உணர்ச்சி வசப்படுவது (Emotionally Reactive) என்பது நம்மில் பலருக்கு ஏற்படும் எதார்த்தமான ஒரு செயல் தான். சில சூழல்களில் அதிக உணர்ச்சி வசப்படுவதால் தேவையில்லாத சண்டைகள், வாக்குவாதங்கள் ஏற்படுகிறது. இதோடு மன அழுத்தமும் ஒருபுறம் ஏற்படுகிறது. சில நேரங்களில் அதிக கோபத்தில் எதிர்மறையான விஷயங்களையும் நாம் செய்துவிடுகிறோம். இதுப்போன்ற சூழலிருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால், சுய கட்டுப்பாடு முக்கியம் என்கிறார் உளவியலாளர் நிக்கோல் லெபெராவ்..
இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில், வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் நாம் உணர்ச்சி வசப்படும்போது சற்று பொறுமைக்காத்து நாம் ஏன் இவ்வாறு செய்கிறோம் என்பதை சற்று சிந்திக்க வேண்டும் என்கின்றனர். மேலும் தினமும் ஆழ்ந்த சுவாசப்பயிற்சிகளைக் கொண்டாலே உணர்ச்சிகளினால் ஏற்படும் பிரச்சனைகளை நாம் சந்திக்கும் போது நிதானமாக இருக்க முடியும் என்கிறார்.
உணர்ச்சி ரீதியாக எதிர்வினையாற்றுவதைத் தவிர்க்கும் வழிமுறைகள் : வாழ்க்கையில் எமோசனல் ரியாக்ஷன் என்பதை அனைவரும் சந்தித்திருப்போம். இந்த நேரத்தில் நமது மனதில் ஏதோ பதற்றம் மற்றும் விரைவான இதயத்துடிப்பு போன்ற பல்வேறு உடல் உணர்வுகளை நாம் அனுபவிக்க நேரிடும். இதுப்போன்ற விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்கிறோம்? ஏன் தேவையில்லாத கோபம் மற்றும் உணர்ச்சி ஏற்படுகிறது? என்பதை யோசிக்க வேண்டும். சில நிமிடங்களுக்கு நம்மை அமைதிப்படுத்த வேண்டும். இதோடு ஏதாவது ஒன்றிற்குப் பதிலளிப்பதற்கு முன்னதாக அமைதி காக்க வேண்டும்.
நம்மை அறியாமல் சில விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படும் போது, நரம்பு மண்டலத்தில் ஓர் அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த சூழலில் நாம் அமைதிக்காக்க வேண்டும். ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நமது உடலை ஒருநிலைப்படுத்த உதவுகிறது.குறிப்பாக எந்தவொரு விஷயங்களை நீங்கள் மேற்கொண்டாலும், நிதானம் தேவை. இது பல எதிர்மறையான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.ஓய்வு, அமைதிக்காத்தல், ஆழ்ந்த சுவாசப்பயிற்சி போன்றவைத் தான் எமோசனல் ரியாக்ஷனால் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
எமோசனஸ் ரியாக்சனால் ( உணர்ச்சி வசப்படுதல்) ஏற்படும் பாதிப்புகள்: வாழ்க்கையில் நாம் சில நேரங்களில் மேற்கொள்ளும் தேவையில்லாத உணர்ச்சிகள் நம்முடைய மனதை மட்டும் பாதிக்காமல் பல உடல் நலப்பிரச்சனைகளையும் நமக்கு ஏற்படுத்துகிறது. இதனால் சிறுநீர் அமைப்பு, சுவாச உறுப்புகள், முழு இரைப்பை குடல் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் போன்ற பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்துகிறது.
இதோடு மனச்சோர்வு, புற்றுநோயியல், ஆட்டோ இம்யூன் நோய்கள் போன்றவை நாம் மேற்கொள்ளும் மோசமான உணர்ச்சிகளால் நமக்கு ஏற்படுத்துவதோடு, மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலவீனப்படுத்தும் வகையில் அமைகிறது.
ஒவ்வொருவரும் ஆத்திரத்தில் கோபம் அடைவது நம்முடைய மனதை மட்டும் இல்லாமல் உடலில் பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கிறது. எனவே தான் மனதை ஒருநிலைப்படுத்துவதற்குத் தியானம், ஆழ்ந்த சுவாசப்பயிற்சி, நிதானம் போன்றவை தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..