Search

BOB Financial நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

 

BOB Financial நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

Assistant Manager / Senior. Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை BOB Financial நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BOB Financial காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager / Senior. Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

BOB Financial வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 8 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

BOB Financial ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Assistant Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.05.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

HVF ஆவடி Trade Apprentices வேலைவாய்ப்பு 2023 – 168 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.8050/-

 

HVF ஆவடி Trade Apprentices வேலைவாய்ப்பு 2023 – 168 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.8050/-

கனரக வாகன தொழிற்சாலை (HVF) ஆவடி ஆனது Trade Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 168 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 14.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

HVF ஆவடி காலிப்பணியிடங்கள்:
  • Fitter (G) – Non ITI – 32 பணியிடங்கள்
  • Machinist – Non ITI – 36 பணியிடங்கள்
  • Welder (G&E) – Non ITI – 24 பணியிடங்கள்
  • Electrician – EX ITI -10 பணியிடங்கள்
  • Machinist – EX ITI – 38 பணியிடங்கள்
  • Welder (G&E) – EX ITI – 28 பணியிடங்கள்

Trade Apprentices பதவிக்கு என மொத்தம் 168 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Apprentices கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 50 % மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு அல்லது பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

14.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Trade Apprentices சம்பள விவரம்:
  • NON-ITI(Matriculation/ Xth Class) – For Ist year ₹ 6000 and IInd year ₹ 6600
  • EX-ITI (ITI Pass) – For 1 year Trade ₹ 7700 For 2 years Trade ₹ 8050
தேர்வு செயல் முறை:
  • Merit List
  • Certificate Verification
  • HVF ஆவடி பணிக்கான விண்ணப்ப கட்டணம்:
    • UR & OBC விண்ணப்பதாரர்கள் (Non-refundable) – ரூ.100/-
    • SC/ST/Women/PWD/Others (Transgender) விண்ணப்பதாரர்கள் -ரூ.750/-
    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து THE CHIEF GENERAL MANAGER, HEAVY VEHICLES FACTORY, AVADI, CHENNAI – 600054. TAMILNADU என்ற முகவரிக்கு 14.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Download Notification 2023 Pdf

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNSTC தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

 

TNSTC தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை -10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Mechanic (Motor Vehicle), Mechanic Diesel, Fitter மற்றும் Welder (Gas And Electric) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNSTC காலிப்பணியிடங்கள்:
  • Mechanic (Motor Vehicle) – 10 பணியிடங்கள்
  • Mechanic Diesel – 10 பணியிடங்கள்
  • Fitter – 10 பணியிடங்கள்
  • Welder (Gas And Electric) – 10 பணியிடங்கள்

என மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNSTC விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து ஆன்லைன் மூலம் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் வீட்டுவசதி வாரியத்தில் 50 சதவீத காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம் – அமைச்சர் அறிவிப்பு!

 

தமிழகத்தில் வீட்டுவசதி வாரியத்தில் 50 சதவீத காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழக அரசின் வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள 50 சதவீத பணியிடங்களை நிரப்பும் பணி தொடங்கி இருப்பதாக வீட்டுவசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்துள்ளார்.

பணியிடங்கள் அறிவிப்பு

தமிழக அரசுத் துறைகளில் ஒன்றான வீட்டுவசதி வாரியத்தில் பல பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த நிலையில் இவ்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் 50 சதவீதம் நிரப்பப்பட உள்ளது. அதில் வாரிசு அடிப்படையில் சில பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடங்கி இருப்பதாக அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இதனை நிரப்ப கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் வீட்டு வசதி வாரியத்தில் இடிந்து விழும் நிலையில் இருந்த 138 கட்டடங்கள் கண்டறியப்பட்டு, அதில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் 60 கட்டிடங்கள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழைய குடியிருப்புகள் இடிக்கும் இடத்தில் நவீன குடியிருப்புகள் கட்டப்படும் எனவும், சுயநிதி திட்டத்தின் கீழ் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட இடங்களில் வீட்டு வசதி வாரியம் சார்ப்பில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ECHS ஆணையத்தில் DEO காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

 

ECHS ஆணையத்தில் DEO காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள DEO, Medical Officer, Pharmacist, Dental Hygienist, Safaiwala பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

ECHS காலிப்பணியிடங்கள்:

DEO, Medical Officer, Pharmacist, Dental Hygienist, Safaiwala பணிக்கென காலியாக உள்ள 5 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Officer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Any Degree, B.Pharm, Diploma, Literate, MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ECHS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Medical Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.16,800/- முதல் ரூ.75,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

ECHS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.05.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி:

ECHS Cell,
Air Force Station,
Pudukkottai Road,
Thanjavur-613005.

Download Notification PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

12ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... மத்திய அரசில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு...!

 மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC)  2023ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கை வாயிலாக 1,600 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவிகள்:  மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர் (Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant),  டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்  (Data Entry Operator) போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்பில்  கணிதம் உள்ளடங்கிய அறிவியல் பாடங்களை எடுத்து படித்து ( Science stream with Mathematics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்,  01-08-2023 அன்று 18-27க்குள் இருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய இதர  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

விண்ணப்பதாரர்களின் வயது, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு அட்டவணை, எவ்விதம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் தேர்வாணையத்தின் அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் அதனை பதிவிறக்கம் செய்து மேலும் தெளிவு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (ssc.nic.in) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08-06-2023 (23:00). ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் புகைப்படத்தில் தொப்பியோ, கண்ணாடியே அணிந்திருக்கக்கூடாது. அவர்கள் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

 இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 291 கிரேட்-பி (Grade- B) அலுவலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கல்வித் தகுதி:  Officers in Grade 'B' (DR) - (General) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதர இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் விவரம்:

பதவிகாலியிடங்களின் எண்ணிக்கை
பொதுப் பிரிவினர்(GEN/UR)பட்டியல் கண்ட சாதிகள்(SC)பட்டியல் பழங்குடியினர் (ST)இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  (OBC) பொருளாதார இடஒதுக்கீடு பிரிவினர்மொத்தம்PwBD Category#
ABCD
1. Officers in Grade ‘B’(DR)- General109251749222224(2)9(7)3(1)6(4)
2. Officers in Grade ‘B’(DR)- DEPR1446(4)11338-1(1)2(1)2(1)
3. Officers in Grade ‘B’(DR)- DSIM98(5)5(5)63312(1)1(1)-1(1)

வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மே 01, 2023 அன்றைய தேதி நிலவரப்படி, 21- 30க்கு கீழ் இருக்க வேண்டும்.  இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்  பின்தங்கிய இதர  பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.850 ஆகும் (கூடுதலாக 18% ஜிஎஸ்டி வரி). பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், மாற்றுத் திறனாளி விண்ணப்பித்தாரர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (www.rbi.org.in) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 09-06-2023 (23:00). ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் புகைப்படத்தில் தொப்பியோ, கண்ணாடியே அணிந்திருக்கக்கூடாது. அவர்கள் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் வயது, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு அட்டவணை, எவ்விதம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் ரிசர்வ் வங்கி வெளியிட்ட   அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் அதனை பதிவிறக்கம் செய்து மேலும் தெளிவு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அரசு வேலை உங்கள் கனவா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்..!

Nan Mudhalvan Integrated Course : நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ரயில்வே, வங்கி, எஸ்எஸ்சி ஆகிய அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்த நேரடி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள தேர்வர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தமிழ்நாடு அரசின் மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான 'நான் முதல்வன்" திட்டத்தின் கீழ், கடந்த மார்ச் மாதம்  'போட்டித் தேர்வு பிரிவு" தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசுப் போட்டிகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவான சிறந்த திறன் பயிற்சி வழங்குவதை  குறிக்கோளாகக் கொண்டு இந்த பிரிவி  தொடங்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களான (SSC), இரயில்வே பணியாளர் தேர்வுகள் (RRB), வங்கித் தேர்வுகள் (Banking),  இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் (UPSC) போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக இரயில்வே,SSC, வங்கித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி, மாவட்டந்தோறும் அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு தலா 150 மாணவர்கள் வீதம் நேரடி வகுப்பறைப் பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வழங்கப்படும்.

மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான செலவீனங்களை "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் அரசே ஏற்றுக்கொள்ளும். இப்பயிற்சியின் அங்கமாக 300 மணிநேர தனி வழிகாட்டல், 100-க்கும் மேற்பட்ட மாதிரித் தேர்வுகள் ஆகியவை 100 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இத்திட்டத்திற்கான வல்லுநர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் நியமிக்கப்படுவார்கள்.

மாவட்டந்தோறும் நடைபெறவிருக்கும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2023 ஆகும். மேலும்,  பயிற்சி வகுப்புகள் 25.05.2023 அன்று தொடங்கவிருக்கிறது.

எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொண்டு பயண்பெருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. Nan Mudhalvan Integrated Course என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  மேலும், விவரங்களுக்கு https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணைய தளத்தை அணுகவும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

போட்டி தேர்வுக்கு தயாராகுறீங்களா.. அப்போ இதை கவனிங்க!

 தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

கல்லூரி படிப்பை முடித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டு பயிலுபவர்கள், தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக நடத்தப்பட இருக்கிறது.

இந்த பயிற்சி வகுப்புல சேர்வதற்கு கீழே, இருக்கிற இந்த லிங்க் https|bitly:3NDU95மூலமாக உங்களோட சுயவிபரங்கள் உள்ளிட்டவற்றை இணைத்து பதிவு செய்யலாம்.

உங்களின் சுய விபரங்கள் உள்ளிட்டவற்றை சேர்த்த பின்பு புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை, அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது தொலைபேசி இலையோ 04633-213179 தொடர்பு கொள்ளலாம்.

இந்த பயிற்சி வகுப்புகளின் வாயிலாக TNPSC, SSC , TNUSRB ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வட்டி அதிகம்.. செம லாபம்.. RD சேமிப்புக்கு வட்டியை அள்ளித் தரும் வங்கிகள்.. இதோ லிஸ்ட்!

 நாட்டிலுள்ள பெரும்பாலான வங்கிகள் 1 முதல் 10 ஆண்டுகள் வரையிலான தவணை காலங்களில் RD திட்டங்களை வழங்கி வருகின்றன. நாட்டில் பிரபலமாக இருக்க கூடிய மிதமான மற்றும் உறுதியான வருமானம் கொண்ட குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு திட்டங்களில் RD ஒன்றாகும்.

 இது முதலீட்டாளர்களை ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய மற்றும் குறுகிய கால தேவைகளுக்கான corpus-ஐ உருவாக்க உதவுகிறது.ஒவ்வொரு மாதமும் அல்லது மாதாந்திர (ஏற்ற இரக்கமில்லாத) வருமானம் உள்ள கன்சர்வேடிவ் இன்வெஸ்டர்ஸ் (Conservative investors) RD திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் RD-க்களில் முதலீடு செய்தால் வரி விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


RD-யில் முதலீடு செய்து வட்டியில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை. வருமான வரி சட்டத்தின் Tax slab-ன் படி வரி விதிக்கப்படும். பல வங்கிகள் தங்களது 5 ஆண்டு கால RD திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. 

இந்திய ரிசர்வ் வங்கி FY23-ல் மே மாதம் தொடங்கி 6 தொடர்ச்சியான வட்டி விகித உயர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து இந்த வட்டி உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறிய தனியார் வங்கிகள் அதிக வட்டி விகிதங்களுடன் முன்னணியில் உள்ளன, இதை தொடர்ந்து சிறு நிதி வங்கிகள் (Small finance banks) உள்ளன. 

5 வருட தவணை காலத்திற்கான RD திட்டங்களில் சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியல் இங்கே...

ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் : ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட நாட்டின் முன்னணி தனியார் வங்கிகள் 5 ஆண்டு கால RD-க்ளுக்கு சுமார் 7% வட்டியை வழங்குகின்றன. தவிர ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஆர்பிஎல் பேங்க் மற்றும் யெஸ் பேங்க் உள்ளிட்ட பிற சிறிய தனியார் வங்கிகளும், 5 வருட தவணைக்கால RD-க்களுக்கு 7% வட்டியை அளிக்கின்றன. 

ஒவ்வொரு மாதமும் நீங்கள் சரியாக ரூ.5,000 முதலீடு செய்தால் தவணைக்கால முடிவில் ரூ.3.60 லட்சம் கிடைக்கும். ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்ஸ் மற்றும் ஸ்மால் பிரைவேட் பேங்க்ஸ் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. 

ரூ.5 லட்சம் வரையிலான ஆர்டி-க்களில் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷனானது முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

இன்டஸ்இன்ட் பேங்க் (IndusInd Bank) : IndusInd வங்கி 5 ஆண்டு தவணை கால RD திட்டங்களுக்கு சுமார் 7.25 சதவீத வட்டியை வழங்குகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்தால், தவணைக்காலத்தின் முடிவில் ரூ.3.62 லட்சம் உங்களுக்கு கிடைக்கும்.

டிசிபி பேங்க் (DCB Bank ): DCB பேங்க்கானது 5 ஆண்டு கால தவணை கொண்ட RD-க்களுக்கு 7.60% வட்டியை வழங்குகிறது. தனியார் வங்கிகளில் இந்த வங்கி சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. தனியார் வங்கிகளில் இந்த வங்கி தான் RD-க்களுக்கு சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்தால், தவணைக்காலத்தின் முடிவில் ரூ.3.66 லட்சம் கிடைக்கும்.

சூர்யோதே ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Suryoday Small Finance Bank) : 5 ஆண்டு கால RD-க்களுக்கு இந்த வங்கி 7.5% வட்டியை வழங்குகிறது. சிறு நிதி வங்கிகளில் ரெக்கரிங் டெபாசிட்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்குவது இந்த வங்கி தான். ஐந்தாண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், தவணைக்காலத்தின் முடிவில் ரூ.3.65 லட்சம் கிடைக்கும்.

ஏயூ மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (AU and Ujjivan) : AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் ஐந்தாண்டு கால தவணை கொண்ட RD திட்டங்களுக்கு சுமார் 7.20% வட்டியை வழங்குகின்றன.