Search

ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி.. ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல், கணித ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையமாகச் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொழிற்பயிற்சி விவரங்கள்:

பணி பிரிவுஎண்ணிக்கைவயதுகல்வி
Tuner128 கீழ் இருக்க வேண்டும்ஐடிஐ தேர்ச்சி
Carpenter128 கீழ் இருக்க வேண்டும்ஐடிஐ தேர்ச்சி
Painter128 கீழ் இருக்க வேண்டும்ஐடிஐ தேர்ச்சி

உதவித்தொகை:

தொழிற்பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ரூ.12,500/- மாத உதவித்தொகையாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தொழிற்பயிற்சிக்கு நேரடி நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://www.tifr.res.in/Positionsஎன்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தேசிய தொழிற்பயிற்சி இணையத்தளத்தில் http://apprenticeshipindia.org/login பதிவு செய்ய வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் நாள் :

Tata Institute of Fundamental Research,1 Homi Bhabha Road, Navy Nagar, Colaba, Mumbai 400005.

டிசம்பர் 21,2022 அன்று நேர்காணல் நடைபெறும்.

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக்செய்யவும்.


 Click here to join WhatsApp group for Daily employment news 

மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

 TNPSC Notification:  தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதிவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

காலியிடங்கள் விவரம்: 

பதவியின் பெயர்:  நிதியாளர் , அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியில் கல்லூரிகள் (பதவிக் குறியீடு எண் - 3010)

காலிப்பணியிடங்கள்: 5

சம்பளம்:  ரூ.56,100— 2,05,700 வரை

(நிலை-22)

முக்கியாயமான நாட்கள்: 

இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க இறுதி நாள்10.12.2022
இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம்15.12.2022 முதல் 17.12.2022
சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய/மாற்ற/ மீள்பதிவேற்றம் செய்ய இறுதி நாள்26.2.2023
கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள்10.3.2023
தேர்வு முடிவுமே, 2023
சான்றிதழ் சரிபார்ப்பு/நேர்முகத் தேர்வுஜுன், 2023
கலந்தாய்வுஜுன், 2023

யார் விண்ணப்பிக்கலாம்:  விண்ணப்பதாரர்கள்  பொது நிர்வாகத் துறையில் முதுகலை (M.A.Public Administration) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நிதித் துறையில் சிறப்பு பாடமாகக் கொண்ட வணிக நிர்வாக  படிப்பில் முதுகலைப் பட்டம் (MBA) நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

Must have passed Post Graduate Degree in Public

Administration

Or

Post Graduate Degree in Business Administration (MBA)

with Specialization in Finance

வயதுக்கான தகுதி:  இந்த  பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் ஆகிய  பிரிவினருக்கு 37 வயதை பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.   ஏனையோர் 1.07.2022 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

விண்ணப்பக் கட்டணம்: 

பதிவுக் கட்டணம் : ரூ.150/ மற்றும் தேர்வுக் கட்டணம் : ரூ 200/

ஏற்கனவே, நிரந்தர பதிவு செய்துள்ள ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 Click here to join WhatsApp group for Daily employment news 

கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி..! - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

 மத்திய அரசின் டிஆர்டிஓ பிரிவில் இயங்கும் கடற்படை ஆயுதங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தும் நிறுவனமான கடற்படை அறிவியல் & தொழில்நுட்ப ஆய்வகம் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொழிற்பயிற்சியின் விவரங்கள்:

கல்விஎண்ணிக்கைஉதவித்தொகை
B.Tech/B.E24ரூ.9,000/-
Technician17ரூ.8,000/-
ஐடிஐ22ரூ.8,000-6,000/-

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் கல்வித்தகுதி பிரிவுகள்:

இயந்திர பொறியியல், கடற்படை கட்டிடக் கலைஞர், கணினி அறிவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல், CNC ஆபரேட்டர், கணினி ஆபரேட்டர், எலக்ட்ரீஷியன், வெல்டர், ட்யூனர், ஃபிட்டர், மெக்கானிஸ்ட்.

வயது வரம்பு :

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். 2019,2022 மற்றும் 2021 ஆண்டுகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களின் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பப்படிவம்

விண்ணப்பிக்கும் முறை:

தொழிற்பயிற்சிக்கு www.mhrdnats.gov.in மற்றும் www.apprenticeshipindia.gov.in என்ற இணையத்தளத்தில் கண்டிப்பாகப் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி : admin.dept.nstl@gov.in 

10.12.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 Click here to join WhatsApp group for Daily employment news 


தமிழக அரசின் பாரதிதாசன் பல்கலைக்கழக வேலை அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

 

BDU Recruitment 2022 pdf | Post : University Research Fellowship | Get Jobs in Tiruchirappalli Closing date up to 7th December 2022 | Bharathidasan University Jobs 2022 Check Notification at https://www.bdu.ac.in/

BDU Recruitment 2022: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (BDU – Bharathidasan University) காலியாக உள்ள University Research Fellowship பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த BDU Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Ph.D. தமிழ்நாடு அரசு வேலையில் (TN Govt Jobs 2022) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22.11.2022 முதல்  07.12.2022 வரை BDU Jobs 2022 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Tiruchirappalli-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த BDU  Job Notification-க்கு, ஆஃப்லைன் (தபால்) முறையில் விண்ணப்பதாரர்களை BDU ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த BDU நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://www.bdu.ac.in/) அறிந்து கொள்ளலாம்.

UNIVERSITY RESEARCH FELLOWSHIP POSITIONS

BDU ORGANIZATION DETAILS:

நிறுவனத்தின் பெயர்பாரதிதாசன் பல்கலைக்கழகம் – Bharathidasan University
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.bdu.ac.in/
வேலைவாய்ப்பு வகைTN Govt Jobs 2022
RecruitmentBDU Recruitment 2022
BDU AddressBharathidasan University, Khajamalai Campus
Tiruchirappalli – 620023

BDU CAREERS 2022 FULL DETAILS:

அரசு வேலையில் (Government Jobs) பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் BDU Recruitment 2022-க்கு விண்ணப்பிக்கலாம். BDU Job Vacancy, BDU Job Qualification, BDU Job Age Limit, BDU Job Location, BDU Job Salary, BDU Job Selection Process, BDU Job APPly Mode பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவிUniversity Research Fellowship
காலியிடங்கள்03
கல்வித்தகுதிPh.D
சம்பளம்மாதம் ரூ.5,000 சம்பளம்
வயது வரம்புகுறிப்பிடவில்லை
பணியிடம்Jobs in Tiruchirappalli
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்OC/ BC/ MBC Candidates: Rs. 300/-
Mode of Payment: Demand Draft
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன் (தபால்)
முகவரி Head, Department of Economics, Bharathidasan University, Tiruchirapalli 620024

BDU RECRUITMENT 2022 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:

எந்த வேலையாக இருந்தாலும், விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும். BDU-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, காலியிடங்களின் முழு விவரங்கள் என அனைத்தையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள BDU Recruitment 2022 Notification-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு தேதி: 22 நவம்பர் 2022
கடைசி தேதி: 07 டிசம்பர் 2022
BDU Recruitment 2022 Notification pdf & Application form

BDU CAREERS 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். 

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.bdu.ac.in/-க்கு செல்லவும். BDU Jobs 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (BDU Recruitment 2022 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ BDU Recruitment 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • BDU Vacancy 2022 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • பாரதிதாசன் பல்கலைக்கழக அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் BDU Recruitment 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • BDU Vacancy 2022 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • BDU Careers 2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Q1. What is the BDU Full Form?

Bharathidasan University

Q2.BDU Jobs 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

The apply mode is Offline (By Postal)

Q3. How many vacancies are BDU Vacancies 2022?

தற்போது, 03 காலியிடங்கள் உள்ளன.

Q4. What is the qualification for this BDU Recruitment 2022?

The qualification is Ph.D.

Q5. What are the BDU Careers 2022 Post names?

The Post name is University Research Fellowship.



NYKS-ல் 13200+ காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!!

 

NYKS-ல் 13200+ காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!!

நேரு யுவ கேந்திரா சங்கதன் ஆனது National Youth Volunteers பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கென மொத்தம் 13,206 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


NYKS காலிப்பணியிடங்கள்:

National Youth Volunteers பணிக்கென மொத்தம் 13206 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

National Youth Volunteers கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NYKS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்ககளின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 29 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

National Youth Volunteers ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரிவிக்கப்படும்.

NYKS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் ஆன்லைன் அல்லது Offline முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரிவிக்கப்படும்.

Download Notification PDF


 Click here to join WhatsApp group for Daily employment news 


சிக்கனுடன் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்!

 Foods To Avoid With Chicken: சிக்கன் விரும்பியாக இருந்தால், அவற்றுடன் ஒருபோதும் சாப்பிடக்கூடாத உணவுகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், கோழி அசைவ உணவுடன் சாப்பிடும் சில உணவுகள் ஆரோக்கியதற்கு மோசமான விளைவுகள் ஏற்படுத்தும். சிக்கன் சாப்பிடும்போது எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

பால் - கோழி

கோழியை பாலுடன் சாப்பிடுவது விஷத்து நிகரானது. பாலும் கோழியும் சேர்ந்து உடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, உடலில் ஒவ்வாமை ஏற்படலாம். பாலையும் கோழிக்கறியையும் சேர்த்து சாப்பிடுவதும் சரும பிரச்சனைகளை உண்டாக்கும். கோழிக்கறியுடன் பால் சாப்பிடுவதால் பலருக்கு சொறி, வெள்ளைப்புள்ளிகள், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கோழி மற்றும் தயிர்

பலர் எல்லாவற்றிலும் தயிர் சேர்த்து சாப்பிடுவார்கள். தயிர் எல்லாவற்றின் சுவையையும் அதிகரிக்கிறது, மேலும் இது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். சிலர் சிக்கனுடன் தயிரையும் சாப்பிடுவார்கள். தயிரின் விளைவு குளிர்ச்சியாகவும், கோழியின் விளைவு சூடாகவும் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கோழி மற்றும் தயிர் ஒன்றாக சாப்பிடுவது செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். சிக்கன் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மீன் மற்றும் கோழி

சிக்கனுடன் மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. கோழி மற்றும் மீன் இரண்டிலும் புரதம் நிறைந்துள்ளது, ஆனால் இரண்டிலும் வெவ்வேறு வகையான புரதங்கள் காணப்படுகின்றன. இந்த புரதம் உடலில் வினைபுரியும். இதனால், உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், சிக்கன் மற்றும் மீனை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.




உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் ‘சூப்பர்’ பழங்கள் இவை தான்!

 தற்போது மாறி வரும் வாழ்க்கை முறையால், உணவு முறை மாற்றம், அன்றாடம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவற்றின் காரணமாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை பெரும்பாலானோருக்கு உள்ள பிரச்சனையாக மாறிவிட்டது. இதனால் பல உடல் நல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், சில பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

உயர் இரத்த அழுத்தம் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு நோய்.  அத்தகைய சூழ்நிலையில், இதனை  கட்டுப்படுத்தப்படாவிட்டால், உயிருக்கு ஆபத்தான பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதனால் மூளையில் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது , பக்கவாதம் கூட ஏற்படலாம், எனவே கவனமாக இருப்பது மிகவும் முக்கியம் இத்தகைய சூழ்நிலையில், சில பழங்களை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை இன்று அறிந்து கொள்ளுங்கள்.

1. வாழைப்பழம்

வாழைப்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் கிடைக்கும் ஒரு பழமாகும். இது மலிவானது என்பதோடு, மிகவும் சத்தானது. இது செரிமானத்தை பலப்படுத்துகிறது என்று சொல்லலாம். வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஒரு சஞ்சீவியாக செயல்படுகின்றன. இதை தினமும் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. பக்கவாதத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

2. கிவி

கிவி மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பழம், இதில் பல ஊட்டச்சத்து கூறுகள் காணப்படுகின்றன. அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்கிறது. இது தவிர, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செயல்படுகிறது. இது உடலுக்கு எந்த நோயையும் எதிர்த்துப் போராடும் வலிமையை அளிக்கிறது.

3. மாம்பழம்

கோடை காலத்தில் கிடைக்கும் இந்த பழம் அதன் சுவைக்கு மட்டும் பெயர் பெற்றது இல்லை. பல நோய்களை தடுக்கும். இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படும் நோயாளிக்கு மாம்பழம் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும், பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், இந்த இரண்டு கூறுகளும் BP அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேலை செய்கிறது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.





NIELIT நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.1,20,000/- || முழு விவரங்களுடன்!

 

NIELIT நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.1,20,000/- || முழு விவரங்களுடன்!

Senior Consultant, Consultant, Consultant (Finance), Sr. Resource Person (Programming -.Net) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை NIELIT ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,20,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Senior Consultant, Consultant, Consultant (Finance), Sr. Resource Person (Programming -.Net) பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech/B.E/CA/ICWA /MBA/MCA அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.50,000/- முதல் ரூ.1,20,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.590/- விண்ணப்பகட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.11.2022ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here to join WhatsApp group for Daily employment news 

2748 கிராம உதவியாளர் பணியிடங்கள்: எழுத்துத் தேர்வு தேதி எப்போது? முக்கிய அறிவிப்பு இதோ...

 தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு  வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் மாற்றியமைக்கப்பட்டுளளது.

முன்னதாக, அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம  உதவியாளர் பணியிடங்களுக்கான  விண்ணப்ப செயல்முறை  கடந்த அக்டோபர்  மாதம் 10ம் தேதி வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் நவம்பர் 7ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன.  இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வி தகுதியாக 5ம்  வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்ட  நிலையில், ஆயிரக்கணக்கானோர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர்.

மேலும், பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நவம்பர் 14ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதியன்று (புதன்கிழமை) நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வாசிக்கும் மற்றும் எழுதுதல் திறன் மதிப்பிடப்படும் என்றும், இதற்கு அதிகபட்சமாக 40 (வாசித்தல் 10, எழுதுதல் - 30  ) மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு தேதி  மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் வருவாய் நிருவாக ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், "  தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி  தேர்வு  வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் டிசம்பர் மாதம் 4ம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாசித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு: 

எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு அதிகபட்சமாக,  10 மதிப்பெண் வழங்கப்படும். அதேபோன்று, ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்

அதன்பின், நேர்கானல் தேர்வு, மூல சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

 Click here to join WhatsApp group for Daily employment news 

இலவச பயிற்சி.. கைநிறைய சம்பளம்.. முழு விவரம் இங்கே!

 நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களும், தனியார் துறை நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், இணைய பாதுகாப்பு முதலான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்து வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், நிறுவனங்களின்    வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் டிஜிட்டல் திறன்களை அடிப்படைத் தகுதிகளாக கோரும் விகிதம் கிட்டத்தட்ட 100% அதிகரித்துள்ளதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சராசரி திறன்களைக் காட்டிலும், இயந்திர கற்றல் (Machine learning) ,பெருந்தரவுகள்(Big data) முதலானவற்றில் முன்அனுபவம் உள்ளவர்களை  பணியில் அமர்த்துவதற்கு திட்டமிட்ட வருகின்றன.  அதாவது, சராசரி திறன்களுக்கான தேவையைக்  காட்டிலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சார்ந்த வேலை வாய்ப்புகள் உருவாகும் விகிதம் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

எனவே, இந்த துறையில் உள்ள சாத்தியங்கள் பயன்படுத்திட மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும். இந்த துறை தொடர்பாக மத்திய/மாநில கல்வி நிறுவனங்கள் ஸ்வயம் தளத்தின் மூலமாக  பல்வேறு இலவச பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இந்த பயிற்சிகளை கற்றுக்கொண்டால் கை நிறைய சம்பளத்துடன் வேலையையும் எதிர்காலத்தில் நீங்கள் பெறலாம். அதில், சிலவற்றை இங்கு பார்ப்போம்.

தகவல் பகுப்பாய்வு (Data Analytics) :

1.    சென்னை ஐஐடி-ன் என்பிடிஇஎல் (NPTEL - National Programme on Technology Enabled Learning)  மத்திய கல்வி அமைச்சகத்தின் ஸ்வயம் (SWAYAM) தளத்தின் மூலம் தகவல் பகுப்பாய்வு போன்ற பல்வேறு பாடங்களை  கட்டணமில்லாமல் வழங்கி வருகிறது.

தகவல் பகுப்பாய்வு துறையில் ஆர்வமுள்ளவர்கள் மாணவர்கள், ஸ்வயம் மூலம்  Data Science for Engineers, Essentials Of Data Science With R Software (I & II), Python for data science உள்ளிட்ட பாடங்களில் சேரலாம்.

ஐ.ஐ.டி  பேராசிரியர்களால் கற்பிக்கப்படும் இந்த பாடங்கள் முற்றிலும் இலவசம். மாணவர்கள், ஆன்லைனில் வீடியோக்களைப் பார்த்துப் புரிந்து, வாராந்திர/ மாதாந்திர அடிப்படையில் பணிகளைச் சமர்ப்பிக்க வேண்டும். விரும்பினால் இறுதித் தேர்வுக்கும் பதிவு செய்து கொள்ளலாம். சான்றிதழ் பெற விரும்பினால், நேரடித் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு மட்டும் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படும்.

எனவே, மேற்கூறிய படிப்புகளில் சேர, 2023 ஜனவரி  மாதம் 30ம் தேதிக்குள் ஸ்வயம் தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இணைய பாதுகாப்பு (Cyber Security): 

அவினாசிலிங்கம் நிகர்நிலை பெண்கள் பல்கலைக்கழகம்   (Avinashilingam Institute for Home Science & Higher Education for Women,Coimbatore)   இணைய பாதுகாப்பு தொடர்பான படிப்பை ஸ்வயம் தளத்தில் உருவாக்கியுள்ளது.

நீங்கள், வீட்டில் இருந்த படியோ, அலுவலகத்தில் இருந்த படியோ, கற்றுக்கொள்ளலாம்.  வாய்ப்பளிக்கின்றன. இந்த தொகுப்பில் சேர கடைசி தேதி 2023 ஏப்ரல் 30 ஆகும். அடிப்படைக் கணினி இருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர கற்றல் (Machine learning) : 

ஐஐடி  சென்னை, டெல்லி, கரக்பூர் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயந்திர கற்றல் தொடர்பான பல்வேறு பாடங்களை ஸ்வயம் தளத்தின் மூலமாக வழங்கி வருகின்றன. இதில், குறிப்பாக தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில், Introduction to Machine Learning என்ற பாடம் தமிழில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளில் சேர, 2023 ஜனவரி  மாதம் 30ம் தேதிக்குள் ஸ்வயம் தாளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 Click here to join WhatsApp group for Daily employment news