ஈரோடு, மாவட்ட சுகாதார சங்கம் (DHS – Erode District) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் கீழ் காலியாக உள்ள Accountant, Data Entry Operator, Driver போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட சுகாதார சங்க காலிப்பணியிடங்கள்:ஈரோடு, மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள 33 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) – 04 பணியிடங்கள்
Lab Technician / Sputum Microscopist (LT) – 16 பணியிடங்கள்
District Public Health Lab – 01 பணியிடம்
Tuberculosis Health Visitor – 09 பணியிடங்கள்
Accountant – 01 பணியிடம்
Data Entry Operator – 01 பணியிடம்
Driver – 01 பணியிடம்
மாவட்ட சுகாதார சங்க பணிக்கான கல்வி தகுதிவிண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) – Graduate Degree, DiplomaLab Technician / Sputum Microscopist (LT) – 12ம் வகுப்பு + Diploma / MLTDistrict Public Health Lab – Graduate Degree, DiplomaTuberculosis
Health Visitor – Graduate Degree அல்லது 12ம் வகுப்பு
Accountant – Graduate Degree
Data Entry Operator – 12ம் வகுப்பு + Diploma
Driver – 10ம் வகுப்பு
மாவட்ட சுகாதார சங்க பணிக்கான வயது வரம்பு:இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.மாவட்ட சுகாதார சங்க பணிக்கான ஊதியம்:Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.15,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.மற்ற பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.10,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.DHS தேர்வு செய்யும் விதம்:
இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DHS விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Biodata) தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (16.03.2023) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.