சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் நேரடி வகுப்புகள் இல்லாமல் மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்படுகிறது. இங்கு பல்வேறு துறைகள் இயங்குகின்றன. தற்போது இந்த துறைகளில் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:
துறை | பணியிடம் |
தமிழ் | 1 |
ஆங்கிலம் | 3 |
பொருளாதாரம் | 1 |
வரலாறு | 1 |
அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம் | 4 |
குற்றவியல் | 1 |
சைபர் தடவியல் | 1 |
வணிகம் | 6 |
கணிதம் | 1 |
உளவியல் | 4 |
கணினி அறிவியல் | 4 |
மேலாண்மை படிப்புகள் | 7 |
இசை | 3 |
பிரெஞ்சு | 4 |
இதழியல் & தொலைத்தொடர்பில் | 2 |
மானுடவியல் | 2 |
சமஸ்கிருதம் | 2 |
சைவ சித்தாந்தம் | 2 |
புவியியல் | 2 |
சமூகவியல் | 1 |
கிறிஸ்துவ படிப்பு | 2 |
மொத்தம் | 56 |
கல்வித்தகுதி:
அந்தந்த துறைக்கு ஏற்ற 55% சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முழு நேர Ph. D முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
தற்காலிக பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.30,000/- சம்பளமாக வழங்கப்படும்.
பணிக்காலம்:
ஒரு செமஸ்டர் விதம் 120 நாட்கள் பேராசிரியராக பணியாற்ற வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பதார்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் சென்னை பல்கலைக்கழக இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து குறிப்பிட்ட நாளுக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய : https://www.unom.ac.in/
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :
The Registrar, University of
Madras, Chepauk, Chennai -600 005.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 09.12.2022.