Search

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளீர்களா?... அரசு கல்லூரியில் காலியிடங்கள் அறிவிப்பு..!

 கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் (Government College Of Fine Arts-Kumbakonam) காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் (Office Assistant) காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்- 2, சம்பள விகிதம் நிலை - 1 (ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை).  வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.07. 2022 அன்றைய நிலவரப்படி, 18  முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்தும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல்களில் இருந்தும்  தகுதியான நபர்களை தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும்.

இந்த பதவிக்கான விண்ணப்பப் படிவத்தை, தஞ்சாவூர் மாவட்ட https://thanjavur.nic.in/ இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன்  வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி, முதல்வர், அரசு கவின் கலைக் கல்லூரி, மேலக்கொட்டையூர், சுவாமிமலை மெயின் ரோடு, மேலக்காவேரி போஸ்ட், கும்பகோணம், தஞ்சாவூர் - 612002 ஆகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? முக்கிய அப்டேட்ஸ் இதோ..!

 40,889 கிராம அஞ்சல் பணியாளர் பதவிக்கான தகுதி பட்டியல் (Merit List) மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள், GDS Online Portal தளத்தில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.

நாடு முழுவதும் கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டது. கடந்த 16ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது தகுதி பட்டியலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாகி வருகிறது.

தகுதி பட்டியல் எப்படி தயாரிக்கப்படும்? 

இந்த பதவிக்கு, எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merti List) தயாரிக்கப்படும். ஒருவேளை, 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எந்தவித மனித தலையீடுகள் இல்லாமல், தொழில்நுட்ப உதவியோடு இந்த பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது, மேலும்,  மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை இதில் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு: 

தகுதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாக தகவல் பரிமாறிக் கொள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். சரிபார்ப்பின் போது,  தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TANGEDCO நிறுவனத்தில் 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களா? இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

 தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) பெயரில் சமூக ஊடங்கங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக,   தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 10,000க்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர் (Assessors) காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.ஆனால், இது போலியான வேலைவாய்ப்பு அறிவிக்கை என்று  டான்ஜெட்கொ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், செய்தித் தாள்களிலும் வெளியிடப்படும். போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறித்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்  என்று தெரிவித்துளளது.

முன்னதாக, இந்த மதிப்பீட்டாளர்கள் பணி தொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, " தற்போது இருக்கும் மின் கணக்கு எடுக்கும் மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றிவிட்டால், இந்தப் பணிக்கு புதிய ஆட்கள் எடுக்கும் தேவையிருக்காது" என்று தெரிவித்திருந்தார்.

எனவே, வேலை தேடும் இளைஞர்கள், போலி அறிவிப்புகளை நம்பாமல் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள அந்தந்த அரசு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஒருமுறை பார்த்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தருமபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் பணி..!

 தருமபுரி மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்துடன் ஏற்கனவே உள்ள மற்றும் புதியதாக ஏற்படுத்தப்பட்ட ஆய்வாளர்கள், சிறப்பு வட்டாட்சியர் பணியிடங்களுக்குத் துணை பணியிடங்களாக ஏற்படுத்தப்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களைத் தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தம் 7 காலியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. அதில் ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) -1, பொது - 1, ஆதிதிராவிடர் - 1, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் அறிவிக்கப்படாத வகுப்பினர் - 1, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இதர பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) - 1, பொதுப் பிரிவு - 1, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 1.

கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதியாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம் : இப்பணியிடங்களுக்கு ரூ.15,700 முதல் தொடங்கி ரூ.50,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு : குறைந்தபட்ச வயதாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதே போல், அதிகபட்சமாக SC/ST பிரிவினருக்கு 37 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு 32 ஆகவும், MBC/DNC பிரிவினருக்கு 34 ஆகவும் மற்றும் BC பிரிவினருக்கு 34 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதார்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து உரியச் சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, செங்குந்தர் திருமணம் மண்டப வளாகம், பென்னாகரம் ரோடு, குமாரசாமிப்பேட்டை, தருமபுரி மாவட்டம் - 636 701. என்ற முகவரிக்குத் தபால் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11.03.2023 மாலை 5.30 வரை தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு செய்யவும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ. 2 லட்சம் வரை மாதச் சம்பளம்... டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புது வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..!

 கல்லூரி நூலகர், மாவட்ட நூலக அலுவலர் மற்றும் இதர பதவிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  வெளியிட்டது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை 1.03.2023 அன்றுடன் நிறைவடைய இருக்கிறது. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.

பணியிடங்கள் பற்றிய விவரங்கள்: 

பதவிகாலியிடங்கள்சம்பளம்
கல்லூரி நூலகர் (அரசு சட்டக் கல்லூரி )8ரூ. 57,700-2,11,500
நூலகர் மற்றும் தகவல் அலுவலர்1ரூ.56,100- 2,05,700
மாவட்ட நூலக அலுவலர்3ரூ.56,100- 2,05,700

கல்வித் தகுதி: குறைந்தது நூலக அறிவியில் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு / கணினி வழித் தேர்வு, மற்றும் வாய்மொழித் தேர்வு என்ற இரண்டு நிலைகளில் பெற்ற மொத்த மதிப்பெண்கள்  அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை tnpsc.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 01-03-2023 ஆகும். காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை டிஎன்பிஎஸ்சி  அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SSC CGL 2022 Tier1 ScoreCard: எஸ்எஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு! ரிசல்ட் செக் செய்வது எப்படி?

 

ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான முதற்கட்ட  தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.  முதற்கட்ட தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

முன்னதாக, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் காலியாக உள்ள குரூப் 'பி'&'சி' பணியிடங்களுக்கான  அறிவிப்பை  பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 20,000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இப்பதவிக்கான தேர்வு முறையானது, முதல் நிலை(Tier- I), இரண்டாம் நிலை (Tier- II), மூன்றாம் நிலை(Teir - III) என 3 முறைகளில் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 1 முதல் 13 ஆகிய தேதிகளில் கணினி வழியில்  முதற்கட்ட தேர்வு  நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், முதற்கட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை https://ssc.nic.in/  என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில், தேர்ச்சி பெற்ற விண்ணப்பதார்கள், கணினி வழியில் நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability) காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். மூன்றாம் நிலை தேர்வு பேனா/பேப்பர் முறையில் நடைபெறும். தேர்வர்கள் வினாக்களுக்கு விரிவான பதில்கள் அளிக்க வேண்டும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.58,000 வரை சம்பளம்: இந்து அறநிலையத் துறையில் பல்வேறு காலியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்

 Govt Jobs alert:  சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இளநிலை உதவியாளர்: காலியிடங்கள் 2 ஆகும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். சம்பள நிலை:  ரூ. 18,500 முதல் 58600 வரை ஆகும்.

தமிழ் புலவர்: ஒரு காலியிடம். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது அதற்கு இணையான தமிழில் B.lit அல்லது B.A., அல்லது M.A., அல்லது M.Lit பட்டம் பெற்றிருக்க வேண்டும். திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்பள நிலை:  ரூ. 18,500 முதல் 58,600 வரை ஆகும்.

தவில்: ஒரு காலியிடம். தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.  இசைக்கருவிகளை வாசிப்பதில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியதுடன்,  ஏதேனும் சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் நடத்தப்படும் தவில் பள்ளிகளில் மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சம்பள நிலை:  ரூ. 18,500 முதல் 58,600 வரை ஆகும்.

பிளம்பர்: ஒரு காலியிடம். அரசால் அங்கீகரிக்கப்ட்ட நிறுவனங்களால் குழாய் தொழில்/குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  தொடர்புடைய பிரிவில் 5 ஆண்டுகள் அல்லது 2 ஆண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பள நிலை: ரூ. 18000 முதல் ரூ. 56900 வரை ஆகும்.

வேத பாராயணம்: ஒரு காலியிடம். தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏதேனும் சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி பாடசாலையில் அல்லது வேத தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் படிப்பினை மேற் கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். சம்பள நிலை ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை ஆகும்.

உதவி பரிச்சாரகர்: காலியிடம் ஒன்று. தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கோயிலில் வழங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பள நிலை ரூ.10,000 முதல் 31,500 வரை ஆகும்.


இதர நிபந்தனைகள்: விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 19- 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர், திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை- 4 ஆகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ. 1 லட்சம் சம்பளத்தில் சவுதி அரேபியாவில் வேலை வேண்டுமா? நாளைக்குள் விண்ணப்பியுங்கள்!

 

சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 150 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OVERSEAS MANPOWER CORPORATION LIMITED) தெரிவித்துள்ளது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை நாளையுடன் (23.02.2022) நிறைவடைய இருக்கிறது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிட விவரம்: 

பணிசெவிலியர்
பணி இடம்சவுதி அரேபியா
காலியிடங்கள்150
பணி இடம்சவுதி அரேபியா
சம்பளம்ரூ. 80,000 முதல் 1,00,000 வரை
கல்வி தகுதிB.Sc Nursing
இதர சலுகைகள்மேற்படி சம்பளம் சேர்க்காமல் உணவு, இருப்பிடம், விமான பயணச் சீட்டு, ஆண்டு விடுமுறை ஆகியவைகள் அந்நாட்டின் வேலை அளிப்பவரால் தனியாக வழங்கப்படும்
நேர்காணல் தேதிபெங்களூர் : பிப்ரவரி 26, 27,28 மற்றும் மார்ச்  01ம் தேதிகொச்சின் : பிப்ரவரி 27,28,  மார்ச் 1,2,3டெல்லி: பிப்ரவரி 25,26சென்னை: 28 மற்றும் மார்ச் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி23.03.2023)

இப்பணிக்கு, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ omcmanpower.com இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8-ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: கும்பகோணம் அரசு கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை

 கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் (Government College Of Fine Arts-Kumbakonam) காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் (Office Assistant) காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தது 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடம்2
சம்பள விகிதம்Level - 1 (15,700 முதல் ரூ.50,000 வரை )
வயது1.07. 2022 அன்றைய நிலவரப்படி, 18 - 37 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
இட ஒதுக்கீடு மற்றும் இன சுழற்சிஅருந்ததியினர் (Desititute Widow), பொதுப்பிரிவு ஆதரவற்றோர்
வேலைவாய்ப்பு அறிவிக்க எண்644/அ2/2022 

இந்த பதவிக்கான விண்ணப்பப் படிவத்தை, தஞ்சாவூர் மாவட்ட https://thanjavur.nic.in/ இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி, முதல்வர், அரசு கவின்கலைக் கல்லூரி, மேலக்கொட்டையூர், சுவாமிமலை மெயின்ரோடு, மேலக்காவேரி போஸ்ட், கும்பகோணம், தஞ்சாவூர் - 612002 ஆகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் 577 காலியிடங்கள்: யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ

 UPSC EPFO Recruitment : அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (Employees' Provident Fund Organisation) காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பொதுவாக, ஐஏஎஸ் , குரூப் 1,  வங்கித்  தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெரும்பாலான தேர்வர்கள் இந்த தேர்வில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் இதர தேர்வுகளோடு ஒத்து போவாதால், தேர்வர்கள் EPFO அறிவிப்புக்கு ஒரு வகையான எதிர்பார்ப்பு எப்போதுமே இருந்து வருகிறது. மேலும், குரூப் 1, ஐஏஎஸ் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு இதில்  வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

காலியிட விவரம்: 

பதவிகாலியிடங்கள்வயது வரம்பு
Enforcement officer/ Accounts officer41830
Assistant Provident Fund Commissioner15935
இதற்கான விண்ணப்பங்களை upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும் 25ம் தேதியில் இருந்து தொடங்கும். இதற்கான,  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.  கல்வித் தகுதி, வயது வரம்பு,  கட்டணம், தேர்வு முறை, கடைசி தேதி, விண்ணப்பக் கட்டணம்,  விண்ணப்பிக்கும் முறை ஆகியவை யுபிஎஸ்சி அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்படும்.
.