Search

உடனே அப்ளை பண்ணுங்க..! நெல்லை சுந்தரனார் பல்கலை கல்லூரிகளில் தற்காலிக முதல்வர் பணி..!

 திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக முதல்வர் பணியிடங்களுக்கு வரும் ஜுன் 14ம் தேதி காலை 11:00 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நாகம்பட்டி, திசையன்விளை, சங்கரன்கோவில், பணகுடி ஆகிய இடங்களில் இயங்கி வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக முதல்வர் பணிக்கான நேர்முகத் தேர்வு 14ம் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

Ads by 

15 ஆண்டுகள் பணி அனுபவம் ஏதேனும் பாடப்பிரிவில் முனைவர் பட்டம், மாநில தகுதித் தேர்வு ,தேசிய தகுதித் தேர்வு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். மேலும் விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழக இணையத்தில் இருந்து www.msuniv.ac.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை செயலாக கட்டணம் ரூபாய் 500க்கான (இந்தியன் வங்கி கணக்கு எண் 925398635) செலுத்திய சீட்டுடன் பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

படித்துக்கொண்டே ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம்..! சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட தென்காசி கலெக்டர்..!

 

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு சேர்ந்து படிக்க வாய்ப்பு என மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன்அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு B.Sc.(Computer Designing) B.Com, BCA & BBA சேர்ந்து படிக்க வழி வகை செய்யப்படும்.

Ads by 

12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு HCL Technologies-ல் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ் வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் B.Sc (Computer Designing பட்டப்படிப்பு அமிட்டி பல்கலைக்கழகத்தில் BCA/BBA/B.Com மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் Integrated Management பட்டப்படிப்பு சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்று தரப்படும்.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 12ம் வகுப்பில் 2022ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் Entrance examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

இத்திட்டத்தின் வருடாந்திர ஊதியமாக ரூ.1,70,000/ முதல் ரூ.2,20,000/ வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் வட்டாட்சியர் அலுவலகம், 2வது தளம், தென்காசி, என்ற அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் : 04633-214487 மற்றும் அலைபேசி எண் : 7448828513 மூலமாக விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IRCTC பேக்கேஜ் : ரூ.8000க்கு ஊட்டி, முதுமலை, குன்னூர் 5 நாள் சுற்றுலா செல்ல ரெடியா..? அப்ளை செய்ய டிப்ஸ்

 இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC நிறுவனம் இந்தியா முழுக்க சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு ஏற்ப மலிவு விலையில் பல சுற்றுலா பயண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியா மட்டும் அல்லாது நேபாளம், இலங்கை, வங்கதேசம், துபாய் வரை ரயில் மற்றும் விமானத்தின் மூலம் சென்று வரும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இப்போது சீசனில் உள்ள  மலைகளின் அரசி ஊட்டி - புலிகள் அதிகம் இருக்கும்  முதுமலை - குளிர்ச்சி கொஞ்சும் குன்னூர் என்று மூன்று இடங்களுக்கு அழைத்து செல்லும் 5 நாள்  ரயில் பயண பேக்கேஜை IRCTC நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

பள்ளி விடுமுறைகள் மேலும் சில நாள் தள்ளி போடப்பட்டுள்ள நிலையில் இந்த விடுமுறை முடியும் முன்னர் சென்று வர ஏற்ற பயணமாக இருக்கும். தனியாக பயணிக்கும் ஆகும் செலவை விட குறைந்த விலையில் இந்த பேக்கேஜ் இருக்கும்.  இந்த பயண  விபரங்களை விரிவாக சொல்கிறோம்.

பயண விபரங்கள்: 

நாள் 01:- பயணத்தின் முதல் நாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் எண்: 12671, நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் 21.05 மணிக்கு பயணம் தொடங்கும்.

நாள் 02 :- காலை 06.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றதும் சாலை வழியாக ஊட்டியில் உள்ள ஹோட்டளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு தங்க வைக்கப்படுவர். அங்கிருந்து,  தொட்டபெட்டா சிகரம், தேயிலை அருங்காட்சியகம்,  ஊட்டி ஏரி மற்றும் தாவரவியல் பூங்காவைப் பார்வையிடலாம்.

நாள் 03:- காலை படப்பிடிப்பு நடக்கும் இடங்கள், பைக்காரா நீர்வீழ்ச்சி மற்றும் ஏரி போன்றவற்றைப் பார்வையிட அழைத்து செல்லப்படுவர். பின்னர் முதுமலை வனவிலங்கு சரணாலயம்,  யானைகள் முகாம், ஜங்கிள் சவாரி ஆகியவற்றைப் பார்வையிடலாம்.

நாள் 04:- காலை அவர்கள் சொந்தமாக ஊட்டியை சுற்றிப் பார்க்கஅனுமதிக்கப்படுவர். அதோடு சிம்ஸ் பூங்கா, லாம்ப்ஸ் ராக் மற்றும் டால்பின்ஸ் நோஸ் ஆகியவற்றைப் பார்வையிட குன்னூருக்கு அளித்துச்செல்லப்படுவர். பின்னர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் வந்து 21.20 மணிக்கு ரயில் எண். 12672 - நீலகிரி விரைவு வண்டியில்  மூலம் மீண்டும் சென்னைக்கு கிளம்பலாம்.

நாள் 05:- சென்னை சென்ட்ரல் 06.20 மணிக்கு வந்தடையும். அதோடு ஊட்டி- முதுமலை- குன்னூர் பயணம் நிறைவுபெறும்.

இது குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிக்க ஏற்ற பயண திட்டமாக இருக்கும்.

பேக்கேஜின் விலை:

5 இரவுகள் 4 நாட்கள் பேக்கேஜின் விலையானது, இருவர் மற்றும் மூவர் தாங்கும் வசதியுள்ள பேக்கேஜ் ₹ 7900 முதல் தொடங்குகிறது, மேலும் ஒற்றை ஆக்கிரமிப்பு அறைகளுக்கு, பேக்கேஜின் விலை ₹20750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படுக்கையுடன் கூடிய குழந்தைக்கு, பேக்கேஜ் விலை ₹4550 மற்றும் படுக்கையில்லாத குழந்தைகளுக்கு ₹3700 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதோடு உணவு, தண்ணீர், போக்குவரத்து, வழிகாட்டிகள், ஆகியவற்றுக்கான செலவுகள் பேக்கேஜுக்குள் அடங்கும். உணவு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உணவுதான் பரிமாறப்படும். விருப்பத்தின்படி வழங்கப்படாது. வேறு உணவு சாப்பிட விரும்பினால் அது தனிப்பட்ட செலவில் சேரும்.

இந்த பயணம் ஒவ்வொரு வியாழன் அன்றும் சென்னையில் இருந்து தொடங்குகிறது. நீங்கள்  இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்பினால், https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SMR007 என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளுங்கள். வாழ்க்கை ஒருமுறை தானே. உலகின் அழகை ரசித்துவிட்டு போவோமே.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

புதுச்சேரி கடற்கரையில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா? மிஸ்பண்ணாம என்ஜாய் பண்ணுங்க!

 புதுச்சேரி

 என்றாலே மினி கோவா என்று வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளால் அழைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது மினி கோவாவுக்கு ஏற்றது போல், பாண்டி பெண்ணா கடற்கரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாண்டி மெரினாகடற்கரை வம்பாகீரை பாளையம் பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.

Ads by 

இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதியாகும். இது புதுவை அரசாங்கத்தால் தீம் அடிப்படையிலான கடற்கரை திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்டது. மேலும், "பாண்டி மெரினா" கடற்கரை உணவு அடிப்படையிலான திட்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடற்கரையில் பல்வேறு விதமான உணவு அரங்குகள், சுற்றுலா குடில்கள்அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரையின் அழகை ரசித்தபடியே உணவருந்த பிரம்மாண்ட கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அதற்கும் ஒரு படி மேலாக, குழந்தைகளை மகிழ்விக்க டாய் ரயில், பவுன்சிங் கேன்சல், செயற்கை மழை நடனம் போன்ற விளையாட்டு சாதனங்கள் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகைஅதிகரித்துள்ளது. இவ்வாறு, பாண்டி மெரினா பீச்சிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகமும் களம் இறங்கியுள்ளது.மேலும், சென்னை மெரினா கடற்கரை போல் புதுச்சேரியிலும் குதிரை சவாரி, ஒட்டக சவாரி, சிறப்பு நான்கு சக்கர வாகன சவாரி, ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உள்நாட்டு உணவு முதல், அயல் நாட்டு உணவுகள் வரை இங்கு அனைத்து விதமான உணவுகளும் கிடைக்க வழி வகுத்துள்ளது சுற்றுலாத்துறை. அதேபோல் கடற்கரை அழகை ரசித்துக் கொண்டே மது பிரியர்களுக்கு ஏற்றது போல் அரசு அனுமதியுடன் ஒரு தனியார் மதுபான கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பார்க்கும் இடமெல்லாம் ஓவியம்.. நகரம் முழுவதும் கலைநயம்.. ராஜஸ்தானில் இப்படி ஒரு இடமா?

 கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும். சாதாரண இடத்தை கூட அசத்தலாக மாற்றும்   இருக்கிறது. ஒரு வெள்ளை சுவரின் மீது ஓவியம் வரைந்த பின்னர் அந்த சுவரின் தோற்றமே முற்றிலும் மாறிவிடும். ஒரு சுவருக்கே இப்படி என்றால் ஒரு நகரமே கலைநயத்துடன் இருந்தால் எப்படி இருக்கும்.

அப்படி ஒரு அழகிய நகரம் நம் நாட்டில் உள்ளது. ராஜபோக வாழ்க்கை முறைகளை பார்க்க விரும்பினால் அதற்கு தீனி போடும் பல இடங்களைக்கொண்டது தான் ராஜஸ்தான். அந்த ராஜஸ்தானின் மையப்பகுதியில் உள்ள ஷேகாவதி நகரம் தான், இந்தியாவின் வளமான கடந்த காலத்திற்கும் கலைத் திறமைக்கும் சான்றாக விளங்குகிறது. அதன் அலங்கரிக்கப்பட்ட ஹவேலிகள் மற்றும் அழகான சுவரோவியங்களுக்காக குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தானின் இந்த பிரமிக்க வைக்கும் ஷேகாவதி பகுதிக்குள் காலடி எடுத்து வைக்கும் போது  வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் வண்ணம் ஆகியவை ஒன்றிணைந்து ஒரே இடத்தில் இருப்பதைக் காணலாம். இது போன்ற ஒரு கலவை வேறு எங்கு என்று தெரியாது. அப்படி ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும்.

ஷேகாவதி , உலகின் மிகப்பெரிய திறந்தவெளி கலைக்கூடம் என்று அழைக்கப்படுகிறது . இந்த  முழுப் பகுதியும் விசித்திரமான நகரங்கள் மற்றும் குக்கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள  எல்லா இடங்களுக்கும் தனக்கென அதனை கலை மரபு உண்டு. ஷேகாவதியில் உள்ள ஹவேலிகள் அல்லது மாளிகைகள் அழகிய சுவரோவியங்கள் மற்றும் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

அவை கடந்த காலத்தின் கலை நுணுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நிற்கின்றன . இந்த பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் என்று தேடும் போது  மாண்டவா, நவல்கர் மற்றும் ஃபதேபூர் ஆகியவை அதில் முதன்மையான இடத்தை பிடிக்கும். நகரத்தின் எந்த பக்கம் திரும்பினாலும் ஓவியம், நுணுக்கமான கட்டிடக்கலை, வித்தியாசமான கட்டிட வேலைப்பாடுகள் என்று எல்லாவற்றையும் பார்க்கலாம்.

ஷெகாவதியின் அலங்கரிக்கப்பட்ட ஹவேலிகள் அவற்றின் விரிவான ஓவியங்கள் மற்றும் அற்புதமான முற்றங்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், ஷெகாவதி பணக்கார வணிகர்களின் தாயகமாக இருந்தது. இந்த மாளிகைகள் அந்த வணிகர்களால் கட்டப்பட்டது, அவர்கள் அவற்றை அழகுபடுத்துவதற்கு நிறைய பணம் செலவழித்தனர்.

ஒவ்வொரு மாளிகையும்  இந்திய புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கும் ஓவியங்களால் சூழப்பட்டிருப்பதை பார்க்க முடியும்.  ஓவியங்களின் வண்ணங்கள் இயற்கையான நிறமிகளைக் கொண்டு திறமையான கைவினைஞர்களால் செய்யப்பட்டு வரையப்பட்டுள்ளது. இன்றும், ஷேகாவதி கலை மற்றும் கலைஞர்களின் மையமாக உள்ளது.  இந்த ஹவேலிகள்  கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், ஷெகாவதி பல கலை விழாக்கள் மற்றும் கலை கற்றல் பட்டறைகள் நடத்தப்படுகிறது. இது உலகளாவிய கலைஞர்களை தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது. ஷேகாவதியின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் ராஜஸ்தானின் செழுமையான கடந்த காலத்தின் சாரத்துடன் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip