Agri Info

Education News, Employment News in tamil

March 31, 2023

Weight Loss: கோடையில் வெயிட்டை குறைக்க காலையில் இதையும் சாப்பிடுங்க!

March 31, 2023 0

 Weight Loss Breakfast: இப்போதெல்லாம் மக்கள் தங்கள் எடை அதிகரிப்பால் பெரும்பாலும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, கோடை காலத்தில் மக்களின் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. அதே சமயம், கோடையில் உடல் எடையை அதிகரிக்க வழிவகைச் செய்யும் பல பானங்களையும் நாம் நாடுகிறோம். 

கோடையில் உடல் எடையை குறைப்பது எப்படி என்று பலரும் தொடர்ந்து நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் உண்மையிலேயே உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. மாறாக, நீங்கள் உணவில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, காலை உணவில் சிலவற்றைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் எடையை எளிதாகக் குறைக்கலாம்.

அதுமட்டுமின்றி, உணவு பழக்கத்தில் மிக முக்கியமான காலை உணவை சாப்பிடுவதாகும். காலை உணவை தவிரப்பது மிகப்பெரும் உடல்நலக்கோளாறுகளை உண்டாக்கும் என கூறப்படுகிறது. காலையில், சாப்பிடும் உணவுகளோடு சிலவற்றை சேர்த்து சாப்பிடுவது உங்கள் எடை குறைப்பு முயற்சியில் பயனளிக்கும். 

உடல் எடையை குறைக்க காலை உணவில் இவற்றை சேர்த்து கொள்ளுங்கள்:

முட்டை 

முட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் சோடியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது நாள் முழுவதும் உங்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. அதே சமயம், காலை உணவில் முட்டை சாப்பிட்டால், நீண்ட நேரம் பசி எடுப்பதில்லை, எடையும் கட்டுக்குள் இருக்கும். இதற்கு வேகவைத்த முட்டைகளை சாப்பிடலாம்.

கிரீன் டீ

கிரீன் டீ உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதை குடிப்பதால் தொப்பை குறையும். இதனுடன், மன அழுத்தமும் நீங்கும். அதே சமயம், கிரீன் டீ குடிப்பதால், சர்க்கரை நோயும் கட்டுக்குள் இருக்கும், எடை அதிகரிக்காது. அதனால்தான் காலை உணவில் கிரீன் டீயை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். 

ஓட்ஸ் கஞ்சி 

ஓட்ஸ் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. ஓட்ஸை காலை உணவில் உட்கொள்வதால் உடலில் சத்துக்களுக்கு குறைவிருக்காது. இதனுடன், உங்கள் எடையும் கட்டுக்குள் இருக்கும். ஓட்மீலில் இரும்புச்சத்து, புரதம் உள்ளது, இது உங்களை ஆரோக்கியமாகவும் உடற்தகுதியோடும் வைத்திருக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உலர் திராட்சை நீர்: இதில் உள்ள நன்மைகள் உங்களை வியக்க வைக்கும்!!

March 31, 2023 0

உலர் திராட்சையின் சுவை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அவ்வப்போது சில உலர் திராட்சைகளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு அதன் சுவையை ரசிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கும். இதை பெரும்பாலும் நாம் அப்படியே பச்சையாக உட்கொள்கிறோம். பல வித உணவு வகைகளில் இதை நாம் பயன்படுத்துகிறோம். இனிப்பு வகைகள் முதல், புலாவ் வரை இதை அனைத்திலும் நாம் பயன்படுத்துகிறோம். உலர் திராட்சையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் பல விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், உலர் திராட்சை நீரிலும் இதே அளவு நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

உலர் திராட்சை நீர்

நீங்கள் எப்போதாவது திராட்சை தண்ணீரை ருசித்ததுண்டா? அப்படி செய்திருந்தால், அதன் சுவையையும் நீங்கள் எப்போதும் மறக்க மாட்டீர்கள். சுவை மட்டுமல்லாமல், இதிலும் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. 

திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

திராட்சைப்பழத்தில் சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் தாமிரம் ஆகியவை இதில் நிறைந்துள்ளன. பல உணவியல் வல்லுநர்கள் இதை ஊறவைத்து சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இது மன ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவாகக் கருதப்படுகிறது, அத்துடன் உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

திராட்சை தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இன்றைய காலகட்டத்தில் வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆகையால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் முக்கியம். திராட்சை நீர் வைரஸ் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதன் காரணமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன.

உடல் நச்சு நீங்கும்

உடலில் நச்சுப் பொருட்கள் அதிகமாகக் குவிந்தால், பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து உலர் திராட்சை தண்ணீர் குடிப்பவர்களின் உடலில் உள்ள நச்சுக்கள் அவ்வப்போது வெளியேறும். மேலும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உலர் திராட்சை நீர் உதவுகிறது.

உலர் திராட்சை தண்ணீர் தயாரிப்பது எப்படி?

உலர் திராட்சை தண்ணீர் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இப்போது அதில் திராட்சையை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் தூங்கி எழுந்தவுடன் வடிகட்டி வெறும் வயிற்றில் இதை குடிக்கவும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பியுங்கள்..!

March 31, 2023 0

 புதிதாக துவங்கப்பட்டுள்ள அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவமனை தர மேலாளர் (Hospital Quality Manager) பதவியை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விவரங்கள்: 

பணிமருத்துவமனை தர மேலாளர் (Hospital Quality Manager)
காலியிடம் 1
கல்வித் தகுதிஅரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் மருத்துவமனை மேலாண்மை பட்ட படிப்பு (Masters in Hospital Administration / Health Management) மற்றும் பொது சுகாதார துறையில் முதுநிலை பட்ட படிப்பு (Master of Public Health) (Regular course Not Correspondence Course) / Two Years Experience in Public Health/ Hospital Administration முடித்துள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்,  ஆதார் அட்டை நகல் மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ் நகல்களுடன் சுய முகவரியுடன் கூடிய ஐந்து ரூபாய்க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய தபால் உறையுடன் இணைத்து விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி முதல்வர், அரசு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூர்.  விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.04.2023 ஆகும்.  


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!

March 31, 2023 0

 இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை அலுவலத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 10ம் வகுப்பு கல்வித் தகுதி உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப செயல்முறை  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி: அலுவலக ஓட்டுநர்

காலியிடங்கள் எண்ணிக்கை:  ஐந்து. இதில் பொதுப் பிரிவில் 3 இடங்களும், பட்டியல் இனத்தவர் பிரிவில் ஓரிடமும், பட்டியல் பழங்குடியினர் பிரிவில் ஓரிடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படைத் தகுதிகள்: குறைந்தபட்சம் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இலகுரக  வாகனம் (Light  motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் இருக்க வேண்டும். வாகனம் பழுதுபார்ப்பதில்  (vehicle repair) குறித்து அறிந்திருக்க வேண்டும்.

மொழி அறிவு: உள்ளூர் மொழியான மராத்தி பேச தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்,  01.03.2023 அன்று 28- 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, வாகன ஓட்டுநர் திறன் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 450 ஆகும். பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50-ஐ மட்டும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும், விவரங்களுக்கு, Recruitment for the Post of Driver in Reserve Bank of India, Mumbai என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

12ம் வகுப்பு தேர்ச்சி போதும்.... ரூ. 60 ஆயிரம் வரை சம்பளத்தில் அரசு வேலை..!

March 31, 2023 0

 இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10, +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது. recruitment.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவி: இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் Junior Assistant-cum-Typist (JAT); சம்பள நிலை: 19,900- 63,200 (நிலை - 2)

முக்கியமான நாட்கள்:  இதற்கான விண்ணப்பங்கள் எதிர் வரும் ஏப்ரல் 20ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை பெறப்படும்.

காலியிடங்கள்: 200 - இதில், தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:  இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10,+2 வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  நிமிடத்திற்கு 40 ஆங்கில  வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லது நிமிடத்திற்கு 35 இந்தி வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.600 ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:  இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 20-04-2023 அன்று 18-27-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெறத் தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறத் தகுதியுடைவராவர்.

தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

காலியிடங்கள், தேர்வு முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆட்சேர்க்கை அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், தகவல் தேவைப்படுவோர் அறிக்கையை பதிவிறக்கம் செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள https://recruitment.nta.nic.in/. என்ற இணைப்பைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வேலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

March 31, 2023 0

 வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் முற்றிலும் தற்காலிக  தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதிவாய்ந்த நபர்கள் வரும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.

காலியிட விவரங்கள்: 

உளவியலாளர்/ ஆற்றுப்படுத்துநர்:  எண்ணிக்கை 1; கல்வித் தகுதி:  இளங்கலை காமர்ஸ் அல்லது உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; சம்பளம்: ரூ.15,000

பாதுகாவலர்: எண்ணிக்கை -2; கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; சம்பளம்: ரூ.12,000

சமையலர்: எண்ணிக்கை 1; கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; சம்பளம்: ரூ.10,000.

உளவியலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பாதுகாவலர்/சமையலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 33 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள், விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில் (http:/vellore.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை உரியசான்றுகளின் ஒளி நகலுடன் நேரிலோ, தபால் மூலமாகவே அல்லது கொரியர் மூலமாகவே வரும் நாளை (31.03.2023) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, அண்ணா சாலை, வேலூர் - 632 001 ஆகும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

March 29, 2023

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்வாயுவுக்கான (Both Male & Female) ஆன்லைன் விண்ணப்பம் - அறிவிக்கை வெளியீடு!

March 29, 2023 0

 இந்திய விமானப்படை - அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்வாயுவுக்கான (Both Male & Female) ஆன்லைன் விண்ணப்பம் - அறிவிக்கை வெளியீடு!

AGNIVEER_VAYU_02-2023.pdf - Download here...


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்த 10 உணவுகளை டிராவல் பண்ணும்போது சாப்பிடாதீங்க... உங்க ஜாலியான பயணத்தை மோசமாக்கிடும்..!

March 29, 2023 0

 நீங்கள் மற்ற மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு பயணம் செய்யும்போது அந்த ஊர் கிளைமேட் மற்றும் கலாச்சாரம், இயற்கை அமைப்புகள் புதிதாக இருக்கும். அந்த தகவமைப்புகளுக்கு உங்கள் உடல் பழக்கப்படாமல் இருப்பதால் எளிதாக தொற்றுகள், பாக்டீரியாக்கள் தொற்றக்கூடும். குறிப்பாக உள்ளூர் உணவுகளை சுவைக்கவும் நீங்கள் விரும்பலாம். அதையும் கவனமுடனே சாப்பிட வேண்டும். புதிதாக செல்லும் இடங்களில் சரியான பின்பற்றுதல்கள் இல்லை எனில் நாம் ஜாலியாக பிளான் செய்த பயணத் திட்டமே பெரும் வேதனையாக மாறிவிடும். எனவே பயணத்தின் போது சில உணவுகளை தவிர்த்துவிட்டாலே நாம் திட்டமிட்ட படி பயனத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.

வேக வைக்காத அல்லது நன்கு வேக வைத்த இறைச்சி உணவுகள் : முழுமையாக வேக வைக்காத இறைச்சிகளில் பாக்டீரியாக்கள் இருக்கக் கூடும். அது நமக்கு ஃபுட் பாய்சனாக மாறலாம். எனவே சரியாக சமைக்காத, வேக வைக்காத இறைச்சி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

தெருவோர உணவுகள் : பொதுவாகவே தெருவோர உணவுகளை பார்த்தாலே சாப்பிட எச்சில் ஊறும். ஆனால் அது சுகாதாரமானதா என்கிற கேள்விக்கு பதில் இல்லை. ஒருவேளை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று தோன்றினால் அந்த இடம் சுகாதாரமாக உள்ளதா, சுத்தமான பாத்திரம், உணவுப் பொருட்களை சீராக சுத்தம் செய்து சமைக்கிறார்களா, வேலை செய்பவர் சுத்தத்தை கடைப்பிடிக்கிறாரா என்பதை உறுதி செய்த பின் சாப்பிடுங்கள்.

பதப்படுத்தப்படாத பால் உணவுகள் : முறையாக பதப்படுத்தாமல் பயன்படுத்தும் சீஸ், பனீர் போன்ற பால் சார்ந்த உணவுகளில் ஆபத்து நிறைந்த பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே அப்படிப்பட்ட உணவுகளை தவிர்த்தல் நல்லது.

குழாய் தண்ணீர் : செல்லும் இடங்களில் தாகமாக உள்ளது எனில் குழாய் தண்ணீர் தானே என குடித்துவிடாதீர்கள். புது இடங்களில் ஆபத்தான பாக்டீரியாக்கள், தொற்றுகள் இருக்கக் கூடும். அவை உங்கள் உடலுக்கு பழக்கமில்லாதவையாக இருக்கும். எனவே உடனே அவை உங்கள் நோய் எதிர்ப்பு திறனை அழித்து கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே எப்போதும் நீங்கள் கொண்டு செல்லும் அல்லது வாட்டர் பாட்டின் தண்ணீரை குடிப்பது நல்லது.

குளுர்ச்சியான உணவுகள் : குளுர்ச்சியான பானங்கள் குடிப்பதை தவிருங்கள். நீங்கள் குடிக்கும் பானங்களில் ஐஸ் கட்டி போட்டு குடிப்பதையும் தவிருங்கள். இது உங்களுக்கு சளி அல்லது தொண்டை கரகரப்பு, இருமலை தரலாம்.

கழுவாத பழங்கள் : காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கழுவாமல் சாப்பிட்டால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும். எனவே நன்கு கழுவிய பழங்கள் மற்றும் வேக வைத்த காய்கறிகளை மட்டுமே சாப்பிடுங்கள்.

ஷெல் ஃபிஷ் : ஷெல் ஃபிஷ் மீன் வகைகளான இறால், நத்தை போன்றவை சாப்பிட சுவையாக இருக்கலாம். ஆனால் அதில் பாதிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுக்கள் இருக்கக் கூடும். நன்கு சமைக்கப்படாமல் பச்சையாக இருக்கக் கூடும். எனவே முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

ஃபிரைடு உணவுகள் : வறுத்த மற்றும் பொறித்த உணவுகளில் கொழுப்பு அதிகமாக இருக்கும். இதனால் செரிமானிக்க சிரமமாக இருக்கும். இதனால் வயிற்று கோளாறுகளை அனுபவிக்கலாம். எனவே பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

காரமான உணவுகள் : காரசாரமான உணவுகள் சாப்பிட ருசியாக இருந்தாலும் வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல் ருசிக்காக கொஞ்சம் சாப்பிடலாம்.

பழக்கமில்லாத உணவுகள் : புதிய இடங்களில் புதிய உணவுகளை சாப்பிட முயற்சி செய்கிறீர்கள் எனில் அதை உங்கள் உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பதை கவனியுங்கள். சாப்பிடவுடன் சருமத்தில் அரிப்பு, ஒவ்வாமை ஏற்படுகிறது எனில் அந்த உணவில் கலந்துள்ள ஏதோ ஒரு பொருள் ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம். எனவே அதை தவிர்ப்பது நல்லது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பேரண்டிங்கில் இந்திய பெற்றோர்களை இந்த விஷயத்தில்அடிச்சுக்கவே முடியாது..!

March 29, 2023 0

 ஒரு குழந்தை எப்படி வளர்கிறது என்பதை பெரும்பாலும் குழந்தையை வளர்க்கும் பெற்றோரை பொருத்தே அமைகிறது. இதைத் தவிர நமது சமூக மற்றும் பாரம்பரிய கட்டுப்பாடுகளும் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த ஒரு பெற்றோருமே முழுவதும் சிறந்த பெற்றோராக இருக்க முடியாது.

ஆனால் முடிந்த அளவு தன் குழந்தையை வளர்க்கும் முறையை அவர்கள் சிறப்பாக மாற்ற முயற்சி செய்யலாம். குறிப்பாக இந்திய பெற்றோர்கள் சில விஷயங்களில் மற்ற நாட்டு பெற்றோர்களை விட சிறப்பானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அந்த வகையில் இந்திய பெற்றோர்கள் எந்தெந்த வகையில் சிறந்தவர்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

எப்போது எதைக் கொடுக்க வேண்டும் என்று தெரியும்! இந்திய பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்கு எந்த விதமான செய்திகளை எப்போது சொல்ல வேண்டும் என்பதைப் பற்றி நன்றாக தெரியும். இதை தவிர அவர்கள் எப்போது எதை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் அவர்கள் தெளிவாக உள்ளார்கள்.

உதாரணத்திற்கு இணையதளத்தை பயன்படுத்துவது, டிவி பார்ப்பது, கடுஞ்சொற்கள் பேசுவது ஆகியவற்றை தங்கள் குழந்தை கற்றுக்கொள்வதில் இருந்து எப்போதும் அவர்களை தள்ளி வைக்கவே முயற்சி செய்வார்கள். அவர்கள் மனதளவில் முதிர்ச்சியாக மாறும் வரை இது போன்ற சிக்கலான விஷயங்களில் அவர்கள் மாட்டிக் கொள்வதை விரும்புவதில்லை.

நடத்தை: இந்திய பெற்றோர்கள் எப்போதுமே தங்கள் குழந்தைகளுக்கு மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை பற்றி தான் முதலில் கற்றுக் கொடுக்கிறார்கள். முரட்டுத்தனமாக இருப்பதையும், மரியாதை குறைவாக பேசுவதையும் அவர்கள் எப்போதும் விரும்புவதில்லை. முக்கியமாக மரியாதை குறைவாக நடப்பதை அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. பெற்றோரிடமோ, சகோதர சகோதரிகளிடமோ அல்லது வெளியாட்களிடமோ நாகரீகமாக எவ்வாறு நடந்து கொள்வது என்பதை மிக இளம் வயதிலேயே தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.

கல்வியின் முக்கியத்துவம்: படிப்பு என்று வந்து விட்டாலே இந்திய பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வார்கள். வகுப்புகளை புறக்கணிப்பதையும் தேவையற்ற விடுமுறை எடுப்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. மேலும் வேண்டுமென்றால் உங்களது கல்விக்காக அதிகம் செலவு செய்யக் கூட அவர்கள் தயாராக இருக்கிறார்கள். சுய ஒழுக்கத்தையும் பெற்றோர்கள் இளம் வயதிலேயே அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.

ஆன்மீகம்: இந்திய கலாச்சாரத்தில் ஆன்மீகம் மிகவும் முக்கியமான ஒன்று. ஆன்மீகத்தைப் பற்றி இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே கற்றுக் கொடுத்து விடுகிறார்கள். அவ்வப்போது கோவிலுக்கு அழைத்துச் செல்வது வீட்டிலேயே ஜபம் செய்வது ஆகியவை இந்தியர்களின் வீட்டில் நடக்கும் வழக்கமான நிகழ்வுகள். மேலும் இளம் வயதிலேயே தங்கள் குழந்தைகளுக்கு புராணக் கதைகளை கூறி ஆன்மீக நாட்டத்தை ஊக்குவிக்கின்றனர்.

நட்பு வட்டம்: தங்கள் குழந்தைகளை விட அவர்களுடன் பழகும் நண்பர்களை பற்றி இந்திய பெற்றோர்களுக்கு எப்போதுமே நன்றாக தெரியும். எப்போதும் தங்கள் குழந்தைகளை தீய நட்பு வட்டத்திடமிருந்து ஒதுக்கி வைப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். மேலும் குழந்தைகளிடம் பழகும் நண்பர்களை பற்றி மிக எளிதாகவே அவர்கள் கண்டறிந்து விடுவார்கள். ஒருவேளை அந்த நண்பர்கள் சுயநலம் மிக்கவராகவோ அல்லது பொறாமை கொண்டவராகவோ, கெட்ட பழக்க வழக்கங்கள் கொண்டவராகவோ இருந்தால் உடனடியாக தங்கள் குழந்தைகளை அவர்களிடமிருந்து விலக்கி வைத்து விடுவார்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்களுக்கு இரும்பு சத்து கம்மியா இருக்கா..? ஹீமோகுளோபினை அதிகரிக்கும் 7 உணவுகள்..!

March 29, 2023 0

 நமது உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பது இரும்பு சத்து ஆகும். முக்கியமாக நமது ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கும், உடல் இயக்கங்கள் சரியாக வேலை செய்வதற்கும் இரும்புச்சத்து மிகவும் முக்கியமானது.

இறைச்சி மற்றும் மீன் : இறைச்சிகளிலும் மீன் வகைகளிலும் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. தினசரி நாம் உண்ணும் உணவில் மீன் மற்றும் இறைச்சியா ஆகியவற்றை சரியான அளவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் நமது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை நம் பெற முடியும்.

ப்ரோக்கோலி : ஒரு கப் ப்ரோக்கோலி கிட்டத்தட்ட ஒரு நபருக்கு தேவையான அளவில் ஆறு சதவீதம் இரும்புச்சத்து அடங்கியுள்ளது. எனவே நமது தினசரி உணவில் பிரக்கோலி சேர்த்துக் கொள்வதின் மூலம் நமக்கு தேவையான இரும்புச்சத்தை நாம் பெற முடியும்.

கீரை : ஒரு கப் கீரையில் கிட்டத்தட்ட 3.72mg அளவிலான இரும்பு சத்து அடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர கீரை வகைகளில் பொதுவாகவே நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் தாதுக்களும் நிறைந்துள்ளன. எனவே தினசரி உணவில் குறைந்த பட்சம் ஒரு வேளையாவது கீரை இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

செலரி : செலரியில் இரும்பு சத்து, ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவன் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டிய சத்துக்கள் ஆகும்.

பூசணி விதைகள் : நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிப்பதில் பூசணி விதைகள் முன்னிலையில் இருக்கின்றன. இவற்றில் அதிக அளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவற்றை நாம் நொறுக்கு தீனியாக கூட எடுத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்.

மாதுளம்பழம் : இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளை மிகவும் முக்கியமானது. குறிப்பாக மாதுளம் பழத்தின் விதைகளில் அதிக அளவில் ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. இதை குழந்தைகளும் அதிகம் விரும்பி உட்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோயா : சோயாவில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து இதில் அதிகம் நிறைந்துள்ளது. ஒரு கப் சோயா பீனை நாம் எடுத்துக் கொண்டால் அதில் 9.9 mg அளவிலான இரும்புச்சத்து நிறைந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் என்ன ஆகும் ? நம் உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு நமது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் சரியான அளவில் இருப்பது அவசியமாகும். சுருக்கமாக எச்பி என அழைக்கப்படும் இந்த ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு குறைவாக இருக்கும் போது நமது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கடத்தப்படுவது தடைப்படும். இதன் காரணமாக அந்த நபர் மிகவும் சோர்வாகவும் வலுவிழந்தும் காணப்படுவார்.

ஹீமோகுளோபின் எந்த அளவிற்கு இருக்க வேண்டும்? ஒரு வளர்ந்த ஆண் மகனுக்கு 14 - 15g/dl அளவும், பெண்களுக்கு 12-16 g/dl அளவும் ஹீமோகுளோபின் ரத்தத்தில் இருக்க வேண்டும்.

ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளதற்கான அறிகுறிகள் என்ன? ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மை, சருமம் மஞ்சள் நிறமாதல், அசாதாரமான இதயத்துடிப்பு, மயக்கம், நெஞ்சுவலி ஆகியவை அவர்களுக்கு ஏற்படலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip