நாட்டிலுள்ள பெரும்பாலான வங்கிகள் 1 முதல் 10 ஆண்டுகள் வரையிலான தவணை காலங்களில் RD திட்டங்களை வழங்கி வருகின்றன. நாட்டில் பிரபலமாக இருக்க கூடிய மிதமான மற்றும் உறுதியான வருமானம் கொண்ட குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு திட்டங்களில் RD ஒன்றாகும்.
இது முதலீட்டாளர்களை ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய மற்றும் குறுகிய கால தேவைகளுக்கான corpus-ஐ உருவாக்க உதவுகிறது.ஒவ்வொரு மாதமும் அல்லது மாதாந்திர (ஏற்ற இரக்கமில்லாத) வருமானம் உள்ள கன்சர்வேடிவ் இன்வெஸ்டர்ஸ் (Conservative investors) RD திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் RD-க்களில் முதலீடு செய்தால் வரி விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
RD-யில் முதலீடு செய்து வட்டியில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை. வருமான வரி சட்டத்தின் Tax slab-ன் படி வரி விதிக்கப்படும். பல வங்கிகள் தங்களது 5 ஆண்டு கால RD திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி FY23-ல் மே மாதம் தொடங்கி 6 தொடர்ச்சியான வட்டி விகித உயர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து இந்த வட்டி உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறிய தனியார் வங்கிகள் அதிக வட்டி விகிதங்களுடன் முன்னணியில் உள்ளன, இதை தொடர்ந்து சிறு நிதி வங்கிகள் (Small finance banks) உள்ளன.
5 வருட தவணை காலத்திற்கான RD திட்டங்களில் சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியல் இங்கே...
ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் : ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட நாட்டின் முன்னணி தனியார் வங்கிகள் 5 ஆண்டு கால RD-க்ளுக்கு சுமார் 7% வட்டியை வழங்குகின்றன. தவிர ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஆர்பிஎல் பேங்க் மற்றும் யெஸ் பேங்க் உள்ளிட்ட பிற சிறிய தனியார் வங்கிகளும், 5 வருட தவணைக்கால RD-க்களுக்கு 7% வட்டியை அளிக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் நீங்கள் சரியாக ரூ.5,000 முதலீடு செய்தால் தவணைக்கால முடிவில் ரூ.3.60 லட்சம் கிடைக்கும். ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்ஸ் மற்றும் ஸ்மால் பிரைவேட் பேங்க்ஸ் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
ரூ.5 லட்சம் வரையிலான ஆர்டி-க்களில் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷனானது முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இன்டஸ்இன்ட் பேங்க் (IndusInd Bank) : IndusInd வங்கி 5 ஆண்டு தவணை கால RD திட்டங்களுக்கு சுமார் 7.25 சதவீத வட்டியை வழங்குகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்தால், தவணைக்காலத்தின் முடிவில் ரூ.3.62 லட்சம் உங்களுக்கு கிடைக்கும்.
டிசிபி பேங்க் (DCB Bank ): DCB பேங்க்கானது 5 ஆண்டு கால தவணை கொண்ட RD-க்களுக்கு 7.60% வட்டியை வழங்குகிறது. தனியார் வங்கிகளில் இந்த வங்கி சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. தனியார் வங்கிகளில் இந்த வங்கி தான் RD-க்களுக்கு சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்தால், தவணைக்காலத்தின் முடிவில் ரூ.3.66 லட்சம் கிடைக்கும்.
சூர்யோதே ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Suryoday Small Finance Bank) : 5 ஆண்டு கால RD-க்களுக்கு இந்த வங்கி 7.5% வட்டியை வழங்குகிறது. சிறு நிதி வங்கிகளில் ரெக்கரிங் டெபாசிட்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்குவது இந்த வங்கி தான். ஐந்தாண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், தவணைக்காலத்தின் முடிவில் ரூ.3.65 லட்சம் கிடைக்கும்.
ஏயூ மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (AU and Ujjivan) : AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் ஐந்தாண்டு கால தவணை கொண்ட RD திட்டங்களுக்கு சுமார் 7.20% வட்டியை வழங்குகின்றன.