தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (TNNLU) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Registrar பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 27.01.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TNNLU வேலைவாய்ப்பு விவரம்:
Registrar பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (TNNLU) காலியாக இருப்பதாக தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு சட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Principal / Professor பதவிகளில் அல்லது அரசு நிறுவனங்களில் சட்டம் சார்ந்த துறைகளில் Deputy Secretary பதவிகளில் குறைந்தபட்சம் 03 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது.
இந்த பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம். Register பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு TNNLU நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 27.01.2023 என்ற இறுதி நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.