முதுநிலை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கதன் விரைவில் ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட இருக்கிறது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 13,404 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி | காலியிடங்கள் |
உதவி ஆணையர் | 52 |
தலைமை ஆசிரியர் | 239 |
துணை தலைமை ஆசிரிஅயர் | 203 |
முதுநிலை ஆசிரியர் | 1409 |
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் | 3176 |
தொடக்க கல்வி ஆசிரியர் | 6414 |
தொடக்க கல்வி (இசை ) | 303 |
Librarian நூலகர் | 355 |
Finance Officer நிதி அலுவலர் | 6 |
உதவி பொறியாளர் | 2 |
உதவி செக்சன் அலுவலர் | 156 |
சீனியர் செயலக உதவியாளர் | 322 |
இளநிலை செயலக உதவியாளர் | 702 |
இந்தி மொழிபெயர்ப்பாளர் | 11 |
சுருக்கெழுத்தாளர் - 2நிலை | 54 |
மொத்தம் | 13,404 |
ஆதாரம்: scroll,zeebiz மற்றும் இதர ஆங்கில ஊடகங்கள்
13,404 மொத்த பணியிடங்களில், ஆசிரியர் பணி நிலையின் கீழ் 11,747 இடங்களும், ஆசிரியர் நிலை இல்லாத பணி நிலையில் 1,657 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என்றும், டிசம்பர் 26ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று கூறப்படுகிறது.
வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்படும்.
அனைத்து பதவிகளுக்கும், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடையவராவர்.
முன்னதாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள காலியிடம் குறித்து, மக்களவையில் 25.07.2022 அன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, கல்வித் துறை இணை அமைச்சர் ஸ்ரீமதி அன்னபூரணா தேவி எழுத்துப்பூர்வமாக பதில்அளித்தார். நாடு முழுவதும் இயங்கும் கேந்திர பள்ளிகளில் 12,404 ஆசிரியர் நிலை பணியிடங்களும், 1332 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளன என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 1162 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அவ்வப்போதைய, விவரங்களை தெரிந்து கொள்ள https://kvsangathan.nic.in/ என்ற இணைய தளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.