ஜலதோஷம் அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் நோய் தொற்றுகளுள் ஒன்று. முக்கியமாக குளிர்காலத்தில் அதிக அளவில் ஜலதோஷம் பலருக்கும் ஏற்படும். இது ஏற்பட்டு சில நாட்களிலேயே குணமாகிவிடும். ஜலதோஷம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நமது உடலின் மேல் சுவாச குழாய் பாதையில் உண்டாகும் தொற்று ஆகும்.
பொதுவாகவே முதலில் சாதாரண ஜலதோஷத்தில் ஆரம்பிக்கும் இந்த நோய் தொற்று, பிறகு மார்பு தொற்று நோயாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இது நாளடைவில் உடலுக்கு மிகப்பெரும் பாதிப்புகளை உண்டாக்கலாம். இந்த மார்பு தொற்றானது கீழ் சுவாசப் பகுதியை பாதிப்பதோடு மூச்சு குழாயையும் பாதிப்படையை செய்கிறது.
இந்த மார்புத் தொற்று பொதுவாகவே வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் உண்டாகிறது. இந்த நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் நாம் சுவாசிப்பது சற்று சிரமத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குளிர் காலங்களில் அந்தப் பகுதியில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் நோய் தொற்றை உண்டாக்கும் பாக்டீரியாக்களோடு கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது..
வல்லுனர்கள் என்ன கூறுகிறார்கள்:
ப்ரான்கிட்டிஸ் மற்றும் நிமோனியா என மார்பு தொற்றை ஏற்படுத்தும் இரண்டு பாக்டீரியாக்கள் உள்ளன. இதில் ப்ரான்கிடிஸ் மூச்சுக் குழாய்களை மட்டும் பாதிப்படையை செய்து நுரையீரலுக்கு காற்று எடுத்துச் செல்வதை சிரமமாக்கிவிடும். இதுவே நிமோனியா வகை ஏற்பட்டால் அவை இன்னும் அதிக விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த நிமோனியா நோய் நுரையீரலில் உள்ள திசுக்களை சேதப்படுத்தி மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. ப்ரான்கிடிஸ் வைரஸ்களால் மட்டுமே ஏற்படும். ஆனால் நிமோனியா நோயாளிகள் வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஆகியவற்றினாலும் உண்டாக்கலாம்.
சாதாரண ஜலதோஷத்திற்கான அறிகுறிகள்
இந்த மார்பு தொற்று மற்றும் சாதாரண ஜலதோஷம் இரண்டுக்கும் ஆரம்பத்தில் பொதுவான அறிகுறிகளே காணப்படும். சாதாரண காய்ச்சல், உடல் களைப்பு, உடல் முழுவதும் வலி, இருமல் போன்றவை ஆரம்பத்தில் இருக்கும். முக்கியமாக பொதுவாக ஏற்படும் ஜலதோஷத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மூக்கில் நீர் வடிதல், தும்மல், மூக்கடைப்பு கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். மேல் சுவாசக் குழாயில் ஏற்படும் தொற்றினால் இவை உண்டாகிறது. ஜலதோஷத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இருமல் ஏற்படாது. அது மார்பு தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே இருக்கும் அறிகுறி ஆகும். இந்த ஜலதோஷம் பொதுவாக ஒரு வாரம் வரை மட்டுமே நீடிக்கும்.
மார்பு தொற்றுக்கான அறிகுறிகள்:
மார்புத் தொற்று இருப்பதற்கான பொதுவான அறிகுறியாக இருமல் பார்க்கப்படுகிறது. ஏனெனில் நோய் தொற்றானது சுவாசக் குழாயில் வீக்கத்தை ஏற்படுத்தி மூச்சு விடுவதை சிரமம் ஆக்குகிறது. இதை தவிர இந்த மார்பு தொற்றுகள் மிக அதிகமான வலியை உண்டாக்கும்.. சுவாசக் குழாயில் உள்ள சளி முழுவதும் வெளியேறி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப குறைந்தது இரண்டு வாரகாலம் ஆகும்.
சிகிச்சை:
உண்மையிலேயே ஜலதோஷம் மற்றும் மார்பு தோஷம் இரண்டிற்குமே சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் எதுவும் இல்லை. முக்கியமாக இது போன்ற நோய் தோற்று ஏற்பட்டு இருக்கும் நேரங்களில் ஆன்டிபயாட்டிக்ஸ் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு இந்த இரண்டு நோய் தொற்றுகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் நீங்கள் போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். அதனுடன் மிதமான சூட்டில் உள்ள நீரை பருகுவது, சூடான சூப் பருகுவது போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வெந்நீரில் குளிக்க வேண்டும்.
ஒருவேளை உங்களுக்கு உடனடியாக தீர்வு தேவைப்பட்டால் அதற்கென விற்கப்படும் பிரத்தியேகமான ஸ்பிரேக்களை பயன்படுத்தலாம். இதுபோன்று சமயங்களில் முடிந்த வரை நமது உடலை வெப்பமாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் மருத்துவரை அணுகலாம்.
மார்பு தொற்று மற்றும் ஜலதோஷம் ஏற்படாமல் எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது:
பொதுவாகவே இந்த இரண்டு வகை நோய்களும் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் தன்மை கொண்டது. எனவே பேசும்போதும் பொது இடங்களுக்கு செல்லும்போதும் இடைவெளி விட்டு செல்வது நல்லது.
கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக உணவு உண்பதற்கு முன்னும் உணவு உண்ட பின்னரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இதனால் கெடுதல் செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் நம் உடலுக்குள் நுழைவதை நம்மால் தடுக்க முடியும்.
உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களிடம் இருந்து இடைவெளியை கடைபிடிப்பது நல்லது. மேலும் அவர்களை தும்மும் போதும், இருமும் போதும் வாயை மூடிக்கொண்டு தூங்கும்படி அறிவுறுத்த வேண்டியது அவசியம்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு தேவையான வாழ்க்கை முறையையும் உணவு பழக்க வழக்கங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.