துகொள்ளுங்கள். உதாரணமாக, பிடித்த பாடலைக் கேட்பது, பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவது என உங்களுக்கு நீங்களே ஒரு பரிசு கொடுத்துக்கொள்ளுங்கள்.

8. பிரச்னைகளை சிந்தியுங்கள்

ஒரு செயலை நீங்கள் செய்யாமல் இருப்பதால் பெரிதும் பாதிக்கப்பட இருப்பது நீங்கள்தான் என்பதை உணருங்கள். சரியான நேரத்தில் செய்து முடிக்காத பணியால் உங்களுக்கு ஏற்படப் போகும் பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே யோசியுங்கள். திட்டமிடுங்கள். அதன் பின் உங்களால் உங்கள் செயலைத் தள்ளிப்போட முடியாது.


9உங்களை மன்னியுங்கள்

கடந்த காலத்தைப் பற்றி உங்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குவதை நிறுத்துங்கள். `நான் முன்பே தொடங்கியிருக்க வேண்டும்', `நான் ஏன் எப்போதும் தள்ளிப்போடுகிறேன், `என்னால் ஏன் எதையுமே சரியாகச் செய்ய முடிவதில்லை' என்று யோசிப்பதை நிறுத்துங்கள். கடந்த காலத்தில் ஒரு வேலையை நீங்கள் தள்ளி வைத்ததற்காக உங்களை நீங்கள் மன்னிப்பது, வேலை மேலும் தாமதப்படுத்துவதை நிறுத்த உதவும்.

10. கஷ்டமானதை முதலில் முடியுங்கள்

இங்கு பலருக்கும் இருக்கும் ஒரு பழக்கம், இருப்பதிலேயே கஷ்டமான வேலையைக் கடைசியாக முடிக்கலாம் என்று தள்ளிப்போடுவார்கள். மாறாக, அந்த மனத்தடையை உடைத்து கஷ்டமான வேலையை முதலில் எடுத்து முடித்துவிட்டால், மனதில் இருக்கும் பிரஷர் நீங்கி உற்சாகம் ஏற்படும். மற்ற வேலைகளை அந்த வேகத்திலேயே செய்து முடித்துவிடலாம்.

ஆல் தி பெஸ்ட்!

Click here to join whatsapp group for daily health tip

நார்மலாக உடலில் கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்..? இதய நோயை உண்டாக்கு அளவு என்ன..?

 

நாம் உயிர் வாழ கொலஸ்ட்ரால் மிக மிக அவசியம். ஏனெனில் கொலஸ்ட்ரால் என்பது உடலில் பல ஹார்மோன்களை உருவாக்கும் கொழுப்பு ஆகும். கொலஸ்ட்ரால் உடலில் கால்சியத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. அதேசமயம் அது அளவுக்கு அதிகமாக சேர்ந்தாலும் ஆபத்து.

கொலஸ்ட்ராலின் வேலை :

கொலஸ்ட்ரால் டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உள்ளிட்ட பல ஹார்மோன்களை உடலில் உருவாக்குகிறது. இது தவிர, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது செரிமானத்திற்கு தேவையான இரசாயனங்களை உற்பத்தி செய்கிறது. கல்லீரல் மற்றும் குடலின் சரியான செயல்பாட்டிற்கு கொலஸ்ட்ரால் ரசாயனங்களை உற்பத்தி செய்கிறது. உடலில் பல முக்கிய செயல்பாடுகளைச் செய்தாலும், கொலஸ்ட்ரால் சில வழிகளில் வில்லனாகவும் கருதப்படுகிறது.

கொலஸ்ட்ரால் என்பது லிப்போபுரோட்டீன் எனப்படும் கொழுப்பு வகையாகும். இதில் இரண்டு வகையான லிப்போபுரோட்டீன்கள் உள்ளன - குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்) மற்றும் அதிக அடர்த்தி கொழுப்புப்புரதம் (எச்டிஎல்) எச்டிஎல். ஒருபுறம், எல்டிஎல் அதிகரிப்பது நல்லது என்று கருதப்படுகிறது, மறுபுறம் எச்டிஎல் அதிகரிப்பது நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.


HDL கெட்ட கொலஸ்ட்ராலாக கருதப்படுகிறது. எல்.டி.எல் அதிகமாக இருக்கும்போது, ​​அது இரத்தத்தின் தமனிகளில் சேரத் தொடங்குகிறது. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே ஒரு நபருக்கு எவ்வளவு HDL அல்லது LDL இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

20 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால்

MyClevelandClinic இன் படி, கொழுப்பு அளவுகள் வயது மற்றும் பாலினத்துடன் மாறுபடும். 19 வயதுக்கு குறைவான ஒரு சாதாரண நபரின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு 170க்கு குறைவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அத்தகைய நபரின் HD 120 க்கும் குறைவாகவும், LDL 110 க்கும் குறைவாகவும், HDL 45 க்கும் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் 20 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், மொத்த கொலஸ்ட்ரால் 125 முதல் 200 வரையிலும், எச்.டி.எல் 120க்கும் குறைவாகவும், எல்.டி.எல் 100க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். HDL 60 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். பிறக்கும் போது, ​​ஆண் குழந்தையை விட பெண் குழந்தைக்கு நல்ல கொலஸ்ட்ராலின் தேவை அதிகமாக இருக்கும். ஆண் குழந்தைக்கு 40க்கு மேல் எச்டிஎல் தேவைப்படுகிறது, பெண் குழந்தைக்கு 50க்கு மேல் நல்ல கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. கொலஸ்ட்ரால் அளவு டெசிலிட்டருக்கு மில்லிகிராமில் அளவிடப்படுகிறது.

கொலஸ்ட்ரால் எப்போது ஆபத்தானது?

ஒரு சாதாரண மனிதனின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு 240 அல்லது அதற்கு மேல் இருந்தால் அது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. அதேசமயம் நல்ல கொலஸ்ட்ரால் அதாவது HDL ஆண்களில் 40க்கும் குறைவாகவும், பெண்களில் 50க்கு குறைவாகவும் இருந்தால், அது மிகவும் ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 முதல் 239 வரை இருந்தால், அது ஆபத்தான அறிகுறியாகும். அதே சமயம் எல்.டி.எல் அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு 100 முதல் 159 வரை இருந்தால், அது ஏதோ ஒரு நோய்க்கான அபாய மணி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நல்ல கொலஸ்ட்ரால் அல்லது HDL அளவு சாதாரண ஆணுக்கு 40 முதல் 59 வரையிலும், பெண்களில் 50 முதல் 59 வரையிலும் இருந்தால் அதுவும் ஆபத்தானது. அதாவது நீங்கள் அதிக ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அத்தகைய சூழ்நிலையில் ஒரு மருத்துவரை தொடர்பு கொண்டு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

Click here to join whatsapp group for daily health tip