Search

20,000 பணி வாய்ப்புகள்: அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் நோக்கோடு தனியார் துறைகளில் பணிவாய்ப்பினை பெற்று வழங்கும் பொருட்டு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட அளவில் நடத்தப்படவுள்ளது.



வேலைவாய்ப்பு நடைபெறும் இடம்: மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மகிமைபுரம், ஜெயன்கொண்டம்.

நாள்: 28.01.2023, சனிக்கிழமை

நேரம்: காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, செவிலியர், மருந்தாளுநர், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.

இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான 20,000க்கும் மேற்பட்ட  பணியாட்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

தேர்வு செய்தவர்களுக்கு அன்றே பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும், மாற்றுத் திறனாளுகக்கு ஏற்ற வேலைவாய்ப்பு ஏற்பாடுசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலைதேடுபவர்கள்  https://www.tnprivatejobs.tn.gov.in/Home/jobs என்ற இணையதளத்தில் தங்கள் கல்வி தகுதியினை பதிவு செய்து பணிவாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். அதேபோன்று, அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த தனியார்த்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள்  இம்முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக 20.01.2023-க்குள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 04329-228641 அல்லது 9499055914 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here to join WhatsApp group for Daily employment news

குறட்டை பிரச்சினைக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்

 தூங்கும் போது தொண்டையில் உள்ள தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு இயல்பாகவே குறுகி விடுகிறது. இதன் கூடவே தொண்டையில் வளரும் சதை வளர்ச்சி (டான்சில்), மூக்கில் வளரும் சதை வளர்ச்சி (பாலிப்), தொப்பை வயிறு, வயிற்றில் ஏற்படுகின்ற காற்றின் அழுத்தம் அதிகப்படுவது, இதய நோய்கள், தைராய்டு பிரச்சினை, மூக்கு இடைச்சுவர் வளைவு போன்ற காரணங்களினால் பொதுவாக குறட்டை (ஸ்னோரிங்) ஏற்படுகிறது. மேலும், குறட்டை விடும் பொழுது திடீரென சத்தம் நின்று போவது, மூச்சு விட திணறுவது போல் இருப்பது 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா' என்றழைக்கப்படும்.

ஆகவே குறட்டை சத்தம் அதிகமாக விடுபவர்கள் இதய நோய், நுரையீரல் நோய், தொண்டை நோய்கள் இருக்கிறதா என்பதை மருத்துவர் மூலம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.

 குறட்டை நீங்க பழக்க வழக்கங்கள் மற்றும் சித்த மருத்துவ தீர்வுகள்:

 1) உடல் பருமன், தொப்பையை குறைத்துக்கொள்ள சீரான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி இன்றியமையாதது. 

2) மல்லாந்து படுப்பதைத் தவிர்த்து ஒரு பக்கமாக தூங்கினால் தொண்டை சதைகளின் தளர்ச்சி சற்று குறைந்து குறட்டை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

3) மூக்கடைப்பு, சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருந்தால் தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மஞ்சள் தூள் வைத்து ஆவி பிடிக்கலாம். 

4) சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் மூன்றையும் சம அளவில் எடுத்து பொடித்து காலை, இரவு டீ போல போட்டு குடிக்கலாம். 

5) லவங்கப்பட்டை, செம்பருத்தி பூ, கிராம்பு சேர்த்து டீ போட்டு குடிக்கலாம், இது தொண்டை சதைகளுக்கு சிறந்தது. 

6) பிராணாயாமம் (மூச்சு பயிற்சி) தினமும் செய்ய வேண்டும். 

7) புகைப்பழக்கம், மதுப்பழக்கம் தவிர்க்க வேண்டும். 

சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)



Click here to join whatsapp group for daily health tip

பெருங்காயத்தில் நிறைந்துள்ள மருத்துவப்பயன்கள்

 பல்வேறு மருத்துவப்பயன்கள் நிறைந்த பெருங்காயத்தை'கடவுளின் அமிர்தம்' என்பார்கள். இது சிவப்பு நிறம் கலந்த பழுப்பு நிறம் கொண்டது. பன்றிக் காய்ச்சைல குணப்படுத்த பயன்படும் 'சனாமிர்' மருந்து போல பெருங்காயம் வைரஸ் எதிர்ப்பு தன்மையை கொண்டது என தைவான் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். 

தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளி பெருங்காயம் போட்டு பருகினால் உடல் குளிர்ச்சியாகும். 'லாக்டோபேசில்லஸ்' என்னும் நல்ல நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே பன்றிக்காய்ச்சல் ஏற்படுத்தும் கிருமிகளும் ஓடிவிடும். வாயுவை அதிகரிக்கக் கூடிய வாழைக்காய், கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும் போது பெருங்காயம் சேர்க்க வேண்டும்.


நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர்பின் பகுதியிலும் வாயு வலி வந்து இதய வலியோ என பயமுறுத்தும் நோய்க்கு பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு 2 பங்கு, திப்பிலி 4 பங்கு எடுத்து செம்முள்ளி கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரைகளாக்கி காலை, மாலை என 7 நாட்கள் சாப்பிட்டால் வாயுக்குத்து நீங்கும். ஆனால் அது ஜீரணம் தொடர்பாக வந்த வலியா என உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். '
இரிடபிள் பவுல் சிண்ட்ரோம்' என்னும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாக போகும் குடல் அழற்சி நோய்க்கும் பெருங்காயம் பலன் தரும்.
 பெருங்காயம் முக்கியமாய் குருதியை சூடாக்கி, நரம்புகளை வெப்பப்படுத்தும். துடிப்பை உண்டாக்கிப் பெண் இச்சைக் கிளர்ச்சியை உண்டாக்கும். 
கக்குவான் நோய்க்கு இதை நீர் விட்டு அரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் குணப்படும். 

பிறந்த குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் என்னும் நோய்க்கு பால் பெருங்காயத்தை உரசி தாயின் மார்பில் தடவி குழந்தையை பால் உண்ணும் படி செய்தால் நோய் நீங்கும்.

Click here to join whatsapp group for daily health tip

பயிற்சியை முடி! வேலையை புடி! ..... அரசின் சூப்பர் திட்டம் இதோ

 தமிழ்நாட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill Development Corporation)  கடந்த 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த, நிறுவனம்  இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன்களை அதிகரிக்கும் விதமாக பல்வேறு பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

எந்தவித வேலைவாய்ப்பும் இல்லாமல் புதியதாக வேலைத்தேடும் இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சி பெறலாம். பயிற்சியை  முடித்த 90 நாட்களுக்குள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறுகிய கால திறன் பயிற்சி (Short Term Skill Training Courses):  இந்தியத் தொழிலாளர்களில் 62% பேர் 19-24 வயதுக்குட்பட்வர்கள் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால்,  இதில் 5%க்கும் குறைவானோர் மட்டுமே முறையான செய்தொழிற் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இளைஞர்களுக்கு தொழிற்நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை அளிப்பதற்காக  குறுகிய கால திறன் பயிற்சி திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் , கட்டுமானம், தோல், சில்லறை விற்பனை, கைவினைப் பொருட்கள், சுற்றுலா விருந்தோம்பல் போன்ற தொழிற் துறைகளின் கீழ் 150 முதல் 300 மணி நேரங்கள் (3 மாதம் முதல் 6 மாதங்க வரையிலாலான) கால அளவு கொண்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.  தமிழ்நாட்டில்  2021-22ம் ஆண்டில் மட்டும் இத்திட்டத்தின் கீழ், பல்வேறு துறைகளின் கீழ் 79,304 பேர் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.   

புதிதாக வேலைதேடும் இளைஞர்கள் தங்கள் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப தொழிற்  துறைகளில் பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த பயிற்சி முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.  மேலும், பயிற்சியில் 80%  வருகைப்பதிவு வைத்திருக்கும் மாணவர்களுக்கு பயணப்படி, போக்குவரத்து செலவுகள்  வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 90 நாட்களுக்குள் சான்றிதழ் பெற்ற தேர்வருக்கு ஏதாவதொரு நிறுவனத்தில் பணியமர்த்தம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?  

திறன் பயிற்சிகளுக்கு பதிவு செய்ய https://candidate.tnskill.tn.gov.in/Candidate/Account/CandidateLogin என்ற இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முகப்பு பக்கத்தில், 'Click Here to Register'  என்பதை கிளிக் செய்யவும்

தொலைபேசி எண் ( முதன்மையானது மற்றும்  இரண்டாவது ), ஆதார் எண், நிரந்தர முகவரி, வீட்டு முகவரி ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணை முதன்மையானதாக  சமரிப்பியுங்கள். ஆதார் எண் சரிபார்க்கப்படும். ஒரு முறை கடவுச் சொல்லை  சமர்ப்பிக்க வேண்டும். 

 உங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள், கல்வி விவரங்கள், தொடர்பு கொள்வதற்கான விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் (பயணப்படி, போக்குவரத்து செலவுகள் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்)

இறுதி கட்டமாக, உங்கள் விண்ணப்ப படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பைத் தேர்வு செய்வது எப்படி? 

பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர் தனது Dashboard-ன் மூலம், மாவட்டத்தில் தற்போது  செயல்பட்டு வரும் பயிற்சி வகுப்புகள் குறித்தும், வரவிருக்கும் பயிற்சி வகுப்புகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநில, மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்கள் , தொழிற்நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் என 50க்கும் மேற்பட்ட பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

விண்ணப்பதாரர், தனக்கு விருப்பமான துறையில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பம்  ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் பயிற்சியைத் தொடரலாம். சில பயிற்சி நிலையங்கள், தங்கும் இடம், உணவு வசதியுடன் கூடிய பயிற்சியை வழங்கி வருகிறது. நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இதற்கான செலவை, அரசு ஏற்றுக் கொள்ளும்

பயிற்சிக்குப் பிறகு, Assessment Agency -மூலம் விண்ணப்பதாரர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில்,  தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், 90 நாட்களுக்குள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here to join WhatsApp group for Daily employment news

Pomegranate Juice: ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மாதுளை ஜூஸ், தினமும் குடிங்க

 

Pomegranate Juice: ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மாதுளை ஜூஸ், தினமும் குடிங்க

மாதுளை சத்துக்கள் நிறைந்த பழமாகும். மாதுளம் பழச்சாறு குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில் மாதுளையில் வைட்டமின் சி, வைட்டமின் கே, புரதம், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. கால்சியம், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் இதில் நல்ல அளவில் உள்ளன. மாதுளை அல்லது மாதுளை சாற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம். எனவே மாதுளம் பழச்சாறு குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம். 

இதயத்திற்கு நன்மை பயக்கும் 
மாதுளையில் உள்ள சத்துக்கள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் செயல்படுகிறது. மாதுளம் பழச்சாறு குடிப்பதால் ரத்த ஓட்டம் சீராகி இதயம் தொடர்பான நோய்கள் வருவதைக் குறைக்கிறது.

சாருமத்திற்கு நன்மை பயக்கும்
மாதுளை இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதன் சாற்றை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்ற உதவும். இதனால் சருமம் சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மாதுளையில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சரும பிரச்சனைகளை நீக்கி சருமத்தை மேம்படுத்துகிறது. 

இரத்த சோகையை குணப்படுத்தும்
மாதுளையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இரத்த சோகையை நீக்குகிறது.

செரிமானத்திற்கு நன்மை பயக்கும்
மாதுளை சாறு செரிமானத்திற்கு நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து நல்ல அளவில் உள்ளது. இதனால் இந்த பழச்சாறு குடிப்பதால் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும். மேலும் மாதுளை வயிற்று வலி மற்றும் வீக்கத்தைப் போக்கவும் உதவுகிறது. 

கீல்வாதத்தில் நன்மை பயக்கும் 
மாதுளையில் உள்ள பண்புகள் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது. இதன் சாற்றை குடிப்பதால் மூட்டுவலி போன்ற நோய்கள் வரும் அபாயம் நீங்கும். கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மாதுளையில் உள்ளன, அவை தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும்.

 Click here to join whatsapp group for daily health tip

ஒல்லியாக இருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..! இந்த 5 பிரச்சனைகள் பாதிக்கும்

 

Problems of being underweight: உடல் எடை அதிகரிப்பு பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. உடல் உயரத்திற்கு ஏற்ப உங்கள் எடை குறைவாக இருந்தால், பல நோய்கள் உங்கள் உடலை சூழ்ந்து கொள்ளும். ஒருவரது உடல் உயரத்திற்கு ஏற்ப எடை சமநிலையில் இருக்கும் போதுதான் அவரது உடல் பொருத்தம் நன்றாக இருக்கும். உயரத்திற்கு ஏற்ப எடை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், உடலில் பல வகையான கோளாறுகள் எழுகின்றன. 

இன்று நாம் உடல் எடையை குறைப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி பேசுவோம். மருத்துவர்களின் கூற்றுப்படி, எடை குறைவாக இருப்பவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்கிறார்கள். எடைகுறைவு பிரச்னையால், முடி உதிர்தல், தோல் வறட்சி, வறட்சி, பற்களில் வலி போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, உடல் எடை குறைவதால் பல நோய்கள் உருவாகும் அபாயமும் ஏற்படுகிறது.

முடி மற்றும் பற்கள் பிரச்சினைகள்

மருத்துவர்களின் கூற்றுப்படி, எடை குறைவாக இருப்பவர்கள், போதுமான ஊட்டச்சத்து இல்லாததால், அவர்களின் முடி வறண்டு மற்றும் மெல்லியதாக இருக்கும். அவர்களின் பற்கள் மற்றும் ஈறுகளில் வலியும் உள்ளது. அவரது தோல் எப்போதும் வறண்டு அரிப்புடன் இருக்கும்.

இரத்த சோகை வளர்ச்சி

குறைந்த எடை பிரச்சனையுடன் போராடுபவர்களின் இரத்த எண்ணிக்கை குறைகிறது. அத்தகைய நிலை இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர் தலைவலி, சோர்வு அல்லது தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் 

உடல் எடை குறைவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் நோய்களை எதிர்த்துப் போராட முடியாமல் சிறு பாக்டீரியா தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது. கடுமையான காயம் ஏற்பட்டால், எடை குறைவாக இருப்பவர்கள் குணமடைய நீண்ட காலம் எடுக்கும்.

உடல் வளர்ச்சியில் சிக்கல் 

வளரும் குழந்தைகளின் எடை (Underweight Problem) உயரத்திற்கு ஏற்ப அதிகரிக்கவில்லை என்றால், அது கவலைக்குரிய விஷயம். இது அவர்களின் உடலின் வளர்ச்சியை நேரடியாக பாதிக்கிறது. இதனால் அவர்களின் உடல் உறுப்புகள் போதிய வளர்ச்சியடையாமல் மன வளர்ச்சியும் தடைபடுகிறது.

எலும்புகள் பலவீனமடைதல்

உடல் உயரத்திற்கு ஏற்ப எடை குறைவாக இருப்பவர்களின் எலும்புகள் வலுவிழந்து கொண்டே இருக்கும். இதனால், அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உடலின் எலும்புகள் பலவீனமடைந்து வெடிக்க ஆரம்பிக்கும்.


 Click here to join whatsapp group for daily health tip

நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்! - கைகொடுக்கும் கைவினை பொருட்கள்... அரசின் சுயதொழில் பயிற்சி!

 கலைப்பொருட்களுக்கு என்று பெரிய சந்தை உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளும் கைவினைப்பொருட்களுக்கு என்று பெரிய அளவிலான சந்தைகள் உண்டு. தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பாரம்பரிய மற்றும் பெருமைக்குரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு எனப்படும் அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. அதில் கைவினைப்பொருட்களும் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தது கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்வது 2வது பெரிய வேலைவாய்ப்பு பிரிவாக இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் கைவினைப்பொருட்கள் உற்பத்தி கிராமங்களிலிருந்து சிறிய அளவிலான நகரங்களில் இருந்து நடைபெற்று உலகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் ஓவியங்கள், குடைவரை சிற்பங்கள், மரக்கடை சிற்பங்கள், நகை வேலைப்பாடுகள், உலோக சிற்பங்கள், ஜவுளி, பாய் முடைதல், மட்பாண்டம் மற்றும் மண் சிற்பங்கள் மற்றும் கார்பெட் செய்தல் போன்ற கலைத்திறன்கள் மூலம் தமிழ்நாட்டில் இருந்து பல விதமான கைவினைப்பொருட்கள் விற்பனைக்குச் செல்கிறது.

கைவினைப்பொருட்கள் செய்வதைக் கற்றுக்கொள்ளப் பெரிய அளவிலான படிப்பு அவசியமில்லை. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கூட அரசின் கைவினைப்பொருட்களுக்கான பயிற்சியை உதவித்தொகையுடன் பெற்று சுயமாக நிதி உதவியுடன் தொழில் தொடங்கலாம். மேலும் பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் கலை மற்றும் பண்பாட்டுத் துறை கீழ் அரசால் நடத்தப்படும் கல்லூரிகளில் சேர்ந்து கலையைக் கற்றுக்கொண்டு சுயதொழில் தொடங்கலாம் அல்லது நிறுவனங்களில் பணி செய்யலாம்.

கைவினைப்பொருட்கள் தயார் செய்யப் பயிற்சி பெறுவது எப்படி :

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தில் (பூம்புகார்) கைவினைக்கலைஞர்களுக்கு 5 மாத IDTDP(Integrated Development and Promotiion of Handicrafts) பயிற்சி மற்றும் 2 மாத DRDC(Design Research and Development Centre) பயிற்சி அளிக்கின்றனர். IDTDP மூலம் கலைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டு மற்றும் புதிய வகையை டிசைன்களை அறிமுகப்படுத்தப்படும். DRDC பயிற்சி மூலம் 3டி தொழில்நுட்ப மூலம் செய்யப்படும் பொருட்கள் மற்றும் ஓவியங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

IDTDP திட்டத்தின் மூலம் பயிற்சி பெரும் கலைஞர்களுக்கு ரூ.5000 மதிப்பிலான கருவிகள் வழங்கப்படும். 10,000 கலைஞர்கள் இதன் மூலம் பயனடைகின்றனர். கைவினைக்கலைக்களுக்கு என்று தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது. அதில் சேர்ந்து பயிற்சி பெற்று இதனைத் தொழிலாக மாற்றிக்கொள்ளலாம். பயிற்சி காலத்தில் ரூ.7,500/- உதவித்தொகையாக வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசால் சுவாமிமலை மற்றும் ஈரோடு பகுதியில் வெண்கலம் சிலைகள் செய்ய ரூ.30 லட்சம் செலவில் 3 வருடங்கள் பயிற்சி அளிக்கும் திட்டம். 100 பெண்களுக்கு ரூ.83 லட்சம் செலவில் தஞ்சாவூர் ஓவியம் வரையப் பயிற்சி அளிக்கும் திட்டம். அதே போல், ரூ.80 லட்சம் செலவில் காகித மேச் பயிற்சி 50 பெண்களுக்கு அளிக்கும் திட்டம் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கு ரூ.16 லட்ச செலவில் காகித மேச் பயிற்சி போன்ற திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி அளிக்கும் இடங்கள்:

வெண்கல்லைப் பொருட்களைச் செய்யச் சுவாமிமலை, கும்பகோணத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பித்தளை விளக்கு செய்ய நாச்சியார் கோவில்,கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் தட்டு செய்யப் பயிற்சி தஞ்சாவூரில் வழங்கப்படுகிறது. மரக்கடைசல் செய்ய கள்ளக்குறிச்சி, அரும்பாவூர், தம்மம்பட்டி மற்றும் சின்னசேலம் பகுதிகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.

சந்தனமரக்கடைசல் செய்ய கள்ளக்குறிச்சியிலும் கற்சிற்பம் செய்ய மாமல்லபுரம், நாமக்கல் மற்றும் கோவை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது போல், டெரகோட்டா, பாய் முடைதல், பனையோலை, கடற்சிப்பிகள், செயற்கை இழை(பையர்), நகைகள் செய்தல் போன்ற கைவினைப்பொருட்கள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் செய்யப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

குறிப்பாக, நாச்சியார் வெண்கல விளக்குகள் புதிய வடிவமைப்புகளில் உருவாக்கம் மூன்று மாத பயிற்சி தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார் கோவிலில் வழங்கப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தில், தஞ்சாவூர் ஓவியம் வரைதல் தொடர்பாகப் பெண்களுக்கான ஒரு வருடப் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி பெரும் பெண்களுக்கு ரூ.2000/- பிழைப்பூதியமும், மூலப்பொருட்களும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் மரவேலைப்பாடுகள் தொடர்பாக 1 வருடப் பயிற்சி ரூ.2000/- பிழைப்பூதியமும் மற்றும் மூலப்பொருட்களுடன் சின்ன சேலத்தில் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் தட்டு தயார் செய்ய மயிலாடுதுறை பூம்புகாரில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதே போல், மூங்கிலைக் கொண்டு கலைப்பொருட்கள் செய்யத் திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பல தனியார் நிறுவனங்களும் கைவினைப்பொருட்கள் தாயார் செய்யப் பயிற்சி அளிக்கின்றனர். கைவினைப்பொருட்களில் உள்ள பல்வேறு சிறப்புப் பொருட்களுக்கான சான்றிதழ் படிப்பினை முடித்து சான்றிதழ் பெறுவதன் மூலம் தொழில் தொடங்க மற்றும் தயார் செய்த பொருட்களை விற்பனை செய்யப் பயனுள்ளதாக இருக்கும்.

நிதி உதவி :

கைவினைஞர்கள் தயாரிப்புகளைக் கண்காட்சி மூலம் சந்தைப்படுத்துவதற்கென ரூ.50,00,000/- நிதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 200 கலைஞர்கள் பயன்பெறுகின்றனர். ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.25,000/- கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்திட ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.50,000/- வழங்கப்படுகிறது.

மேலும் தொழில்முனைவோர்களுக்கு என்று வங்கியில் வழங்கப்படும் கடன் உதவியும் கைவினைப்பொருட்கள் வியாபாரத்திற்கு பெற்றுக்கொள்ளலாம்.

கைவினைப்பொருட்கள் செய்ய கற்று கொள்ளவதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்ன?

டிசைனர் மற்றும் ஸ்கெட்சர், டிரில் மெஷின் ஆபரேட்டர், கணினிடிசைனர், மிக்சிங் ஆப்ரேட்டர், லேப் அசிஸ்டென்ட், துறை ஆய்வாளர், சில்வர் கோட்டிங் டெங்னீசியன், தரம் நிர்ணயிக்கும் சூப்பர் வைசர் போன்ற பணிகளை நிறுவனங்களில் பெறலாம்.

மேலும் சரியான முறையில் பயிற்சி பெருப்பவர்கள் சிறிய அளவில் வீட்டில் இருந்தபடியே கூட தொழில் தொடங்கலாம்.

கைவினைப்பொருட்களை விற்பனை செய்வது எப்படி?

கைவினைஞர்களுக்கான தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக்கழகம் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கழகத்தின் வணிக நிறுவனமாகப் பூம்புகார் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மூலம் கைவினைப் பொருட்களில் பெரும்பாலானவை பூம்புகார் நிறுவனத்தின் வாயிலாகச் சந்தைப்படுத்தப்படுகின்றது. கைவினைப்பொருட்கள் மற்றும் கார்பெட் துறைதிறன் கவுன்சில் மற்றும் PMKVY ஆகிய நிறுவனங்கள் மூலம் கைவினைஞர்கள் தயாரிக்கும் பொருட்களைச் சந்தைப்படுத்தலாம்.

இவை பொருட்களில் தரத்தை மேம்படுத்த, தகுந்த பயிற்சி அளிக்க மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கச் செயல்படுகின்றனர். மேலும் கைவினைஞர்களுக்கு சமூக, பொருளாதார பாதுகாப்பு அளித்தல் மற்றும் சிறந்த படைப்புகளுக்கான விருதுகள் வழங்குதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

கைவினைஞர்களுக்கு வழங்கும் விருதுகள்:

பூம்புகார் மாநில விருது, பூம்புகார் மாவட்ட கலை விருது, Gen Next Competition மற்றும் Living Craft Treasure போன்ற விருதுகள் கைவினைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!

 என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தில் (Engineers India Limited) மேலாளர் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அனுபவம் வாய்ந்த Metallurgical/Mechanical பொறியியலாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். Deputy General,Assistant General மற்றும் Senior Manager பதவிகளுக்கு 5 பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. அதிகபட்சம் 47 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்வயது
Deputy General Manager1ரூ.1,20,000-2,80,00047
Assistant General Manager2ரூ.1,00,000-2,60,00044
Senior Manager2ரூ.90,000-2,40,00040

கல்வித்தகுதி: இப்பணியிடங்களுக்கு Metallurgy/Mechanical பாடத்தில் B.E./B. Tech/B. Sc. (Engg.) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 12 வருடத்தில் இருந்து 19 வருட அனுபவம் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் https://engineersindia.com/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://recruitment.eil.co.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 17.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ரூ.90,000 வரை சம்பளத்தில் மத்திய அரசு வேலை - 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்



கைத்தறி மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் கீழ் செயல்படும் நெசவாளர் சேவை மையம், சென்னை தென் இந்தியாவில் உள்ள நெசவாளர் சேவை மையங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 30 வயதிற்குரிய ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்பணியிடம்வயது
Senior Printer130
Junior Weaver130
Junior Printer130
Junior Assistant (Weaving)230
Attendant (Weaving)130

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Senior Printer10 ஆம் வகுப்பு தேர்ச்சி, பிரிண்டிங் டிப்ளமோ. 8 வருட அனுபவம்.
Junior Weaver10 ஆம் வகுப்பு தேர்ச்சி, நெசவு செய்தலில் 8 வருட அனுபவம்
Junior Printer10 ஆம் வகுப்பு தேர்ச்சி, பிரிண்டிங் டிப்ளமோ. 5 வருட அனுபவம்.
Junior Assistant (Weaving)10 ஆம் வகுப்பு தேர்ச்சி, Textile Weaving Trade டிப்ளமோ.
Attendant (Weaving)10 ஆம் வகுப்பு தேர்ச்சி,Textile Weaving/Winding/Warping Trade டிப்ளமோ.
 2 வருட அனுபவம்

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் http://handlooms.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து விரைவு தபால் மூலம் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : http://handlooms.gov.in/

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

Director (South Zone), Weavers’ Service Centre, C.1.B, Rajaji Bhawan, Besant Nagar

Chennai-600090.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 29.01.2023.

பெண்களுக்காக... தங்கத்தில் முதலீடு.. லாபம் தருமா?

 தங்கத்தின் பயன்பாடு நம் நாட்டில் மிக அதிகம். குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம். 

ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது. மேலும் திருமணம் உள்ளிட்ட குடும்பத்தாரின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிற போது பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை. இதனால் என்னவோ.. இப்போது தங்கத்தின் விலை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏறிக்கொண்டே இருக்கிறது.

முதலீடு செய்ய வேண்டிய நிலத்தில் காசை போடவேண்டும். அல்லது தங்கத்தில் போட வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது. 
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் குறுகிய கால முதலீடாக தங்கத்தை பலரும் வாங்கி குவிக்க தொடங்கி விட்டனர். எனவே தங்க நகைகள், தங்கத்தில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கோல்டு ஈ.டி.எப் பிளான் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

 ஈ.டி.எப் திட்டத்தின்படி தங்கத்தை தொழில் நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் எப்படி வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை வாங்கவோ விற்கவோ முடியும்.

இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அதுவாங்குகிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். தேவை ஏற்படும்போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணத்தை வாங்கி கொள்ளலாம். 

இந்த திட்டத்தினால் தங்கத்தின் தரத்தைப்பற்றியோ பாதுகாப்பு பற்றியோ எந்த பயமும் உங்களுக்கு இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் கோல்டு ஈ.டி.எப் திட்டத்தில் செய்த முதலீடு சுமார் 30 சதவீத வருவாயை எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தனி நபருக்கான வட்டி விகிதம் 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது. இந்த நிலையில் கோல்டு ஈ.டி.எப் திட்டம் நிச்சயம் லாபகரமானதாகவே விளங்குகிறது.


தங்கம் நகையாக முதலீடு செய்கிறபோது செய்கூலி சேதாரம் போன்றவை கழிக்கப்பட்டு விடுகிறது. எனவே இப்போது வங்கிகளில் கட்டிகளாக விற்கப்படும் தங்கத்தை வாங்கி அப்படியே வங்கி லாக்கர்களிலேயே அதனை வைத்தும் பாதுகாக்க தொடங்கி விட்டனர். பின்னர் தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிறபோது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடையமுடிகிறது.

 தற்போது இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த கோல்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதாவது தங்கத்திற்கான பணத்தை நீங்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அவர்களும் உங்கள் பெயரில் தங்கம் வாங்கி உள்ளதாக கூறி உங்களுக்கு டாக்குமெண்டும் அனுப்பி வைப்பார்கள். ஆனால் இந்த முதலீட்டை நீங்கள் திரும்பப் பெற நினைத்தால் அடுத்த இரண்டு தினங்களில் அப்போதைய தங்கத்தின் மதிப்பிற்கான பணத்தை பரஸ்பர நிதி நிறுவனம் உங்களுக்கு அளித்து விடுகிறது. இதில் அவர்களுக்கு ஒரு சிறிய லாபம் மட்டும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்கள் எதுவுமே கிடையாது. தரம் மட்டுமே முக்கியம். சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 

24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும். அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது.